Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Nenchodu kalanthidu uravale" series discussion

11 Aug 2018 11:52 #25 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8217
  • Like received: 2987
  • ஒருவருக்கொருவர் பார்த்து கொள்ளாததால் தான் அப்பா இப்படியெல்லாம் பேசுகிறார். ஆனால் நேரில் தன்னை பார்த்த பின்பு அப்பாவால் தனக்கு மகளே இல்லை என்று கூற முடியுமா? பார்த்ததும் ‘சுடர்..” என்று வந்து அன்பாக தன்னை தழுவிக் கொள்ள மாட்டாரா.. என்ற ஒரு எதிர்ப்பார்ப்போடு தான் சுடரொளி லண்டலிருந்து கிளம்பினாள். ஆனால் நேரில் பார்த்த பின்பும் கூட தந்தை மருந்துக்கும் புன்னகைக்காதது அவளது மனதிற்கு மிகவுமே வருத்தமாக இருந்தது. விமான நிலையத்திற்கு கூட புகழேந்தியை கூட்டிக் கொண்டு எழில் தான் வந்திருந்தாள். சுடரொளியிடம் நன்றாகவே பேசினாள். ஆனால் சுடருக்கு தான் அவளுடன் இயல்பாக ஒன்ற முடியவில்லை.

    அதன்பிறகு வீட்டிற்கு சென்ற பின்பும் கூட “ஏங்க உங்க பொண்ணு சுடர்..” என்று எழில் சொன்னதுக்கு கதிரிடம் ஒரு சிறு தலையசைப்பு மட்டும் தான் வந்தது. அவளை சரியாக கூட பார்க்கவில்லை. நேராக அவரது அறைக்குச் சென்றுவிட்டார்.

    “புவி, தமிழ்.. இது தான் உங்க அக்கா..” என்று இரு சகோதரர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தும் இருவரும் அவளிடம் பேசவே இல்லை. மொத்தத்தில் எழிலும் விலகியிருந்தால், அந்த வீட்டுக்கு அவள் வேண்டாத விருந்தாளி ஆகியிருப்பாள். ஆனால் அப்படியில்லாமல் எழில் அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டார். இருந்தும் தந்தை, சகோதரர்கள் வீட்டில் இருக்கும்போது எழில் அவளிடம் அக்கறை காட்டினால், கதிரவன் தேவையில்லாமல் எழிலிடம் எரிந்து விழுவார்.

    *************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-22

    Regards,
    Chillzee Team :-)
    18 Aug 2018 11:09 #26 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8217
  • Like received: 2987
  • அன்று புதன்கிழமை அருள்மொழிக்கு கல்லூரியில் விடுமுறை தினமாக இருந்தது. அதற்கு முன்பு கடந்து போயிருந்த ஞாயிறன்று அனைவரும் தீம் பார்க் செல்லலாம் என்று முடிவு செய்து கடைசியில் போக முடியாமல் போய்விட்டது. மணிமொழிக்கும் மலர்க்கொடிக்கும் வர முடியாதப்படி அவர்கள் வீட்டில் சில வேலைகள், இதில் இலக்கியா ஊரிலிருந்து வருவதாக சொல்லியிருந்தாள். கடைசியில் அவளாலும் வர முடியாமல் போய்விட்டது. அறிவு வேறு இலக்கியா வராததால், அவன் ஊருக்குச் சென்று அவர்களையெல்லாம் பார்த்துவிட்டு வருவதாக கூறிக் கொண்டிருந்தான். அறிவு சென்றுவிட்டால் மகிழ்வேந்தனுக்கு ரெஸ்ட்டாரன்டில் அதிக வேலை இருக்கும்.. இது இல்லாமல் தமிழ், புவிக்கு கூட அன்று பள்ளியில் விளையாட்டு பயிற்சிக்காக வர சொல்லியிருந்தனர். அதனால் அனைவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருந்ததால் தீம் பார்க் செல்ல இருந்த திட்டம் தடைப்பட்டது. அதற்கு அடுத்த வாரமும் மணிமொழிக்கும் மலர்க்கொடிக்கும் வர முடியாது என்ற காரணத்தால், இன்னொரு முறை செல்லலாம் என்று முடிவு செய்திருந்தனர்.

    ஆனால் அருள்மொழிக்கு திடிரென்று இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மகி மற்றும் அறிவழகனிடம் அவளை மட்டும் தீம் பார்க் கூட்டிக் கொண்டு போகச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தாள். “எல்லோரும் ஒன்னா போக தான் ப்ளான் போட்ருக்கோமே அப்புறம் என்ன? நாம அப்போ போய் கொள்ளலாம்” என்று மகியும் அறிவும் சொல்லியும்,

    ********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-23

    Regards,
    Chillzee Team :-)
    25 Aug 2018 11:13 #27 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8217
  • Like received: 2987
  • சுடரொளி தனியாக நின்ற போதே மகிக்கு உறுத்தல் தான், அருள்மொழி சில ரைடில் ஏற பயப்படுவாள் என்பதால் தான் மகி முதலில் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு அருளை தன் அருகில் அமர்த்திக் கொண்டான். அறிவு சுடரோடு அமருவான் என்று அவன் நினைத்திருக்க, அருளோ அறிவை தன் அருகில் அமர வைத்தாள். அப்போது சுடர் தவிப்போடு நின்றிருப்பதை பார்த்து மகிக்கு சங்கடமாகிவிட்டது.

