Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Nenchodu kalanthidu uravale" series discussion

22 Dec 2018 22:36 #43 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8249
  • Like received: 2988
  • கலையரசி புகுந்த வீட்டு உறவினர் இல்லத் திருமணத்திற்கு சென்ற போது, அருள்மொழியின் அத்தைக்கு எப்படி அருளை அவர் மகனுக்கு மணம் முடிக்க பெண் கேட்க தோன்றியதோ, அதேபோல் கலையரசியின் கணவருக்கு தூரத்து உறவான குடும்பமும் அந்த திருமணத்திற்கு வந்திருந்தனர்.

    அவர்களுக்கும் அருள்மொழியை பார்த்ததுமே பிடித்துவிட்டது. தங்களின் ஒரே மகனுக்கு அவளை மணம் முடிக்க வேண்டுமென்று நினைத்தனர். மகனுக்கு நல்ல வேலை, ஓரளவுக்கு வசதி வாய்ப்பு எல்லாம் கடவுள் அருளால் அவர்களுக்கு நல்லப்படியாக அமைந்ததால், சீர்வரிசையெல்லாம் அதிகம் எதிர்பார்க்காமல், நல்ல பெண்ணாக தங்கள் மகனுக்கு தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு, அருள்மொழி தங்கள் மகளுக்கு ஏற்றவளாக இருப்பாள் என்று தோன்றி விட, கலையின் அண்ணன் வீட்டுக்குச் சென்று பெண் கேட்கலாம் என்று தோன்றியது.

    ***********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-39

    Regards,
    Chillzee Team :-)
    29 Dec 2018 20:44 #44 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8249
  • Like received: 2988
  • மகியிடம் அலைபேசியில் பேசியது அவனது தந்தை புகழேந்தி தான், அவன் அழைப்பை ஏற்றதும், “எங்கே இருக்கிறாய்?” என்றுக் கேட்டார்.

    “நான் ரெஸ்ட்டாரன்ட்க்கு வந்துட்டேன் ப்பா.. அருள், இலக்கியா ரெண்டுப்பேரும் எழில் அத்தை வீட்டுக்கு போயிருக்காங்க..” என்று விவரத்தை கூறினான்.

    “அப்படியா.. ரெண்டுப்பேரும் தனியாவா போயிருக்காங்க..”

    “இல்லப்பா.. அமுதனும் அங்க போறதா இருந்ததால அவனோட அனுப்பிச்சிட்டு நான் இங்க வந்துட்டேன்..”

    ***************************

    படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-40

    Regards,
    Chillzee Team :-)
    05 Jan 2019 19:50 #45 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8249
  • Like received: 2988
  • தன் அன்னைக்கு எதிரான ஒரு பதிலை கூறியதில் அருள்மொழிக்கு ஒருமாதிரி உறுத்தலாக இருந்தது. இதுவரை அன்னை பேச்சை எதற்காகவும் மீறியதில்லை, அப்படியிருக்க இன்று அவர் மனம் கஷடப்படும் என்று தெரிந்தும் அப்படி ஒரு பதிலை கூறியிருக்கிறாள்.

    இத்தனை விரைவாக தன் அன்னை தன் திருமணம் குறித்து யோசிப்பார் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று இந்த குடும்ப கஷ்டத்தில் தானும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை நிராசையாக ஆக்க அவளுக்கு விருப்பமில்லை. அதுவும் இல்லாமல் திருமணம் என்ற பெயரில் இப்போதே இன்னொரு வீட்டிற்கு செல்லவும் அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

    ********************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-41

    Regards,
    Chillzee Team :-)
    13 Jan 2019 05:33 #46 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8249
  • Like received: 2988
  • சுடரொளி அன்று அலைபேசியில் புலம்பியதிலிருந்தே, மகிழ்வேந்தனிடம் பேச வேண்டும் என்று அமுதவாணன் நினைத்துக் கொண்டிருந்தான். மகியிடமும் ஒருமுறை தனியாக பேச வேண்டும் என்று வேறு சொல்லியிருந்தான். மகியிடம் என்ன பேசலாம்? எப்படி பேசலாம் என்று கூட யோசித்து வைத்திருந்தான். அதற்குள் சுடர் வந்து,

    “அருள்மொழிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை.. ஆனால் அவளை ஒத்துக் கொள்ள வைக்கப் போகிறார்கள். ஞாயிற்றுக் கிழமை தான் அவளிடம் பேச போகிறார்கள்..” என்ற தகவலை கூறினாள்.

    *******************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-42

    Regards,
    Chillzee Team :-)
    20 Jan 2019 06:27 #47 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8249
  • Like received: 2988
  • ஞாயிறன்று அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்ததும் அமுதவாணன் அருள்மொழியை அலைபேசியின் மூலம் தொடர்புக் கொண்டான்.

    இதுவரை அவளிடம் அலைபேசியில் பேச முயற்சிக்காதவன் இப்போது பேசவும் அவனிடம் பேசலாமா? வேண்டாமா? என்று யோசித்தவள், பின் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என்று அழைப்பை ஏற்று பேசினாள்.

    “ஹலோ அருள் நான் அமுதன் பேசறேன்..”

    “தெரியும் சொல்லுங்க..”

    *************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-43

    Regards,
    Chillzee Team :-)
    27 Jan 2019 04:28 #48 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8249
  • Like received: 2988
  • தன் பேச்சால் அனைவரையும் மீட்டிங்கில் அமுதவாணன் வசியப்படுத்தி வைத்திருந்தான். அவன் ஒருவனே போதும், அவனது பேச்சு மற்றும் அவனக்கு தொழிலில் உள்ள ஈடுபாடு இதெல்லாம் அவனுக்கு அந்த நிறுவனத்தின் ப்ராஜக்ட் எளிதாக கிடைத்துவிடும் என்று தான் அருள்மொழிக்கு தோன்றியது.

    அதனால் தான் அவனுக்கென்று சொந்த நிறுவனம் இருந்தும் அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவனை விடாமல் வைத்திருக்கிறார்கள் போலும், ஏற்கனவே அவள் இண்டர்ன்ஷிப்பின் போதே அவனது திறமையை பற்றி நன்கு அறிந்திருந்தாலும் இப்போது அவனது பேச்சு திறமையையும் பார்க்கிறாள்.

    **************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-44

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top