Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Saki's "Nenchil thunivirunthal" series discussion

04 Dec 2017 05:36 #1 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8400
  • Like received: 3027
  • Forum thread to discuss Saki's "Nenchil thunivirunthal" series.

    Regards,
    Chillzee Team :-)
    04 Dec 2017 20:41 #2 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8400
  • Like received: 3027
  • "எப்பா டேய்!!அம்மா போன் பண்றாங்கடா!"-கூவினான் அவன்.
    "என்னடா?கேட்கலை!"
    "அம்மா...அம்மா!போன் பண்ணிருக்காங்க!"-அவன் இதழ் அசைவை வைத்து வார்த்தைகளை புரிந்தவன்,
    "அம்மாவா!"என்று பரபரப்புடன் அனைவரிடத்திலும் விடைப்பெற்றான்.ஆயினும்,அவ்வெள்ளத்தை கடக்க,அவனுக்கு முழுதாக அரை மணி நேரம் பிடித்தது.இங்கு விதியும் சிலரின் ஆணைக்கும்,சபதத்திற்கும் பணிய வேண்டும் என்று கட்டாயத்தில் அல்லவா உள்ளது!!

    இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...nivirunthaal-saki-01

    Regards,
    Chillzee Team :-)
    03 Jan 2018 20:51 #3 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8400
  • Like received: 3027
  • "கனவுல வந்து என்னன்னமோ பண்ணானே அவன்தானே!"அவள் மொழிகள் செவிகளில் எதிரொலித்தன.அதை நினைவு கூர்ந்தவளின் முகத்தில் உடனடியாக நாணம் படர்ந்தது.

    என்ன செய்வாள்??அவன் முகம் தான் முழுதும் நினைவில் இல்லையே!!

    அப்படியே நினைவிருப்பினும்,யாரவன்??எங்கிருப்பவன்??ஒரு நொடி அனைத்தும் மடமையென தோன்ற,அவள் முகத்திலிருந்த புன்னகை மறைந்தது.

    "நான் ஏன் இதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிறேன்!ச்சே..!"-ஓவியத்தை ஒதுக்க நினைத்தவள்,மீண்டும் சிலையாகிப் போனாள்.

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...nivirunthaal-saki-02

    Regards,
    Chillzee Team :-)
    18 Mar 2018 19:12 #4 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8400
  • Like received: 3027
  • அதிகாலை கண்ட அந்தச் சொப்பனம்,உண்மையில் சிம்ம சொப்பனம் தான் அவளுக்கு!!மனம் போகும் போக்கில் என்றும் துள்ளிச்செல்லும் அக்காரிகை அன்றோ கட்டுண்டிருந்தாள்.எதற்காக??ஒரு சொப்பனம்!ஒரே ஒரு சொப்பனம் மட்டுமே!யாரவன்??ஊரார் முன்னிலையில் என் கரம் பற்றி அழைத்துச் செல்லும் அந்த ஒருவன்??யாரவன்??உலகமாய் நான் எண்ணும் இப்புனித பூமியில்,நான் வணங்கும் இறைவன் காவல் புரியும் இப்புவனத்தில் எங்குமே அவனைக் கண்டதில்லை.பின்,யார் அந்த யுவன்??அதிகாரமாய்,ஆரவாரமாய் நின்று சொடுக்கிட்டு என் கரம் பற்ற ஆணையிட்ட அவ்வளை கரம் எவருடையது??அக்கம்பீர குரலையும் இன்றுவரை நான் கேட்டதில்லை.அனைவரும் தலைகுனிந்த அந்நொடி என் சிரம் மட்டும்,கர்வத்தால் நிமிர்ந்து,கண்கள் பனிக்க காரணம் என்ன???உண்மையில் குழம்பி தான் போனால் அக்கன்னிகை.என்ன நடக்கிறது???ஏதோ தவறு நடக்க இருப்பதாக உள்ளம் பதைக்க காரணம் என்ன?எதற்காக மனம் குழம்ப வேண்டும்?ஏன் என்னை இந்த இக்கட்டில் தள்ளினாய்??அவள் கருமை தீட்டிய எழில்மிகு விழியினில் துளி கண்ணீர் ஒய்யாரமாய் வீற்றிருந்த அந்த சிவலிங்கத்தின் முன் விழுந்தது.

