Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Padmini's "Unnai vida maatten... ennuyire" series discussion

22 Jun 2018 11:24 #1 by Nanthini

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1102
  • Like received: 567
  • Forum thread to discuss Padmini's "Unnai vida maatten... ennuyire" series.

    Rgds,
    Nanthini
    22 Jun 2018 11:44 #2 by Nanthini

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1102
  • Like received: 567
  • பொழுது இன்னும் சரியாக புலர்ந்திராத அந்த அதிகாலையில், அந்த திருமண மண்டபம் மாவிலை தோரணங்கலுடனும், அலங்கார விளக்குகளுடன் அழகாக மின்னி கொண்டிருந்தது.

    வாயிலில் இரண்டு பெரிய வாழை மரங்கள் கம்பீரமாக நின்று எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது..

    “பவித்ரா வெட்ஷ் ஆதித்யா” என்று மலர்களால் அழங்கரிக்கப் பட்டிருந்த அந்த திருமண வரவேற்பு பலகை, அந்த விழாவின் நாயகன், நாயகி பெயர்களை அனைவருக்கும் அறிவித்து அழகாக வீற்றிருந்தது.

    மண்டபத்தின் உள்ளே எங்கு திரும்பினாலும் அழகழகான பெண்கள் வண்ண வண்ண பட்டுபுடவையும் அதற்கு பொருத்தமாக அணிகலன்களும் அணிந்து ஜொலித்தனர். எல்லார் முகத்திலும் திருமணத்திற்கே உரித்தான மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.

    அதுவும் மணட்பத்தின் வெளியே அணி வகுத்திருந்த கார்களும், மண்டபத்தின் உள்ளே உள்ள பெண்களின் கழுத்துகளில் மின்னிய வைரங்களும் அது ஒரு VIP வீட்டு திருமணம் என்பதை சொல்லாமல் சொல்லியது...

    திருமண மேடை மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.. இந்த மேடைக்கு மட்டுமே பல லட்சங்கள் ஆகியிருக்கும்..

    *********************************************************

    இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-04

    Rgds,
    Nanthini
    06 Jul 2018 21:58 #3 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8223
  • Like received: 2987
  • பவித்ரா “இவனா என் அருகில் அமர்ந்து இருப்பது.. இவன் எப்படி இங்கே” என்ற கேள்வியுடன் ஆதியை பார்க்க

    அவனோ இவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவனாக

    “நானே தான் பேபி“ என்று கண்ணடித்தான் குறும்பாக தாலியை கையில் பிடித்தபடி...

    பவித்ராவுக்கு இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று உறைக்கவும் அவசரமாக மணமேடையில் இருந்து எழுந்திருக்க முயன்றாள்..

    ஏற்கனவே ஆதி மிகவும் நெருக்கத்தில் அமர்ந்து இருந்ததால் அவளால் உடனே எழுந்திருக்க முடியவில்லை. அதற்குள் ஆதி தாலியை பவித்ராவின் கலுத்தில் அணிவித்திருந்தான்..

    ஆதி இரண்டு முடிச்சுகளிட அவன் பெரியம்மாவின் மகள் ஜனனி நாத்தனார் முறைக்காக மூன்றாவது முடிச்சை போட்டு பவித்ராவை தன் மனைவியாக்கி இrருந்தான் ஆதித்யா ...

    நடந்த நிகழ்வுகள் புரிய சில விநாடிகள் ஆகியது பவித்ராவிற்கு.. அவள் இப்பொழுது ஆதித்யாவின் மனைவி...

    எல்லாம் தன் கையை மீறிவிட்டது..இனிமேல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து அதிர்ந்து அமர்ந்திருந்தாள் பவித்ரா...

    **************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-02

    Regards,
    Chillzee Team :-)
    20 Jul 2018 11:17 #4 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8223
  • Like received: 2987
  • “எந்த ஜான்ஷி ராணியா இருந்தாலும் அடக்கி காட்டறவன் தான் இந்த ஆதித்யா...இவள் எம்மாத்திரம்?? ... இவளை எப்படி அடக்கி காட்டறேன் பார் “ என்று மனதினில் சூளுறைத்தான் ஆதித்யா...

    அவன் உடல் விரைத்து முகம் கடினமாகியது ஒரு சில மணித்துளிகள்.. அதற்குள் தன்னை சமாளித்து கொண்டு உடனேயே இயல்பு நிலைக்கு மாறினான்..

