Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Subhashree's 'Ithaya siraiyil aayul kaithi' series discussion

07 Mar 2019 02:05 #25 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8377
 • Like received: 3017
 • தன் தந்தை ராமமூர்த்தியை கண்ட ஆகாஷ் மனதில் ஆயிரம் வினாக்கள் எழுந்தன. அவன் முகத்தை வைத்தே யூகித்தவர்.

  “நான் மட்டும்தான் இங்க வந்திருக்கேன் . . அம்மா யு.எஸ்.ல லலிதா வீட்ல இருக்கா. நீ எப்படிடா இருக்க?” என்றார். தந்தைக்கே உரித்த பாசத்தை வெளிக்காட்டியது அவர் குரல். வாஞ்சையோடு தலையை கோதினார்.

  “நல்லா இருக்கேன் பா” என்றான் ஆகாஷ். இன்னமும் அவன் கைகள் அவரை வளைத்தபடியே இருந்தது.

  “சுவாதிய உங்களுக்கு தெரியுமா? அங்க நீங்க இதை சொல்லவே இல்ல” என்றான்.

  ************

  படிக்கத் தவறாதீர்கள்!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-22

  Regards,
  Chillzee Team :-)
  21 Mar 2019 02:14 #26 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8377
 • Like received: 3017
 • பத்ரிநாத் மற்றும் ஆகாஷ் வெளியே கிளம்பிவிட்டனர். மற்றவர்கள் அவர்கள் வேலையில் முழ்கிவிட . . சாருவும் சுவாதியும் மனதளவிலும் தனியே விடப்பட்டனர்.

  பல ஆண்டுகளுக்கு பின்னர் அக்காளும் தங்கையும் அருகருகே . . சுவாதி அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள். அருகில் அமர்த்திக் கொண்டு தன் கைகளுக்குள் அவள் கையை சிறைபிடிக்க . . எண்ணங்கள் பின்னோக்கி சென்றது. இருவருமே மௌனமாய் எண்ணவலையில் சிக்கியிருந்தனர்.

  *********

  படிக்கத் தவறாதீர்கள்!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-23

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: Subhasree
  04 Apr 2019 05:49 #27 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8377
 • Like received: 3017
 • அடுத்து வந்த நாட்களில் சாரு உற்சாகம் குறைந்தே காணப்பட்டாள். சுவாதி தான் கொலை செய்ததாக சொல்லிய செய்தி அவளை வெகுவாக பாதித்திருந்தது. ஆனால் சுவாதி மன உறுதியுடன் காணப்பட்டாள். அவளிடம் எந்த மாறுதலும் இல்லை.

  ஆகாஷ் இவற்றையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. அவன் பத்ரிநாத் மற்றும் தன் தந்தையுடன் துரையை கார்னர் செய்வதிலேயே குறியாக இருந்தான்.

  ஆசிரமத்தில் இருந்த இரண்டு துரையின் ஆட்களை வைத்தே துரையின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக கிழிக்கபட்டுக் கொண்டிருந்தது.

  ******

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-24

  Regards,
  Chillzee Team :-)
  18 Apr 2019 05:34 #28 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8377
 • Like received: 3017
 • “சுவாதி நீ கொலை செய்யலைமா . . கவலைப்படாத” என ராமமூர்த்தி ஆறுதல் அளித்தாலும் அவரின் அடுத்த வார்த்தைகள் ஆகாஷ் சாரு சுவாதி மூவரையும் குழப்பதான் செய்தன.

  “அப்ப இது துரையோட லீலையா?” ஆகாஷ் சந்தேகமாக கேட்க

  அதுவே என்பதைப் போல தலையசைத்த அவன் அப்பா “சுவாதி அந்த ஆளை கீழ தள்ளின இடம் பாதாளம் இல்ல . . ரெண்டு ஆள் நிக்கும் அளவு இடம் இருக்கு . . அதுவுமில்லாம சுவாதியோட உடல் வலிமையும் கணக்குல எடுத்துகணும். சுவாதி அவனை தள்ளின அடுத்த நொடி துரை ஆளுங்க அவனைப் பிடிச்சிக் கொன்னுட்டாங்க”

  ********

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-25

  Regards,
  Chillzee Team :-)
  02 May 2019 02:35 #29 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8377
 • Like received: 3017
 • “உனக்கும் சூர்யாவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சா? எப்போ? எப்படி?” என வியந்தபடி பல கேள்விகளை அடுக்கினாள் சாரு. கோபமும் ஏமாற்றமும் ஒரு பக்கம் இருந்தாலும் சந்தோஷமாகவும் இருந்தது.

  சிரித்தபடி சுவாதி மீண்டும் அழுத்தம்திருத்தமாக “எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சி . . . சூர்யாவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சி . . ” என நிறுத்தினாள்.

  ஆகாஷ் இதில் ஏதோ டிவிஸ்ட் உள்ளது என புரிந்துக் கொண்டான். ராமமூர்த்தி எல்லாம் அறிந்தவர் ஆதலால் எந்த ரியாக்ஷனும் அவரிடம் இல்லை. பத்ரிநாத்திற்கு இந்த விஷயத்தில் அவ்வளவாக ஈடுபாடில்லை.

  ****

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-26

  Regards,
  Chillzee Team :-)
  30 May 2019 07:27 #30 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8377
 • Like received: 3017
 • ஆகாஷ் என்ன செய்தான் என்பதை தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும் என்னும் ஆர்வம் ரவிக்கு பண்மடங்கு அதிகரித்தது.

  ஆதனால் விடாமல் “அமெரிக்காவிட்டு நீங்க வந்தது சூனியம் வெக்கவா? சரி நம்பிட்டோம் பாஸ் . . எப்படி சூன்யம் வெச்சிங்க? விவரமா சொல்லுங்களேன்” கிண்டலாக கேட்டான்.

  சாரு மற்றும் சுவாதி முழுமையாக தெரியாத்தால் தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருந்தது. ஆகாஷ் பத்ரிநாத்தை பார்க்க . . அவர் சொல்லிவிடு என்பதைப் போல ஜாடை செய்தார்.

  *******

  Don't miss it!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-27

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top