Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Subhashree's 'Ithaya siraiyil aayul kaithi' series discussion

26 Jul 2018 06:52 #7 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • உறவுகள் என்பது ஒரு தொடர் சங்கிலி. மரணம் அவற்றை பிரித்திட முடியாது. அடுத்தடுத்த சந்ததிகளுக்கு முக ஜாடை, டி.என.ஏ. அல்லது குறிப்பிட்ட பழக்கவழக்கம் என எதையாவதை பரிசளித்துவிட்டுதான் சில மூதாதையர் சென்றிருப்பார்கள்..

  இப்படியெல்லாம் யோசித்து மண்டை காய்ந்த ஆகாஷிற்கு அந்த அமிர்த தகவல் கிட்டியது. சாருவை ஒருவழி செய்துவிட முழுமூச்சில் இறங்கினான். வீட்டில் அதிகம் யாரும் பேசவில்லை. அவரவர் வேலையை இயந்திரத்தனமாக செய்துக் கொண்டிருந்தனர்.

  மாலை லலிதாவும் ராகவும் ஒருவர் பின் ஒருவராக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினர். அவர்கள் சற்று ரிலாக்ஸ் ஆனதும் பத்மாவதி அன்று நடந்ததை அவர்களிடம் கூறினார்.

  லலிதா விக்கித்துப் போனாள் “என்னடா இவ்ளோ நடந்திருக்கு . . நீ சும்மாவா விட்ட?” என ஆகாஷை கேட்டாள்

  “இல்லடி ஆகாஷ் அந்த பொண்ண உண்டு இல்லனு பண்ணிட்டான் . .” இது பத்மாவதி

  “அந்த போட்டோவ காட்டு மா”

  “இந்தா”

  ****************************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-06

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: Subhasree
  09 Aug 2018 12:10 #8 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • ஊஞ்சலாடும் சாருவின் மன சஞ்சலத்தை அவ்வப்பொழுது ஆகாஷ் குடும்பம் போக்கினாலும். மீண்டும் மீண்டும் உள்ளேன் ஐயா என சஞ்சலங்கள் மனதை சூழ்ந்துக் கொண்டுதான் இருந்தது. சாருவின் அகமாற்றத்தினால் உண்டான புறச் சோர்வை ஆகாஷ் கண்கள் கிளிக் செய்துக் கொண்டு இருந்தன.

  அறியாத உணவு பதார்த்தங்கள், தட்டுகளுடன் ஸ்பூனும் போர்க்கும் யுத்தம் செய்யும் சத்தம், ருசியான வாசனை, கண்கூசாத வெளிச்சம், அமைதியான கூச்சல், புரியாத மாடர்ன் ஆர்ட் சித்திரங்கள், செயற்கை புன்னகை என ரெஸ்டாரண்டில் பருவ மாற்றங்கள் வியாபதிருக்க . .

  கிண்டல் கலாட்டாவுடன் டின்னர் செய்துக் கொண்டிருந்தனர் பத்மாவதியின் மொத்த குடும்பமும். சாருவும் அவர்களுடன் இணைந்திருந்தாள்.

  சாரு மனதளவில் இனம்புரியாத நிம்மதியை சில தருணங்களில் உணர்ந்தாள். அது ஆகாஷின் மீதுள்ள நம்பிக்கையினால் வந்துள்ளதா? என குழப்பமாக இருந்தது. அதை முழுவதுமாய் ஏற்க தடுமாறியது மனது. அனைவரும் சாப்பிட்டு முடித்து கிளம்பினர்.

  “நாளைக்கு உன் வீட்டுக்கு வரேன் சாரு குட் நைட்” என்ற ஆகாஷை “வாங்க” என பற்கள் வெளியே தெரியாமல் உதட்டை அழகாய் அசைத்து புன்னகைப் பூத்தாள்.

  ************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-07

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: Subhasree
  23 Aug 2018 16:25 #9 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • எட்டு மணியை கடந்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது. ஓட்டமும் நடையுமாக அருகில் வந்து அமர்ந்த ஆகாஷை பார்த்து முறைத்தார் பத்மாவதி. இரவு நேர குளிர் காற்று அந்த அரங்கத்தினுள் நுழையவில்லை.

  “ஏண்டா லேட்டு?” பத்மாவதி புருவத்தை சுளித்து கேட்க

  “நான் என்ன சும்மாவா இருந்தேன் வேலமா” தெனாவட்டாக பதிலளித்தான்.

  அரங்கத்திற்கு பத்மாவதியும் அவர் கணவரும் சாரு உதவியுடன் கேப்பில் முன்னமே வந்துவிட்டார்கள். ஆகாஷ் எப்படியும் நேரத்திற்கு வர மாட்டான் என்பது ஊர் அறிந்த ரகசியம்.

  ஆகாஷ் பத்து நாட்களுக்கு பிறகு சாருவை காணப் போகிறான். சாரு தன் அக்காவை பற்றி பேசிய பிறகு வேலை பளு காரணமாக ஆகாஷ் டெக்சாஸ் திரும்பிவிட்டான். தன் பெற்றோரையும் தன்னோடு அழைத்து வந்துவிட்டான். லலிதா குடும்பம் வரவில்லை.

