Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Anitha Sankar's "Kathal kathalitha kathaliyai kathalikkum" series discussion

02 Mar 2018 07:01 #1 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • Forum thread to discuss Anitha Sankar's "Kathal kathalitha kathaliyai kathalikkum" series

    Regards,
    Chillzee Team :-)
    02 Mar 2018 21:02 #2 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • பசுமையும்,பழமையும் நிறைந்த அழகான ஊர் நாயகனை பிரியாள்..

    அந்த பசுமை கண்களுக்கு நன்கு விருந்தளிப்பது போல இருந்தது அந்த இளங்காலை பொழுது...

    திண்ணை வைத்து பழமை மாறாது கட்டப்பட்டிருந்தது அந்த பெரிய வீடு.ஓட்டுவீட்டுடன் இணைந்து கட்டப்பட்ட மாடி வீடு அது..

    அந்த வீட்டின் அனைத்து பக்கங்களும் பசுமையால் சூழப்பட்டிருந்தது.

    அதற்கு அருகே அழகாய் அடக்கமாய் இருந்தது ஒரு ஓட்டு வீடு இருந்தது.அதன் இருபுறமும் பன்னீர் ரோஜா செடிகள் அலங்கரித்து இருந்தன...

    ஐந்து வயது மதிக்க தக்க அந்த சிறுவன் ஓடி வந்தான்.வந்தவன் அந்த சிறிய வீட்டுக்குள் ஓடினான்..

    “பெரியம்மா...,பெரியம்மா..”என்று அவன் அழைக்க வெளியில் வந்தால் அவள்.

    “என்னடா கௌதம்..,என்னாச்சு..”என்று அவள் கேட்க

    ********************************************
    இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kum-anitha-sankar-01

    Regards,
    Chillzee Team :-)
    16 Mar 2018 18:35 #3 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • அன்னம் தேர்ந்தெடுத்த பெயர் அனைவருக்கும் பிடித்திருந்தது.அதனையே குழந்தைக்கு வைத்தனர்.

    தேன்நிலா பிறந்து ஐந்து மாதங்கள் ஆகியிருந்தன.அவளை முழுமையாக பார்த்துக் கொண்டது அன்னம் மட்டும் தான்.குழந்தையின் பசியை ஆற்றுவது மட்டுமே தேவியின் பொறுப்பு மற்ற அனைத்தும் அன்னம் செய்துவிடுவாள்.

    தேன்நிலா பிறந்து ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகி இருந்தன.அன்னம் இப்பொழுது தனது வீட்டிற்கு தூக்கி செல்ல ஆரம்பித்திருந்தாள்.

    அவள் முதல் நாள் தேன்நிலாவை தூக்கி வந்த பொழுது வீட்டில் இருந்த அவரது உறவுகள் எதும் அந்த பிஞ்சு குழந்தையை நிமிர்ந்து பார்க்கவில்லை.

    **************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kum-anitha-sankar-02

    Regards,
    Chillzee Team :-)
    18 Apr 2018 18:32 #4 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • பள்ளிபருவம் எல்லாரது வாழ்விலும் மறக்க முடியதா நினைவுகள்.அந்த பள்ளி பருவத்தில் காலடி எடுத்துவைத்தாள் தேன்நிலா.

    இதுவரை வீட்டிலேயே தனது பொழுதை போக்கியவளுக்கு,அந்த சூழல் புதியதாய்...

    முதல் நாள் பள்ளியில் அவளை சேர்க்கும் பொழுது அவளது பள்ளி பதிவேட்டில் அன்னம் பெயரே தாயின் பெயராய் தேவி கொடுத்துவிட்டாள்.

    வாய் வார்த்தையை மட்டும் அல்ல,அனைத்திலும் அன்னமே தேன்நிலாவின் அன்னையாய் இருக்க அவள் உறுதி எடுத்திருந்தாள்.

    புது சூழல் தேன்நிலாவிற்கு பிடித்திருந்தாலும் தாய்,தந்தையை விட்டு விட்டு இருக்க அவளால் ஒரு மணிநேரத்திற்கு மேல் முடியவில்லை.

