Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Padmini's "En madiyil pootha malare" series discussion

02 May 2018 20:05 #2 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • ஆண்டாள் திருப்பாவை இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது அந்த கிராமத்தில். அது ஒரு காவிரி நதிக்கரையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துல்ல கிராமம். காவிரி நீர் வாய்க்கால் வழியாக நேரடியாக அந்த ஊருக்கு வரும். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று மின்னும் நெற்பயிர்களும், குலை குலையாக காய்த்து குழுங்கும் வாழை தோட்டங்களும், சாலையின் இரு புறமும் நன்கு உயர்ந்த தென்னை மரங்கலும் சூழ்ந்து ரம்யமாக இருக்கும் அந்த கிராமம் ஒரு காலத்தில்....

    இன்று காவிரியில் நீர்வரத்து இல்லாததால் விவசாயமே தேய்ந்து போனது. எங்கயாவது ஒரு சில இடங்களில் மட்டும் சிலர் ஆழ்துளை கிணற்றின் மூலம் கொஞ்சமாக விவசாயம் செய்து வந்தனர்.. பாதி பேர் வேலை தேடி நகரத்திற்கு இடம் பெயர ஆரம்பித்திருந்தனர்..

    அந்த அழகிய கிராமத்தில் இன்னொரு சிறப்பு அங்கு உள்ள கோயில்கள். எல்லா தெய்வங்களுக்கும் அங்கு கோயில்கள் உண்டு. அதனாலயே ஏதாவது ஒரு விஷேசம் எப்பவும் இருந்து கொண்டே இருக்கும்.

    அதுவும் மார்கழி மாதம் என்றால் தனி சிறப்பு. மாதம் முழுவதும் அதி காலையில் அங்கு உள்ள பெருமால் கோயிலில் இருந்து திருப்பாவை ஒலிக்கும்..

    மக்கள் அந்த இனிமையில் மயங்கி தங்கள் நாளை ஊற்சாகமாக தொடங்குவர்...

    **********************************************************

    இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-01

    Regards,
    Chillzee Team :-)
    16 May 2018 20:28 #3 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • ஆதியை பார்த்து விடனும் என்று சைக்கிளை வேக வேகமாக மிதித்தாள் பாரதி..

    ஊருக்கு வெளியில் இருந்தது அந்த குளம். காவிரியில் நீர் வரத்து அதிகமாகும் காலங்களில் அங்கு உள்ள வாய்க்காலில் தண்ணிர் பெருக்கு அதிகரிக்கும். அந்த சமயங்களில் உபரி நீரை அந்த குளத்தில் சேமிப்பர்..அதோடு மழை நீரும் அந்த குளத்தில் தான் தேங்கும். ஆற்றில் நீர் இல்லாத சமயங்களில் அந்த குளத்திலிருந்து நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி கொள்வர் அந்த ஊர் மக்கள்..ஆனால் இன்று ஆற்றில் நீர் இல்லை. மழையும் பொய்த்ததால், வறண்டு இருந்தது அந்த குளம்.

    பாரதி அந்த குளத்தை அடைந்ததும் சைக்கிளை சாலையில் போட்டு விட்டு வேகமாக அந்த குளக்கரைக்கு ஓடினாள்.

    அங்கு அவளின் வருகைக்காக காத்து கொண்டிருந்த ஆதியை கண்டதும் அவளின் முகம் தாமரையாக மலர்ந்தது. தன் கவலைகள் எல்லாம் மறந்து தலைவனை கண்ட தலைவியாய் அவளிடம் உற்சாகம் பொங்கியது. அந்த உற்சாகம் அவளின் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பரவியதை உணர்ந்தாள். அதை ரசித்துகொண்டே

    “என்ன ஆதி, நான் வருவேனு எனக்காக வெய்ட் பண்ணினியா?

    *************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-02

    Regards,
    Chillzee Team :-)
    30 May 2018 18:10 #4 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • கல்யாணம் ஆகியா போறா” என்று பாரத் கேட்டதும் பாரதிக்கு சுருக் கென்றது. ஒரு வேளை நான் செய்ய போகும் செயலும் கல்யாணம் ஆகிறதை போலதானோ? என்று அவளின் மனம் கேள்வி கேட்டது....

    அதற்குள் காமாட்சி பாட்டி,

    “டேய், மஹா இங்க பக்கத்தில் இருக்கிற ஊருக்கு தான் போயிருக்கா. நினைச்சா ஒடியாந்திரலாம். ஆனால் பாரதி கண்ணு அப்படியா. ரொம்ப தூரம் இல்ல போறா “

    “ஐயோ ஆயா, உனக்கு உலகமே இன்னும் புரியல.”

    “மஹா இங்க பக்கத்தில இருந்தாலும், அவளால நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வர முடியாது. அவ ஊருக்கு பஷ் ஷே கிடையாது. இப்பதான் போனா போகுதுனு ஒரு மினி பஷ் விட்டிருக்காங்க. அதுவும் தினமும் ஒரு தடவைதான் வரும். பாதி நாள் வர்ரதே இல்லை.”

