Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Buvaneswari's "Vellai pookkal ithayam engum malarkave" series discussion

10 Feb 2018 03:56 #7 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • இதழில் மென்னகையை படரவிட்டு கண்களை திறந்தாள் பிரசன்னலீலா! புது இடம், பயம், கவலைகள், சிந்தனைகள், திடீரென்ற சத்தமென்றும் பல காரணங்களினால் அவள் உறங்கவே தாமதமானது. அதனால் அவள் தாமதமாகவே எழுந்தாள். தூரத்திலிருந்து சுப்ரபாதம் ஒலிப்பதைக் கேட்டதும் மீண்டும் இதழில் புன்னகையை தவழவிட்டாள். பொதுவாக அவளின் வீட்டிலுமே ஒவ்வொரு நாளும் இப்படித்தான் விடியும்..

  “இனி வரும் நாளாச்சும் எல்லாருக்கும் சந்தோஷத்தை தரணும் கிருஷ்ணா” என்று வாய்விட்டே சொன்னவளுக்கு நேற்றைய இரவு கேட்ட அந்த சத்தம் ஞாபகத்திற்கு வந்தது.

  நேற்று இரவு கேட்ட அந்த சத்தமும், திடீரென அந்த வீட்டில் சூழ்ந்த குளுமையும் இருட்டும் அவளால் என்றுமே மறக்க முடியாத ஒன்றாகி போனது. அந்த சூழ்நிலையும் ஓட முடியாமல் நடக்கவும் முடியாமல் தவித்தது தான் அவளுக்கு இன்னும் கடுப்பாகியது.. டாக்டர் சொன்னது போல கொஞ்சம் கொஞ்சமாக நடக்க முயற்சித்தாள் தான் சீக்கிரம் குணமாகிட முடியும். இல்லையெனில் கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமல் இருக்கும் ஆபத்திடமிருந்து எப்படி தப்பிப்பது?அதே யோசனையுடன் கைகள் ஊன்றி எழுந்து நின்று நடக்க முயற்சித்தாள் அவள்.

  **************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rgave-buvaneswari-05

  Regards,
  Chillzee Team :-)
  17 Feb 2018 06:40 #8 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • “ஏய் ..ஏய்.. நீ இங்க என்ன பண்ணுற?” கையில் பெட்டி படுக்கையுடன் சுயோதசேனாவின் வாசலில் நின்றவளை பார்க்க தூக்கிப் போட்டது கார்முகிலனுக்கு. அதுவும் வெண்ணிலவு மேகங்களின் இடையில் மறைந்து விளையாடிடும் இரவில்! அவளின் பெயரை கூட அறிந்திருக்கவில்லை அவன். ஆனால் “ஐ லவ் யூ” என்றிருந்தான். அவளுக்கும் அப்படித்தான் ! அவனை தெரிந்தே இருக்காது! என்று அவன் நினைத்திருக்க அதை பொய்ப்பிக்கும்படி அவன் முன்னால் நின்றிருந்தாள் நித்யா.

  “இங்க என்ன பண்ணுறேனா? ஐ லவ் யூ சொல்லிட்டு போயிட்டா, போதுமா? என்னை அதுக்கு தேடியே வரல.. அதான் நானே வந்துட்டேன்” என்றாள்.

  “ஏய்..என்ன விளையாடுறியா?”

  “ஐ லவ் யூன்னு சொன்னப்போ அது உங்களுக்கு தெரியலயோ?”

  “ப்ச்ச்..நீ கூடத்தான் யாருகிட்ட பேசுறோம்னு தெரியாம என்கிட்ட பேசின…அது தப்பில்லையா?”

  ***********************************
  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rgave-buvaneswari-06

  Regards,
  Chillzee Team :-)
  03 Mar 2018 02:50 #9 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • சுயோதசேனாவை விட்டு பிரபஞ்சனும் கதிரவனும் காரில் கிளம்ப, கார்முகிலன் வழக்கம்போலவே பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது பிரசன்னலீலா எதையோ எதிர்ப்பார்ப்பதை போல உணர்ந்தான். ஒரு நொடி நிதானித்தவன்,

  “என்ன லீலா?” என வினவினான்.

  “இல்ல, நீங்க மூணு பேரும் வர லேட் ஆகுமா?” என்று அவள் கேட்கவும் அவனது முகம் கொஞ்சம் யோசனையும் கொஞ்சம் அஷ்டகோணலாகவும் மாறியது.

  “என்னாச்சு கார்கி?”

  “இல்ல,இந்த மாதிரி எங்கள யாரும் கேள்வி கேட்டு ரொம்ப வருஷமாச்சு..அதான் புதுசா இருக்கு!” என்றான்.

