Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Padmini's "En madiyil pootha malare" series discussion

12 Sep 2018 19:12 #13 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • ஆதித்யா இப்பொழுது தந்தைக்கு உதவியாக மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தான்.... ஆனால் மணி 5 ஆனால் டான் னு வீட்டிற்கு வந்து விடுவான் அவன் மனைவியை பார்க்க...அதற்கு பிறகு இரவு உணவுக்குதான் கீழ வருவார்கள்..

    ஜானகியும் அதை கண்டு “இந்த விஷயத்தில் அப்படியே அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கான்.. ராம் அப்படிதான் கல்யாணம் ஆன புதிதில் தன் மனைவியை பிரிந்து கொஞ்ச நேரம் கூட இருக்கமாட்டார்.. அவர் அப்பா வற்புறுத்தி கூட்டி போனாலும் 5 மணிக்கு வீட்டிற்கு ஓடி வந்திடுவார்... அதே மாதிரிதான் புள்ளையும்” என்று மனதிற்குள் சிரித்து கொள்வார்...

    சில நேரம் இரவு பார்ட்டிக்கு சென்று விடுவார்கள்... நீண்ட நேரம் கழித்தே வீடு திரும்புவார்கள்.. ஜானகி எதையும் கண்டு கொள்வதில்லை.. சின்ன சிறுசுங்க ஜாலியா இருக்கட்டும் என்று விட்டு விடுவார்.. ஒரே வருத்தம் என்னவென்றால் தன் மருமகளின் உடை தான்...

    தான் முதல் முதலில் பார்த்தபொழுது தலைய தலைய புடவை கட்டியிருந்தவள் திருமணத்திற்கு பிறகு மருந்துக்கும் புடவை கட்டி பார்த்ததில்லை.. எப்ப பார்த்தாலும் எதாவது மாடர்ன் ட்ரெஷ் மட்டுமே.. அதுவும் இந்த மாதிரி பார்ட்டிக்கு போகும் பொழுது இன்னும் மோசமாக இருக்கும்... அதை பார்க்கும் பொழுது ஜானகிக்கு கொஞ்சம் வலிக்கும்..

    ************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-12

    Regards,
    Chillzee Team :-)
    19 Sep 2018 19:07 #14 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • ராம்குமாரின் கை கால்கள் இழுக்க ஆரம்பித்ததை கண்ட ஜானகி

    “ஆதி “ என்று அலறினார்...

    அவனிடம் இருந்து எந்த பதிலும் வராததால் மெல்ல மாடி ஏறி அவன் அறையை அடைந்தார்... அங்கு ஆதித்யாவோ அலங்கோலமாக கிடந்தான்... அவன் உதடுகளோ

    .“நான் தோத்துட்டேன்... என்னால் ஒன்னும் செய்ய முடியல ... அவ என்னை ஏமாத்திட்டா “ என்று புலம்பியது.. அதை பார்த்ததும் நெஞ்சை பிசைந்தது ஜானகிக்கு...

    “எப்படி ராஜகுமாரானக இருந்தவன் இப்படி ஆயிட்டானே .. நான் என்ன செய்வேன்” என்று மனதிற்குள் புலம்பியவர்

    “ஆதி.. கண்ணா.. அப்பாவுக்கு முடியல.. எழுந்திருடா” என்று அவனை உலுக்கி எழுப்பினார்.. ஆனால் அவனோ அதை உணரும் நிலையில் இல்லை...

    **************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-13

    Regards,
    Chillzee Team :-)
    26 Sep 2018 18:47 #15 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • உங்கிட்ட மடிப்பிச்சை கேட்குறேன்... என் குலத்தை வாழ வை “ என்று கண் கலங்கி தன் முந்தானையை நீட்டினார் பாரதியின் முன்னே ஜானகி.....

    அதை கண்டதும் பதறிய பாரதி,

    “ஐயோ !! என்ன அத்தை இது?? ... நீங்க போய் பிச்சை அது இது னு... பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு...

    நீங்க எங்களுக்கு செஞ்ச உதவிக்கு ... “ என்று சொல்லும் பொழுதே நேற்று சுசிலாவும் ஜானகியும் அறையில் பேசி கொண்டு இருந்தது ஞாபகம் வந்தது... எவ்வளவு பெரிய உதவியை தங்களுக்கு செய்து இருக்கிறார்.. இவர் மட்டும் அந்த இக்கட்டான நேரத்தில் பணம் கொடுத்து உதவி இருக்காவிட்டால் தன் தந்தை நிலை என்னாவாயிருக்கும்” என்று நினைத்து பார்த்தாள் பாரதி

    ஜானகியோ பாரதி உதவி என்றதும் தான் அவர்களை பார்த்து கொண்டதைத்தான் குறிப்பிடுகிறாள் என்று புரிந்துகொண்டு

    “அச்சோ!!.. நான் உன் கூட இருந்து பார்த்துகிட்டதை போய் உதவினு சொல்லாத பாரதி.. அதையும் நான் கேட்ட இந்த உதவியையும் முடிச்சு போடாத... நான் அதை ஒரு அண்ணனுக்கு செஞ்சதாகத்தான் நினைக்கிறேன்.. சொல்ல போனால் அப்ப இந்த மாதிரி உங்கிட்ட கேட்கனும் என்ற எண்ணமே இல்லை.. நேற்று உன்னை பற்றி தெரிந்த பிறகுதான் இப்படி ஒரு எண்ணம் வந்தது...

