Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Sasirekha's Kathalai pera ethanikkiren series discussion

27 Sep 2018 18:34 #7 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8152
  • Like received: 2978
  • விடிந்தது
    காலை மணி 4
    கௌதம் வீட்டு கதவை பலமாக தட்டப்படும் சத்தம் கேட்டு சோபாவில் படுத்திருந்த கௌதம் எழ முடியாமல் எழுந்து நேரத்தைப் பார்க்க அது 4 என காட்டவும் எரிச்சலடைந்தான்.
    ”யார்ராது இந்த நேரத்தில சே நிம்மதியா தூங்க கூட விடமாட்டாங்களாம்மா” என திட்டிக் கொண்டு தடுமாறி எழுந்து கதவைத் திறந்தான். தலை வேறு பாரமாயிருக்க கண்கள் கூசவும் கண்களை கசக்கிக் கொண்டு யார் என பார்த்தான். அங்கு நடேசனும் வினோதனும் நின்றிருக்கவே
    ”டேய் நீங்கதானாடா ஏண்டா இப்படி என் உயிரை எடுக்கறீங்க”
    என சொல்லி கதவை சாத்த முயல அவனை அப்படியே வெளியே இழுத்துப் பேசலானார்கள்
    ”என்ன கௌதம் நேத்து நடந்தது எதுவும் ஞாபகமில்லையா உனக்கு”

    ****************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ikkiren-sasirekha-06

    Regards,
    Chillzee Team :-)
    04 Oct 2018 17:32 #8 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8152
  • Like received: 2978
  • கம்பெனிக்கு சென்ற கௌதமிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவன் வந்ததும் வராததுமாக அவனது ஐடி கம்பெனி ஓனர் ராம்நாத் கௌதமை தன் கேபினுக்கு அழைத்தார்.

    கௌதமும் தான் கொண்டு வந்த பை, லன்ச் பேக் அனைத்தையும் தன் கேபினில் வைத்துவிட்டு ராம்நாத்தை சந்திக்க அவரின் கேபினுக்குச் சென்றான்

    ”சார் மே ஐ கம் இன்” என கௌதம் கேட்க

    ”அட வாப்பா உள்ளே இந்த பார்மாலிடீசை தூக்கிப் போடு”

    ”என்னாச்சி சார் ஏதாவது பிரச்சனையா” என கவலையாக கேட்க

    “ஆமாம்பா இப்பதான் போன் வந்திச்சி” என சோகமாக சொன்னார்

    “யார்கிட்டயிருந்து”

    “நமக்கு 4 புராஜக்கெட் கொடுத்தாங்களே அவங்ககிட்டயிருந்து”

    ************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ikkiren-sasirekha-07

    Regards,
    Chillzee Team :-)
    11 Oct 2018 17:41 #9 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8152
  • Like received: 2978
  • கௌதம் ஆசையுடன் வீட்டுக்கு வந்தான். தன் போர்ஷனில் தேஜா மட்டும் இருப்பாள் என நினைத்து வர அங்கு நடேசனும் வினோதனும் இருக்கவே பக்கென்றது. அவர்களை பார்த்து முறைத்துவிட்டு தேஜாவை பார்க்க அவள் அவனை கண்டுச் சிரித்தாள்.

    அவளின் சிரிப்பைக் கண்டு கோபமடைந்தவன் அவளிடம் தான் கொண்டு வந்த அனைத்து பொருட்களையும் தர அதை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றதும் கௌதம் நடேசனிடம்

    ”இங்க என்ன செய்றீங்க நீங்க ரெண்டு பேரும்” என கேட்க

    ”சும்மாதான் வந்தோம் கௌதம், ரேஷன் கார்டு இல்லைன்னு சொன்னியே அதான் அப்ளிகேஷன் வாங்கிட்டு வந்தோம்” என்றான் நடேசன்

    ”அதுக்கு தேவையான ப்ரூப் வேணும்ல அதான் வாங்கிட்டு போக வந்தோம்” என்றான் வினோதன்

    ”ஏன் அது நான் இல்லாதப்பதான் வரனுமா, நான் காலையில உங்ககூடதானே பால் பாக்கெட் வாங்க வர்றேன் அப்ப சொல்ல வேண்டியதுதானே” என கோபத்துடன் பேச அதை புரிந்துக் கொண்ட இருவரும்

    “அதுக்கில்லை கௌதம், பாவம் உன் பொண்டாட்டி தனியா இருந்தாங்களா அதான் பேசிட்டு போலாம்னு வந்தோம்” என நடேசன் எழுந்துக் கொள்ள வினோதனும்

    ***************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ikkiren-sasirekha-08

    Regards,
    Chillzee Team :-)
    18 Oct 2018 20:16 #10 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8152
  • Like received: 2978
  • தன் போர்ஷனுக்குள் நுழைந்த கௌதம் எதிரே இருந்த தேஜாவிடம்

    ”என்ன பார்க்கற டிபன் பண்ணு போ” என அதட்ட

    “ம்” என அவளும் மெல்ல தலையாட்டிவிட்டு டிபன் செய்யச் சென்றாள்.

