Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Nenchodu kalanthidu uravale" series discussion

03 Feb 2018 09:47 #7 by AdharvJo

 • Platinum Boarder
 • Platinum Boarder

 • Posts: 519
 • Like received: 474
 • Chill chithra ma'am eppodhum ninga engala hot pan LA nikka vaipinga iniki naa hot SPOT LA pottuteno! sorry :( if I was offending.. Take your sweet time no problem at all...... We can always wait :)

  Thank you and happy Saturday day :)
  The following user(s) Liked this message: Chithra V
  03 Feb 2018 10:02 #8 by Chithra V

 • Platinum Boarder
 • Platinum Boarder

 • Posts: 1881
 • Like received: 640
 • It's ok adharv.. Nan edhuvum ninachukkala.. Makkalai kakka vaikkama seekiram oralavukkavadhu romba delay seyyama epi kodukka than nanum try seyren.. Idhu adhoc series enbadhal innum konjam delay aagudhu..
  Unes Ku time odhukka vendiyadhu ppidudhu.. Adhu mudinja full ah idhula than concentration
  Thank you
  The following user(s) Liked this message: AdharvJo
  07 Mar 2018 19:46 #9 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8218
 • Like received: 2987
 • மலர்கொடி, மணிமொழியின் கணவன்மார்களும், அவர்களின் புகுந்த வீட்டினரும் வந்திருக்கவே வீடு பரப்பரப்பாக இருந்தது.. அவர்களை வரவேற்க, இடம் பார்த்து அமர வைக்க, உபசரிக்க என்று அனைவரும் பரபரப்போடு காணப்பட்டனர். ஆனால் எழில் மட்டும் அதில் கலந்துக் கொள்ளாமல் ஒரு ஓரமாக நின்றிருந்தாள். கதிர் அவளை கண்காணித்தப்படி இருந்தார். கொஞ்சம் பரபரப்பு அடங்கி அனைவரும் பேசிக் கொண்டிருந்த போது, எழிலின் அருகில் வந்தவர், கொஞ்சம் மெல்லிய குரலில் அவளிடம் பேச ஆரம்பித்தார்.

  “எழில்.. கொஞ்சம் முன்ன நல்லா தான இருந்த.. இப்போ திரும்ப என்னாச்சு.. மகி உன்கிட்ட என்ன சொன்னான்..”

  “அதெல்லாம் ஒன்னுமில்ல.. சும்மா தான் கூப்பிட்டான்..”

  “என்கிட்ட மறைக்க நினைக்காத.. உன்னோட முகமே ஏதோ பிரச்சனைன்னு காட்டிக் கொடுக்குதே!! என்னன்னு சொல்லு..”

  “ சொல்லுன்னா.. என்ன சொல்ல? இப்போ இதைப்பத்தி உங்கக்கிட்ட பேசறதால ஒன்னும் ஆகப் போறதில்ல.. அப்புறம் எதுக்கு சொல்லனும்?”

  ******************************************
  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-06

  Regards,
  Chillzee Team :-)
  15 Apr 2018 08:18 #10 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8218
 • Like received: 2987
 • சொந்த பந்தங்களெல்லாம் ஒவ்வொருவராக நிச்சயதார்த்த விழாவிற்கு வருகை தந்துக் கொண்டிருக்க, பெரியவர்களெல்லாம் அவர்களை வரவேற்கும் மும்முரத்தில் இருந்தாலும், ஒருப்பக்கம் மகிழ்வேந்தனையும், அறிவழகனையும் காணவில்லையே! என்று கவனிக்கவும் தொடங்கினர்.

  ஏதாவது ஒரு தேவைக்கு வாங்க கொள்ள அனுப்ப இருவரும் வேண்டுமே! இன்னும் கொஞ்ச நேரத்தில் புரோகிதரும் வந்துவிடுவார். அதற்குள் இருவரும் எங்கே சென்றுவிட்டார்கள். எங்கேயும் செல்ல வேண்டாம் என்று தானே மகியிடம் சொல்லியிருந்தேன். அறிவையும் ஒரு வேலைக்காக வெளியில் அனுப்பியிருந்தேன். இன்னுமா அந்த வேலையை அவன் முடிக்கவில்லை என்று யோசித்த பூங்கொடி மகிக்கும் அறிவுக்கும் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் இருவரது அலைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது.

  அறிவழகனாவது வேண்டுமென்றே அலைபேசியை அணைத்திருந்தான் என்றால், மகிழ்வேந்தன் சுடரொளியை பற்றிய சிந்தனையில் இருந்ததால், தானாகவே சார்ஜ் இல்லாமல் அவன் அலைபேசி அணைக்கப்படிருந்ததை அவன் கவனிக்கவில்லை. இதில் மகியின் வீட்டு முன்பு நின்று மகியிடம் பேசிய பின் அலைபேசியை அணைத்திருந்த சுடரும் கூட பின் அதை உயிர்ப்பிக்க தோன்றாமல் விட்டுவிட்டாள். இதில் ஏர்ப்போர்ட்டில் நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிக் கொண்டு வருவது மூவருக்கும் தெரியாமல், அறிவு பைக்கிலும், மகியும் சுடரும் ஒருவருக்கொருவர் பேசாமல் டேக்ஸியிலும் பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.

