Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Maiyalil manam saaintha velai" series discussion

30 Aug 2018 21:00 #7 by Niranjanadevi

 • Fresh Boarder
 • Fresh Boarder

 • Posts: 3
 • Like received:
 • Nice ud Chitra devi than antha yadhavi ya pa waiting eagerly for next ud pa seekiram vanga
  06 Sep 2018 20:03 #8 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • சென்னை விமான நிலையம்

  அந்த இரவு நேரம் சுஜனா மிகவும் பதட்டத்தோடு சாத்விக்கிற்காக காத்திருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பே படப்பிடிப்புக்காக போயிருந்த அனைவரும் திரும்பி வந்திருக்க, சாத்விக் மட்டும் இரண்டு நாள் கழித்து வருவதாக சொன்னவன், இதோ இன்னும் சற்று நேரத்தில் விமானத்திலிருந்து தரையிறங்க போகிறான். அவனை விமான நிலையத்திற்கே சென்று அழைத்து வருமாறு தன் தந்தை கூறியதால், இதோ அவனுக்காக வந்து காத்திருக்கிறாள் அவள்,

  “சாத்விக்கை நாளை நேரில் சந்தித்துக் கொள்கிறேன், இப்போது இரவு நேரத்தில் சென்று அவரை எதற்கு அழைத்து வர வேண்டும்.. அதுவும் அவர் நம் வீட்டிற்கு வருவதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சாத்விக் அவர் வீட்டுக்கு தானே செல்ல போகிறார். பிறகு நான் எதற்கு போக வேண்டும்?” என்று அவள் பெற்றொரிடம் கேட்டதற்கு, இருவருமே சிரித்தார்கள்.

  “உன்னோட வருங்கால கணவனை பார்க்க போ என்று அனுமதி கொடுத்தால், எதற்கு போக வேண்டும் என்று எங்களிடமே கேட்கிறாயே.. சாத்விக்கிடம் பேச நிறைய இருக்காதா? நாங்களே சொல்லிட்டோமே.. பிறகு என்ன? போயிட்டு வா..” என்று கூறினர்.

  ***************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-04

  Regards,
  Chillzee Team :-)
  18 Sep 2018 06:24 #9 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • விபாகரனும் இன்று தான் சென்னை திரும்புகிறான். அதனால் அவனை அழைத்துச் செல்ல அஜய் விமான நிலையத்திற்கு வந்திருந்தான். விபாகரனை அழைத்துச் செல்ல அவன் வரவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எப்போது சென்னைக்கு வந்தாலும், விபாகரன் ஒரு வாடகை காரோ இல்லை ஆட்டோவோ பிடித்து வீட்டுக்கு வந்துவிடுவான். இருந்தும் விபாகரன் சிறிது காலம் சென்னையில் இருக்கப் போகிறான் என்ற காரணத்தால் நேற்றே அவனது சென்னை வீட்டிற்கு வந்துவிட்ட அஜயின் அண்ணியும், விபாகரனின் தங்கையுமாகிய அர்ச்சனாவும், விபாகரனின் அன்னை மஞ்சுளாவும், அஜயிடம் விபாகரனை அழைத்து வரும்படி சொல்லியிருந்ததால், அவன் இப்போது இங்கு வந்திருக்கிறான். இங்கு வந்ததும் கூட ஒரு நல்லதுக்கு தான், இங்கே சுஜனாவை பார்ப்பான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவளை பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது.

  விபாகரன் வரும் விமானம் தரையிறங்க சிறிது நேரம் கால தாமதமாகும் என்ற அறிவிப்பை தொடர்ந்து சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்தப்படி இருந்த போது தான் அவன் சுஜனாவை பார்த்தது. இத்தனை வருடங்கள் கழித்து அவளை பார்ப்போம் என்று அவன் நினைத்து பார்க்கவேயில்லை. அவளை பார்க்காமல் இருந்தானே தவிர, அவளை இதுவரை அவன் நினைக்காமல் இருந்ததில்லை.

  ***************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-05

  Regards,
  Chillzee Team :-)
  02 Oct 2018 07:35 #10 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • கை குலுக்குவதற்காக கை நீட்டியும் விபாகரன் பதிலுக்கு கை கொடுக்காதது சாத்விக்கிற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இன்னும் சில மாநிலங்களிலும் ஓரளவிற்கு பிரபலமானவனாக திகழ்பவனை இப்படி மரியாதை குறைவாக யாரும் நடத்தியதில்லை. அதற்காக அவன் இதுவரை கர்வம் கொண்டு சுற்றியதில்லை. இருந்தாலும் முதன்முறையாக தன்னை பார்ப்பவன் இப்படி நடந்துக் கொள்வதற்கான காரணம் புரியாமல் அவன் திகைக்க,

  அருகில் நின்றிருந்த பாலா, அஜய்க்கும் கூட விபாவின் செயல் திகைப்பை ஏற்படுத்தியது!! “விபா என்னடா?’ என்று பாலா விபகரனிடம் மெதுவாக கேட்க,

  உடனே சாத்விக் மீது இருக்கும் தனிப்பட்ட தன் மன உணர்வுகளை மீட்டுக் கொண்டு நடப்புக்கு வந்தவன், “ஹாய் நைஸ் மீட்டிங் யூ..” என்று கை குலுக்கினான்.

