Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Maiyalil manam saaintha velai" series discussion

13 Nov 2018 05:29 #13 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • பார்ட்டிக்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தனர். தங்கள் வீட்டில் நடப்பதால் பாலா குடும்பத்தினர் தயாராகி வந்து விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். மதுரிமாவின் பெற்றோர்களும் அதில் அடக்கம்,

    அஜயும் பாலாவுக்கு உதவியாக இருக்க முன்னமே வந்துவிட்டிருந்தான். அஜயை பார்த்த புவனாவும், இந்த நேரம் தேவியும் இங்கிருந்தால், அவளுக்கு அவனை அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று நினைத்தார்.

    ஆம் இப்போது பார்ட்டியில் யாதவி கலந்துக் கொள்ளவில்லை. காரணம் எதுவும் சொல்லாமல் அழுதுக் கொண்டிருந்தவளை புவனா எவ்வளவு தேற்றியும் அவள் அழுகையை நிறுத்துவதாக இல்லை, அழுது அழுது முகம் வீங்கி போயிருந்தது. எப்போதோ இறந்து போன அன்னைக்காக யாதவி இன்று ஏன் இப்படி அழுகிறாள் என்று புவனாவிற்கு புரியவில்லை, அவளது அன்னையை ஞாபகப்படுத்தும் படி எதுவோ நடந்திருக்கிறது, ஆனால் என்ன நடந்தது என்று யாதவி எதுவும் சொல்லவில்லை,

    இந்த நேரத்தில் புவனா யாதவியை வற்புறுத்தவுமில்லை, இப்படி வீங்கிய முகத்தோடு அவள் எப்படி பார்ட்டியில் கலந்துக் கொள்ள முடியும்? அதனால் அவளை உறங்கும்படி சொல்லிவிட்டு அவர் வெளியே வந்தார்.

    *********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-09

    Regards,
    Chillzee Team :-)
    27 Nov 2018 06:10 #14 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • பார்ட்டியில் அனைவரும் விபாகரனின் வரவுக்காக காத்திருந்தனர். சுதர்ஷன் குரூப் ஆஃப் கம்பெனியை அவன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு தான், மற்றவர் வியந்து பார்க்கும் அளவிற்கு அதன் வளர்ச்சி அதீத வளர்ச்சி அடைந்தது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றிக் கொண்டிருப்பவனை பார்ப்பதே கடினம், அவனோடு வியாபாரம் ஒப்பந்தம் போட நீ நான் என்று போட்டி போடுகின்றனர். இப்போது கூட பாலா மற்றும் சுஜனாவின் தந்தை வீரராகவனுடன் அவன் வியாபார ஒப்பந்தம் போட்டிருப்பதை கண்டு பலபேர், இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு வாய்க்கவில்லையே என்று பொறாமை கொண்டனர் என்றே சொல்லலாம், அவனை ஒருமுறையாவது பார்த்து அவனிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் இந்த பார்ட்டியில் அதிகம்பேர்!!

    இப்படி அனைவரின் எதிர்பார்ப்பின் நாயகன் விபாகரன், அவர்களை அதிக நேரம் காக்க வைக்காமல் காரில் வந்து இறங்கினான். அவனுக்கு இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள சற்று கூட விருப்பமில்லை. ஏதோ பாலா ஏற்பாடு செய்தது என்பதால் வேண்டா வெறுப்பாகத்தான் இந்த பார்டிக்கு வந்தான்.

    ஆனால் இப்போதோ இங்கேயே இருக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. யாரோ தனக்கு நெருக்கமானவர்கள் இங்கே இருப்பது போல் ஒரு உணர்வு, அது யாராக இருக்கும் என்று அவன் கண்களால் தேடிய போது,

    *****************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-10

    Regards,
    Chillzee Team :-)
    11 Dec 2018 07:01 #15 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • யாதவிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, ராகிணி விடாப்பிடியாக அவள் தான் சுடுதண்ணீர் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று சொல்லி அங்கேயே நின்றிருந்தார்.

    “அம்மா நீங்க போங்க.. நான் சுடுதண்ணி வச்சு எடுத்துட்டு வரேன்..” என்று சொல்லிப் பார்த்தாள்.

