Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Subhashree's 'Ithaya siraiyil aayul kaithi' series discussion

17 May 2018 00:18 #1 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • Forum thread to discuss Subhashree's Ithaya siraiyil aayul kaithi series.

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: Subhasree
  17 May 2018 02:11 #2 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • மாலையும் இரவும் சங்கமித்துக் கொஞ்சி மகிழ தொடங்கியது. இருளா இல்லை இருளாத வேளையா? என பறவைகள் தங்கள் சகாக்களிடம் வினவிக் கொண்டிருந்தன. நியூ யார்க்கில் இருந்த அந்த அரங்கத்தில் செந்தமிழ் தன் கம்பீரமும் வீரமும் பொருமையும் தாங்கி அனைவரையும் தன் வசம் ஆக்கிக் கொண்டிருந்தது.

  கண்ணகி தன் கையில் இருந்த சிலம்பை கீழே போட்டு உடைக்க அதில் சிறையிருந்த மாணிக்க பரல்கள் விடுதலைப் பெற்ற மகிழ்ச்சியில் நாற்புரமும் தெறித்தன.

  இதைக் கண்ட மதுரை அரசன் பாண்டிய நெடுஞ்ழியன் அதிர்ந்து தளர்ந்து

  “பொன் செய் கொல்லன் - தன் சொல் கேட்ட

  யானோ அரசன்? யானே கள்வன்”

  என தவறான நீதியை வழங்கியமைக்காக மனமுடைந்து உயிர் துறக்கிறான். அவன் மனைவியும் அரசியுமான கோப்பெருந்தேவியும் கணவனோடு தன் இன்னுயிரை தியாகம் செய்கிறாள்.

  **************************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-kaithi-subhashree01

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: Subhasree
  31 May 2018 01:42 #3 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • அழகாக ஒரே சீராக வெட்டபட்ட புல்வெளி. சில புல்களின் மேல் வைர கீரீடமாய் பனிதுளி. ஆங்காங்கே வண்ண மலர்கள் தலையாட்டி சிரித்துக் கொண்டிருந்தன. அதிக பரப்பளவை கொண்ட இடம். நடுவே சதுர வடிவில் இரண்டு தளங்களைக் கொண்ட கட்டிடம். அதன் மேலே “காஞ்சனா ஸ்கூல் ஆப் டான்ஸ்“ என்று ஆங்கிலத்தில் பொன்னிற எழுத்துகள் மின்னின.

  கட்டிட நுழைவு பகுதியின் முன்னே கைக்கு வேலை வைக்காமல் கால் வைத்ததும் சரக்கென்று விலகிக்கொள்ளும் பெரிய ஆட்டோமேடிக் கண்ணாடி கதவுகள். உள்ளே வரவேற்பரையில் தன் அழகை அதிகப்படுத்தி புன்னகையும் ஆங்கிலமும் இணைந்து எப்பொழுதாவது தமிழும் பேசும் பெண் க்ளாரா வுட். அவள் பேசுவது அவளுக்கே கேட்குமா என சந்தேகம் வரவைக்கும் டெசிபளிலில் அவள் மென்மையான குரல். பரதநாட்டியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவள்.

  அவள் முன் கணினி அவளை அசையவிடாது. அந்த நடன பள்ளியில் சேருவது மற்றும் பல முக்கிய விஷயங்கள் அவளிடமே அடக்கம். புத்தகத்தின் முன்னுரைப் போல இப்பள்ளியின் முகவுரை க்ளாரா வுட். காஞ்சனாவின் இடது கை.

  அனைத்து தளத்திலும் நடன பயிற்ச்சிகான அறைகள். மாணவர்கள் தங்கள் நடன அபிநயங்கள் முத்திரைகள் போன்றவற்றை சரிப் பார்த்துக் கொண்டே ஆட வசதியாக எல்லா அறைகளிலும் ஒருபுறம் சுவர் போல கண்ணாடி.

  ***************************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-02

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: Subhasree
  14 Jun 2018 08:20 #4 by Nanthini

 • Platinum Boarder
 • Platinum Boarder

 • Posts: 1110
 • Like received: 567
 • ஆதியும் அந்தமுமாய் பத்மாவதி ஆகாஷ் மற்றும் லலிதா வாழ்க்கையில் நிறைந்திருந்தார். அவர்களின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னால் புன்முறுவலுமாய் தோல்விக்கு பின்னால் கை தூக்கிவிடும் தோழியாய் பிரதிபளிக்கிறார். தாய் சேய் என்ற உறவையும் தாண்டி இன்னமும் பெயர் வைக்கபடாத ஓர் உறவும் உணர்வும் அவர்களுள் சுழன்றுக் கொண்டிருக்கிறது. பத்மாவதிக்கும் ராமமூர்த்தியும் குழந்தைகளுமே உலகம்.