    அவன் முக மாற்றத்தை சரண்யாவும் கவனித்தாள்.. ஆனால் அவன் முகம் உடனே மாறியதால், தான் கண்டது நிஜமா என்ற சந்தேகம் அவளுள்ளே...

    “அப்படியா!!! நல்ல வேளை சிஷ்டர்.. முன்னாடியே சொன்னிங்க.. நான் பாட்டுக்கு இவ பவர் தெரியாமல் ஏதாவது செய்ய போய் என் கையை காலை உடைச்சிட போறா.. இனிமேல் எச்சரிக்கையாக இருந்துக்கறேன் “ என்று பயந்தவன் போல நடித்தான் ஆதித்யா..

    “அது!! .. இந்த பயம் போதும் ப்ரதர்.. நீங்க பொழச்சுக்குவீங்க “ என்று சரண்யாவும் சிரித்தாள்..

    “ஏ குரங்கு.. எவ்வளவு நாள் திட்டம் என்னை இப்படி பலி வாங்க “ என்று சரண்யாவை முறைத்தாள் பவித்ரா..

    ***************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-03

    Regards,
    Chillzee Team :-)
    03 Aug 2018 18:53 #5 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8223
  • Like received: 2987
  • அந்த பிரம்மாண்ட கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தது மணமக்களின் கார்....

    பவித்ரா இன்னும் தன் கணவனின் தோழில் சாய்ந்து சுகமாக உறங்கி கொண்டிருந்தாள் கார் நின்றது கூட தெரியாமல்....

    அவளின் அந்த உறக்கத்தை கலைக்க மனமே இல்லாமல் அவளை அப்படியே விடவும் முடியாமல் மெல்ல அவளின் அருகில் குனிந்து

    “நம்ம வீடு வந்திருச்சு பேபி!! கெட் அப் “ என்று மெல்ல முனகினான்

    ம்ஹூம்.. அவள் அசைந்த பாடில்லை

    “என்ன?? இப்படி தூங்கறா..” என்று எண்ணியவாறே

    “பேபி.. கெட் அப் “ என்று மெல்ல அவளின் கன்னத்தை தட்டினான்..

    அவனின் கை பட்டதும் மெல்ல இமைகளை பிரித்தவள் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் மலங்க விழித்தாள்...

    மெல்ல தலையை நிமிர்த்தியவள் வெகு நெருக்கத்தில் ஆதியின் முகத்தையும் தான் அவனின் தோழில் சாய்ந்து இருப்பதையும் அப்பொழுதுதான் உணர்ந்தாள்..

    ***************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...nuyire-padmini-04-01

    Regards,
    Chillzee Team :-)
    17 Aug 2018 11:09 #6 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8223
  • Like received: 2987
  • ஆதித்யாவின் அறையில் நுழைந்தவள் மெல்ல அடி எடுத்து வைத்து உள்ளே சென்றாள் தலையை குனிந்த படி..அவன் இருப்பதற்கான அரவம் எதுவும் கேட்க வில்லை.. எங்க போய்ட்டான் என்று மெல்ல தலையை நிமிர்த்தினாள்...

    அந்த விசாலமான அறை தான் தெரிந்தது.. அவளின் முழு வீடும் இந்த அறைக்குள் அடங்கி விடும் போல.. ஒருத்தனுக்கு இவ்வளவு பெரிய அறையா என்று எண்ணியவாறே கண்களால் துளாவினாள்.. சிறிது நேரம் அலைப்புறுதலுக்கு பிறகு அவளின் கண்கள் கண்டு கொண்டன அவனை... அந்த அறையின் நடுவில் இருந்த கட்டிலில் அமர்ந்திருந்தான் இவளையே இமைக்காமல் பார்த்த வண்ணம்...

    அவனின் பார்வையை மெல்ல எதிர் கொண்டவளுக்கு கன்னங்கள் சிவந்தன... பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன அவளின் அடி வயிற்றில் !!!..

    இருந்தாலும் வெளி காட்டி கொள்ளாமல்,

    “சார் எழுந்திருச்சு வரமாட்டாரோ “ என்று திட்டி கொண்டே மெல்ல நடந்து அவனருகில் சென்றாள்.. போகும் வழியிலயே தன் அம்மா மற்றும் அவனின் பெரியம்மா சொன்ன அறிவுரைகள் ஞாபகம் வர, அவன் அருகில் சென்றவள் அருகில் இருந்த டீபாயின் மேல் பால் சொம்பை வைத்து விட்டு

    ******************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-05

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top