Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Buvaneswari's "Vellai pookkal ithayam engum malarkave" series discussion

06 Jan 2018 05:13 #1 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8301
  • Like received: 2999
  • Forum thread to discuss Buvaneswari's "Vellai pookkal ithayam engum malarkave" series.

    Regards,
    Chillzee Team :-)
    06 Jan 2018 06:08 #2 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8301
  • Like received: 2999
  • “எப்போ பார்த்தாலும், கஜினி சூர்யா மாதிரி எதையாச்சும் பண்ணிட்டு, குஷி படம் ஜோதிகா மாதிரி மன்னிப்பு கேட்குறீங்க சாமி அங்கிள் நீங்க” என்றாள் அவள். சிறுவயதில் இருந்தே அவள் அவருக்கு பரிட்சயமானவள்தான். தனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே அந்த அர்ச்சகரை அவள் “சாமி அங்கிள்” என்று தான் அழைப்பாள்.

    “ அட போ பாப்பா..என்னை ஏதாச்சும் சொல்லலன்னா உனக்கு தூக்கம் வராதே..”

    “என்னமோ சாமி அங்கிள், உங்களையும் இந்த கண்ணனையும் மறுபடியும் பார்க்க ரொம்ப நாளாகும்னு தோணுது.. இந்த கண்ணன் என்னை கைவிட மாட்டான்ல?” என்று கண்ணனிடம் தனக்காக சிபாரிசு செய்யும்படி பார்வையாலேயே கெஞ்சியபடி கேட்டாள் அவள்.

    கோவிலில் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசை நிற்பதை கண்ட அர்ச்சகர், மனம் விட்டு பேச அது தோதான சமயமில்லை என்பதை புரிந்துகொண்டு, “ விழ வைப்பவனும் அவன்தான் கை தூக்கி விடுறதும் அவன்தான்..தைரியமா இரு பாப்பா” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

    “அப்படியா கண்ணா? விழுந்தாலும், என்னை நீ கைத்தூக்கி விடுவியா?” என்று பார்வையாலேயே வினவி நின்றிருந்தாள் அவள்.

    **********************************************
    புத்தம் புதிய தொடரின் முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rgave-buvaneswari-01

    Regards,
    Chillzee Team :-)
    13 Jan 2018 06:43 #3 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8301
  • Like received: 2999
  • எங்கிருந்து தான் அவனுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ. தங்களுக்கு எந்த விதத்திலும் பரிட்சயமே இல்லாதவள் தனது நண்பனை கை ஓங்குவதா?

    “டேய் விடுடா.. வெளில போ..”என்று பிரபா மீண்டும் கத்த அந்த பெண்ணின் முகத்தில் லேசான தடுமாற்றம் கூட இல்லை. பிரபஞ்சன், கதிரவன், கார்முகிலன் மூவரையும் ஆராய்வதைப் போல பார்த்து கொண்டிருந்தாள்.

    கார்கியும் கதிரும் தன்னை அடக்க பெரும்பாடு படுவதை உணர்ந்து கொஞ்சம் நிதானம் ஆகினான் பிரபஞ்சன். அவன் துள்ளுவதை நிறுத்திய நொடி அந்த பெண் பேசத் தொடங்கினாள்.

    **************************************************
    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rgave-buvaneswari-02

    Regards,
    Chillzee Team :-)
    20 Jan 2018 05:27 #4 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8301
  • Like received: 2999
  • “கல்யாணம் நடக்கலனு யாரு சொன்னது?” தண்ணீரை குடித்துவிட்டு மூவரையும் தீர்க்கமாக பார்த்தாள் லீலா. “கல்யாணம் ஆயிடுச்சா? அவ நகைகளை கழட்டும்போது தாலி இருந்த மாதிரி இல்லையே?” என்று மூவருமே குழம்பிட லீலா பக்கென சிரித்தாள்.

