Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Nenchodu kalanthidu uravale" series discussion

03 Nov 2018 20:08 #37 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8150
  • Like received: 2978
  • கலையரசியின் புகுந்த வீட்டு உறவினர் ஒருவர் தங்கள் மகள் திருமணத்திற்கு அழைக்க தன் மனைவியோடு வந்திருந்தார். இப்படி அங்கிருந்து யாராவது விசேஷத்திற்கு அழைத்தால், கலை மட்டும் தான் செல்வார். கலையை அழைக்கும் போதே புகழேந்திக்கும் பத்திரிக்கை வைத்துவிட்டு தான் செல்வார்கள். சென்னையை சுற்றி விசேஷம் என்றால் எப்போதாவது கலையரசியோடு பூங்கொடியும் உடன் செல்வார். மற்ற சமயங்களில் கலை மட்டும் தான் சென்று வருவார்.

    ஆனால் இப்போது வந்தவர்களோ அதற்கு குறைப்பட்டுக் கொண்டனர். எப்போது வந்தாலும் தனியாக வருகிறாயே, உன் மகள்களை அழைத்து வந்தால் என்ன? இங்கே அண்ணன் வீட்டோடு இருந்துவிட்டால் உறவுகள் விட்டு போகுமா? உன் மகள்களை சிறுவயதில் பார்த்தது, இப்போது அவர்களை எங்கள் கண்ணில் காட்ட மாட்டாயா? என்று சொன்னவர்கள், கட்டாயம் உன் மகள்களை திருமணத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று சொல்லி, மணிமொழிக்கு இப்போது திருமணம் முடிந்துவிட்டதால், அவளுக்கு திருமண பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று அவளது முகவரி கேட்டு வாங்கிச் சென்றனர்.

    கலையரசி கணவரின் உடன்பிறந்தவர்களுக்கு தான், அவர் இறந்தததும் கலையும் அவரின் பிள்ளைகளும் பாரமாகி போனார்கள்.

    *****************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-33

    Regards,
    Chillzee Team :-)
    17 Nov 2018 21:29 #38 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8150
  • Like received: 2978
  • சுடரொளி கோவிலுக்கு சென்று வந்ததிலிருந்து பாட்டி பேசிய விஷயத்தையே நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். ஒருவேளை அமுதன் அவளிடம் காதலை பற்றி எதுவும் பேசாமல் சென்றிருந்தால், அவளும் மகி மீது இருக்கும் காதலை உணராமலேயே போயிருக்கலாம், அப்போது பாட்டி பேசிய விஷயம் அவளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியும் இருந்திருக்காது,

    ஆனால் இப்போதோ மகி அவளுக்கு வேண்டும் என்ற ஆசை மனம் முழுதும் நிரம்பியிருந்தது. ஆனால் அதை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பது தான் தெரியவில்லை, பாட்டி அந்த குடும்பத்துக்கு மூத்தவர், அதனால் அவரது ஆசையை நிறைவற்ற தான் அனைவரும் யோசிப்பர். அதைவிட பாட்டிக்கும் சரி, கலையரசிக்கும் சரி அவளை சுத்தமாக பிடிக்காது.

    ஒருவேளை எழிலிடம் அவளது விருப்பத்தை சொன்னாலும், எழில் அதை நிறைவேற்றுவாளா என்பது தெரியவில்லை, முன்பு ஒருமுறை எழில் அவளிடம், “கலை அக்கா தன் கணவன் இறந்ததும் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டதால், அவளிடம் உரிமையாக எத்ற்காகவும் சண்டையிட மாட்டேன், எனக்கு கிடைக்க வேண்டியதாக இருந்தாலும் அவளுக்கு விட்டுக் கொடுத்து விடுவேன், ஏன் அப்படியென்றால், நாம வாழாம வந்துவிட்டோம், அதனால் நமக்கு இங்கு மரியாதை கிடைக்காது என்று அவள் நினைத்து விடக் கூடாது அதனால் தான்..” என்று சொல்லியிருக்கிறாள்.