  “புடிக்கலனா சொல்லிடுங்க.. “

  ********************************************************
  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rgave-buvaneswari-07

  Regards,
  Chillzee Team :-)
  29 Jul 2018 12:45 #10 by Anamika

 • Gold Boarder
 • Gold Boarder

 • Posts: 202
 • Like received: 99
 • "என்ன சொல்லுறாங்க நம்ம ஹீரோஸ் ?" குரலில் ஆர்வம் தேக்கி வைத்த தங்கையை திட்டவும் மனமின்றி இருந்தாள் பிரசன்னலீலா. ப்ரியதர்ஷினியை பொறுத்தவரை கார்முகிலன், கதிரவன், பிரபஞ்சன் மூவருமே கதாநாயகர்கள் தான் . வாழ்க்கை என்றும் ரசித்து வாழ வேண்டியதாகவே உருவாகிறது . மனிதன் வாழ்வதற்க்காக எதையும் கொண்டு வந்து பிறக்கவில்லை ..ஆனால் வாழும்போது மட்டும் எதையாவது தேடி பறிக்க முயன்றே சாகிறான் . அந்த வகையில் தங்களின் தேவைகளை உணர்ந்து யாருக்கும் பணியாது இருக்கும் அம்மூவரும் தரிஷினியை பொறுத்தமட்டில் ஹீரோக்கள் தான் ..

  இதை பலமுறை லீலாவிடம் உரைத்திருக்கிறாள் . அப்போதெல்லாம் லீலாவின் முகத்தில் கடுமை பரவும் . ஆனால் இன்று ? மனிதர்களை எடைபோடுவது அத்தனை எளிதில்லை தானோ ? தூரத்தில் இருந்தபோது அவர்கள் மீது தேங்கி இருந்த கோபங்கள் இன்று லேசாய் கரைகிறதோ ? கண்களை ஒருகணம் மூடினாள் . அவள் கோபத்தின் காரணம் எல்லாம் ஓருருவாய் நின்று சிரித்தது . அடுத்த நொடி தனது மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தாள் லீலா.

  "ஹ்ம்ம் சொல்லுற அளவுக்கு இன்னும் எதுவும் நடக்கல குட்டிமா.. நடக்கும்போது சொல்லுறேன் .. இப்போதைக்கு வெச்சிடுறேன்" என்றாள் அவள் .

  ****************************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rgave-buvaneswari-08
  27 Aug 2018 18:08 #11 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • "குட் மார்னிங் என் வருங்கால முதலாளிகளே .. " என்று பொதுப்படையாக கூறிவிட்டு , கார்கியிடம் , "உங்களுக்கு என்னை தெரியுமா சார் ?" என்றாள் நித்யா தேனொழுகும் குரலில் ! ஒரு பக்கம் நடிகையர் திலகமாய் நித்யா, இன்னோரு பக்கம் ஆர்வ கோளாறாக மனோ என இருவரையும் பார்த்து பல்லை கடித்தான் கார்முகிலன் . அவன் "அந்த பொண்ணுடா" என்று சமிக்ஞை செய்த நொடி சிறிது என்றாலும் நித்யாவை இனம் கண்டுகொண்டனர் கதிரவனும் , பிரபஞ்சனும் . வழக்கம்போலவே விழிகளாலேயே சம்பாஷணை நடத்தி கொண்டனர் மூவரும் .

  " நான் அப்பறம் வரேன் மச்சி " என்று கார்முகிலன் கடுப்பாக வெளியேற எத்தனிக்கவும் , பிரபா " டேய் நில்லுடா" என்று தடுக்க , அவனை கைகளில் தட்டி நிறுத்தினான் கதிரவன் . " விடு மச்சி அவன் போகட்டும் .. கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.. நாம இண்டர்வியூ ஆரம்பிக்கலாமா மிஸ் நித்யா ?" என்று கோப்பையில் பார்வையை மாற்றினான் கதிரவன் . அவன் முகத்தில் இனம் புரியாத கடுமை பருவியிருந்ததை அங்கிருந்த மற்ற மூவருமே உணர்ந்திருந்தனர் . ஆனால் தன் கடுமைக்கும் , நேர்முகத்தேர்வுக்கும் பங்கமே வராத அளவிற்கு நேர்த்தியாக நடந்துக்க கொண்ட கதிரவன் , பிரபஞ்சனை போல நித்யாவின் நன்மதிப்பை பெற்றிருந்தான் . நித்யாவின் பதிலும் , தெளிவான பேச்சும் திருப்திகரமாகவே இருந்தது .

  **********************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rgave-buvaneswari-09

  Regards,
  Chillzee Team :-)
  14 Aug 2019 10:16 #12 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • அடைமழையிலும் லாவகமாக மகிழுந்தை செலுத்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான் பிரபஞ்சன் . அவன் மகிழுந்தை நிறுத்தி இறங்குவதற்குள் , வீட்டின் காவலாளி குடையுடன் கதவினை திறந்தார் .

  "எதுக்கு அண்ணா இப்படி ஓடி வர்றிங்க .. நான் கொஞ்சம் நனைஞ்சா கரைஞ்சிடவா போறேன் ?" வழக்கம்போலவே அன்புடன் கடிந்து கொண்டான் பிரபஞ்சன் . அவனது வசனத்திற்கு பதிலாக வாஞ்சையுடன் புன்னகைப்பவர் இன்று அதற்கு எதிர்மாறாக முகத்தில் கவலை ரேகைகள் பரவும்படி நின்றிருந்தார் .

  "சொல்லுங்கண்ணா ஏதோ சொல்ல வரீங்க .. "

  **********

  Don't miss it!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...rgave-buvaneswari-10

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top