Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Madhu's Senthamizh Thenmozhiyaal series discussion

03 Oct 2018 06:52 #7 by Thenmozhi

  • Administrator
  • Administrator

  • Posts: 4388
  • Like received: 2081
  • hey Madhu cool cool :D

    unga pasam pukllarika vachiruchu ponga :-) :-)

    appadi enna role vachirukinganu padika waiting :-)

    Thenmozhi
    I am a girl!
    I AM SMART & I AM STRONG and I can do ANYTHING!
    15 Oct 2018 19:40 #8 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8398
  • Like received: 3021
  • நினைவுகள்.

    மற்ற ஜீவராசிகளுக்கு நினைவுகள் என்ற ஒரு வரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் மனிதனுக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது.

    காலத்தையே புரட்டிப் போடும் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தனர் இருவர்.

    இன்று கடற்கரையோரம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்த பங்களா இருந்த இதே இடத்தில் இருப்பதி இரண்டு வருடங்களுக்கு முன் சிறு தோட்டம், கிணறு கொண்ட இரு ஓட்டு வீடுகள் தாம் இருந்தன.

    “அம்மா யாரோ வந்திருக்காங்க” மூத்த மகன் இளங்கோ கூற எட்டிப் பார்த்த கயல்விழி கேட்டின் அருகே ஒரு பெண்மணியும் ஒன்பது பத்து வயது மதிக்கத்தக்க சிறுமியும் நிற்பதைக் கண்டார்.

    “உள்ள வாங்க” இன்முகத்துடன் கயல்விழி வரவேற்க திண்ணையில் அவர்களை அமரச் செய்து பருக நீர் கொண்டு வந்து கொடுத்தார்.

    “வீடு வாடைகைக்கு இருக்குன்னு கேள்விப்பட்டேன். அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” தன்னை வள்ளி என்று அறிமுகம் செய்து கொண்ட அப்பெண்மணி அருகில் இருந்த மருத்துவமனையில் செவிலியாராகப் பணியாற்றுவதாகக் கூறினார்.

    ********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-04

    Regards,
    Chillzee Team :-)
    29 Oct 2018 19:10 #9 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8398
  • Like received: 3021
  • இரவு நெடுநேரம் ஆகியிருந்த போதும் கவினை சிபி விடுவதாய் இல்லை. அவனுக்கு தேன்மொழியைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

    “இதை நான் எதிர்பார்க்கவில்லை கெவின்” நண்பன் கூறிய தகவலில் ஆச்சரியம் கொண்டவன் அவனிடம் கூறிக் கொண்டிருந்தான்.

    “அவள் பத்து வயதில் இருந்தே கடலே உலகம் என்று இருப்பவள். நம் வீடு அலுவலகம் என்று நமக்கு நன்கு தெரிந்த இடத்திற்கு கண்ணைக் கட்டி விட்டாலும் எப்படி நம்மால் போக முடியுமோ அது போல உலகத்தில் எந்தக் கடலில் தேன்மொழியை விட்டு வந்தாலும் வழியை அறிந்து கரைக்கு வந்துவிடுவாள். அதிலும் இந்து மகாசமுத்திரத்தின் ஆப்ரிக்க கரையோரம் ஒவ்வொரு பரப்பும் அவளுக்கு அத்துப்படி”

    நண்பனின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட கவின் அவனிடம் தேன்மொழியைப் பற்றி மேலும் கூறலானான்.

    அதே நேரம் சென்னையிலும் தேன்மொழி பாப்பாவின் கடல் காதல் பற்றித் தான் அவளது குடும்பத்தினர் உரையாடிக் கொண்டிருந்தனர்.

    வானதி பூனேவிற்குப் படிக்கச் சென்று இரு வருடங்கள் ஆகிவிட்டிருந்தன.

    ஆனால் ஒவ்வொரு மாதமும் இளங்கோ தனித்தோ அல்லது குடும்பத்தினர் யாரேனும் ஒருவருடனோ அவளை வந்து பார்த்து தேவையானதை வாங்கிக் கொடுத்து நலம் விசாரித்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

    **************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-05

    Regards,
    Chillzee Team :-)
    12 Nov 2018 18:44 #10 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8398
  • Like received: 3021
  • சமுத்திர முத்து “போவே அடால்” என்று பிரஞ்சு மொழியில் உச்சரிக்கப்படும் Poivre atoll கரையை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தாள்.

    “அல்டாப்ரா அடாலுக்கு தானே போவதாக இருந்தது. இப்போது ஏன் போவே நோக்கி சென்று கொண்டிருக்கிறது” தனது திசைக் கருவியில் கண்டு பயணத்தின் மாறுதலைக் கணித்து தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்த ஆதி கேப்டன் செல்வாவைத் தேடிச் சென்றான்.

