Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Devi's Kathalaana nesamo series discussion

07 Jun 2018 11:58 #13 by Nanthini

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1102
  • Like received: 567
  • ஷ்யாம் வந்து இருப்பதை அறியாத அவனின் அத்தை குடும்பத்தினர் அவனை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும் மித்ராவின் மகிழ்ச்சி அவள் முகத்தையே பிரகாசமாக காட்டியது.

    அவள் ட்ரெஸ் செலெக்ஷன் பற்றி சொன்னதை கேட்டவன்

    “ஒய்.. மித்து.. அப்போ அதுக்கு தான் என்னை எதிர்பார்த்தியா? உன் கல்யாணத்துக்கு இல்லியா?

    “போங்க அத்தான். நீங்க கல்யாணத்துக்கு கண்டிப்பா வருவீங்கன்னு தான் கல்யாணத்துக்கே ஓகே சொன்னேன். அதிலே டவுட் இருந்து இருந்தால், நீங்க வர வரைக்கும் நான் வெயிட் பண்ணிருப்பேன்.”

    “ஹ..ஹ.. சும்மா கதை விடாதே. இப்போ தான் பார்த்தேனே.. “

    “அது ரெண்டு நாளா எனக்கு ஒரே குழப்பம் அத்தான். இந்த பர்சேசிங் வரவே பிடிக்கலை தெரியுமா? உங்கள பார்த்ததும் என்னோட பர்ஸ்ட் கவலை தீரப் போகுதுன்னு சந்தோஷத்திலே துள்ளி குதிச்சிட்டேன்.”

    “ஹ்ம்ம்.. நம்பறேன். அப்புறம் மிஸ்டர்.மித்ரா எப்படி இருக்கார்?

    *********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...laana-nesamo-devi-10

    Rgds,
    Nanthini
    The following user(s) Liked this message: Devi
    14 Jun 2018 13:42 #14 by Nanthini

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1102
  • Like received: 567
  • ஷ்யாம் வந்த பிறகு மித்ராவின் கல்யாணம் மேலும் களை கட்ட ஆரம்பித்தது. கல்யாணத்திற்கு தேவையானதை தனியாகவும், அவள் புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்ல போகும் பொருட்களை தனியாகவும் பேக் செய்ய ஆரம்பித்து இருந்தனர்.

    அன்றைக்கு மித்ராவிடம் சண்டையிட்ட சரவணன், மறுநாள் அவளிடம் பேசினான். ஆனால் முதல் நாள் பேசியதற்கு வருத்தமோ, இல்லை விளக்கமோ எதுவும் சொல்லவில்லை. எப்போதும் போல் அவனை பற்றி அல்லது அவன் குடும்பத்தை பற்றி பேசினான்.

    இரண்டு முறை மித்ரா அதை பற்றிய பேச்சு எடுத்த போதும், அவன் அதை விட்டு வேறு பேசவே, அவளும் விட்டு விட்டாள்.

    அதே போல் கடைக்கு சென்று வந்த மறுநாள் சபரி வீட்டிற்கு வந்த ராம், மைதிலி இருவரும் சபரி, முரளி இருவரோடு அந்த பாட்டியையும் அமரவைத்து பேசினார்கள்.

    மைதிலி முதலில் “பெரியம்மா, பெரியவங்க நீங்க. நீங்களே இப்படி செய்யறது சரியா சொல்லுங்க?

    “நான் என்ன பண்ணினேன்?

    “நாம நம்ம பக்க வேலைகளை முடிச்சுட்டு இருக்கோம். அத ஏன் சம்பந்தி வீட்டுக்காரங்களுக்கு சொல்லணும்?

    **********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...laana-nesamo-devi-11

    Rgds,
    Nanthini
    The following user(s) Liked this message: Devi
    21 Jun 2018 14:27 #15 by Nanthini

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1102
  • Like received: 567
  • அந்த திருமண மண்டபம் நான்கு தளங்களாக இருந்தது. கீழே டைனிங் ஹால், முதல் மாடியில், மணமேடையும், பக்கங்களில் மணமக்களுக்கான அறைகளும் இருந்தது. அதில் மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மட்டும் தங்கி இருந்தனர்.

    மற்ற உறவினர்களுக்கு மேலே உள்ள இரண்டு தளங்களிலும், வரிசையாக பத்து பத்து அறைகள் இருக்கவே, அதை எடுத்துக் கொண்டனர். ஒரு சிலர் மெயின் ஹாலில் படுத்துக் கொண்டனர்.

    காலையில் பியூட்டி பார்லரில் இருந்து எத்தனை மணிக்கு வருவார்கள் என்று கேட்பதற்காக தன் அத்தை மைதிலியை தேடி வந்து இருந்தாள் மித்ரா.

    சுமித்ரா, சைந்தவி இருவரும் அவர்கள் பிரெண்ட்ஸ் இன்னும் சில பேரை அங்கே தங்க வைத்து இருந்ததால், அவர்களின் வசதியை கவனிக்க சென்று இருந்தார்கள். அதனால் மித்ரா மைதிலியை தேடி தனியாகவே வந்து இருந்தாள்.

    மாப்பிள்ளை, பெண் இருவர் வழியிலும் முக்கியமான ஒரு சில உறவினர் மட்டுமே இருந்தனர். அதனால் மணப்பெண் தனியாக செல்கிறாளே என்று எல்லாம் யாரும் எண்ணவில்லை. அப்போதும் ஒன்று இரண்டு பேர் யாரை தேடுகிறாய் என்று கேட்டு, மைதிலி என்றவுடன் சரி என்று அனுப்பி வைத்தனர்.

