Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Login

Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Padmini's "Unnai vida maatten... ennuyire" series discussion

31 Aug 2018 11:24 #7 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8144
  • Like received: 2975
  • காலையில் மெல்ல கண் விழித்த பவித்ராவிற்கு நேற்று இரவு சம்பவங்கள் நினைவு வந்தன... கண்கள் தானாக ஆதித்யாவின் கட்டிலை அடைந்தது...ஆதி அங்கு இல்லை.. முன்பே எழுந்திருந்தான்...

    நேற்று இரவு நடந்தது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று எண்ணி கொண்டவள் எழுந்து குளித்து முடித்து கீழே சென்றாள்..

    மரகதம் உணவறையில் காலை உணவை எடுத்து வைத்து கொண்டிருப்பதை கண்டு அங்கு சென்றாள்... அவளை கண்டதும் மரகதம் அவளை ஆராயும் பார்வை ஒன்றை செலுத்தி பின் திருப்தியுற்றவராக அவளை அனைத்து

    “உட்கார் பவித்ரா... எல்லாரும் சாப்பிடலாம் “ என்று

    அங்கு இருந்த இருக்கையில் அமர வைத்தார்...

    அப்பொழுது தான் அங்கு வந்த ஜனனியும் பவித்ராவுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்..

    பவித்ரா குளித்து முடித்து அவளின் ஈரக்கூந்தலை விரித்து விட்டு இரண்டு பக்கமும் முடி எடுத்து நடுவில் க்ளிப் போட்டிருந்தாள்.. நெற்றியில் நடுவில் சிறிய பொட்டும் அதற்கு மேல் சிறிதாக திருநீறும் வைத்து எளிமையாக பளிச்சென்று அழகாக இருந்தாள்...

    *********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-06

    Regards,
    Chillzee Team :-)
    14 Sep 2018 19:07 #8 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8144
  • Like received: 2975
  • ஆதித்யாவின் ட்விட்டர் பக்கத்தை திறந்த பவித்ரா அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அதில் அவன் அவர்களுடைய திருமண புகைப்படங்கள் சிலவற்றை போஷ்ட் செய்து இருந்தான்...அதிலும் அவன் தாலி அணிவிக்கும் பொழுது அவளின் முகத்தில் தோன்றிய கலவையான உணர்ச்சிகளால் நிறைந்திருந்தது அப்படியே பிரதிபலித்தது அந்த படங்களில்.. பின் அவள் மாலை அணிவிக்கும் பொழுது அவனை பார்த்து மயங்கி நின்ற புகைப்படம் மற்றும் சில ரிஷப்ஷன் படங்களும் அதில் இருந்தன...

    அந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது மனதினில் மழைச்சாரல் அவளுக்குள்ளே...இருவரும் விரும்பி மணந்த மாதிரியே அவ்வளவு அன்னியோன்யமாக இருந்தனர் இருவரும் அந்த படங்களில்...

    “ஒரு வேளை என்னை விரும்பித்தான் மணந்தானோ?? இல்லையென்றால் அவன் ஏன் திருமண படங்களை பப்ளிக் ஆ போடனும்?? “ என்று மகிழ்ந்து போனாள் சில விநாடிகள்.. பிறகு தான் கவனித்தாள் அந்த படங்களுக்கு வந்த வாழ்த்துக்களை....அத்தனை வாழ்த்துகள் அதில் குவிந்திருந்தன.... அப்பொழுதுதான் நினைவு வந்தது பேருக்காக, ஊருக்காக , பழி வாங்க உன்னை மணந்தேன் என்று அவன் கூறியது...

    ******************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-07

    Regards,
    Chillzee Team :-)
    28 Sep 2018 19:22 #9 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8144
  • Like received: 2975
  • அலுவலகம் செல்ல கிளம்பி சென்று காரை எடுத்த ஆதித்யா, பவித்ராவிற்கு கொடுப்பதற்காக நேற்று வாங்கி வந்திருந்த அலைபேசி காரிலயே இருப்பதை கண்டு அதை அறையில் வைக்க திரும்பி வந்திருந்தான்...அவள் இன்னும் தூங்கி கொண்டிருப்பாள் என்று நினைத்து கதவை தட்டாமல் திறந்துகொண்டு உள்ளே வந்திருந்தான்

    ஆனால் அவளோ , குளித்து முடித்து தன் தலையில் சுற்றி இருந்த துண்டிலிருந்து நீர் சொட்டி கொண்டிருக்க, அப்பொழுதுதான் புடவையை சுத்த ஆரம்பித்து இருந்தாள்..

    நேற்று இரவு, இரவு உடையில் கண்ட அவளின் தோற்றத்தில் விழித்து கொண்ட அவனின் ஆண்மை இப்பொழுது அவளின் இந்த நிலையை கண்டு இன்னும் வெகுண்டு எழுந்தது...

    அவளின் சவால், அவனின் வாக்கு எல்லாம் மறந்து போனது அந்த நொடியில்...

    தன்னை மறந்து ஒரே எட்டில் அவளை அடைந்தவன் அவளை அப்படியே கையில் அள்ளி கொண்டான்...இறுக்கி அணைத்தவாறு கட்டிலை நெருங்கி அவளை கட்டிலில் கிடத்தினான்...

    ****************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-08

    Regards,
    Chillzee Team :-)
    12 Oct 2018 19:00 #10 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8144
  • Like received: 2975
  • அந்த அதிகாலையில் கையில் இருந்த சூடான காபியை பருகிக்கொண்டே தோட்டதில் கன்னம் குழிய சிரித்துக் கொண்டிருந்த பவித்ராவை ரசித்துக்கொண்டிருந்தான் ஆதித்யா... அவன் மனமோ நேற்று மாலை நடந்ததை அசை போட்டது...

