Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Login

Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Nenchodu kalanthidu uravale" series discussion

15 Sep 2018 17:04 #31 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8143
  • Like received: 2975
  • சுடரொளி சிரிக்கவே மாட்டாளா? என்று நினைத்திருந்த மகிழ்வேந்தன், இப்போது அவளுக்கு சிரிக்கக் கூட தெரியுமா? என்றப்படி அவளை பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது எதற்காக அவள் சிரிக்கிறாள்? என்பதும் அவனுக்கு புரியவில்லை. அவனது ரசனை பார்வையை நிறுத்தியவன்,

    “ஹலோ ஸ்டாப்.. ஸ்டாப்.. இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்கிற? ஒழுங்கா சொல்லிட்டு சிரி..” என்று கேட்டான்.

    அதன்பின்பும் கூட அவள் சிரித்தப்படியே நின்றிருக்க, அவன் அவளை செல்லமாக முறைக்கவும்,சிரிப்பை அடக்கியப்படியே அவள் பேச ஆரம்பித்தாள்.

    “ட்ரீட்னா நாங்க ப்ரண்ட்ஸ்ல்லாம் பொதுவா ட்ரிங்க்ஸ் பார்ட்டி தான் வைப்போம், உங்களுக்கும் அது ஓகேன்னா எனக்கு பிரச்சனையில்லை என்ன சொல்றீங்க..” என்று அவள் கேட்கவும் புரியாமல் பார்த்தான். பின் அவள் நகைச்சுவையாக சொல்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டவன்,

    “ம் ட்ரீட் கொடுக்காம இருக்க இப்படியெல்லாம் சமாளிப்பா.. நான் ட்ரிங்க்ஸ் பார்ட்டிக்கு ஓகேன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவ..?’

    ****************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-27

    Regards,
    Chillzee Team :-)
    22 Sep 2018 19:00 #32 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8143
  • Like received: 2975
  • சுடரொளியின் டைரியை படித்ததிலிருந்து மகி சுடரிடம் பழகுவதில் மாற்றங்கள் இருந்தது. அவள் மீது மிகவும் அக்கறையாக நடந்துக் கொண்டான். ஆரம்பத்தில் மூன்று நாட்கள் அவளை அவன் தான் வேலைக்கு அழைத்துச் சென்றான். அவள் தனியாக செல்ல திணறக் கூடாது என்பதற்காக, அடிக்கடி அவளை வெளியே அழைத்துச் சென்று அவளுக்கு அந்த ஊரை பழக்கபடுத்தினான். அடிக்கடி தனது ரெஸ்ட்டாரண்டிற்கும் அவளை அழைத்துச் செல்வான். அவனை வாங்க போங்க என்று மரியாதையாக அழைத்தவள், இப்போதெல்லாம் அவனை வா போ என்று அழைக்க ஆரம்பித்திருந்தாள். அந்த அளவிற்கு அவர்கள் நட்பில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

    மகியாவது அவளது டைரியை படித்ததினால் அவளைப் பற்றிய தவறான எண்ணங்களை மாற்றிக் கொண்டான். ஆனால் பாட்டி, கலையரசி, அருள்மொழி தவிர அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் அவளிடம் நன்றாகவே பழகினர். முன்பு போல் அவர்கள் வீட்டிற்கு சென்றால், தயக்கத்தோடு இருப்பது போல் இல்லாமல், இப்போதெல்லாம் அந்த வீட்டில் அவள் சுதந்திரமாகவே இருந்தாள்.

    பாட்டியோ கலையோ ஏதாவது கூறினாள் கூட அதை மற்றவர்களுக்காக ஏற்றுக் கொள்ள பழகிக் கொண்டாள். பூங்கொடி தன் மகளிடமும் கலையரசி மகள்களிடம் எப்படி நடந்துக் கொள்வாரோ அப்படியே சுடரிடமும் பழகினார்.

    **********************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-28

    Regards,
    Chillzee Team :-)
    29 Sep 2018 17:36 #33 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8143
  • Like received: 2975
  • அந்த பெரிய கட்டடத்தின் முன் நின்று அதை அண்ணாந்து பார்த்த அருள்மொழியும் இலக்கியாவும் மனதில் கொஞ்சம் திகிலோடு தான் அதன் உள்ளே நுழைந்தனர். அவர்கள் படிப்பு சம்பந்தமாக ஒரு மாதம் இண்டர்ன்ஷிப் செய்வதற்காக தான் அந்த நிறுவனத்திற்கு இருவரும் வந்திருந்தனர்.

