Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Jay's Gayathiri Mandhirathai... series discussion

14 Nov 2018 07:46 #7 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • “ஹே காயு என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட போல....”

  “ஆமாம் சந்தியா... பஸ் சீக்கிரம் வந்துடுத்து... வழிலயும் ரொம்ப டிராபிக் இல்லை அதான்....”

  “இங்க பார்றா... சென்னையில டிராபிக் கம்மியா ஒரு நாளா... வரலாற்றுல பொறிச்சு வைக்க வேண்டிய பொன்னாள்தான் இன்னைக்கு... ஹே என்னடி மாலு இன்னைக்கு ஜகஜோதியா வந்திருக்க.... ஒரே டாலடிக்கற....”

  “இன்னைக்கு நமக்கு bio-chemistry சார் வர்றாருடி.... மறந்துட்டியா....”

  “ஓ அதுதான் மேட்டரா....”

  “சந்தியா சார் வர்றாரு... ஒழுங்கா பெஞ்ச்ல இறங்கி உக்காரு...”, டேபிள் மேல் காலாட்டியபடியே அமர்ந்து புத்தகத்தை தூக்கி போட்டு விளையாடிக்கொண்டிருந்த சந்தியாவை பார்த்து காயத்திரி சொல்ல, யார் அது என்று பார்த்தபடியே கீழே இறங்கினாள் சந்தியா....

  “மாலு உங்கண்ணன் சும்மா டக்கரா இருக்காருடி.... என்னா கலரு.... என்னா பிகரு.....”, சந்தியா சொல்ல மாலு அவளை கொலைவெறியுடன் பார்த்தாள்....

  ************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-06

  Regards,
  Chillzee Team :-)
  28 Nov 2018 07:50 #8 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • சந்தியா, மாலதி, காயத்ரி பேசிக்கொண்டிருக்கும்போது லேப் அறையிலிருந்து மாணவர்கள் அலறும் சத்தம் கேட்க மூவரும் அந்த இடத்தை நோக்கி நகர்ந்தார்கள்....

  லேப் அறை வாசலில் பத்து பதினைந்து மாணவர்கள் நின்று கொண்டிருக்க சந்தியா அவர்களிடம் சென்று என்னவென்று கேட்டாள்....

  “ஹலோ சீனியர்... என்னாச்சு உள்ள ஏதானும் ப்ரோப்லமா... எதுக்கு இப்படி கத்துறாங்க....”

  “ஹே நீ first year ஸ்டுடென்ட்தானே.... உன் கிளாஸ் பொண்ணு ஒண்ணு உள்ள suicide அட்டெம்ப்ட் பண்ணிருக்கு.... எங்களுக்கு இப்போ லேப் hour.... உள்ள போகலாம்ன்னு பார்த்தா அங்க அந்த பொண்ணு விழுந்து கிடக்கு... பக்கத்துலையே சர்ஜிகல் கத்தி கிடக்குது... என் கிளாஸ்மேட் உயிர் இருக்குதான்னு செக் பண்ணிட்டு இருக்கா....”

  “அடக்கடவுளே... தள்ளுங்க யாருன்னு பார்க்கிறேன்....”, சந்தியா உள்நுழையப் பார்க்க, அதற்குள் காலேஜ் டீன், மற்றும் சில ஆசிரியர்கள் அவர்களை நோக்கி வேக வேகமாக வந்தார்கள்....

  “ஸ்டுடென்ட்ஸ் இங்க கூட்டம் போடாதீங்க.... சந்தோஷ் பசங்களை எல்லாம் கிளாஸ்க்கு அனுப்புங்க....”, அவர்களை விலக்கியபடியே அறையுள் நுழைந்தார் டீன்...

  ******************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-07

  Regards,
  Chillzee Team :-)
  12 Dec 2018 08:46 #9 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • “வா வா சந்தியா... என்ன உங்க காலேஜ் படு பரபரப்பா இருக்கு போல... காலைலேர்ந்து எல்லா சேனல் breaking நியூஸ்லயும் உங்க காலேஜ்தான் வந்துட்டு இருக்கு...”

  “ஆமா மாமா… ஒரு பொண்ணு இறந்து போச்சு... தற்கொலையா, கொலையான்னு தெரியலை... காலேஜ்லேர்ந்து கிளம்பற வரை தற்கொலை மாதிரிதான் பேசிட்டு இருந்தாங்க...”

