Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Meenu Jeeva's "Mazhaiyindri naan nanaigiren" series discussion

23 Oct 2018 07:10 #13 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • "ஹாய் மித்ரா" என்று சிரித்தபடி கௌவுதம் தன் முன்னே வந்து நிற்பான் என்று மித்ரா சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    சற்று தடுமாறி பின்பு சமாலித்து "ஹாய் கௌவுதம் கால் சரியாகிடுச்சா"

    "ம்ம்.. சரியாகிடுச்சு மித்ரா நீயே பாக்குறல நான் நார்மலா நடந்து வர்றத"

    "ம்ம்.. ஆமா" என்ற மித்ரா கௌவுதமைப் பார்த்தாள்.

    கௌவுதம் பேச்சை ஆரம்பித்தான். மித்ராவும் தன் மனதில் இருப்பதை சொல்லிவிடுவோம் என்று முடிவு செய்துகொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.

    வெண்ணிலாவிற்கு அன்று எஸ்டேட்டில் அதிகமாக வேலை இருக்கவில்லை அதனால் அவள் மூன்று மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிட்டாள். எஸ்டேட் மிக அருகில்தான் என்பதால் சில நேரம் நடந்தே வந்துவிடுவாள். இல்லையென்றால் சைக்கிளில் வருவாள். அன்று நடந்துதான் வந்துகொண்டிருந்தாள்.

    அவள் பங்களாவிற்குள் நுழைந்ததும் அவள் பின்னாலேயே ஒரு காரும் நுழைந்தது.

    **************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-12

    Regards,
    Chillzee Team :-)
    06 Nov 2018 07:32 #14 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • கார்த்திகாவும் அனிதாவும் ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பிரணவ்வும் மித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். மித்ரா கண்களாலேயே பிரணவ்விடம் சொல்ல வேண்டாம் என்றாள். பிரணவ்வும் அதைப் புரிந்துகொண்டு சரி என்பதாய் மெல்ல தலையாட்டினான்.

    "என்ன பிரணவ் கேக்குறோம்ல ஏன் சிரிச்சீங்க" என்றார் கார்த்திகா.

    "அது வந்தும்மா நான் ஒரு கடி ஜோக் சொன்னேன் அதுதான் மித்ரா அப்படி சிரிச்சாங்க"

    "என்ன ஜோக் சொன்னா நாங்களும் சிரிப்போம்ல"

    "ம்ம்... சொல்றேன். அது... ம்ம்.... போர்களத்துல ரெண்டு பிரிவு வீரர்கள் மாறி மாறி பாம் போட்டு சண்ட போடுறாங்க. ஆனா அதுல ஒரு பாம் மட்டும் வெடிக்கவேயில்ல. அது ஏன்?"

    "ஆமா ஏன்?"

    "ஏன்னா அது சென்டு பாம்"

    ************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-13

    Regards,
    Chillzee Team :-)
    13 Nov 2018 23:37 #15 by Nivetha Madankumar

  • Fresh Boarder
  • Fresh Boarder

  • Posts: 2
  • Like received:
  • Meena ipo tan unnoda story padichean....semmaiya iruku dear...keep it up....
    14 Nov 2018 20:34 #16 by Nivetha Madankumar

  • Fresh Boarder
  • Fresh Boarder

  • Posts: 2
  • Like received:
  • Semma meena.....it's really awesome....waiting for ur next episode....keep rocking dear
    20 Nov 2018 08:58 #17 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • பிரணவ்விடம் அவன் கூறிய ஐடியாவிற்கு சரி என்று சொல்லிவிட்டு வந்த மித்ராவிற்கு ஏனோ ஹாஸ்பிடல் வந்தவுடன் சிறிதாக உதறலெடுத்தது.

    'கடவுளே கௌவுதம் வந்தவுடன் பிரணவ் கூறியதை சரியாக சொல்லிவிட வேண்டும்' என்று வேண்டிக்கொண்டாள்.

    அன்று மதியம் வரை கௌவுதம் வரவில்லை. உணவு இடைவேலைக்குப் பிறகு எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் கௌவுதம் வந்துவிடுவான் என்று எண்ணிய மித்ரா அவனிடம் எப்படி சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். அப்போது அவளது போன் அடித்தது எடுத்துப் பார்த்தால் பிரணவ் என்று காட்டியது.

    "ஹலோ மித்ரா "

    "ம்ம்..மித்ராதான் சொல்லுங்க பிரணவ்"

    "கௌவுதம் வந்தானா மித்ரா"

    "இன்னும் இல்ல பிரணவ். ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு பிரணவ்"

    ***************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-14

    Regards,
    Chillzee Team :-)
    04 Dec 2018 05:55 #18 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • பிரணவ் கௌவுதமை மீட் பண்ணுவதாய் சொன்னதும் மித்ரா மறுநாள் காலை ஹாஸ்பிடல் வந்ததும் கௌவுதமிற்கு போன் செய்து பிரணவ் சொன்ன ரெஸ்டாரன்ட்க்கு மாலை வரச்சொன்னாள்.

    கௌவுதமும் சொன்ன நேரத்தில் அங்கு இருப்பேன் எனக் கூறினான்.

    'கௌவுதம் பிரணவ்வை மீட் பண்ணினதுக்கு அப்புறமாவது நான் சொன்னத அப்படியே நம்பிடனும் கடவுளே. அவர் எந்தப் பிரச்சனையும் பண்ணாம என்கிட்ட எப்பவும் போல பேசனும்' என்று வேண்டிக்கொண்டாள்.

    மித்ரா கௌவுதம் தன்னைவிட்டு முழுமையாக விலகவேண்டும் என்று எப்போதுமே நினைத்தது இல்லை.

    கௌவுதம் தன்னிடம் காதலைக் கூறியபோது அவன்மேல் தனக்கிருக்கும் பாசம் பற்றி அறியாதபோதும்கூட மித்ரா கௌவுதமை வெறுத்தது இல்லை. இப்போது அதை அறிந்த பிறகு எப்படியாவது அவன் தன்னிடம் பழைய மாதிரி நன்றாக பேசினால்போதும் என்று நினைத்தாள்.

    மித்ராவும் யோசித்துப் பார்த்தாள் 'எப்படி தனக்கு கௌவுதமின் மேல் இப்படி ஒரு சகோதரப்பாசம் வந்தது என்று' மேரி தன்னிடம் கௌவுதமிற்கு அப்பா அம்மா இல்லை என்று சொல்லும்போதா அல்லது அதன்பிறகு கௌவுதமுடன் அவன் ஹாஸ்பிடலில் இருக்கும்போது பழகும்போதா என்று தெரியவில்லை.

    *************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-15

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top