Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Subhashree's 'Ithaya siraiyil aayul kaithi' series discussion

22 Sep 2018 12:28 - 22 Sep 2018 12:29 #13 by Subhasree

 • Gold Boarder
 • Gold Boarder

 • Posts: 301
 • Like received: 185
 • sasi wrote: வாழ்த்துக்கள் சுபஸ்ரீ மேடம் சிறப்பு ரைட்டர் பட்டம் பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களின் எழுத்தாற்றல் மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் :GL:


  தங்கள் பாராட்டிற்க்கு மிக்க நன்றி சசி சிஸ்.

  சில்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
  Last Edit: 22 Sep 2018 12:29 by Subhasree. Reason: Spelling
  The following user(s) Liked this message: Chillzee Team, sasi
  04 Oct 2018 08:06 #14 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • வாழ்க்கை என்பது ஒரு புரிந்தும் புரியாத தெரிந்தும் தெரியாத பல புதிர்களை கொண்டது. மனிதனின் வாழ்க்கையை ஆட்டிப்படைப்பது எண்ணங்கள் தாம். ஒரு நிகழ்வோ அல்லது மனிதரோ மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் அதே நிகழ்வு அல்லது மனிதரின் நினைவோ நம் வாழ்க்கையின் எல்லா தருணத்திலும் மகிழ்ச்சியை அளிக்குமா? என்று சொல்லவிட முடியாது. சூழ்நிலைக் கேற்ப எண்ணங்கள் மாறுபடும்.

  சுவாதியை பற்றிய எண்ணங்கள்தான் சாரு மனதை ஆக்கிரமித்து இருந்தது. அவளை பற்றிய எண்ணங்கள் சமீப காலமாக மகிழ்ச்சியளிக்க கூடியவையாக இல்லை. அவளைப் பற்றி கவலைகள்தான் அதிகமாக இருந்தது. இதில் ஈடுபட்டு ஆகாஷிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பது மற்றொரு கவலை.

  சாரு மனதில் எண்ணங்கள் ஊர்வலம் போனாலும் கைகள் தானாக பேக்கிங் செய்தது. தன் பெற்றோருக்கு மற்றும் அக்கா சுவாதிக்கு வாங்கிய பரிசு பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டாள். இவற்றை எடுத்துக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். இருப்பினும் எடுத்துக் கொண்டாள்.

  **************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-11

  Regards,
  Chillzee Team :-)
  18 Oct 2018 07:53 #15 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • இரவு ஒன்றரை மணிக்கு சென்னை மீனம்பாக்கம் ஏர்போட்டில் வந்து இறங்கியது விமானம். ஆகாஷ் மற்றும் சாருவை வரவேற்க சாருவின் பெற்றோர் வந்திருந்தனர். சாரு தந்தை ஹேமன்த் கன்சல்டன்சி நடத்துகிறார். வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவர். தாய் கலாவதி அஞ்சலக் துறையில் வேலை.

  சாரு இருவரையும் கட்டிப் பிடித்து ஏர்போர்ட் என்று கூட பாராமல் அழுதுவிட்டாள். அவளின் பெற்றோர் சமாதானப் படுத்தினார்கள். முன்பே ஆகாஷை பற்றி தன் பெற்றோரிடம் சாரு போனில் சொல்லி இருந்தாள். பின்பு நிலைமை புரிந்தவளாக ஆகாஷை மீண்டும் அறிமுகப்படுத்தினாள்.

  அவனும் அவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடினான். பின்பு தன் விட்டிற்க்கு கிளம்புவதாக சொல்ல “அதெல்லாம் முடியாது எங்க வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுங்க அப்புறம் நிதானமா வீட்டுக்கு போலாம்” என்றார் கலாவதி. அவனை மேலும் பேச விடாமல் மூவரும் அழைத்துச் சென்றனர்.

  அவனுக்கு தர்ம சங்கடமாய் இருந்தது. ஆகாஷிறக்கு பயண களைப்பு அதிகமாக இருந்தது.

  **********************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-12

  Regards,
  Chillzee Team :-)
  01 Nov 2018 06:11 - 01 Nov 2018 17:44 #16 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • பிறந்தவுடன் மறைவதுதான் நொடிகள். அதுதான் இயல்பு. அந்த நொடிகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு நொடி மனிதனின் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய அபரிதமான ஆற்றல் கொண்டது. ஆகாஷ் மற்றும் சாருவின் ஒவ்வொரு நொடியிலும் சுவாதி நிறைந்திருந்தாள். வெவ்வேறு எண்ணங்களாக . . ஒருவருக்கு பாசமெனில் மற்றொருவருக்கு கடமை.