    காலையில் கோபமாக கிளம்பி சென்றவனுக்கு மாலை வரையுமே அடங்கவில்லை அவனின் கோபம்.. மாலை ஐந்து மணிக்கு மேல் இனிமேல் தாங்க முடியாது என்று தோன்றவும் தன் பெர்ஷனல் மொபைலை ஆன் செய்தான் ப்ரேம் கிட்டயாவது பேசலாம் என்று..

    அப்பொழுதுதான் கவனித்தான் ஷ்வீட்டி கிட்ட இருந்து வாய்ஷ் மெஷேஜ் வந்திருந்தது...

    ஷ்வீட்டி அவனை சுற்றி வரும் பல பெண்களில் ஒருத்தி.. அந்த மெஷேஜை திறந்தான்..

    “ஹாய் டார்லிங்... நாம சந்தித்து ரொம்ப நாள் ஆகிறது.. ஐ மிஷ் யூ ... ஐ வான்ட் டு பி வித் யூ டு நைட்” என்று கொஞ்சும் குரலில் அனுப்பி இருந்தாள் அவனுக்கு...

    அதை கேட்டதும் காலையில் பாவித்ராவின் செயலும் அவள் தன்னை நிராகரித்ததும் மீண்டும் ஞாபகம் வந்தது...

    “போடி.. உன்னை விட்டா எனக்கு ஆளா இல்லை “ என்று முனகியவன் உடனே அந்த ஷ்வீட்டியை அழைத்தான்...

    *************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-09

    Regards,
    Chillzee Team :-)
    26 Oct 2018 17:59 #11 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8144
  • Like received: 2975
  • தான் ஹோம் மினிஷ்டர் பதவியை ஏற்ற பின் செய்யும் முதல் வேலை என்பதாலும், முதல் முதலில் அவனுக்கு சமைப்பதாலும், சமையல் செய்யும் வள்ளியையும் இன்னொரு பெண்ணையும் துணைக்கு வைத்து கொண்டு அந்த கிச்சனையே தலைகீழாக புரட்டி கொண்டிருந்தாள் பவித்ரா...

    ஆதித்யா வாங்கி கொடுத்திருந்த ஐ-போனில் ஒவ்வொரு ரெசிபியாக தேடி அதை வள்ளியிடம் விளக்கி கொண்டிருந்தாள்... அவள் சொல்லுவதை வள்ளியும் அப்படியே செய்தாள்...அதை செய்து கொண்டிருக்கும் பொழுதே வள்ளியின் முகத்தில் ஒரே யோசைனயாக இருந்தது... இதை கேட்கலாமா வேண்டாமா என்று பட்டி மன்றம் நடத்தி பின் வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.. பவித்ராவும் தான் இருந்த பிசியில் வள்ளியின் முகத்தில் தோன்றிய அந்த சந்தேக ரேகைகளை கவனிக்கவில்லை...

    இரண்டு மணி நேரம் போராடி ஒரு வழியாக மதிய உணவை தயாரித்தனர் மூவரும். பின் அனைத்தையும் கொண்டு வந்து டைனிங் டேபிலில் வைத்தனர்... பவித்ரா அதற்கு மேலும் கொஞ்ச டெகரேசன் செய்தாள்.. மீண்டும் ஒரு முறை எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று சரி பார்த்து திருப்தி அடைந்தவளாக ஆதித்யாவை சாப்பிட அழைக்க சென்றாள்..

    **************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-10

    Regards,
    Chillzee Team :-)
    09 Nov 2018 20:46 #12 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8144
  • Like received: 2975
  • பவித்ரா தனக்கு நீச்சல் தெரியும் என்று அளந்து விட்ட கதையை நம்பி அவளை வம்பிழுக்க என்று அவளை பிடித்து நீச்சல் குளத்திற்குள் தள்ளி விட்டிருந்தான் ஆதி... ஆனால் அவளோ நீச்சல் அடிக்காமல் நன்றாக மூழ்க ஆரம்பித்து இருந்தாள்.

    கொஞ்ச நேரம் அவளையே பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தவன் கடைசியாக உள்ளே சென்றவள் வெளியில் வராததால் ஏதோ விபரீதம் என்று புரியவும் அடுத்த நொடி நீருக்குள் பாய்ந்திருந்தான்...

    அவளை அப்படியே கையில் அள்ளி நடந்தே வந்து குளத்தின் மேலெ விட்டவன் வேகமாக மேலே ஏறி அவளை பார்த்தான்... அவள் மயங்கி இருந்தாள்....

    அப்பொழுது தான் தெரிந்தது அவளுக்கு நீச்சல் தெரியாது என்று...அந்த குளம் ரொம்பவும் ஆழம் இல்லைதான்...ஆனால் பவித்ரா குட்டையாக இருந்ததாலும் மேலும் அவன் தள்ளிவிட்ட பயத்திலுமே உள்ளே முழ்கி நிறைய தண்ணியை குடித்திருந்தாள்...

    அவள் அசையாமல் இருப்பதை கண்டவன் கொஞ்சம் ஆடித்தான் போனான்...

    வேகமாக தனக்கு தெரிந்த முதலுதவியை செய்தான்... அவள் வயிற்றை நன்றாக அழுத்தி உள்ளே குடித்திருந்த நீரை வெளியேற்றினான்...

    *****************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-ennuyire-padmini-11

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top