    மஹா கிளம்பி வரதுன்னா , தோட்டத்துல ஏதாவது ஒரு செடியை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கிற நம்ம மாமாவுக்கு தகவல் சொல்லி, அவர் வந்து, அவரோட புல்லட் ஐ ஷ்டார்ட் பண்ணி , அது ஷ்டார்ட் ஆகி, அவங்க ஊர் ரோட்ல பஞ்சர் ஆகாம வந்து சேர்ரதுக்குள்ள ஒரு நாள் ஆகிடும்.”

    *************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-03

    Regards,
    Chillzee Team :-)
    13 Jun 2018 12:21 #5 by Nanthini

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1102
  • Like received: 567
  • “முருகா என் மகனுக்கு சீக்கிரம் ஒரு நல்ல வழியை காட்டு “ என்று மனமுருகி வேண்டி கொண்டே கற்பூர தட்டை வெளியில் எடுத்து வந்தார் ஜானகி.

    அதே நேரம் மாடியிலிருந்து அலுவலகம் செல்ல கிளம்பி கீழே இறங்கி வந்தான் ஜானகியின் ஒரே தவ புதல்வன் ஆதி என்கிற ஆதித்யா....நம் கதையின் நாயகன்..

    ஆதித்யா, முன்னேறி வரும் சிறந்த தொழிலதிபன். ஆறடி உயரம், அலை அலையாக அடர்ந்த கேஷம், கறுத்து அடர்ந்த மீசை , கட்டான உடற்கற்றுடன் ஒரு ஆணின் இலக்கணமாக விளங்குபவன்.

    கேஷம் காற்றில் ஆட, சட்டையின் கையில் உள்ள பட்டன்களை போட்டுகொண்டே இரண்டு இரண்டு படியாக தாவி இறங்கி வரும் தன் மகனின் அழகையே ரசித்து கொண்டிருந்தார் ஜானகி..

    “என்னமா , அப்படி பார்க்கறீங்க? “ என்று புன்னகைத்தான். ஆதி

    என் மகன் ராஜா மாதிரி எவ்ளோ அழகா இருக்கான்.. என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு.” என்று அவனை நெட்டி முறித்தார்..

    *****************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-04

    Rgds,
    Nanthini
    27 Jun 2018 12:17 #6 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • நர்ஷ் வெளியே செல்லவும் அந்த பெண் அவசரமாக பதட்டத்துடன் உள்ளே வந்தாள்.. அந்த பெண்ணை பார்த்ததும் ஜானகியின் முகம் மாறியது. இந்த பெண்ணை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்தார்..

    அதற்குள் சுசிலா அந்த பெண்ணை பார்த்து ,

    “வாம்மா.. ஜெயந்தி.. போன வாரம் தானே செக்கப்புக்கு வந்துட்டு போன.. எல்லாம் நார்மலா இருந்ததே.. இப்ப என்ன மீண்டும்? எனி ப்ராப்லம்?

    “ஆமா டாக்டர்.. லைட் டா ப்லீடிங் ஆகிற மாதிரி இருக்கு. ரொம்ப பயமா இருக்கு. அதான் நேர்லயே உங்களை பார்க்க வந்திட்டேன்..”

    “பயப்படாத.. ஒன்னும் ஆகாது.. வா செக் பண்றேன்” என்று உள்ளே அழைத்து சென்றார்

    சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவர்

    ”ஒன்னும் பயப்படற மாதிரி இல்லமா.. எல்லாம் நார்மலா தான் இருக்கு.. இது சும்மா சில பேருக்கு இப்படி ஆகும் “ என்றதும் தான் அந்த பெண்ணின் முகத்தில் தெளிவு வந்தது..

    *************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-05

    Regards,
    Chillzee Team :-)
    11 Jul 2018 19:30 #7 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • மருத்துவமனையில் இருந்து திரும்பி வரும் வழியில், சுசிலா சொன்ன செய்திகளே திரும்ப திரும்ப நினைவு வந்தது.. அதிலும் அந்த வாடகை தாய் பற்றிய விளக்கமும், அந்த நடிகரோட செயலும் மீண்டும் மீண்டும் ஒலித்தது ஜானகிக்கு...

    அவர் மனதுக்குள்ளே சில கணக்குகளை போட்டு பார்த்தார்.. அதற்கான விடை சரியாக வரவும் திருப்தியாகியது..

    ஆனால் அவர் போட்ட கணக்கால் ஒரு பொண்ணோட வாழ்க்கை பாதிக்கபடும் என்பதை அறிந்திருக்கவில்லை ஜானகி அப்பொழுது..

    மடமடவென ஒரு திட்டத்தை தீட்டினார்... ஆனால் இது சரியா வருமா?? என்ற குழப்பமும் தப்பாயிருச்சுனா என்ற பயமும் மாறி மாறி வந்தது..

    அதே மன நிலையுடன் வீட்டை அடைந்தவர் நேராக பூஜை அறைக்கு சென்றார்..

    தன் திட்டம் சரியா, தப்பா, நிறை வேறுமா , ஆகாதா என்று அந்த முருகனிடமே முடிவை வைத்தார்....

    இந்த ஆட்டத்தையே ஆரம்பித்து வைத்தவன் அவன் அல்லவா... தனக்கு என்ன வேண்டுமோ, எப்படி அடுத்த காய் நகர்த்தனுமோ அதையே ஜானகிக்கு முடிவாக கொடுத்தான் சிரித்துகொண்டே!! ..

    *********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-06

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top