    ******************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...nivirunthaal-saki-03

    Regards,
    Chillzee Team :-)
    03 Jun 2018 00:36 #5 by Bindu Vinod

  • Administrator
  • Administrator
  • பிந்து :-)

  • Posts: 1574
  • Like received: 833
  • பல நாள் காத்திருப்பு ஓர் நாள் கரம் சேரும் போது கிடைக்கப்பெறும் நிம்மதியானது அகிலத்தில் ஈடு இணையற்றது.அந்தக் காத்திருப்பை தவம் என்பார்கள்.தாயோ தன் சிசுவை காண காத்திருக்கிறாள்.தந்தை,தன் பிள்ளையின் வளர்ச்சியை காண காத்திருக்கிறார்.குருவோ சீடனின் புகழை அகிலம் போற்ற காத்திருக்கிறார்.பக்தனோ இறைவனின் முகம் நோக்க காத்திருக்கிறான்.தவசி முக்திக்கும்,மழலை தாய்மடிக்கும்,மனிதன் நிம்மதிக்கும்,மனிதம் நீதிக்கும்,மன்னன் புகழுக்கும்,மண் மனிதனுக்கும்,ஞானம் தர்மத்திற்கும்,ஞாலம் அமைதிக்கும்,இறைவனோ கிட்டிய அரிய வாய்ப்புகளை மனிதன் தவறவிடுகையில் ஆற்றிய பாவங்களை தண்டிக்கும் மாபெரும் சந்தர்பத்தை எதிர்நோக்கியும் காத்திருக்கின்றனர்.சந்தர்பம் நோக்கி ஏன் காத்திருக்க வேண்டும்??தவறுக்கான தண்டனை என்பது எளிதில் கிட்டும்!பாவத்திற்கான தண்டனை???சந்தித்து பாருங்கள்...தவறும் பாபமும் ஒன்றா?வெவ்வேறா??நல்லோர்களின் சாபம்,விரக்தி,கண்ணீர்,சினம் இவையனைத்தும் நிச்சயம் அநீதிக்கு எதிரான தண்டனை வழங்க இறைவனைக்கு அவசியம்!!அவன் அடங்கும்,அவன் அஞ்சும்,அவனை அடக்கும் ஒரே ஆயுதம் சுயநலமற்ற கண்ணீர் அல்லவா!!!நல்லவர் ஒருவர் கண்கலங்கும் சமயத்தில் இறைவனே குற்றவாளியாகிறான்.ஆம்...!அச்சமயம் நீதி வழங்க அவனுக்கு எத்தகுதியும் இராது!

    ***********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...nivirunthaal-saki-04
    20 Jun 2018 07:46 #6 by Nanthini

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1117
  • Like received: 567
  • எத்தனை நாள் வேண்டுதல் இது!இன்றுதான் கரம் கூட வாய்ப்புக் கிட்டியதா?விமான நிலையத்தில் எவரின் வருகையையோ எதிர்நோக்கி காத்திருந்தான் உடையான்.வருபவர் போகிறவர் அனைவரும் அவனிடம் புகைப்படம் எடுக்க வேண்டும்,அவனது கையொப்பம் வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க அவர்களின் விண்ணப்பத்தை வேறு ஈடேற்றும் கட்டாயம் வேறு!!உலகமே கொண்டாடும் ஒரு கலைஞன் எவருக்காக இங்கு காத்திருக்கிறான்???அனைவரது கேள்விப் பார்வையும் அவனையே தாக்கியது.அவனோ அதை மதியாமல் தன் கடிகாரத்தை பார்ப்பதும்,எங்கோ வெறிப்பதுமாகவே இருந்தான்.

    "சார் ஃப்லைட் லேண்ட் ஆகி முப்பது நிமிஷம் ஆச்சு!"அவனது உதவியாளன் உடையானின் செவியில் கிசுகிசுத்தான்.

    "என்ன இன்னும் காணலை?"யாரையோ தேடின அவன் விழிகள்!!அவன் தேடிய பொழுதுக்குள் சற்று தூரத்தில் ஏதோ பரபரப்பாகி அங்கு ஒரு கூட்டம் கூடியது.

    "ரித்திக் அங்கே என்னாச்சு?"

    "பார்க்கிறேன் சார்!"அவன் உதவியாளன் சம்பவ இடத்திற்கு புறப்பட்டான்.அவன் வந்து சேரவதற்குள் பொறுமை தாளாதவன் அக்கூட்டம் நிரம்பிய இடத்திற்கு பயணமானான்.

    ***********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...nivirunthaal-saki-05

    Rgds,
    Nanthini
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Coming Soon...

    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)

    Come join the FUN!

    Write @ Chillzee
    Go to top