Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Maiyalil manam saaintha velai" series discussion

21 May 2019 19:57 #31 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • ஐந்து வருடத்திற்கு முன்பு
    அன்று சாத்விக்கோடு பேசிக் கொண்டிருந்ததை பார்த்து யாதவியை ரத்னா அடித்து இழுத்து வந்ததோடு சரி, அதன்பின் யாதவி சாத்விக்கை பார்க்கவேயில்லை, அடுத்த ஐந்து நாட்கள் செமஸ்டர் தேர்வுக்கு படிப்பதற்காக விடுமுறை விட்டிருந்ததால் ரத்னா அவளை வெளியில் அனுப்பவில்லை, அடுத்து கல்லூரிக்கு வரும்போது அவனை பார்க்க முடியவில்லை, எப்போதும் கல்லூரிக்கு வரும்போதோ இல்லை கல்லூரி முடிந்து வெளியே வரும்போதோ அவளுக்காக காத்திருப்பவன், இப்போதெல்லாம் வராததால் யாதவி அவனை தேட ஆரம்பித்தாள்.

    ************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-25

    Regards,
    Chillzee Team :-)
    28 May 2019 19:02 #32 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • யாதவியின் சம்மதம் கிடைத்ததுமே அடுத்து வந்த ஒரு நல்ல முகூர்த்த நாளில் விபாகரன், யாதவியின் திருமணம் முடிவானது. பன்னீருக்கோ இல்லை ஒருவேளை முன்பணம் கொடுத்த படத் தயாரிப்பாளருக்கோ இந்த திருமண செய்தி தெரியக் கூடாது என்பதில் அனைவருமே தீர்மானமாக இருந்தனர்.

    அர்ச்சனாவிடமும் மஞ்சுளா சொல்லி புரிய வைத்திருந்தார். அவளுக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லையென்றாலும், பிரச்சனைகளுக்கு அவள் காரணமாக இருக்கமாட்டாள் என்று மஞ்சுளாவிடம் அவள் உறுதி அளித்தாள்.

    **********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-26

    Regards,
    Chillzee Team :-)
    05 Jun 2019 07:37 #33 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • வீட்டுக்கு வந்த பின்பும் கூட யாதவி ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தது போல விபாகரனுக்கு தோன்றியது. அங்கே கோவிலில் அவளை தொட்ட போது, அவள் விலகியதும், முதலில் அவன் மனம் சுணங்கினாலும்,

    திருமணம் முடிந்துவிட்டதால் அடுத்து என்ன நடக்கும் என நினைத்து கவலைக் கொள்கிறாளோ, ஒருவேளை அவள் தோழி ஏதாவது கேலியாக கூறி இவள் அதை நினைத்து குழப்பிக் கொள்கிறாளோ என்று நினைத்து மனதை சமாதானமாக்கிக் கொண்டான்.

    ஆனால் காரில் திரும்பி வரும்போதும் அவள் ஏதோ சிந்தனையில் அமைதியாகவே வந்தாள். ரத்னாவும் மஞ்சுளாவும் காரில் கடைசி இருக்கையில் அமர்ந்துக் கொண்டு கதை பேசிக் கொண்டு வர, அதற்கு முன் இருக்கையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். அர்ச்சனா

    **********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-27

    Regards,
    Chillzee Team :-)
    11 Jun 2019 06:12 #34 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • #தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 28 - சித்ரா. வெ

    யாதவி கழுத்தில் தாலிக் கட்டி சில மணி நேரங்களே ஆகியிருக்க, அந்த கயிற்றில் பூசியிருந்த மஞ்சளின் ஈரம் கூட காயாமல் இருக்க, அவள் அதை கழட்டி தன் கையில் கொடுப்பாள் என்று விபாகரன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

    திருமணம் சொர்க்கத்தில் முடிவானது என்று சொல்வார்கள். ஆனால் அதை இப்படி சில மணி நேரத்திலேயே அவள் முடித்து கொள்ள விரும்புவாள் என்று அவன் நினைத்து பார்த்திருப்பானா? இனியும் அவளிடம் தங்களது உறவை தக்க வைத்துக் கொள்ள அவளுக்கு புரிய வைக்கும் எண்ணத்தை கைவிட்டு,

    ******

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-28

    Regards,
    Chillzee Team :-)
    18 Jun 2019 04:47 #35 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • யாதவி தன்னை காண வந்திருக்கிறாள் என்ற செய்தியை கேட்டு சாத்விக்கின் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்திருந்தாலும், அடுத்து அவள் இங்கு எப்படி வந்தாள்? என்ற கேள்வி அவன் மனதில் எழாமல் இல்லை.

    அவளை காண வேண்டுமென்று அவளை பிரிந்து வந்ததிலிருந்து அவன் கண்கள் தவத்தை மேற்கொண்டிருந்தாலும், இப்படி எதிர்பார்க்காத தருணத்தில் அவள் தன்னை காண வந்திருக்கிறாள் என்றால், ஏதோ பிரச்சனை என்றே மனம் சொல்ல,

    "வரச் சொல்லுங்க செக்யூரிட்டி.." என்று காவலாளியிடம் கூறியவனின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. தன் மனம் காதல் கொண்டிருந்தாலும், அதனால் அவளுக்கு தொல்லை நேரக் கூடாது, படிப்பு பாதிக்கக் கூடாது என்பதால் தான் அப்போதே பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பி

    *********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-29

    Regards,
    Chillzee Team :-)
    25 Jun 2019 04:26 #36 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • சாத்விக் வீட்டில் யாதவிக்கு நடந்தது என்ன என்பது தெரியாமல் விபாகரன் அவளை தேடி சென்னை வந்தான். அவன் சென்னையில் காலடி எடுத்து வைத்த போது மாலை மறைந்து இருள் தொடங்கியிருந்தது.

    ஒரு ஆட்டோ பிடித்து சாத்விக் வீட்டை சென்றடைந்தவன், சாத்விக்கை காண வேண்டுமென்று சொல்வதற்கு முன்னரே அங்கிருந்த காவலாளியிடம் தன் அலைபேசியில் உள்ள யாதவியின் புகைப்படத்தை காட்டி, அவள் இங்கு வந்தாளா? என்றுக் கேட்டான்.

    தினம் பல பேரை பார்ப்பவர் என்றாலும், சோர்வை தாங்கிய முகத்தில் சாத்விக் அழைத்ததுமே புத்துணர்வுடன் புன்னகை பூத்த யாதவியின் முகம் அவருக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது.

    *********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-30

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top