  சாத்விக் அடுத்து ஏதோ பேச வருவதற்குள், அஜயிடம் திரும்பிய விபாகரன், “அஜய் அர்ச்சனாவும் அம்மாவும் உன்னை இங்க அனுப்பி வச்சாங்களா? சரி நான் பாலா கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு அதுக்குப்பிறகு வீட்டுக்கு போறேன்.. நானே அம்மாக்கிட்ட சொல்லிக்கிறேன்.. நீ உன் வீட்டுக்கு கிளம்பு..” என்று கூறினான்.

  ***************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-06

  Regards,
  Chillzee Team :-)
  16 Oct 2018 05:52 #11 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • “வாங்க வாங்க..” என்று வரவேற்ற விபாகரனின் அன்னை மஞ்சுளா அமைதியின் திருவுருவமாக இருந்தார். அவர் பின்னாலேயே ஆர்பரிப்புடன்,

  “மதுரிமா ஆஆ.. வாவ் செம சர்ப்ரைஸ்..” என்றப்படியே வரவேற்றது அர்ச்சனா.. விபாகரனின் தங்கை,

  அவளது அந்த ஆர்ப்பரப்பில் மதுரிமாவே கொஞ்சம் பயந்து போனாள். எப்போது தேவி இங்கு வர விருப்பமில்லை என்று தெரிவித்தலோ, அப்போதே மதுரிமாவும் வரவில்லையென்று பாலாவிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

  “உன்னோட அண்ணன் முன்னாடியே அவங்கக்கிட்ட நாமல்லாம் வர்றதா சொல்லிட்டான் மதும்மா.. ஏற்கனவே தேவி வரலன்னு சொல்லிட்டா, இப்போ நீயும் வரலன்னா, அவங்க என்ன நினைப்பாங்க.. அதனால நீ மட்டுமாவது வாம்மா மது..” என்று கூறவும் தான், அவளும் வர சம்மதித்து இங்கு வந்தாள்.

  அர்ச்சனாவுக்கும் மதுரிமா இங்கு வருவது தெரியாது, தெரிந்திருந்தால் இத்தனை இன்ப அதிர்ச்சியாக அவளுக்கு இருந்திருக்காது. பாலாவின் ஒன்றுவிட்ட தங்கை தான் மதுரிமா என்பது அவளுக்கு முன்பே தெரிந்தது தான், வியாபார விஷயமாக பாலா மும்பை போகும் போது, அங்கே விபாகரனின் அன்னையை பார்க்க வீட்டிற்கு செல்வான். அப்போது தன் குடும்பத்தை பற்றிய விவரங்களை சொல்லியிருக்கிறான்.

  ***********************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-07

  Regards,
  Chillzee Team :-)
  30 Oct 2018 05:09 #12 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • இதோ அதோ என்று பாலா ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி நடைபெறும் நாளும் வந்தது. இன்று மாலை நேரம் நடக்கவிருக்கும் பார்ட்டியை சிலர் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். சிலர் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. பார்ட்டியை எதிர்பார்த்தவர்கள் என்றால், அது மதுரிமா, அஜய், சுஜனா தான்,

  மீண்டும் விபாகரனை சந்திக்க போகும் ஆவலில் மதுரிமா இருந்தாள். இன்று பார்ட்டியில் என்ன ஆடை அணிவது என்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தாள். அன்று அவன் வீட்டில் விபாவோடு அதிகம் பேச முடியவில்லை, அதனால் இன்று அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு அவனிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைத்தாள். நடிப்பதற்கு கூட இத்தனை ஒத்திகை பார்த்திருக்க மாட்டாள், ஆனால் விபாவோடு என்ன பேச வேண்டும் என்று நிறையவே ஒத்திகை பார்த்தாள். மாலை எப்போது வரும் என்று அவ்வப்போது கடிகாரத்தை பார்த்தே நேரத்தை கடத்தினாள்.

  அதேபோல் அன்று விமான நிலையத்தில் பார்த்தபிறகு அஜயும் சுஜனாவும் மீண்டும் பேசிக் கொள்ளவோ, இல்லை சந்தித்துக் கொள்ளவோ முயற்சிக்கவில்லை.

  ********************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-velai-chithra-v-08

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top