    ************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-14

    Regards,
    Chillzee Team :-)
    03 Oct 2018 19:04 #16 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • எது நடந்தாலும், என்ன ஆனாலும் ஜானகி அத்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றனும் என்று எண்ணி கொண்டாள் பாரதி.. அந்த நேரம் அவளின் அலைபேசி ஒலித்தது.. அவள் யாரை நினைத்து கொண்டிருந்தாளோ அவரே அவளை அழைத்து இருந்தார்... அதை கண்டதும் பாரதியின் முகத்தில் புன்னகை அறும்பியது...அதே புன்னகையுடன் அதை அட்டென்ட் பண்ணியவள்

    "நூறு ஆயுசு அத்தை உங்களுக்கு.. இப்பதான் உங்களை பற்றி நினைத்தேன்.. நீங்களே போன் பண்ணீட்டிங்க" என்று சிரித்தாள் பாரதி...

    "ஹ்ம்ம்ம் எனக்கு நூறு ஆயுசு வாழனும்னு பேராசை எல்லாம் இல்லை பாரதி மா ... என் பேரனையோ பேத்தியையோ பார்த்துட்டு அவங்களோட கொஞ்ச நாள் ஓடியாடி விளையாடிட்டா போதும்ம்.. நான் நிம்மதியா என் ராம் இருக்கற இடத்துக்கே போய்டுவேன் " என்று பெருமூச்சு விட்டார்..

    “ஹ்ம்ம் அவ்வளவு சீக்கிரம் உங்கள நிம்மதயா போக விட்டுடுவேனா??? இன்னும் எவ்வளவோ இருக்கு நீங்க பார்க்க, அனுபவிக்க... அதுக்குள்ள போறேனா எப்படியாம்??? "என்று சிரித்தாள்..

    ***********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-15

    Regards,
    Chillzee Team :-)
    10 Oct 2018 19:08 #17 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • அதிகாலை....

    வெளியில் பனிக்காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது.. பாரதி அயர்ந்து தூங்கிகொண்டிருந்தாள்... அந்த அறையின் கதவை திறந்து கொண்டு அந்த நெடியவன் உள்ளே வந்தான்.. உள்ளே வந்தவன் அவளின் அருகில் வந்து கையில் கொண்டு வந்திருந்த காபியை அருகில் இருந்த டீபாயில் வைத்தான்... பின் அவளை நோக்கி குனிந்து

    “ஹே ரதி.. எழுந்திருடீ.. காலைல விடிஞ்சி மணி எட்டாயிருச்சு பார்...இன்னும் என்ன தூக்கம்?? “ என்று அவளை எழுப்பினான்

    “போ ஆதி... எனக்கும் இன்னும் தூக்கம் தூக்கமா வருது.. நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கனும் “ என்று போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்..

    “ஹே!! கும்பகர்ணி... எல்லார் வீட்லயும் பொண்டாட்டி தான் காபி கொண்டு வந்துட்டு புருஷனை எழுப்புவாங்க.. இங்க எல்லாம் தலைகீழா இருக்கு.. பார்.. உன் புருஷன் நான் வந்து உன்னை எழுப்ப வேண்டி இருக்கு.. எழுந்திருடீ ... “ என்று மெல்ல அவள் மேல் இருந்த போர்வையை இழுத்தான்..

    ************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-16

    Regards,
    Chillzee Team :-)
    17 Oct 2018 19:08 #18 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • இரண்டாம் மாதம்:
    இரண்டு மாதங்களுக்கு பிறகு:

    அன்று அதிகாலையிலயே விழிப்பு வந்தது ஆதித்யாவிற்கு... மெத்தையில் இருந்து எழும்பொழுதே ஒரு வித உற்சாகமாக இருந்தது அவனுக்கு.. என்னவென்று தான் புரியவில்லை... எழுந்தவன் விசில் அடித்துக்கொண்டே காலை உடற்பயிற்சிகளை முடித்தான்... பின் தன் அலைபேசியில் ஏதோ செய்தி வரவும் அதை எடுத்து பார்த்தான்.....

    பார்த்தவன் “ஆஹா....வாவ் “ என்று துள்ளி குதித்தான்....

    அவனுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருந்தது அதில்.. ரொம்ப நாட்களாக அவன் எதிர்பார்த்து கிடைக்காமல் போக இருந்தது மீண்டும் அவனுக்கே கிடைத்து விட்டது.... அதனால தான் இன்று எழும்பொழுதே இவ்வளவு சந்தோஷமாக இருந்ததோ!!.. இனி எல்லாம் சுகமே என்று பாடிக்கொண்டே கிளம்பி கீழே சென்றான்...

    ஜானகியும் அப்பொழுதுதான் தன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர் அதை வைத்தவரின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்...

    *******************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-17

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top