Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Maiyalil manam saaintha velai" series discussion

24 Jul 2018 06:02 #1 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • Forum thread to talk about Chithra V's Maiyalil manam saaintha velai story.

    Regards,
    Chillzee Team :-)
    24 Jul 2018 06:10 #2 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • பிரபல தமிழ் திரைப்பட முன்னனி கதாநாயகன்
    தொழிலபதிபர் மகளை மணக்க இருக்கிறார்.
    இன்றைய செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இந்த செய்தி தான் முக்கிய செய்தியாக இடம் பெற்றிருந்தது.

    தமிழ் திரைப்பட முன்னனி நடிகர் சார்மிங் ஸ்டார் சாத்விக்கின் திருமணத்தை பற்றி, அவரின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் வசந்தன் நேற்று அறிவித்தார். சாத்விக்கின் தற்போதைய திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை முன்னிட்டு நடந்த நூறாவது நாள் விழாவில் தான் அவர் இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர்கள் முன்பு அறிவித்தார். இது குறித்து சாத்விக்கிடமும் கேட்கலாம் என்றால் அவர் படப்பிடிப்பு காரணமாக வெளிநாடு சென்றுள்ளார். அவர் திருமணம் செய்ய போகும் பெண் தொழிலதிபரின் மகள் என்பதை தவிர, வேறெதுவும் அவர் தெளிவாக கூறவில்லை. எனவே விரைவில் சாத்விக்கின் திருமணத்தை எதிர்பார்க்கலாம் என்ற விளக்க செய்தியோடு,

    சாத்விக்கின் திருமண அறிவிப்பை குறித்து ஆண் ரசிகர்கள் மகிழ்ச்சியிலும், பல பெண் ரசிகர்கள் கவலையிலும் உள்ளனர்.

    *************************************************************

    இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-01

    Regards,
    Chillzee Team :-)
    07 Aug 2018 06:44 #3 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • கனடா

    அலைபேசியில் வந்திருந்த செய்தியை படித்த விபாகரன் கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் இருந்தான். அவன் முன்னே மட்டும் சாத்விக் இருந்திருந்தால் அவனை என்ன செய்திருப்பான் என்றே தெரிந்திருக்காது. இப்படி ஒரு திருமண அறிவிப்பை எப்படி அவன் கொடுக்கலாம்.. அப்படியென்றால் யாதவியின் நிலை.. அவனை நம்பி தானே அவள் சென்றாள். இப்போது அவள் எங்கு இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை. ஆனால் இவனோ இன்னொரு பெண்ணுடன் திருமணம் என்று அறிவிப்பு கொடுக்கிறான்.

    தான் மட்டும் முன்பு போல் இருந்திருந்தால் நேருக்கு நேராக நின்று சாத்விக்கின் சட்டையை பிடித்து “யாதவி எங்கே?” என்று கேள்விக் கேட்டிருப்பான். ஆனால் இப்போது சாத்விக்கை போலவே இவனின் ஒவ்வொரு செய்கையையும் ஊடகங்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கும். அதுமட்டுமில்லாமல் வியாபார விஷயமாக இவன் இருப்பது வேறொரு நாட்டில், அதேபோல் படப்பிடிப்பு விஷயமாக சாத்விக் இருப்பது வேறொரு நாடு.. ஆனால் யாதவி, அவள் தான் எங்கே இருக்கிறாள்? என்று தெரியவில்லை. சாத்விக்கின் திருமண அறிவிப்பு யாதவியை வெளியே கொண்டு வருமா? சிந்தித்தப்படி அவன் அமர்ந்திருந்த போது அவனது அலைபேசி ஒலி எழுப்பியது. யார் அழைத்தது என்று பார்த்தவன், அதில் தெரிந்த பெயரை பார்த்து அழைப்பை ஏற்றிருந்தான்.

    ***********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-02

    Regards,
    Chillzee Team :-)
    21 Aug 2018 01:33 #4 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • “பிரபல தமிழ் முன்னனி நடிகர் தொழிலதிபர் மகளை மணக்க இருக்கிறார்.” என்று அன்றைய பத்திரிக்கையில் உள்ள தலைப்புச் செய்தியை தேவி படிக்க ஆரம்பிக்க, ஃபேஸ்பேக் போட்ட முகத்தோடு கண்களில் வெள்ளரி துண்டை வைத்து கண்களை மூடியப்படி சாய்வு நாற்காலியில் சாய்வாக உட்கார்ந்துக் கொண்டு மதுரிமா அதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

    “சாத்விக் மதுரமான நடிகையை மணக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நடிகையின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது” என்ற கிசுகிசு செய்தியை கடைசியாக தேவி படித்து முடிக்கவும், “என்ன?” என்று கண்களில் இருந்த வெள்ளரி துண்டை கையில் எடுத்தப்படி அவள் எழுந்து உட்கார்ந்தாள்.

    “ஹேய் ஃபேஸ்பேக் போட்ருக்க மது.. பேசினா சுருக்கம் விழும்..” என்று தேவி பதறி, எழுந்து சென்று ஒரு ஈரத்துண்டை எடுத்து வந்து மதுரிமாவிடம் கொடுத்தாள். அதில் தன் முகத்தை துடைத்தப்படியே, “இந்த ப்ரஸ்க்காரங்க எப்படில்லாம் எழுதறாங்க பாரு தேவி.. சாத்விக் என்னை கல்யாணம் செய்யவும் வாய்ப்பு இருக்குன்னு என்னோட தரப்புல இருந்து சொல்லியிருக்கேன்னு போட்ருக்காங்க.. நானோ இல்லை என் சார்பாவோ இப்படி போய் அவங்கக்கிட்ட சொன்னோமா..

    *********************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-03

    Regards,
    Chillzee Team :-)
    30 Aug 2018 20:35 #5 by Niranjanadevi

  • Fresh Boarder
  • Fresh Boarder

  • Posts: 3
  • Like received:
  • Nice start Chitra adutha ud yum padichutu varen
    30 Aug 2018 20:43 #6 by Niranjanadevi

  • Fresh Boarder
  • Fresh Boarder

  • Posts: 3
  • Like received:
  • Nice going pa vibha yaar avan yen yadhavi ya theduran adutha ud la yadhavi varuvala
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top