  “ஹ்ம்ம் நியூஸ்ல பார்த்தேன்.... ஆனா உன் முகத்தை பார்த்தா அது மாதிரி இல்லை போலையே....”

  “ஆமாம் மாமா.... என்னால தற்கொலைன்னு அதை நினைக்க முடியலை....”

  “ஏன் சந்தியா.... கொலைன்னு சந்தேகப்படறா மாதிரி எதாச்சும் அங்க பார்த்தியா....”

  “இல்லை மாமா.... என்னோட அனுமானம்தான்... காலைல நான் கிளாஸ்க்குள்ள நுழையும்போது அந்த பொண்ணை பார்த்தேன் மாமா... ரொம்ப சாதாரணமாத்தான் பக்கத்துல இருக்கற பொண்ணுகூட பேசிட்டு இருந்தா.... அவக்கூட ஹாஸ்டல்ல தங்கி இருக்கற பொண்ணுக்கிட்ட கேட்டேன்... நேத்தும் எப்பவும் போலதான் இருந்தா...

  *****************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-08

  Regards,
  Chillzee Team :-)
  09 Jan 2019 01:38 #10 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • “என்னப்பா டாக்டர் வந்துட்டாரா....”

  “இல்லைப்பா சுந்தர் அவர் வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் போல இருக்குது....”

  “ஓ அப்போ சதீஷ் ரூம்லதான் இருக்கானா.... அப்போ நீங்களும் அங்கேயே இருக்கலாமேப்பா... ஏன் வாசல்ல வந்து நின்னுட்டு இருக்கீங்க...”

  “அவனை காலைல ஆறு மணிக்கே வந்து நர்ஸ் ஏதோ செக் பண்ணனும்.... அப்பறம் ஆபரேஷன்க்கு தயார் பண்ணனும்.... அப்படின்னு கூட்டிட்டு போய்டுச்சு...”

  **********************

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-09

  Regards,
  Chillzee Team :-)
  23 Jan 2019 06:48 #11 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • சந்தோஷிடம் இருந்து வந்த குறுந்தகவலை பார்த்த சக்தி உடனடியாக அவனுக்கு அழைப்பு விடுத்தான்.....

  “ஏதாவது விஷயம் கிடைச்சுதா சந்தோஷ்.... எதுக்கு அவசரமா போன் பண்ண சொன்ன.....”

  “இன்னைக்கு காலேஜ்ல நடந்த விஷயம் உனக்கு தெரிஞ்சு இருக்கும்...”

  “ஆமாம்டா அந்த தற்கொலைதானே... என்ன போலீஸ் இதையும் ஏதானும் காரணம் சொல்லி கேஸ் க்ளோஸ் பண்ண பார்க்குறாங்களா.....”

  “அந்த பொண்ணு எழுதின லெட்டர் கிடைச்சிருக்கு... அதை எவிடென்ஸ் அப்படின்னு சொல்லி தற்கொலை அப்படின்னு முடிச்சுடுவாங்க போல....”

  “அது அந்த பொண்ணோட கையெழுத்துத்தானா.... நீ லெட்டர் பார்த்தியா...”

  ***************

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-10

  Regards,
  Chillzee Team :-)
  06 Feb 2019 06:27 #12 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8376
 • Like received: 3017
 • மணியின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் கூட்டம் சேர சேர அங்கு பதற்ற நிலை உருவாக ஆரம்பித்தது.... எதிர்கட்சிகள் இதை தங்களுக்கு ஒரு வாய்ப்பாக கருதி மணியின் இறப்பை அவனின் சாதியோடு இணைத்து அரசியல் போராட்டமாக மாற்ற ஆரம்பித்தார்கள்...

  அடுத்த மூன்று மணி நேரத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போக அமைச்சரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பால் போலீசார் மணியின் உடலை தற்பொழுது அவர்களிடம் ஒப்படைக்க போவதில்லை என்றும் பேசி முடிவெடுக்கலாம் என்றும் கூறி அனைவரையும் கலைந்து போகும்படி அறிவிக்க... காவல்துறையை சேர்ந்தவர்கள் மணியின் உறவினர்களை அப்புறப்படுத்த ஆரம்பித்தார்கள்....

  **********************

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-manthirathai-jay-11

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top