Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Anitha Sankar's "Kathal kathalitha kathaliyai kathalikkum" series discussion

04 Nov 2018 19:00 #7 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடிக்கொண்டிருந்தது...

    கௌதமும்,மதிவேந்தனும் தங்களது கல்லூரி படிப்பை முடித்திருந்தனர்...கௌதம் ஒரு சாப்ட்வர் கம்பெனியில் வேலையில் சேர்ந்து இருந்தான்...

    மதிவேந்தன் மேனஜ்மென்ட் படிப்பை எடுத்து முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான்....

    தேன்நிலா பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்...மதிவேந்தன் முற்றிலுமாக தேன்நிலாவை தவிர்த்தான்...

    அன்று தனது அத்தை பேசிவிட்டு போனப்பிறகு தனது தந்தை பட்ட மனகஷ்டத்தை பார்த்தவனுக்கு தேன்நிலா மீது கோபம் தான் அதிகமாகியது...

    இவன் இங்கு இப்படி இருக்கோ நிலவுபெண் அவளோ இவனது நியாபகத்திலே தனது நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள்...

    இரண்டு கேட்டான் வயதில் எல்லா குழந்தைகளுக்கும் வரும் எண்ணங்கள் தான் அவளுக்கும் தோன்றி இருந்தன...ஈர்ப்பு...

    ஆம் ஈர்ப்பு தான்...பார்த்தவை அனைத்தின் மீதும் வருகின்ற ஈர்ப்பு...தங்களை கவர்கின்ற அனைத்து பொருள்களின் மீதும் ஏற்படும் ஆசை...

    *****************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kum-anitha-sankar-06

    Regards,
    Chillzee Team :-)
    11 Nov 2018 00:24 #8 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • அன்னத்தின் வீட்டை அடைந்தவள் கதவை தட்டினாள்...அதிகாலை நேரம் என்பதால் மரகதம் கதவை திறந்தார்...

    கதவை திறந்தவரை கூட கவனிக்காமல்...புயலென உள்ளே நுழைந்தவள் பார்த்தது கட்டிலில் ஓய்ந்து போய் படுத்திருந்த அவளது அன்னையை தான்... ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்த அன்னைக்கும் இப்பொழுது பார்க்கும் அன்னைக்கும் அவள் வித்தியாசத்தை உணர்ந்திருந்தாள்...

    உடல் மெலிந்து இருந்தார் அவள் அன்னை...அவளது அன்னையை பார்க்க பார்க்க அவளுக்கு தனது அப்பா மீதும் தேவிம்மா மீதும் கோப கோபமாக வந்தது...

    தனது அன்னையின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவள் தனது அன்னையின் கைகளை மெதுவாக பிடித்துக்கொண்டாள்..

    அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது...அவளால் தனது அழுகையை அடக்க முடியவில்லை...

    அவளது அழுகை ஒலியில் கண் முழித்தார் அன்னம்...தனது அன்பு மகளை பார்த்த அன்னம் எழுந்து அமர ,”அம்மா...”என்ற அழைப்புடன் அவரை அணைத்துக்கொண்டாள் தேன்நிலா..

    **********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kum-anitha-sankar-07

    Regards,
    Chillzee Team :-)
    19 Nov 2018 18:42 #9 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • ஒப்புபத்திரம் மாத்திக்கொள்வதற்கான நேரம் நெருங்க மாப்பிள்ளையின் பெற்றோர்களும்...,பெண்ணின் பெற்றோர்களும் ஊரின் முன்னே மாற்றிக்கொள்ள தயாரானார்கள்,அப்பொழுதுதான் தேன்நிலா யாரும் எதிர்பார்க்காத அந்த காரியத்தை செய்தால்...

    அன்னத்தின் அருகே இருந்தவள் கண்ணிமைக்கும் நொடியில் வேந்தனின் அருகில் சென்று அவனை தன்னுடன் கட்டி அணைத்திருந்தாள்...

    அங்கிருந்த அனைவரும் ஒருநிமிடம் ஸ்தம்பித்துபோயினர்...என்ன நடக்குதுன்னு தெரியாமல் அங்கிருந்த பெரியவர்கள் அனைவரும் ஒருநொடி ஆடி போயினர்...

    வேந்தனை கட்டிபிடித்துக் கொண்ட தேன்நிலாவின் உதடுகள் “இவரு என்னோட மதி மச்சான்...நான் யாருக்காகவும் இவரை விட்டு தர மாட்டேன்..” என்று அவளது உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது...