  “உங்களுக்கு எப்பவுமே ஆகாஷ்தான் முக்கியம்” என லலிதா பத்மாவிடம் குறை சொல்வதுண்டு.

  “அப்பாக்கு என்னைவிட உன்னதான் ரொம்ப பிடிக்கும்.” என ஆகாஷ் அக்காவை திசைதிருப்பிவிடுவான்.

  பெற்றோருக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அனைவரையும் சமமாகதான் பாவிப்பார்கள். ஆனால் இந்த செல்ல வாக்குவாத்ததால் கொஞ்சம் போனஸ் சந்தோஷம் குடும்பத்தில் பெருகும்.

  “பத்மா என் பைல் எங்க? டை எங்க?” என ராமமூர்த்தி கேட்டால்

  “அப்பா நான் எடுத்து தரேன் . . அம்மா எத்தன வேலை செய்வாங்க பாவம்” என ஆகாஷ் ஓடிவந்துவிடுவான்.

  ***********************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-03

  Rgds,
  Nanthini
  The following user(s) Liked this message: Subhasree
  28 Jun 2018 07:18 #5 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • இதயத்தின் ஒரு மூலையில் சாரு காட்டிய புகைப்படம் ஆகாஷை தொந்தரவு செய்துக் கொண்டிருந்தது. மனம் கொந்தளித்தது கனத்தது.

  “சாருவிடம் எப்படி இந்த புகைப்படம் வந்தது?

  சாருவிற்க்கும் அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்?

  புகைப்படத்தில் தாயின் அருகில் நிற்கும் அவன் யார்?”

  இப்படி பல கேள்விகள் அவனை சிதைத்தன.

  குழப்பமான தருணங்களில் ஆகாஷ் மனதை வருத்தும் அந்த குறிப்பிட்ட சம்பவத்தையோ மனிதரையோ எதுவாயினும் சிந்திக்காமல் விட்டுவிடுவான். மேலும் மேலும் சிந்தித்தால் சிக்கல் சீர்படாது. சில சமயங்களில் நன்றாக உறங்கி விடுவான். உறங்கி எழுந்தபின் மனதில் ஒருவித தெளிவு பிறக்கும்.

  ஆனால் இந்த விஷயத்தில் அவனால் அப்படி இருக்க இயலவில்லை. அவன் மனதை அடக்கமுடியாமல் தவித்தான். தன் தாய் அல்லவா இதில் சம்பந்தபட்டிருக்கிறாள். மனம் தன் இஷ்டத்துக்கு குப்பையை கொட்டியது. பாசம் அன்பு இவை அவனை சிந்திக்கவிடாமல் பாசவலையில் கட்டிப் போட்டது.

  ********************************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-04

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: Subhasree
  12 Jul 2018 07:15 #6 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • ஈன்றத் தாயின் முகம் கலங்குவதை கவனித்த ஆகாஷ் நொடியில் செயல்பட்டான். குழந்தை ஹரியை லலிதா அறையில் பொத்னெ படுக்க வைத்தான். குழந்தை மெல்ல சிணுங்கியது “சாரி கண்ணா மாமாவ கோச்சிகாதடா . . மாமாக்காக இன்னும் சத்தமா அழுடா” என்று கொஞ்சியவனை குழந்தை ஒன்றும் புரியாவிட்டாலும் தன் குண்டு குண்டு விழிகளால் அவனை உர்ர்ர் என முறைத்தது. அதன் பட்டுப் போன்ற நெற்றியில் முத்தமிட்டு வெளியே வந்தான்.

  “அம்மா ஹரி அழறான் . . உள்ள போய் பாருங்க” என்றான்

  இன்னமும் அதிர்ச்சியில் இருந்து வெளிவராத பத்மாவதி “அந்த பொண்ணு . .” என ஆரம்பித்தவரை

  “நான் எல்லாம் பாத்துக்கிறேன் . . நீங்க உள்ள போங்க” என கையை பிடித்து ஹரியுடன் அம்மாவை அறையில்விட்டு கதவை சாத்தினான்.

  இவற்றை எல்லாம் கடுகளவும் சீற்றம் குறையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சாரு.

  அவள் அருகில் வந்தவன் “ யேர் கேம் இஸ் ஓவர் டிராமா குயின் . . கெட் த ஹெல் அவுட் ஆப் ஹியர்” என துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாவைப் போல சரசரவென வெடித்தான். அவன் குரலில் ஆத்திரம் இருந்தது ஆனால் அவன் முகத்தில் பிரதிபலிக்கவில்லை.

  **************************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-05

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: Subhasree
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top