    அருள்மொழி முன்னரே தன் தோழிகளுடன் சேர்ந்து ஒரு தோழியின் தந்தை மூலமாக ஒரு பெரிய கம்பெனியில் இண்டர்ன்ஷிப் செய்வதற்காக ஏற்பாடு செய்திருந்தாள். ஆனால் அங்கே ஊரில் இலக்கியாவும் இண்டர்ன்ஷிப் செய்ய வேறு ஊருக்கு செல்ல வேண்டியிருக்க, அவளை அவ்வளவு தூரம் தனியாக அனுப்ப மாணிக்கம் யோசித்தார். அதன்பின் அருள்மொழியும் வீட்டில் உள்ளவர்களும் பேசி இலக்கியாவை இங்கு வரவழைத்து அருள்மொழியோடு சேர்ந்தே இண்டர்ன்ஷிப் செய்ய சொன்னார்கள். படிப்பு விஷயம் என்பதால் முதலில் தயங்கிய மாணிக்கமும் பிறகு அருள்மொழியுடன் சேர்ந்து செல்லப் போகிறாள் என்பதால் அதற்கு ஒத்துக் கொண்டார்.

    தோழியின் தந்தை சொல்லிவைத்திருந்த நிறுவனத்தில் அருள்மொழியோடு சேர்த்து ஐந்து பேர் இண்டர்ன்ஷிப் செய்ய வேண்டும், ஆனால் ஆறாவதாக இலக்கியா மட்டுமல்லாமல், ஏழாவதாக இன்னொரு தோழியும் இவர்களோடு வர விருப்பப்படுவதால், ஏழு பேரும் அங்கே செல்ல முடியாது என்ற காரணத்தால் அந்த தோழி தன் தந்தையிடம் சொல்ல, அவர் இன்னொரு பெரிய நிறுவனத்திலும் பேசி இவர்கள் இண்டர்ன்ஷிப் செய்வதற்காக அனுமதி வாங்கினார்.

    *************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-29

    Regards,
    Chillzee Team :-)
    06 Oct 2018 19:37 #34 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8143
  • Like received: 2975
  • சுடரொளியை இந்த நேரத்தில் வீட்டுக்கும் அழைத்து செல்ல முடியாது, இங்கேயே வைத்திருக்கவும் முடியாது. இப்போது என்ன செய்வது? என்று மகி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அறிவு அவனை தேடி அங்கு வந்தான்.

    முன்னாடி மது பாட்டில் இருக்க, நாற்காலியில் அமர்ந்தப்படியே மேசை மேல் கவிழ்ந்துப் படுத்தப்படி இருந்த சுடரை பார்த்து அதிர்ச்சியானவன், மகியை பார்த்து,

    “டேய் என்னடா இது?” என்று கேட்கவும், மகியோ திருதிருவென்று முழித்தான்.

    “அடப்பாவி எத்தனை நாள் எனக்கு கம்பெனி கொடுடா.. ஒரு முறை இதை ட்ரை பண்ணி பார்க்கணும், தனியா சரக்கடிக்க பயமா இருக்குன்னு கேட்ருக்கேன்.. அப்போல்லாம் நல்ல பிள்ளை மாதிரி இருந்துட்டு, இப்போ ஒரு பொண்ணு கூட சரக்கடிச்சிட்டு இருக்கியே, இது நியாயமா? தர்மமா?” என்றுக் கேட்கவும், கொஞ்சம் டென்ஷன் நீங்கி, அறிவை பார்த்து சிரித்தவன்,

    “டேய் அப்பா வேண்டாம்னு சொன்னா பால் கிளாஸை கூட கையில் தொட மாட்ட, நீ சரக்கடிக்க போறீயா, போடா போடா..” என்று கேலியாக கூறினான்.