    “ப்பா.. மூணு பேரும் சாப்பிட்ட முட்டையெல்லாம் கண்ணுல வந்து நிக்கிது..எல்லாத்துக்கும் இப்படித்தான் ரியக்ஷன் தருவீங்களா? இல்ல என்கிட்ட எதையும் உளற கூடாதுனு இப்படி சைலண்ட் மோட்ல இருக்கீங்களா?” என்று கேட்டவள் தான் ஏற்கனவே போட்ட பீடிகைக்கும் பதிலைச் சொன்னாள்.

    “மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க அப்பாவுக்கு ரொம்ப நெருக்கம். கல்யாணம்நின்னுட்டா ரெண்டு குடும்பத்தின் கௌரவமும் என்ன ஆகும்?இவ்வளவு செலவு பண்ணி, இவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிட்டு எப்படி நிறுத்துவாங்க.. ? இந்நேரம் என் தங்கச்சிக்கு கல்யாணம் நடந்திருக்கும்” என்று மீண்டும் அசால்டாக அவள் மற்ற மூவரின் முகத்தில் ஈ ஆடவில்லை.

    ***********************************************
    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rgave-buvaneswari-03

    Regards,
    Chillzee Team :-)
    27 Jan 2018 00:20 #5 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8301
  • Like received: 2999
  • “அது.. உன் பேரு என்ன இவ்வளவு சின்னதா இருக்கு? முழு பேரு சொல்லு” என்றான் பிரபஞ்சன்.

    “பிரசன்னலீலா.. எல்லாரும் லீலானுதான் கூப்பிடுவாங்க.. பிரசன்னானு கூப்பிடாதீங்க.. எனக்கு புடிக்காது” என்று எச்சரித்தாள் லீலா.

    “அப்போ உன்னை என்னனு கூப்பிட?”

    “லீலானுதான்..”

    “அது என்னால முடியாது,..”

    “ஏன்?”

    “குட் நைட்..” என்று பிரபஞ்சன் நடக்க கதிரும்,கார்கியுமே யோசனையாக அவனைப் பார்த்தனர்.

    ******************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rgave-buvaneswari-04

    Regards,
    Chillzee Team :-)
    10 Feb 2018 03:55 #6 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8301
  • Like received: 2999
  • இதழில் மென்னகையை படரவிட்டு கண்களை திறந்தாள் பிரசன்னலீலா! புது இடம், பயம், கவலைகள், சிந்தனைகள், திடீரென்ற சத்தமென்றும் பல காரணங்களினால் அவள் உறங்கவே தாமதமானது. அதனால் அவள் தாமதமாகவே எழுந்தாள். தூரத்திலிருந்து சுப்ரபாதம் ஒலிப்பதைக் கேட்டதும் மீண்டும் இதழில் புன்னகையை தவழவிட்டாள். பொதுவாக அவளின் வீட்டிலுமே ஒவ்வொரு நாளும் இப்படித்தான் விடியும்..

    “இனி வரும் நாளாச்சும் எல்லாருக்கும் சந்தோஷத்தை தரணும் கிருஷ்ணா” என்று வாய்விட்டே சொன்னவளுக்கு நேற்றைய இரவு கேட்ட அந்த சத்தம் ஞாபகத்திற்கு வந்தது.

    நேற்று இரவு கேட்ட அந்த சத்தமும், திடீரென அந்த வீட்டில் சூழ்ந்த குளுமையும் இருட்டும் அவளால் என்றுமே மறக்க முடியாத ஒன்றாகி போனது. அந்த சூழ்நிலையும் ஓட முடியாமல் நடக்கவும் முடியாமல் தவித்தது தான் அவளுக்கு இன்னும் கடுப்பாகியது.. டாக்டர் சொன்னது போல கொஞ்சம் கொஞ்சமாக நடக்க முயற்சித்தாள் தான் சீக்கிரம் குணமாகிட முடியும். இல்லையெனில் கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமல் இருக்கும் ஆபத்திடமிருந்து எப்படி தப்பிப்பது?அதே யோசனையுடன் கைகள் ஊன்றி எழுந்து நின்று நடக்க முயற்சித்தாள் அவள்.

    **************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rgave-buvaneswari-05

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top