    **************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-34

    Regards,
    Chillzee Team :-)
    24 Nov 2018 19:31 #39 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8150
  • Like received: 2978
  • முன்பு பார்த்ததற்கு கலகலப்பாக தெரிந்த சுடரொளி இன்று பார்க்கும்போது களை இழந்து தெரிந்தாள். அமுதன் அவளை பார்க்க நேராக ஓவிய பள்ளிக்கே வந்திருந்தான். அவன் இந்தியா வரப்போவதை அவளிடம் தான் தெரிவிக்க முடியவில்லையே, இருந்தாலும் விமானத்தில் இருந்து இறங்கியதும் மகிக்கு பேசியிருந்தான்.

    இப்போதுதான் சென்னைக்கு வந்து இறங்கியதாகவும், ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பதாகவும் விஷயத்தை சொல்லிவிட்டு, சுடரொளிக்கு என்ன பிரச்சனை? அவள் சோர்வாக தெரிவதாக எழில் ஆன்ட்டி கூறினார். அதனால்தான் அவளை காண வந்திருப்பதாகவும், இப்போதைக்கு அவளுக்கு அதை தெரிவிக்கவில்லை. நான் நேரில் சென்று பார்த்து கொள்கிறேன் என்றும் கூறியிருந்தான்.

    சுடருக்கு ஏதோ பிரச்சனை என்று மகியும் உணர்ந்து தான் இருந்தான். ஆனால் அதைப்பற்றி மேற்கொண்டு ஆராய நேரமில்லாமல் அவனது புதிய ஹோட்டல் வாங்கும் வேலை அவனை திசை திருப்பி இருந்தது. இந்த நிலையில் அவளிடம் நேரம் கிடைக்கும்போது பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது அமுதன் உடனடியாக வந்ததை பார்த்தால் அவள் விஷயம் பெரியதாக தோன்றியது. அவளை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இருந்திருக்கிறேனே என்று அவனே அவன்மீது கோபப்பட்டுக் கொண்டான்.

    *********************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-35

    Regards,
    Chillzee Team :-)
    01 Dec 2018 21:10 #40 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8150
  • Like received: 2978
  • அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சுடரொளியோடு அமுதனும் மகி வீட்டிற்கு செல்வதாக முடிவெடுத்திருந்தான். அதற்கு காரணம் அருள்மொழி தான்,

    ரெஸ்ட்டாரென்டில் சுடரொளி அருளை பற்றி பேசும்போது, அமுதனுக்கு ஒருவேளை அது அவன் பார்த்த அருள்மொழியாக இருக்குமோ என்று தோன்றினாலும், அப்படி இருக்கவும் முடியுமா என்ன? எத்தனையோ பேர் ஒரே பேர் கொண்டவர்கள் இருப்பார்கள் இல்லையா? அதனால் சுடர் சொன்ன அருள் வேறு ஆளாகவும் இருக்கலாம் என்று நினைத்து அமைதியாகிவிட்டான்.

    அருள்மொழியின் நினைவை தவிர்த்து சுடர் பேசுவதை கவனிக்க ஆரம்பித்திருந்தான். “என்ன சொல்ற சுடர், வீட்ல தானே மகிக்கும் அவனோட அத்தைப் பொண்ணுக்கும் கல்யாணம் பேசலாம்னு முடிவு செஞ்சாங்க.. ஆனா மகி அதுக்கு ஒத்துக்கிட்டானா? இல்லல்ல, ஜஸ்ட் பாட்டியோட அவங்க ஆசையை தானே சொல்லியிருக்காங்க.. அதுக்குள்ள நீ இப்படி பயப்படணுமா?

    இன்னைக்கு கூட நீ என்கூட பேசறதை பார்த்து மகி கண்ணுல பொறாமை தெரிஞ்சுது தெரியுமா? நான் சொல்றது போல மகிக்கு உன் மேல காதல் இருக்கு..”