  மறுநாள் காலை பத்து மணி அளவில் ஆகாஷ் வீட்டிலிருந்து கிளம்பினான். தன் தந்தையின் காரை எடுத்துக் கொண்டான். அவனிடம் யூனிவர்சல் டிரைவிங் லைசன்ஸ் இருப்பதால் பிரச்சனை இல்லை. சுவாதி வேலை செய்ததாக சொன்ன கம்பெனியை அடைந்தான். அது மிக பெரிய நிறுவனம். மெயின் கேட்டில் இருந்து உள்ளே வரை இரண்டு புறமும் செயற்கையாக வளர்க்கப்பட்ட புள்தரை. பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருந்தது. அதுவும் மெயின் ஏரியாவில்.

  ஆபீஸ் உள்ளே சென்றான் ரிசப்ஷன் பெண்ணிடம் வேறு எவரோ உரையாடிக் கொண்டிருந்தனர். ஆதலால் அவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். அதி நவீன சாதனங்களால் கூரையிலிருந்து தரைவரை அலங்கரிக்கபட்டிருந்தது. சுவற்றில் ஒரு பக்கம் அந்த நிறுவனம் பெற்ற விருதுகள் அடிக்கி வைக்கப்பட்டிருந்தது.

  ********************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-13

  Regards,
  Chillzee Team :-)
  Last Edit: 01 Nov 2018 17:44 by Chillzee Team.
  15 Nov 2018 06:48 #17 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • கார் மேகங்கள் வானத்தில் ஊர்வலமாய் போக . . இடியும் மின்னலும் ஊர்வலத்திற்க்கு பக்கவாத்தியங்களாய் தன் வேலையை செவ்வனேச் செய்தது.

  ஆகாஷ் மற்றும் சாரு செல்வன் வீட்டிலிருந்து கிளம்பினார்கள். செல்வன் வீடு குறுகலான ரோட்டில் இருந்த்தால் காரை ரிவர்ஸ் எடுப்பது சற்று சிரமம். அதனால் மெயின் ரோட்டில் காரை பார்க் செய்துவிட்டு வந்திருந்தனர்.

  பல கேள்விகள் உழல அதன் தாக்கத்தினால் மௌனமாக நடந்தார்கள். “நாம திரும்ப யூ.எஸ் போயிடலாமா?” எனச் சாரு கேட்க

  அவளின் குழம்பிய முகத்தை பார்த்து “இப்ப என்ன ஆச்சு . .முகத்துல இவ்ளோ டன் சோகம்?” என வினவினான். பின்பு தன் செல்போனில் எதையே தேட முற்பட்டவனாய் இருக்க . . .

  “எனக்கு பயமா இருக்கு ஆகாஷ் . . உங்களுக்கு எதாவது . .” என முடிப்பதற்க்குள்

  “ஹம்” என்றான் அவளின் பேச்சில் லயிக்காமல் தீவிர சிந்தனையிலேயே இருந்தான்.

  “இல்ல. . . வந்து ” எதோ சொல்ல தெரியாத பயம் அவளை பிசைந்தது.

  ***************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-14

  Regards,
  Chillzee Team :-)
  02 Dec 2018 19:19 #18 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • மறுநாள் காலை ஆகாஷ் சதுரகிரிக்கு கிளம்பிவிட்டான். தன் காரிலேயே பயணத்தை தொடங்கிவிட்டான். சாருவும் அவள் அப்பாவும் அவ்வாறே மற்றொரு காரில் புறப்பட்டனர். யு.எஸ்.சில் பத்து மணி நேரம் கூட டிரைவ் செய்து பழக்கப்பட்டதால் இருவரும் இது கடினமாக தோன்றவில்லை. நடுநடுவே பிரேக் எடுத்துக் கொண்டனர்.

  சாருவின் அப்பா ஒரே காரில் பயணிக்கலாம் என கேட்டுக் கொண்டார். ஆனால் ஆகாஷ் மறுத்துவிட்டான். அவன் திட்டம் வேறாக இருந்தது. முதலில் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்துரை அடைந்தனர். அங்கு ஹோட்டலில் இரவை கழித்துவிட்டனர்.

  ஆண்டாள் அவதரித்த திருத்தலம். நாம் தினம் தினம் காணும் தமிழக அரசின் முத்திரையில் காணப்படும் கோபுரம்.

  சாருவிற்கு அந்த நொடியே சலங்கையை காலில் கட்டிக் கொண்டு ஆண்டாளாக அபிநயம் பிடிக்க மனம் ஏங்கியது. இருப்பினும் இந்த தருணம் அதற்கில்லை என தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள். மூவருக்கும் வெவ்வேறு எண்ணம், தேடல், மனஓட்டம் என மாறுப்பட்டு இருந்தது.

  ஆகாஷிடம் அவள் தேவைக்கு அதிகமாக பேசவில்லை. அவனால் அதை உணரமுடிந்தது. இந்த அளவு கோபத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.

  ****************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-15

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top