    “இல்லை நீ பாட்டுக்கு நான் போனதும் கேர்லெஸ்ஸா உன்னோட ரூம்ல போய் உக்கார்ந்துக்கிட்டா என்ன செய்றது.. வந்திருக்கவங்க பெரிய மனுஷங்க.. அவங்க முன்னாடி எனக்கு அவமானம் ஆகாதா?” என்றுக் கேட்டார்.

    “இல்லம்மா நான் அப்படில்லாம் செய்ய மாட்டேன்.. என்னை நம்புங்க..” என்றதும்,

    “அப்போ எதுக்கு தயங்குற.. நான் இங்க இருக்கிறதால உனக்கு என்ன வந்தது..” என்றார்.

    “இதற்கு மேல் ஒன்று செய்ய முடியாது.. இன்று விதி சதி செய்கிறது போலும்” என்று நினைத்தவள், வேறு வழியில்லாமல் அவர் சொன்ன வேலையை பார்க்க ஆரம்பிக்க, ராகிணி அவளை குரூரமாக பார்த்தப்படியே,

    “தண்ணி நல்லா சூடு இருக்கட்டும், கூட கொஞ்சம் பச்ச தண்ணியும் எடுத்துக்கோ.. வேணும்னா விலாவிக்கலாம்..” என்றார்.

    ***************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-11

    Regards,
    Chillzee Team :-)
    25 Dec 2018 05:37 #16 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • புவனா யாதவியின் அறையில் அவள் அருகில் அமர்ந்து அவளது சூடுபட்ட காயத்தில் மருந்து போட்டுக் கொண்டிருக்க, பாலா, ரூபினி, மதுரிமா அனைவரும் அவர்களைச் சுற்றி நின்றுக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்கு முன்பு நடந்த விஷயங்கள் அனைவருக்கும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

    சாத்விக் ஒருப்பக்கம் அவளிடம் உருகி அன்போடு பேச, இதில் பன்னீர் தான் அவளது தந்தை என்பது தேவியாக அவளை அறிந்தவர்களுக்கு அதிர்ச்சி தான், தந்தை உயிரோடு இருக்கிறார் என்றால், தனம் அவளது அன்னை இல்லையா? அப்படியென்றால் தனத்தின் மகள் என்று சொல்லிவிட்டு அவள் ஏன் இத்தனை காலம் இங்கு இருக்க வேண்டும்? சாத்விக்கிற்கும் தேவிக்கும் என்ன சம்பந்தம்?

    *************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-12

    Regards,
    Chillzee Team :-)
    08 Jan 2019 01:19 #17 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • வீட்டில் அமைதியாக விட்டத்தை பார்த்து அமர்ந்திருந்த யாதவியை, “ஷாப்பிங்க் போய் வரலாம்.. அது உனக்கு ஒரு மாற்றத்தை கொடுக்கும்..” என்று ரூபினி அழைத்துச் சென்றாள்.

    ரூபினியின் அன்னை செய்த காரியத்தால் பாலா கொஞ்சம் கோபமாக இருக்கிறான். அந்த கோபத்தை குறைக்கவும், மற்றும் ஷாப்பிங் செய்த பொருட்களை சுமந்து வர ஆள் வேண்டுமே அதற்காகவும் தான் அவள் யாதவியை அழைத்தது.

    ரூபினியின் எண்ணத்தை புரிந்துக் கொள்ளாமல் புவனாவே அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டு வியப்படைந்தார். பார்ட்டியில் நடந்ததை நினைத்து இன்னும் யாரிடமும் பேசாமல் யாதவி அமைதியாகவே இருந்தாள்.

    **********************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-13

    Regards,
    Chillzee Team :-)
    22 Jan 2019 05:05 #18 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • விபாகரன் தான் இந்த வேலையை செய்தது என்று பாலா யூகித்ததுமே, உடனே அவனை அலைபேசியில் தொடர்புக் கொண்டான். அந்த நேரம் விபா தன் வீட்டிற்கு காரில் சென்றுக் கொண்டிருந்தான். பாலா தான் பேசுகிறான் என்று தெரிந்து அவன் அழைப்பை ஏற்றதும்,

    “ஏன் டா இப்படி செஞ்ச?” என்ற கேள்வியை தான் பாலா கோபமாக கேட்டான்.

    எதற்காக இப்படி கேட்கிறான் என்று விபாவுக்கு புரியவில்லை, “என்னடா சொல்ற.. நான் என்ன செஞ்சேன்..” என்று அவன் திருப்பிக் கேட்டான்.

    **************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-14

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top