    அன்னம் என்ன செய்வது என்று தெரியாமல் கண்கள் இருள ஒரு நொடி தடுமாறியவர் அடுத்து தனது பெண்ணின் அருகில் நின்றார்...

    “தேனு..என்ன...பண்ற... எல்லாரும் இங்க தான் பாக்குறாங்க... வேந்தனை விடு...” என்று கூறி அன்னம் தனது மகளை வேந்தனிடம் இருந்து கஷ்டப்பட்டு பிரித்தெடுத்து அந்த இட்டதை விட்டு இழுத்து சென்றார்...

    ***********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kum-anitha-sankar-08

    Regards,
    Chillzee Team :-)
    30 Nov 2018 18:51 #10 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • “மனம் படைத்தேன்

    உன்னை நினைப்பதற்கு...

    நானும் வடிவெடுத்தேன்

    உன்னை மணப்பதற்கு...”

    அவள் அவர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்ப்பார்க்கவில்லை...மதிவேந்தனே சம்மதித்த பிறகு திருமணம் பற்றி அவளுக்கு எழுந்த நம்பிக்கையை தங்களது எதிர்ப்பின் மூலம் உடைத்தெரிந்தனர் அவளது அண்ணனும்,தந்தையும்...

    அங்கு இருந்த அனைவருக்கும் இது அதிர்ச்சி தான்...அவர்கள் எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தத இடத்தில் சம்மதம் கிடைக்க இப்படி கதிரேசனும்.கௌதமும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று அவர்கள் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை...

    “கதிரேசா உனக்கு என்னப்பா பிரச்சனை,அவங்களே சம்மதிச்சுட்டாங்கள அப்பறம் உனக்கு என்ன... ” என்று கேட்டார் அந்த பெரியவர்...

    “இல்ல மாமா என்னோட பொண்ணுக்கு இந்த கல்யாணம் வேண்டாம்...அவ கல்யாணமே பண்ணாம எங்ககூட இருந்தாக்கூட பரவாயில்லை...அவளுக்கு இந்த கல்யாண வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு எனக்கு தோணலை...” என்று கூறி தேன்நிலாவின் மனதில் இடியை இறக்கினார் அவளது தந்தை.

    ********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kum-anitha-sankar-09

    Regards,
    Chillzee Team :-)
    28 Dec 2018 21:37 #11 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • அந்த இரவுக்கே உரித்தான சூழ்நிலையோடு அந்த அறைகாட்சி அளித்தது... புதுமையும் பழமையும் கலந்து அந்த அறை வடிவமைக்கப் பட்டிருந்தது...

    அமைதியாக கட்டிலில் கண்களை மூடிப்படுத்திருந்தான் மதிவேந்தன்...

    உள்ளே வந்தவள் கதவை தாழ்பாள் போட்டுவிட்டு அவனுக்கு அருகில் சென்றாள்... அவளது கொலுசு ஒலியிலே அவன் கண்விழித்திருந்தான்... அவள் கதவை தாழ்பாள் போடுவதற்குள் அவன் கட்டிலில் இருந்து எழுந்து நின்றுக் கொண்டிருந்தான்...

    **********************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kum-anitha-sankar-10

    Regards,
    Chillzee Team :-)
    18 Mar 2019 17:42 #12 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • அந்தவீடு பழைய கால முற்றம் வைத்து மாடியுடன் இருக்குமாறுக் கட்டப்பட்டிருந்த வீடு...

    வேந்தனின் அறை மாடியில் தான் இருந்தது...அவர்கள் அறைக்கு அடுத்து கொஞ்சம் தூரத்தில் வெளியில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்க எதுவாய் முல்லைகொடிகளின் பந்தலின் கீழே உட்கார ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் அங்கு செய்து இருந்தனர்...

    அந்த இடத்தின் கீழே அமர்ந்தாள் அந்த முல்லை கொடியின் வசமும்,மாலை வேலையில் அடிக்கும் காற்றும் மனதில் எவ்வளவு வேதனை இருந்தாலும் அதனை மறந்து நம்மை அமைதியாக வைத்திருக்கும்... அதன் அடியில் தான் அமர்ந்திருந்தாள் தேன்நிலா...

    *******************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kum-anitha-sankar-11

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top