    ***********************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...laana-nesamo-devi-12

    Rgds,
    Nanthini
    The following user(s) Liked this message: Devi
    29 Jun 2018 08:48 #16 by Nanthini

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1102
  • Like received: 567
  • சரவணனோடு திருமணம் இல்லையென்று ஆன பின், அவர்களை கிளப்பி அனுப்பும் வேலையை சந்தோஷ் , ஸ்ருதி பார்த்துக் கொள்ள, விஷயம் கேள்விப்பட்ட ராமின் அப்பா, அம்மா இருவரும் தங்கள் பேத்தியை காண வந்தனர்.

    முரளி, ராம் உறவினர் ஒருவர் கூட ஏன் இந்த கல்யாணம் நின்று விட்டது என்று கேட்கவில்லை. அவர்களுக்கு தெரியும் ராம் இதை செய்து இருக்கிறான் என்றால் சரியான காரணம் இல்லாமல் இருக்காது என்று. இனி அடுத்து என்ன என்ற கேள்வியே எல்லோரிடமும் இருந்தது.

    சைந்தவி, சுமித்ரா இருவரும் எதுவும் புரியாமல் மித்ராவின் அருகில் நின்று கொண்டனர். சபரியோ கண்களில் கண்ணீர் வர , தன் மகளை அணைத்து கொண்டு நின்றார்.

    அப்போதுதான் மைதிலி கேட்கவும், மைதிலி அப்படி கேட்பாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் அப்படியே நிற்கவும், மித்ராவின் பாட்டி மட்டும் ஆச்சர்யத்தோடு,

    “என்ன தீடிர் என்று கேட்கிறாய் மைதிலி?

    இப்போது சுதாரித்த ராமின் அம்மா கௌசல்யா,

    ****************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...laana-nesamo-devi-13

    Rgds,
    Nanthini
    The following user(s) Liked this message: Devi
    05 Jul 2018 11:24 #17 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • ஷ்யாம், மித்ரா தவிர அனைவருமே இந்த கல்யாணத்தை சந்தோஷத்தோடு வரவேற்றனர்.

    கல்யாண மாப்பிள்ளை மாறிய விஷயத்தை உறவினர்களுக்கு பக்குவமாக சொல்லும் பொறுப்பை ஷ்யாமின், தாத்தா பாட்டி ஏற்றுக் கொண்டனர்.

    மித்ராவின் பாட்டி சைந்தவி, சுமித்ரா இருவரையும் பார்த்து “பிள்ளைங்களா நீங்க போய் சீக்கிரம் படுங்க. நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் தான் பொண்ணு, மாப்பிள்ளை கூட அதிக நேரம் இருக்கப் போறீங்க. அப்புறம் போட்டோ, வீடியோவில் பார்க்க நல்லா இருக்காது” என்று கூறினார்.

    “அத தான் பாட்டி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம். நாளைக்கு எங்க மேக் அப் எல்லாம் ஏற்கனவே பண்ண மாதிரி இருக்கட்டுமா? இல்லை மாத்தலாமான்னு யோசிச்சுட்டு இருக்கோம்”

    “என்ன மேக் அப் போட்டாலும் இருக்கிறது தான் தெரியப் போகுது.” என்று அவர்களை வாரினார் பாட்டி.

    “இப்போ என்ன நாங்க நல்லா இருக்கோம்ன்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா? – இருவரும் இடுப்பில் கை வைத்து பாட்டியை வம்பு இழுக்க,

    **********************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...laana-nesamo-devi-14

    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: Devi
    12 Jul 2018 17:35 #18 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • திருமணம் நல்லபடியாக முடிந்து இருக்க , வந்தவர்களை கவனிக்கும் வேலையில் அனைவரும் பிஸியாக இருந்தனர். இன்னும் மணமேடையில் சடங்குகள் நடந்த வண்ணம் இருக்க, ஷ்யாம் , மித்ரா இருவருக்கும் பேச எல்லாம் நேரம் கிடைக்கவில்லை.

    ராம் மகன் ஷ்யாம் திருமணம் என்று மாறிய பிறகு, அநேகம் பேருக்கு தகவலே முதல் நாள் இரவு தான் கிடைத்தது. அவர்கள் எல்லாம் திருமணத்திற்குக் காலையில் வந்து இருந்தனர். அதனால் சடங்குகளோடு, நடுவில் மணமேடைக்கு வந்து வாழ்த்துக் கூறியவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தான்.

    சைந்தவியும், சுமித்ராவும் தான் அங்கே சற்று ரிலாக்ஸ்டாக இருந்தார்கள். இருவரும் ஷ்யாம், மித்ரா அருகில் அமர்ந்து கொண்டு கேலி செய்து கொண்டு இருந்தார்கள்.

    கிட்டத்தட்ட எல்லாம் முடிந்து பொண்ணு, மாப்பிள்ளையை சாப்பிட அழைக்க, இருவரும் மாலைகளை மட்டும் கழட்டி மணவறையில் வைத்து விட்டு டைனிங் ஹால் சென்றனர்.

    வழக்கமாக நீள வாக்கில் போடப்பட்டு இருக்கும் சாப்பாட்டு வரிசை, இங்கே வட்டமாக போடப்பட்டு இருக்க, ஒரு இடத்தில் மட்டும் இடைவெளி விட்டு இருந்தது.

    *******************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...laana-nesamo-devi-15

    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: Devi
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top