    **********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-36

    Regards,
    Chillzee Team :-)
    08 Dec 2018 21:32 #41 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8150
  • Like received: 2978
  • கடந்த நான்கு நாட்களாக அருள்மொழியின் அலைபேசிக்கு அமுதன் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டு இருந்தான். முதலில் ஹாய், ஹலோ என்ற குறுஞ்செய்தி வந்தது. இத்தனை நாட்கள் இல்லாமல் திடீரென்று இன்று அமுதன் குறுஞ்செய்தி அனுப்புவதற்கான காரணம் என்னவென்று அருள்மொழி முதலில் புரியாமல் விழித்தாள். அந்த செய்திக்கு பதில் செய்தி அனுப்பலாமா? வேண்டாமா? என்று யோசித்தவள்,

    “சரி அனுப்பித்தான் வைப்போமே..” என்று முடிவு செய்து, பதிலுக்கு அவளும் “ஹாய்..” என்று அனுப்பி, அப்படியே செய்தியின் மூலமே நலமா என்றும் விசாரித்தாள்.

    பதிலுக்கு நலம் என்று சொன்னவன் அவள் நலத்தையும் கேட்டான். அவளும் பதிலுக்கு தன் நலத்தை தெரியப்படுத்தினாள். அடுத்து உடனே “நான் இந்தியா வந்திருக்கேன்.. இப்போது சென்னையில் தான் இருக்கிறேன்..” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அதை பார்த்து அவள் கொஞ்சமாய் அதிர்ந்து தான் போனாள்.

    குறுஞ்செய்தி வந்த விஷயத்தை இதுவரை இலக்கியாவிடம் தெரிவிக்காமல் தான் அவனுக்கு பதில் அனுப்பி வைத்திருந்தாள்.

    ************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-37

    Regards,
    Chillzee Team :-)
    15 Dec 2018 19:56 #42 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8150
  • Like received: 2978
  • எப்போதும் கிரிக்கெட் விளையாடும் போது மகிழ்வேந்தன் தலைமையில் ஒரு குழு, அறிவழகன் தலைமையில் ஒரு குழு என்று பிரிந்து விளையாடுவார்கள். அதில் யார் யார் யாருடைய குழுவில் இருக்க விருப்பபடுவார்களோ அப்படி பிரிந்து விளையாடுவார்கள். இது போழுதுபோக்குக்காக விளையடுவதால், இதில் கடினமான போட்டியெல்லாம் இருக்காது.

    இன்று அறிவழகன் இல்லையென்பதால் அமுதன் அங்கு இருக்கவே, “என்ன அமுதன் நீங்க கேப்டனா இருக்கீங்கிங்களா?” என்று மகி கேட்க,

    “மகி.. அமுதனுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமான்னு தெரியலையே, அவர் எப்படி கேப்டனா இருக்க முடியும்?” என்று அருள் கேட்டாள்.

    அதற்கு ஒரு புன்னகையை உதிர்த்த அமுதன், “கொஞ்சம் கொஞ்சம் விளையாடத் தெரியும் மகி.. இருந்தாலும் கேப்டன் எல்லாம் வேண்டாம்.. மொழி பேசறத பார்த்தா அவளுக்கு நல்லா விளையாட வரும் போலயே, அதனால் அவளே கேப்டனா இருக்கட்டும்..” என்று கூறினான்.

    “என்ன அருள் நீ கேப்டனா இருக்கியா? என்று மகி கேட்டதும், அவளும் சரி என்று தலையை ஆட்டினாள்.

    இப்போது யார் குழுவில் யார் யார் இருப்பது என்று முடிவு செய்ய வேண்டும், சுடர் விளையாடிய ஓரீரு முறையும் இதுவரை மகியின் குழுவில் தான் விளையாடியிருக்கிறாள். அதாவது அவளுக்கு விளையாட தெரியாது என்பதால் அவன் விளையாட கற்றுக் கொடுப்பான்.

    *****************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-38

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top