    *********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரெ்ண்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-30

    Regards,
    Chillzee Team :-)
    13 Oct 2018 19:26 #35 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8143
  • Like received: 2975
  • அருள்மொழி முன்பு சொன்னது போலவே 20 நாட்களுக்குள்ளேயே தனது ப்ராஜக்ட்டை முடித்த அமுதன் லண்டன் கிளம்ப தயாரானான். அவனது தந்தையும் தாயும் ஆசிரியர் துறையில் இருக்க, அவனுக்கோ கணினி துறையில் தான் அதிக ஆர்வம் உண்டு. அதை பாடமாக எடுத்து பொறியயல் படிப்பை முடித்தவன், தனது வேலையை ஈடுபாட்டோடு செய்யக் கூடியவன், அதனாலேயே அவன் எடுக்கும் ப்ராஜக்ட்டை வெற்றிகரமாக முடித்து விடுவான். அவன் எப்போது இந்தியா வந்தாலும் எடுத்த நேரத்தை விட குறைவான நேரத்தில் ப்ராஜக்ட்டை முடித்துவிட்டு, தன் நண்பர்களுடன் ஆரம்பித்திருக்கும் தனது சொந்த நிறுவனத்தின் வேலையையும் பார்த்துவிட்டு தான் லண்டன் செல்வான். ஆனால் இப்போது அங்கே லண்டனில் உள்ள அவர்களது கம்பெனியின் முக்கியமான வேலைக்கு அழைத்திருப்பதால், உடனேயே அவன் கிளம்ப வேண்டியிருந்தது.

    நாளை இரவு அவன் விமானம் ஏற வேண்டும், இன்றோடு அவனது அலுவலக வேலைகள் முடிந்துவிடும், முன்பே அவன் லண்டன் செல்லவிருக்கும் செய்தியை அருள்மொழியிடமும் இலக்கியாவிடமும் தெரிவித்திருந்தான். அவனோடு பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவம் என்று இருவருமே அவனிடம் அடிக்கடி கூறிக் கொண்டிருந்தனர். ஏற்கனவே அவர்களுக்கு பயிற்சி கொடுக்க இருந்தவர் விடுமுறை முடிந்து திரும்ப வேலைக்கு வந்திருந்தார்.

    *************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-31

    Regards,
    Chillzee Team :-)
    27 Oct 2018 19:12 #36 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8143
  • Like received: 2975
  • விமான நிலையத்தில் நுழைந்ததிலிருந்தே சுடரொளி அமுதனின் கையை பிடித்தப்படியே இருந்தாள். அவனை விட்டு பிரிவது அவளது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது , இங்கு வந்த போது இருந்த மனநிலைக்கு அவனது வரவை அதிகம் எதிர்பார்த்திருந்தாள். ஆனால் இப்போது அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கவில்லை தான், மகியின் நட்பு இப்போது கிடைத்திருக்கவே அவளுக்கு தனிமை பெரிதாக தெரிவதில்லை, இத்தனை நாள் அவனுக்கு வேலை இருந்த நாட்களிலும் கூட அமுதனை பார்க்காமல் அவளால் இருக்க முடிந்தது. அதற்கு காரணம் அவன் இங்கு தானே இருக்கிறான் என்பதால் தான், ஆனால் இப்போது அவன் கிளம்ப போகிறான் என்று தெரிந்ததும், இன்னும் சிறிது நாட்கள் அவன் இந்தியாவில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது.

    நேற்று இரவு வெளியில் சென்ற போது கூட அவனிடம் அதை சொல்லிப் பார்த்தால், ஆனால் முக்கியமான வேலை இருப்பதால், செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாக அவன் கூறினான். அவனது நிலை புரிந்தாலும், அவன் இங்கேயே இருக்க வேண்டி அவளது மனம் அதிகம் எதிர் பார்த்தது. அவளது மனம் புரிந்தவனாக அவனும்,

    “திரும்ப எப்படியோ சீக்கிரம் இங்க திரும்ப வரும் மாதிரி தான் இருக்கும் சுடர், கூட என்னோட கம்பெனிய வேற பார்க்க்கணும், அதனால் அடுத்த முறை வந்தா உன்னோட இன்னும் சில நாள் அதிகமா டைம் ஸ்பெண்ட் செய்றேன் போதுமா?” என்று சொன்னான்.

    **********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-32

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top