Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Bindu Vinod's 'Vaanum mannum katti kondathe' series discussion

16 Jun 2018 21:32 #1 by Nanthini

 • Platinum Boarder
 • Platinum Boarder

 • Posts: 1110
 • Like received: 567
 • Forum thread to discuss Aadhi (Bindu Vinod)'s 'Vaanum mannum katti kondathe' series

  Rgds,
  Nanthini
  17 Jun 2018 08:21 #2 by Nanthini

 • Platinum Boarder
 • Platinum Boarder

 • Posts: 1110
 • Like received: 567
 • “ஆகாஷ்....”

  அழைத்தபடி தூக்க கலக்கத்துடன் நடந்து வந்தாள் சினேகா.

  அவனுடைய இடத்தில அவன் இல்லாமல் போகவும், சந்தேகத்துடன் தான் அவளுடைய டெஸ்க் இருக்கும் பக்கமாக எட்டிப் பார்த்தாள்.

  அங்கே அவளுக்கு முதுகு காட்டியபடி நின்றிருந்தான் ஆகாஷ்.

  அந்த அரைகுறை தூக்க நிலையிலும் அவளின் மனம் அவனை ரசிக்க தான் செய்தது.

  ஆனால் உடனேயே, ‘இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறான்?’ என்ற கேள்வியும் எழுந்தது.

  “ஆகாஷ்...”

  மீண்டும் அழைத்தாள்.

  அவளின் குரல் கேட்டு ஸ்லோ-மோஷனில் திரும்புவது போல பொறுமையாக திரும்பினான் அவன்.

  அவனின் முகத்தில் இருந்த ஏதுவோ ஒன்று அவளை குழப்பியது.

  *******************************************************

  தொடர்கதையின் prologueஐ படிக்கத் தவறாதீர்கள்!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-00

  Rgds,
  Nanthini
  17 Jun 2018 12:23 #3 by Nanthini

 • Platinum Boarder
 • Platinum Boarder

 • Posts: 1110
 • Like received: 567
 • கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

  கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்

  உமாஸுதம் சோக வினாச காரணம்

  நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

  புதுச்சேரியில் பிரசித்திப் பெற்று விளங்கும் மணக்குள விநாயகர் கோவிலின் அர்ச்சகர் மந்திரம் சொல்வதை கேட்டபடி விநாயகரை வணங்கினாள் சுபாஷினி.

  அவளின் ஒரு பக்கம் கணவர் பிரகாஷும் மற்றொரு பக்கத்தில் ஒரே மகன் ஆகாஷும் நின்றிருந்தார்கள்.

  இப்படி குடும்பத்தினருடன் விநாயகரை வழிபட கிடைத்த வாய்ப்பில் அவளின் மனம் நிறைந்து போயிருந்தது.

  சுபாஷினி குடுமபத்திற்கு அருகேயே அவளின் தோழி ஜோதி, அவளின் கணவர் வசீகரன் மற்றும் மகள் அக்ஷராவும் கடவுளை வணங்கிக் கொண்டிருந்தார்கள்.

  *****************************************************************

  இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-01

  Rgds,
  Nanthini
  27 Jun 2018 18:33 #4 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • ரேவதி, சந்திரன் தம்பதியின் ஒரே மகன் கணேஷ்.

  சந்திரனின் சாப்ட்வேர் கம்பெனியில் முதலாளி என்ற பந்தா இல்லாமல் சாதாரண வேலை செய்தாலும், அக்ஷரா அவனுக்கு வைத்திருக்கும் செல்ல பெயரை போல நிஜமாகவே அவன் ‘ராம்போ’ தான்.

  வேலை, பிரென்ட்ஸ் தவிர அவனுக்கு மிகவும் பிடித்தது பாக்ஸிங். கிடைக்கும் ப்ரீ டைம் முழுவதையும் தன் பாக்ஸிங் பேகை பன்ச் செய்வதிலேயே செலவிடுவான்.

  சுருக்கமாக சொன்னால், அவனை ஆபிசில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், ஜிம்மில் கட்டாயம் சந்திக்கலாம்!

  கணேஷின் பள்ளித் தோழி அகிலா. அகிலாவின் பெற்றோர் வெளி நாடு வாழ் இந்தியர்கள். எனவே சிறு வயது முதலே போர்டிங் பள்ளியில் படித்த அகிலாவிற்கு கணேஷ், ரேவதி, சந்திரன் தான் சொந்த குடும்பத்தை போல.

