Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Mathi Nila's "Thaarigai" series discussion

14 Jan 2018 10:10 #1 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • Forum thread to discuss Vasumathi's "Thaarigai" series.

    Regards,
    Chillzee Team :-)
    14 Jan 2018 10:13 #2 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • பொறுமையை இழுத்துப் பிடித்தபடி,”அவங்கக்கிட்ட சாரி கேளுனு சொன்னேன்..”,என்றான் அழுத்தமாக..

    வெற்றியை இடையிட்ட சமுத்திரா சன்னமான குரலில்,”வேண்டாம் சார்..சின்ன பையன் தெரியாம சொல்லிட்டான்..விடுங்க..”,என்றாள்..

    தரண்யனின் செயலில் கடுப்படைந்திருந்தாலும் சமுத்திராவை சங்கடப்படுத்த வேண்டாம் என எண்ணி வெற்றியே அவளிடம்,”அவன் பேசினது தப்புதான் மன்னித்து விடுங்கள்..”,என்றான் கைகூப்பி..

    “ஐயோ..பரவாயில்லைங்க..”,என்றவள் தளர்வாக நடக்கத் துவங்கினாள் அப்பெட்டியின் கதவை நோக்கி..

    அவள் போவதை பார்த்துக்கொண்டிருந்த வெற்றியிடம்,”எதுக்கு சார் அதுக்கிட்டை எல்லாம் சாரி கேட்கறீங்க..??”,என்று கேட்டான் தரண்..

    **************************************************

    புத்தம் புது தொடரின் முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...aarigai-vasumathi-01

    Regards,
    Chillzee Team :-)
    11 Feb 2018 04:49 #3 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • இரவு மணி பத்தை கடந்த போதும் அந்நகரம் விழித்தே கிடந்தது சுறுசுறுப்பாக..மதுரை மல்லியின் வாசம் ஒருபுறமும் இட்லி மீன் குழம்பின் வாசம் மறுபுறமும் மனதை மயக்கியது..

    சென்னை டூ மதுரை பாயின்ட் டூ பாயின்ட் பஸ்ஸில் இருந்து இறங்கிய மொழிக்கு இவையெல்லாம் வியப்பை அளித்ததென்றால் சமுத்திராவிற்கு தாய் மடி சேர்ந்த உணர்வு..

    மீன் குழம்பின் வாசம் மொழியை சுண்டி இழுக்க சமுத்திராவின் கையை சுரண்டியவள்,”சமூ..ரொம்ப பசிக்குது..”,என்றாள் தனது நாக்கை சப்புக்கொட்டியபடி..

    அவளைப் பார்த்து சிரித்த சமுத்திரா,”பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே ஒரு தள்ளு வண்டி கடை இருக்கும் மொழி..அங்க டிபன் சூப்பரா இருக்கும்..சின்ன வயசுல எங்க அப்பா அந்தக் கடையிலிருந்து தான் வாங்கிட்டு வருவாங்க..”,என்றவள் மொழியின் கை பிடித்து அங்கு அழைத்துச் சென்றாள்..

    ஒரு ஐந்து தள்ளு வண்டி கடைகள் வரிசைக்கட்டி நிற்க,”அந்த நாலாவது கடையில தான் டேஸ்ட் நல்லா இருக்கும்..பாருங்க மணி பதினொன்னு ஆகப்போவுது..இன்னும் கூட்டம் குறையாம இருக்கு..”,என்றவள் ஆட்கள் இல்லாத ஒரு பகுதியில் நின்ற படி,”அண்ணே..இரண்டு ப்ளேட்..”,என்று குரல் கொடுத்தாள்..

    ******************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...aarigai-vasumathi-02

    Regards,
    Chillzee Team :-)
    08 Apr 2018 07:38 #4 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • ஜிகிர்தண்டா கடையில் தனது மாமனின் கவனம் தன்னிடம் இல்லை என்பதறிந்த தரண் வெற்றியின் பார்வை சென்ற திசையை நோக்கி நோட்டமிட்டான்..

    மொழியையும் சமுவையும் அங்கு எதிர்பாராத தரண்யன் அவர்களிடம் சென்றான்..

    “அக்கா..”

