Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Meenu Jeeva's "Mazhaiyindri naan nanaigiren" series discussion

31 Jul 2018 00:28 #7 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • கௌவுதமையும் கார் டிரைவரையும் ஹாஸ்பிடலில் சேர்த்து டிரீட்மெண்ட் குடுக்க ஆரம்பித்தனர். நல்ல வேளையாக இரண்டு பேருக்கும் பலமான அடி எதுவும் இல்லை.

    கார் டிரைவருக்கு லேசாக தலையில் அடி மற்றும் கை முறிவு ஏற்பட்டிருந்தது. கௌவுதமிற்கு காலில் அடி வலது கையில் லேசான சிராய்ப்பு அதைத் தவிர எதுவுமில்லை. ஆனால் கௌவுதம் குடித்திருந்ததால் முதலில் அதையும் பார்க்க வேண்டியதாய் இருந்தது. டிரீட்மெண்ட் முடிந்தவுடன் இருவரையும் நார்மல் வார்டுக்கு மாற்றிய பின்புதான் மித்ரா மணி என்ன என்று பார்த்தாள். மணி நல்லிறவு இரண்டாகிவிட்டது. சரி இனி காலையிலேயே ஹாஸ்டலுக்குப் போவோம் என்று முடிவு செய்துவிட்டு நர்ஸ்சை அழைத்தாள்.

    "கூப்டிங்களா டாக்டர்"

    "ம்ம்... ஆமா போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டிங்களா சித்ரா"

    "பண்ணியாச்சு டாக்டர்"

    "அவங்க குடும்பத்துக்கு சொல்லிட்டிங்களா"

    **************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-06

    Regards,
    Chillzee Team :-)
    14 Aug 2018 10:10 #8 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • "என்ன மிஸ்டர் கௌவுதம் எப்படி இருக்கீங்க" என்று மித்ரா கௌவுதமைப் பார்த்துக் கேட்கவும் கௌவுதம் நிமிர்ந்து மித்ராவைப் பார்த்தான்.

    'இந்த பொண்ணுதான் அந்தப் பெரியவர்கிட்ட பேசிட்டிருந்த பொண்ணா ம்ம்... நான்கூட வயசானவங்களா இருப்பாங்கன்னு பார்த்தேன் ஆனா சின்ன பொண்ணா இருக்கு. அறிவா அன்பா மட்டுமில்ல ரொம்ப அழகவும் இருக்கு'

    "ம்ம்... நால்ல இருக்கேன் டாக்டர். நீங்கதான் என்ன காப்பாத்தினதுனு சொன்னாங்க தேங்க்ஸ் எ லாட் டாக்டர்"

    "ஆமா டாக்டரம்மா எங்க தம்பிய ஆஸ்பத்தியில சேத்ததுக்கு ரொம்ப நன்றிமா" என்றார் கோபி அண்ணா.

    "பாரவாயில்ல மிஸ்டர் கௌவுதம். அதுவும் என்னோட டியுட்டிதான்" என்றாள் மித்ரா கோபி அண்ணாவையும் கௌவுதமையும் பொதுவாய் பார்த்தபடி சின்ன சிரிப்புடன்.

    "நீங்க என்ன கௌவுதம்னே கூப்பிடலாம் மித்ரா. ஹம் நான் உன்ன மித்ரானு கூப்பிடலாமா எப்படியும் நீ என்ன விட வயசுல சின்னவளாதான் இருப்ப இல்லயா" என்று கேட்டான் கௌவுதம்.

    ******************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-07

    Regards,
    Chillzee Team :-)
    28 Aug 2018 09:32 #9 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • கௌவுதம் ஹாஸ்பிடலில் இருந்த இரண்டு நாளும் அதிகமாக யோசித்த விசயம் மித்ரா தான்.

    மித்ரா எல்லோரிடமும் அன்பாக பழகும் விதம் பொறுமையாக பதில் சொல்லும் விதம் மற்றும் பேசன்ட் டாக்டர் உறவைத்தாண்டி அவர்கள் மேல் அக்கறை கொள்ளும் விதம் பார்த்து கௌவுதமிற்கு மித்ராவை மிகவும் பிடித்திருந்தது.

    மேலும் மேரியும் கௌவுதம் அங்கிருந்த இரண்டு நாள்களில் மித்ராவைப் பற்றி பெருமையாக சொல்லி கௌவுதமின் மனதில் மித்ராவை அவருக்கே தெரியாமல் நன்கு பதிய வைத்துவிட்டார்.

    கௌவுதமை செவ்வாய் மாலை ஹாஸ்பிட்டலிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தார்கள். கௌவுதம் வாக்கிங் ஸ்டிக் உதவுயுடன் நடக்கலாம் என்றும் கால் நன்கு சரியான பிறகு வாக்கிங் ஸ்டிக் தேவையில்லை என்றும் கூறினர்.

    கோபி அண்ணா பில் செட்டில் செய்யப் போயிருந்தார். கௌவுதம் வாக்கிங் ஸ்டிக் உதவுயுடன் நடந்துபோய் ஹாஸ்பிடலில் மித்ராவிற்கு ஒதுக்கப்பட்ட அறைக்கதவின் முன்நின்று ஒரு முறை யோசித்தான் 'இப்போதே நாம் மித்ராவை காதலிக்கும் விசயத்தை அவளிடம் சொல்லவேண்டுமா' என்று பின்பு 'சொல்லிவிடுவோம் எப்போது என்றாலும் சொல்லித்தானே ஆகாவேண்டும்' என்று முடிவு செய்துகொண்டு கதவைத் தட்டினான்.