    தீம் பார்க் உள்ளே நுழைந்ததிலிருந்து இவர்கள் மூவரும் சிரித்து பேசியப்படி வந்துக் கொண்டிருக்க, அவள் மட்டும் ஒருவித தயக்கத்தோடு இவர்களோடு வந்துக் கொண்டிருந்தாள். அதிதி தேவோ பவ என்று சொல்லுவார்கள். வீட்டில் அவளை இன்முகத்தோடு அவன் அன்னையும் தந்தையும் வரவேற்று உபசரித்ததால் தனக்கு அவள் வருகை விருப்பமில்லை என்பதை அங்கே அவன் உணர்த்தியிருந்தான். ஆனால் இப்போது அவளை அவன் பொறுப்பில் அல்லவா அழைத்து வந்திருக்கிறான். இங்கு வந்தும் அவளை ஒதுக்கினால் அது தவறல்லவா? அத்தைக்கு மட்டும் அது தெரிந்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்? அதனால் இந்த ரைடில் சுற்றிவிட்டு வந்து ஏதாவது சாப்பிடுவதற்கு அனைவரையும் அழைத்துச் சென்று, அங்கே அவளிடம் ஒரு ஹாய் சொல்லி பேசி விடலாம் என்று தான் நினைத்திருந்தான். அதற்குள் இப்படி ஒரு சம்பவம்.. ஆனால் அதை கண்டும் காணாமல் அவன் விட்டுவிடவும் தயாரில்லை.

    ***************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-24

    Regards,
    Chillzee Team :-)
    01 Sep 2018 11:08 #28 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8217
  • Like received: 2987
  • என்னத்தான் மகி அவளிடம் மன்னிப்பு கேட்டு அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றாலும், தீம் பார்க்கில் நடந்த சம்பவம் சுடரொளியின் மனதில் பாதிப்பை உண்டாக்கியிருந்தது. அவர்களுக்கு தன்னை சுத்தமாக பிடிக்கவில்லை என்பதை உணர்ந்துக் கொண்டாள் அவள். மகியின் சமாதான செயல் கூட, இவர்கள் இப்படி நடந்துக் கொண்டது எழிலுக்கோ இல்லை பூங்கொடிக்கோ தெரிந்தால் அவர்கள் வருத்தப்படுவார்கள் என்பதற்காக மட்டுமே இருக்கும் என்ற புரிதல் தான் அவளுக்கு அப்போது தோன்றியது. அதனால் இனி அந்த வீட்டிற்கு செல்ல கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

    எழில் எவ்வளவு வற்புறுத்தி கூப்பிட்டும் தன்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டாள். ஏதாவது பிரச்சனையா? என்று எழில் கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று சமாளித்து விட்டாள். சுடரை தனியாக வீட்டில் விட்டுவிட்டு செல்லவும் முடியாது, கதிர் அவளிடம் சரியாக பேசினால் கூட பரவாயில்லை. அதுவும் இல்லை என்பதால் வார விடுமுறை நாட்களில் புவி, தமிழை மட்டும் அங்கு அனுப்பிவிட்டு எழில் சுடருக்கு துணையாக வீட்டிலேயே இருந்துக் கொள்வாள்.

    இப்படியே மூன்று வாரங்கள் கடந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் சுடர் வருவாள் என்று எதிர்பார்த்த மகிக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அதுவுமில்லாமல் பூங்கொடி வேறு,

    **********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-25

    Regards,
    Chillzee Team :-)
    08 Sep 2018 18:05 #29 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8217
  • Like received: 2987
  • அடுத்து வந்த வாரத்திலேயே கல்லூரிக்குச் சென்று மேற்படிப்பு பற்றி விசாரிக்க வேண்டுமென்று சுடரொளி எழிலரசியிடம் சொல்லவும், அவள் மகிழ்வேந்தனுக்கு தகவல் கூறினாள். பிறகு அவனுக்கு வேலையில்லாத நேரமாக பார்த்து, அவர்கள் வீட்டுக்கே வந்து சுடரொளியை கல்லூரிக்கு அவனது வண்டியிலேயே அழைத்துச் சென்றான் மகி.. அவள் படிப்பு பற்றிய தகவல் அறிய சுடர் கல்லூரியின் அலுவலக அறையின் உள்ளே சென்றிருக்க, அவனோ அவள் வரும் வரை அந்த அறைக்கு வெளியே காத்திருந்தான். சிறிது நேரம் கழித்து அவள் வெளியே வந்தாள். அந்த நேரம் அவள் வருவதை கவனிக்காமல் அவன் தன் கைக்கடிகாரத்தில் மணி பார்க்கவும்,

    “சாரி என்னால உங்களுக்கு தொந்தரவு..” என்று சொல்லியப்படியே சுடர் அவன் அருகில் வந்தாள்.

    “இதுல என்ன தொந்தரவு.. உன்னோட படிப்பு விஷயமா தானே வந்திருக்கோம்.. எனக்கு இப்போ முக்கியமான வேலை எதுவும் இல்ல.. ரெஸ்ட்டாரன்ட்ல அறிவு இருப்பான். அதனால ஒன்னும் பிரச்சனையில்லை. சும்மா தான் டைம் பார்த்தேன் என்று விளக்கம் கூறினான்.

    “ரொம்ப தேங்க்ஸ் மகிழ்.. நீங்க வரலன்னா கொஞ்சம் திணறியிருப்பேன்.. சித்திக்கு வீட்லயே நிறைய வேலை இருக்கு.. அவங்களை கூட்டிட்டு வந்தா அவங்களுக்கு கஷ்டமா இருந்திருக்கும், இப்போ வேலை ஈஸியா முடிஞ்சிடுச்சு..”

    ******************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-26

    Regards,
    Chillzee Team :-)
    09 Sep 2018 09:58 #30 by Sameera

  • Fresh Boarder
  • Fresh Boarder

  • Posts: 1
  • Like received:
  • Nice epi...
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top