  ரேவதியையும், சந்திரனையும், அம்மா, அப்பா என்று தான் அழைப்பாள் அகிலா.

  அக்ஷராவும் அகிலாவும் ஒரே கல்லூரியில் பயில, அகிலாவின் மூலம் கணேஷிற்கு அறிமுகமானாள் அக்ஷரா.

  *****************************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-02

  Regards,
  Chillzee Team :-)
  03 Jul 2018 20:22 #5 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • “எதுக்கு அக்ஷரா எங்களை வர சொன்ன?? என்னவோ பெரிய நியூஸ்ன்னு வேற பில்ட்-அப் கொடுத்த? அப்படி என்ன நியூஸ்?”

  ஆர்வம் பொங்க கேட்டாள் அகிலா.

  “மெகா ப்ளாஷ் நியூஸ் அகி! எனக்கு மேரேஜ் பிக்ஸ் செஞ்சுட்டாங்!!!க”

  “என்னது, உனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சா?”

  “ம்ம்ம்... எனக்கும் அகாஷ்க்கும் கல்யாணம்... அடுத்த வாரம் அவன் பிறந்த நாள்ல சிம்பிள் என்கேஜ்மென்ட், ஆறு மாசத்துல கல்யாணம்...!”

  “என்ன அக்ஷரா நாளைக்கு மழை பெய்யும்னு வானிலை அறிக்கை படிக்குற மாதிரி சொல்ற?? எப்போ பிக்ஸ் ஆச்சு? உனக்கும் ஆகாஷுக்கும் நடுவே ரொமான்ட்டிக் இன்ட்ரஸ்ட் இருக்கிறதா நீ சொல்லவே இல்லையே”

  “அப்படிலாம் ஏதாவது இருந்தா தானே நான் சொல்ல அகி? இது முழுக்க, முழுக்க இரண்டு அம்மா, அப்பாவும் டிசைட் செய்த கல்யாணம். இவ்வளவு வருஷமா பேமிலி பிரெண்ட்ஸா இருக்க குடும்பங்கள் இனி ரிலேடிவ்ஸ் ஆக போறோம்...”

  “ஆனா உனக்கும் ஆகாஷுக்கும் சரியா வருமா...??? அவன் ஒரு வார்த்தை பேச அஞ்சு மணி நேரம் யோசிப்பான். நீ நூறு வார்த்தை பேசிட்டு தான் என்ன பேசினேன்னு யோசிப்ப, எப்படி செட் ஆகும்?”

  *************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-03

  Regards,
  Chillzee Team :-)
  13 Jul 2018 01:08 #6 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • ஆபிஸ் அறையினுள் வந்த உடனே ஆகாஷின் பாடி லேங்குவேஜ் மொத்தமாக மாறி போனது.

  அன்று செய்ய வேண்டிய வேலைகள், பங்கு பெற வேண்டிய மீட்டிங்குகள், சந்திக்க வேண்டிய மனிதர்கள் என அனைத்தையும் மேலோட்டமாக பார்த்தவன், இன்டர்காமில் அவனுடைய செகரட்டரி ஐஸ்வர்யாவை அழைத்தான்.

  “குட் மார்னிங் பாஸ்”

  “குட் மார்னிங் ஐஸ்வர்யா. இன்னைக்கு நான் ஜே.யூ க்ரூப்ஸ் சேர்மன் அஸ்வத்தை மீட் செய்யனும். அவர் ஆபிஸ்க்கு போன் செய்து அப்பாயின்ட்மென்ட் உடனே வாங்குங்க”

  “ஓகே பாஸ்”

  தொடர்ந்து அவளுக்கு மேலும் சில வேலைகளை சொல்லி விட்டு தன்னுடைய வேலையில் ஆழ்ந்தான் ஆகாஷ்.

  அவன் கேட்டுக் கொண்டதை போல ஐஸ்வர்யா அப்பாயின்ட்மென்ட் ஏற்பாடு செய்து தரவும், அஸ்வத்தை சந்திக்க அவருடைய அலுவலகத்திற்கு சென்றான்.

  ***************************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-04

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top