    **************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-08

    Regards,
    Chillzee Team :-)
    11 Sep 2018 07:20 #10 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • கௌவுதமிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெண்ணிலா அவுட்கவுஸ்க்கு ஓடிவந்துவிட்டாள். அவுட்கவுஸின் ஹாலில் அமர்ந்த பின்புதான் இயல்பாய் மூச்சுவிட முடிந்தது அவளாள்.

    'கௌவுதம் காதலிப்பது தனக்கு ஏன் இவ்வளவு அதிர்ச்சியாக இருக்க வேண்டும்' என்று திரும்ப திரும்ப யோசித்து தலை வலிப்பது போலத் தோன்றியது வெண்ணிலாவிற்கு.

    வெண்ணிலா கௌவுதமின் வீட்டிற்கு வரும்போது அவளுக்கு ஐந்து வயது. அச்சிறு வயதில் தாயை இழந்த அவளுக்கு கௌவுதமின் அம்மா நிர்மலாவின் அன்பும் பாசமும் வரமாக கிடைத்தது. வெண்ணிலா நிர்மலாவிடம் நன்கு ஒட்டிக்கொண்டாள். பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அவள் நிர்மலாவுடனும் கௌவுதமுடனும் தான் இருப்பாள். நிர்மலாவின் இழப்பு கௌவுதமை எந்த அளவுக்கு பாதித்ததோ அதே அளவு வெண்ணிலாவையும் பாதித்தது.

    அச்சிறு வயதில் என்ன செய்வது என்று தெரியாவிட்டாலும் இனி நிர்மலா இருந்தால் கௌவுதமிற்கு என்னவெல்லாம் செய்வாரோ அதில் பாதியாவது தான் செய்யவேண்டும் என்று வெண்ணிலாவிற்கு அப்போதே தோன்றிவிட்டது.

    ***********************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-09

    Regards,
    Chillzee Team :-)
    25 Sep 2018 07:00 #11 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • எஸ்டேட்டிற்கு வந்த வெண்ணிலாவின் மனம் மிகுந்த உற்சாகத்தில் இருந்தது. ஏனோ கால் தறையில் நிற்காமல் வானில் பறப்பதுபோலத் தோன்றியது. 'புதுசா காதலிக்குற எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்களோ' என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.

    'சரி கொஞ்சம் வேலையையும் பார்ப்போம்' என்று ஆபிஸ் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

    அன்று பனி கொஞ்சம் அதிகமாக இருந்தது. பார்க்கவே மிக ரம்மியமாகத் தெரிந்தது. 'இயற்கைக்கு நிகர் இயற்கைதான்' என நினைத்துக் கொண்டு ஸ்வட்டரை நன்கு இழுத்துவிட்டுக் கொண்டே டீ இலை பறிக்கும் தொழிலாளர்கள் பகுதிக்கு வந்தாள். வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

    இவளைப் பார்த்ததும் கௌவுதமைப் பற்றி விசாரித்தார்கள். அவன் நலமுடன் இருப்பதாக கூறி அங்கிருந்து பேக்கிங் செய்யும் பகுதிக்கு சென்றாள்.

    அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் "நாளைக்கு எக்ஸ்போர்ட் செய்ய வேண்டியது எல்லாம் பேக்கிங் செஞ்சு ரெடிய இருக்கா"

    "எல்லாம் ரெடிய இருக்கு மேடம். அந்த வேலையெல்லாம் அப்பவே முடிஞ்சுருச்சு. இப்போ சென்னைக்கு அனுப்ப வேண்டியத பேக் பண்ணிட்டிருக்கோம் மேடம்" என்றார் அவர்.

    ******************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-10

    Regards,
    Chillzee Team :-)
    09 Oct 2018 05:52 #12 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • கௌவுதம் சென்னை சென்று சேர்ந்ததும் வெண்ணிலாவிற்கு போன் செய்து தான் பத்திரமாக வந்துவிட்டதாக அறிவித்தான். அதன்பிறது அவன் தினமும் டேப்லட் எடுத்துக்கொள்ளும் போதுயெல்லாம் அவளுக்கு வீடியோ கால் செய்து பேசினான்.

    வெண்ணிலாவிற்கு கௌவுதம் முகத்தை தினமும் பார்ப்பது அவனிடம் பேசுவது என்று நாள் சந்தோசமாக கழிந்தது.

    கௌவுதமிற்கு அவனது கான்ஸ்டக்க்ஷன் பிரச்சனை ஒரு வாரம் இரண்டு வாரம் என்று இழுத்துக்கொண்டே சென்றது. தொழிலாளர்கள் 20% இன்கிரீமெண்ட் வேண்டும் என்றார்கள் ஆனால் காண்ட்ராக்டர்கள் தரப்பிலிருந்து இது அதிகப்படியான தொகை இப்போதுதான் இன்கிரீமெண்ட் போட்டோம் அதற்குள்ளாகவா முடியாது என்றார்கள். தொழிலாளர்கள் விலைவாசி எல்லாம் அதிகமாகிவிட்டது அதனால் இன்கிரீமெண்ட் கட்டாயம் போடவேண்டும் என்றும் இல்லையேல் ஸ்டிரைக் செய்வோம் என்றும் கூறினர்.

    உண்மையில் கௌவுதமிற்கு இந்தப் பிரச்சனையில் நேரடி தொடர்பு என்று எதுவும் இல்லை. அவன் சொன்ன தேதிக்குள் காண்ட்ராக்டர்கள் வேலையை முடித்துக் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான் இல்லையேல் காண்ட்ராக்டர்களுக்குத்தான் பிரச்சனை அவர்கள்தான் கௌவுதமிற்கு நஷ்ட ஈடாக பணம் தர வேண்டியது இருக்கும். ஆனால் அவர்கள் வேறு ஆட்கள் வைத்து வேலையை முடித்துத் தருவதாக கூறினார்கள்.

    *************************************
    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ndren-meenu-jeeva-11

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top