  *********************************************************
  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-07

  Regards,
  Chillzee Team :-)
  05 May 2018 19:14 #11 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8218
 • Like received: 2987
 • இது தான் என் முடிவு, இதில் எந்த மாற்றமும் இல்லை என்ற தோற்றத்தில் புகழேந்தி நிற்க, அவர் எடுத்த முடிவு சரிதானே, மகி அதை ஒத்துக் கொண்டால் என்ன? என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர்.

  ஆனால் அவசரமாக ஒரு காரியத்தை செய்தாயிற்று, இதில் தான் மட்டும் எந்த முடிவும் எடுக்க முடியாது. சுடரொளியை கலந்துக் கொள்ளாமல், தானாகவே ஏதும் முடிவு எடுத்து அது சுடருக்கு பிடிக்காமல் போனால், திரும்ப தன்னை விட்டு விலக முடிவெடுப்பாள் என்று சுடருக்காக அந்த நேரம் யோசித்த மகிழ்வேந்தனும் மனதில் ஒரு முடிவெடுத்துக் கொண்டான்.

  “சரிப்பா.. அருளோட வாழ்க்கைல எனக்கும் அக்கறை இருக்கு.. ஆனா அதுக்குன்னு சுடரை விட்டுடவும் முடியாது.. அவளுக்கு இப்போ அத்தை கூட போக பிடிக்கலைங்கிறப்போ அவளை எனக்கு அங்க அனுப்ப விருப்பமில்ல.. அதே சமயம் நாங்க இங்கேயும் இருக்க முடியாது.. அதனால நாங்க தனியா போய்ட்றோம்” என்று தைரியமாகவே கூறினான்.

  “மகி என்னடா பேசற?” என்று பூங்கொடி தான் பதறினார்.

  “என்னங்க.. நீங்க கூப்பிட்டா சுடர் நம்மக் கூட வருவாங்க.. கூப்பிடுங்க” என்று எழில் தன் கணவனிடம் கோரிக்கை வைத்தாள்.

  ************************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-09

  Regards,
  Chillzee Team :-)
  12 May 2018 20:04 #12 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8218
 • Like received: 2987
 • அருள்மொழி அறையை விட்டு வெளியே வந்த போது அனைவரும் அப்படியே அமர்ந்திருந்தனர். நிச்சயத்தார்த்த சடங்குக்காக வரவைக்கப்படிருந்த உணவு கைப்படாமல் அப்படியே இருந்தது. யாருக்கும் சாப்பிட தோன்றவில்லை. கதிரவன், எழிலரசி கூட வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தனர். அனைவருக்கும் இப்போது முக்கியமாகப்பட்டது கலையரசியை சமாதானம் செய்வது தான்.. ஆனால் எப்படி என்பது தான் தெரியவில்லை. அது புரியாமல் தான் அமர்ந்திருந்தனர்.

  மகி மீது உள்ள கோபம் குறையாது என்று அருள் சொன்னப்பிறகு அறிவுக்கும் இலக்கியாவிற்கும் என்ன சொல்லவென்று தெரியவில்லை. மகிக்காக அதிகம் பேசினால், என்ன இருந்தாலும் அவன் ரத்த சம்பந்தப்பட்ட உறவு, நான் அப்படியா என்று அருள் நினைத்துவிடக் கூடாது.. அறிவழகனும் இலக்கியாவும் எப்போதும் அப்படி நினைத்ததும் கிடையாது.. அதனால் அவளாக தெளிந்துக் கொள்ளட்டும் என்று அமைதியாகிவிட்டனர். ஆனாலும் அறிவு அறையை விட்டு வெளியே போகும்போது ஒன்றை மட்டும் சொல்லிச் சென்றான்.

  “நமக்குள்ள நாம நிறைய சண்டை போட்ருக்கோம், கோபிச்சிக்கிட்டு இருக்கோம், ஒருத்தருக்கொருத்தர் சமாதான தூது போயிருக்கோம்.. நம்ம கோபம் ரெண்டு நாள் கூட நீடிக்காது.. அதேபோல மகி மேல இருக்க கோபம் சீக்கிரம் உனக்கு குறைஞ்சிடும், ஆனா பெரியவங்களுக்குள்ள வந்த மனஸ்தாபம் அப்படி இல்ல..

  *********************************************************
  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...avale-chithra-v-09_1

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Come join the FUN!

  Write @ Chillzee
  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)
  Go to top