    தங்களது உலகத்தில் மூழ்கியிருந்த மொழிக்கும் சமுவிற்கும் தரண்யனின் மெல்லிய குரல் எட்டவில்லை..

    “அக்கா.. உங்களைத் தான்..”, இப்பொழுது கொஞ்சம் சத்தமாக வெளிவந்தது..

    நம்மளை யாரடா இவ்ளோ மரியாதை கூப்பிடறது என்று பார்த்த மொழி தரண்யனைக் கண்டு,“என்னப்பா வேண்டும்..??”,எனக் கேட்டாள்..

    சமுவோ மிகுந்த பதற்றத்துடனும் பயத்துடனும் காணப்பட்டாள் இவன் நாவிலிருந்து அன்று புறப்பட்ட சொல்லம்புகளை நினைத்து..

    “நான் இவங்க கிட்ட பேசணும்..”,என்றான் சமுவைக் காட்டி..

    தன் பின்னே ஒளிந்த சமுவை ஒரு பார்வை பார்த்தபடி,”இவக்கிட்ட என்ன பேசணும்..??”,என்று கேட்டாள் மொழி..

    ********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...aarigai-vasumathi-03

    Regards,
    Chillzee Team :-)
    15 Apr 2018 08:27 #5 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • "ஒவ்வொரு மனிதரும் தமது பாலினத்தைத் தேர்வு செய்துகொள்வதற்கு உரிமை உள்ளது.. சாதி, மத, பாலினத்துக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் சமஉரிமை வழங்கிட அரசியலமைப்பு வழிவகுக்கிறது", ஏப்ரல் பதினைந்தாம் தேதி திருநங்கைகளுக்கு “மூன்றாம் பாலினம்” என்ற அங்கீகாரத்துடன், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட தினம் இன்று..

    இத்தினத்தை தேசிய தேசிய திருநங்கைகள் தினமாக கொண்டாடுகின்றனர் மூன்றாம் பாலினத்தினர்..

    மூன்றாம் பாலினத்தவரைப் பற்றிய கட்டுரை அல்ல இது.. தாரிகை (சில்சீ யில் மாதம் ஒரு முறை பதிவிடப்படும் கதை) பிறந்ததன் கதை இது..

    எங்கள் பாட்டி வீட்டில் திருவிழா சமயத்தில் கிடாவெட்டு நடப்பது வழக்கம்.. அப்பொழுது எனக்கு அறிமுகமானவர் தான் அவர்..

    அவருடன் நான் கழித்தது வெறும் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் மட்டும் தான் இருக்கும்.. ஆனால் இன்றும் அது நெஞ்சில் பசுமையாய்..


    ***********************************************

    படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-thaarigai-vasumathi

    Regards,
    Chillzee Team :-)
    08 Jul 2018 17:58 #6 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • வருடம் : 2017..
    இடம் : கோவை..
    காலைக் கதிரோனின் ஒளி மிதமாக முகத்தில் அடிக்க மெல்ல தன் கண்களை மலர்த்தினாள் செல்வி..

    வாக்கீ டாக்கீயின் சத்தம் இரவு என்று பாராமல் சத்தம் எழுப்பியதால் விடியகாலையில் தான் கண்ணயர முடிந்தது அவளுக்கு..

    தன்னை கடந்து செல்லலும் அதிகாரிகள் அனைவரும் தன்னை ஒரு தூரத்தில் வைத்துப் பார்ப்பது புரிந்தாலும் அதை வழக்கம் போல் அலட்சியம் செய்தவள் கையில் இருந்த வாட்சைப் பார்க்க அது மணி ஆறு முப்பது என்று காட்டியது..

    நிதானமாக தன் முகத்தைத் துடைத்தவள் தலையை லேசாக சரிசெய்துகொண்டு நிமிர்ந்தாள்..

    அப்பொழுதுதான் தன் முன்னே காலை தினசரியைக் கையில் பிடித்தவாறு முழித்தபடி நின்றிருந்த காவலர்களைக் கண்டு என்னவென்பது போல் அவர்களை ஏறிட்டாள்..

    நேற்று இரவு அவளை கொஞ்சம் கீழ்த்தரமாக நடத்திய அந்த அதிகாரி, “சாரி மேடம்..”, என்றார் முணுமுணுப்பாக..

    **********************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...aarigai-vasumathi-04

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top