    சின்ன பெண் தானே அவள்.இதுவரை முழு நேரமும் தனது வீட்டில் இருதவளுக்கு,இப்படி தனியே இருப்பது பிடிக்கவில்லை.இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இப்பொழுது அந்த புது சூழ்நிலை பயம் கொடுக்க,தனது அன்னை அங்கு இல்லை என்பதை உணர்ந்தவளது உதடுகள் பிதுங்க இதோ,அதோ..என்று கீழே விழும் நிலையில் கண்ணீர் துளிகள்....

    அவள் அழுகையை ஆரம்பிக்க நினைத்த அந்த நொடி அவளது கண்ணில் விழுந்த அந்த உருவத்தின் நிழலில் அழுகையில் இருந்த உதடுகள் இப்பொழுது புன்முறுவல் பூத்தது.

    **************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kum-anitha-sankar-03

    Regards,
    Chillzee Team :-)
    13 May 2018 04:23 #5 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • அவர்கள் இருவரின் நிலையை பார்த்த கதிரேசன்,"அன்னம் என்ன ஆச்சு எதுக்கு உன் பொண்ணு இப்படி உட்கார்ந்திருக்கா..."என்றுக் கேட்டார்.அதற்கு அன்னதிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக வேறு வழியில்லாமல் தனது மகளிடம் திரும்பி,"அம்முக்குட்டி எதுக்கு அழுவுறாங்க..."என்று கேட்க தேன்நிலா அதற்கென்று காத்திருந்தது போல்...அழுக ஆரம்பித்தாள்...

    "அப்பா ... அப்பா... என்னை... அம்மா...அடிச்சிடாங்க..."என்று தேன் நிலா கூறிய அடித்த நொடி... தேவி நிலாவை பார்த்து,"அடியேய் பொய்யா சொல்லுற... நீ செஞ்சத்தையும் சொல்லு அப்பதான் அப்பாவுக்கு முழுவதும் தெரியும்....அதுக்கப்பறம் அவரே உன்னை அடிக்கலைனாப் பாரு..."என்று பொறிந்தார்.

    "தேவி அம்மா எதுவோ சொல்லுறாங்க...தேனு பாப்பா என்ன செஞ்சுச்சு... அப்பா கிட்ட சொல்லு..." என்று கதிரேசன் கேட்க திரு திருவென்று முழித்தாள் தேன்நிலா. அதை தூணின் மறைவில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்த கௌதம் விழுந்து விழுந்து சிரித்தான்...

    அதைப்பார்த்த தேன்நிலாவிற்கு தனது அண்ணன் மேல் கோபம் கோபமாக வந்தது... அவனை அப்புறம் எதிலாவது மாட்டிவிட வேண்டும் என்று நினைத்தவள் தனது தந்தை முகத்தையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்...

    ***********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kum-anitha-sankar-04

    Regards,
    Chillzee Team :-)
    19 Oct 2018 19:49 #6 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • ஒன்பாதம் வகுப்பு ஆண்டு பரீட்சைகள் ஆரம்பமாகி இருக்க சில நாட்கள் விடுமுறை இடைவெளியில் நடந்த பரீட்சைக்கு தயாராகி எழுதிக்கொண்டிருந்தனர் மாணவர்கள்...

    கதிரேசன்,தேவி,அன்னம் என அனைவரும் பக்கத்து ஊருக்கு விஷேஷம் என்று போய் இருக்க...

    வீட்டில் தனியாக இருக்க பிடிக்காமல் கயல் வீட்டிற்கு சென்றிருந்தால் தேன்நிலா...

    அன்று அவளுக்கு உடம்பு ஒரு மாதிரியாக இருந்தது... காலையில் இருந்து வயிறு வேறு ஒரு மாதிரி வலித்துக் கொண்டிருக்க... மாலை ஆறு மணி அளவில் கயலது வீட்டிலிருந்து கிளம்பினாள் தேன்நிலா...

    கயல் வீடு ஊரிலிருந்து கொஞ்சம் ஒதுக்கு புறமாக இருக்கும்,அதனால் அவள் தனது சைக்களில் வந்திருந்தாள்... சிறிதுதூரம் ஓட்டிச்சென்றவளால் அதற்கு மேல் ஓட்டி செல்ல முடியவில்லை...

    என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் இருந்த மரத்தடி நிழலில் சைக்கிளை நிறுத்தியவள்...,யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள்...

    **********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kum-anitha-sankar-05

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top