  சாருவின் அக்கா சுவாதியை மீட்பதைப் பற்றி முழுமையாக சிந்திக்க முடியவில்லை. இங்கே பாதியில்விட்ட கேஸ்கள் கழுத்தை நெறித்தன. இதற்கிடையில் சாரு குழு இங்கு நடனமாட வந்தது.

  ****************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-08

  Regards,
  Chillzee Team :-)
  06 Sep 2018 20:39 #10 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • ஏற்கனவே சூர்யாவை வெறுப்பேற்றியதில் மகிழ்ந்திருந்த ஆகாஷ் “ஆகாஷ் நீ எனை லவ் பண்றியா?” எனக் கேட்ட சாருவின் கேள்வியால் சந்தோஷத்தில் திளைத்துப் போனான். அவள் இத்தனை போல்டாக கேட்பாள் என எதிர்பார்க்கவில்லை.

  ஐ லைனர் கண்கள், லிப் க்ளாஸ் உதடுகள், பிளஷ் செய்யபட்ட கன்னங்கள், நீண்டு பின்பு இறுதியில் உருண்டு திரண்டு தற்காலிக மூக்குத்திக் கொண்ட நாசி, பெர்ப்யூம் வாசம் என அவளை அருகில் கண்டவன் தன்னிலை மறந்துப் போனான்.

  சாரு அவன் உணர்வுகளை ரசித்தபடி பதிலுக்காக காத்திருந்தாள்.

  “உனை லவ் பண்றேனு யாரு சொன்னா?” என சமாளித்தபடி கொஞ்சம் கெத்தாக கேட்டான்.

  இதற்கெல்லாம் அசந்துவிடுபவளா சாரு “தேங்க் காட் . . எங்க நீ ஆமானு சொல்லிட போறியோனு பயந்துட்டேன்”

  “ஐயோ இவ என்ன புது ரூட்ல போறா?” என மனதில் ஓடியவற்றை மறைத்து “ஆமானு சொன்னா என்ன பண்ணுவ” எனக் கேட்டான்

  “அது . . வந்து . . என் . . அக்காவ . . யாரு ஆசரமத்துல இருந்து வெளில கொண்டு வராங்களோ அவங்களதான் கல்யாணம் பண்ணிப்பேன். . ” என ஒவ்வொரு சொல்லாக இழுத்து அவன் பீபியை எகிற வைத்தாள்.

  ****************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-09

  Regards,
  Chillzee Team :-)
  20 Sep 2018 07:04 #11 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • ஐம்பொன் சிலைகள், லிங்கம், பிரகாரம், கோபுரம், விமானம் போன்ற எதுவும் அந்த ஆசிரமத்தில் வழிபாட்டிற்கு இல்லை. அங்கு வழிபடுவது சாதி மதம் மொழிகளை கடந்து அனைவரையும் சமமாக பாவிக்கும் இயற்கையை மட்டும்தான். அக்னி நீர் காற்று மண் மரம் மலை இவைகள் தான் அங்கு இறைவன்.

  ஆசிரமத்தில் பல மதங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். வெளிநாட்டவரும் உள்ளனர். அவரவர் தங்களுக்கு விருப்பமான வழிபாட்டை செய்வதுண்டு. அதை பற்றி என்றுமே சுவாமிஜியோ அல்லது மற்ற எவருமே கேள்வி எழுப்பியது இல்லை.

  ஆசிரமத்தின் நடுவே ஆலமரமும் வேப்பமரமும் ஒரே இடத்தில் பெரியதாய் வளர்ந்துள்ளது. அம்மரத்தின் வயது பல நூறு வருடங்கள் ஆகும். அதுவே அந்த ஆசிரமத்தின் முக்கிய இடம். அங்கே அமர்ந்துதான் தியானம் அறிவுரை போன்ற முக்கிய நிகழ்வுகள் நடக்கும்.

  மரம் மழையை வரவேற்று மண்ணை வளமாக்குகிறது. நச்சுளை தன்னுள் விழிங்கி தூய மென் காற்றினை தன் இலைகளினால் உயிர்களுக்கு கொடுத்து சாமரம் வீசுகிறது. காய் கனி மலர் என மனிதனுக்கு தேவையான பொக்கிஷங்களை அளிக்கிறது. நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. ஆனால் மனிதன் என்றேனும் மரத்திற்கு நன்றி உரைத்திருப்பானா? மனிதன் மரமாகிவிட்டான். அதை வீழ்த்திவும் தயங்கியதில்லை. சுவாமிஜிக்கு கண்கண்ட தெய்வம் இயற்கை அன்னைதான்.

  *********************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-10

  Regards,
  Chillzee Team :-)
  20 Sep 2018 08:34 #12 by sasi

 • Senior Boarder
 • Senior Boarder

 • Posts: 68
 • Like received: 45
 • வாழ்த்துக்கள் சுபஸ்ரீ மேடம் சிறப்பு ரைட்டர் பட்டம் பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களின் எழுத்தாற்றல் மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் :GL:
  The following user(s) Liked this message: Subhasree
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top