    கௌதமோ பாத்ரூம் சென்று ரெப்ரஷாகி வெளியே லுங்கி மட்டும் அணிந்துக் கொண்டு வந்தவன் மனதளவில் சோர்வாகி தன் அறையில் இருந்த மெத்தையில் படுத்துக் கொண்டு கண்ணயர்ந்தான். எவ்வளவு நேரம் அப்படியிருந்தானோ மெதுவாக தன்னை யாரோ எழுப்பும் உணர்வு வர கண்கள் திறந்து பார்த்தான். அங்கு தேஜா இருக்கவே கண்களை கசக்கிக் கொண்டு எழுந்தான்

    ”சாரி தேஜா கொஞ்சம் தூங்கிட்டேன் போல”

    “பரவாயில்லை வாங்க சாப்பிடுவீங்க”

    ”அதுக்குள்ள டிபன் பண்ணிட்டியா”

    “ம்”

    ************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ikkiren-sasirekha-09

    Regards,
    Chillzee Team :-)
    25 Oct 2018 17:53 #11 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8152
  • Like received: 2978
  • விடிந்தது

    கதவு தட்டுவதற்குள் தானாகவே எழுந்துக் கொண்ட கௌதம் ரெடியாகி மற்றவர்களுக்காக காத்திருந்தான். நடேசன் வினோதன் வரவே அவர்களுடன் சேர்ந்துக் கொண்டு பால் பாக்கெட் வாங்கச் சென்றான்

    ”பரவாயில்லையே கௌதம் நாங்க வர்றதுக்குள்ள நீயே ரெடியாயிருக்க”

    “பழகிடுச்சி”

    “அவ்ளோதான் இனிமே பாரு எல்லாமே தானா பழகிடும்”

    ”சரி உன் ப்ராஜெக்ட் ஒர்க் எப்படி போயிட்டு இருக்கு”

    “இன்னும் ஒன்றரை இருக்கு”

    “இது என்னடா கணக்கு ஒன்றரை”

    “ஒண்ணுத்துல பாதிதான் முடிச்சேன், எப்படியும் 2 நாள்ல முடிச்சிடுவேன்”

    **************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ikkiren-sasirekha-10

    Regards,
    Chillzee Team :-)
    01 Nov 2018 18:24 #12 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8152
  • Like received: 2978
  • விடிகாலையில் 4 மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டு மெல்ல கண் விழித்தாள் தேஜா. கண்களை தேய்த்துக் கொண்டு எழுந்தவள் கௌதம் தேஜாவின் புடவை முந்தானையை இழுத்து தன் மீது போர்த்திக் கொண்டு படுத்திருக்கவும் வெட்கத்தில் முகம் சிவந்தவள் கதவு தட்டும் சத்தம் விடாமல் கேட்கவே தன் புடவை முந்தானையை கஷ்டப்பட்டு இழுத்துக் கொண்டு தன் மீது போர்த்திக் கொண்டு கௌதமை எழுப்பினாள்

    ”கௌதம் கௌதம்” என அவனது தோளை பிடித்து உலுக்க அடித்து பிடித்து எழுந்து அமர்ந்து மூச்சிரைக்க தேஜாவை பார்த்து கோபித்தான்

    ”ஏய் நீதானா ஏண்டி இப்படி பேய் மாதிரி உலுக்கி எழுப்பற”

    “வெளிய கதவை யாரோ தட்டறாங்க”

    “என்னது பேய் கதவு தட்டுதா” என பயப்பட

    ”அய்யோ இல்லை மணி 4, பால்பாக்கெட் வாங்க நீங்க போலயா” என கேட்க

    “ஓ அதுவா போ இன்னிக்கு நான் லீவு” என படுத்துக் கொள்ள மீண்டும் அவனை எழுப்பினாள் தேஜா

    ***********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ikkiren-sasirekha-11

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top