    “கேப்டன், அட்டவணையில் மாற்றமா. போவே செல்வது போல தெரிகிறதே” என்று பிரஞ்சு மொழியில் வினவினான்.

    “அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை ஆதி. போவேயில் சிபியின் விருந்தினர்கள் சிலர் சேர்ந்து கொள்வதாக இருக்கிறார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு நாம் முன்பு திட்டமிட்டபடியே பயணிப்போம்” என்று விவரம் கூறினார்.

    சிபியின் விருந்தினர்கள் எனவும் சரி தான் என்று தலையசைத்து விட்டு மேல் தளம் நோக்கிச் சென்றான்.

    முதல் நாள் இரவு நெடுநேரம் கதை கேட்டுக் கொண்டிருந்ததால் சிபி சாலமன் மிகத் தாமதமாகத் தான் எழுந்து வந்தான்.

    அவன் அங்கிருந்த உணவு விடுதிக்கு வந்த போது காலியாகவே இருந்தது.

    தனக்குத் தேவையானவற்றை தட்டில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

    ***********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-06

    Regards,
    Chillzee Team :-)
    26 Nov 2018 20:15 #11 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8398
  • Like received: 3021
  • நமது வாழ்வில் மிகப் பெரிய ஆசீர்வாதம் எது? திறமையா, நற்பெயரா, புகழா, பணமா, சமூகத்தில் அந்தஸ்தா. இவை அனைத்தையும் நாம் நமது முயற்சி தன்னம்பிக்கை இவற்றின் மூலம் சம்பாதித்துக் கொள்ளலாம். அதே சமயம் இவை அனைத்தும் நிலையானவையும் அல்ல. ஒரு நிமிடம் போதும் தலைகீழாக மாறிப் போக.

    ஆனால் நல்லதொரு குடும்பம் மிகப் பெரிய கொடுப்பினை. நமது பெற்றோரை, நமது உடன்பிறப்புகளை, சொந்தங்களை நாம் தேர்ந்தெடுக்க இயலாது.

    ஆணோ பெண்ணோ நல்லக் குடும்பச் சூழலே ஒருவர் முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பலன் எனலாம். வாழ்வின் எந்த ஒரு கடுமையான சூழ்நிலையையும் எதிர்கொள்ள ஆதாரமாக இருப்பது குடும்பம்.

    இன்றைய காலகட்டத்தில் உலகத்தில் வளர்ந்த நாடுகளில் குடும்பச் சூழல் சிதைந்து மனிதர்கள் அனைவரும் தனித்தனி தீவுகளாக வாழ்ந்து வரும் நிலை மெல்ல மெல்ல நமது நாட்டிலும் பரவி வருகின்றது.

    வாழ்க்கை எனும் மிகப் பெரிய சமுத்திரத்தில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் குடும்பம் கலங்கரை விளக்கமாக, நங்கூரமாக, துடுப்பாக அந்த அந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உறுதுணையாக இருந்து கரையை அடைய உதவியாக இருக்கின்றது,.

    ********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-07

    Regards,
    Chillzee Team :-)
    10 Dec 2018 19:59 #12 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8398
  • Like received: 3021
  • “சிகரமோ, பாலைவனமோ, அடர்ந்த காடுகளோ, உறைபனியால் மூடப்பட்ட, கடும் குளிர் வீசுகின்ற துருவங்களோ, மனிதனின் காலடி படாத இடம் என்று ஒன்று இல்லை எனலாம்.

    பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளியிலும் ஏன் சந்திரனிலும் மனிதன் தன் சுவடுகளைப் பதித்திருக்கிறான்.

    ஆனால் இந்த பூமியிலேயே மனிதன் தொட முடியவே முடியாத ஓர் இடம் என்றால் அது ஆழ்கடலின் ஆழம் தான்.

    உலகின் கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் உள்ளது. அந்த இடத்தின் பெயர் மரியானா அகழி (Mariana Trench). அந்த அகழியின் நடுவே தான் உலகிலேயே மிக ஆழமான பள்ளம் உள்ளது. அதன் பெயர் சேலஞ்சர் மடு (Challenger Deep), ஆழம் சரியாக 10,902 மீட்டர்.

    நிலத்தில் நம்மைச் சுற்றி காற்றழுத்த மண்டலம் இருக்கிறது. தரையிலிருந்து உயரே மலைமுகடுகளுக்குச் செல்லச் செல்ல காற்றழுத்தம் குறைகிறது.

    அதுவே கடலின் ஆழத்திற்குள் போகப் போக பன்மடங்கு அதிகரிக்கும்.

    பொதுவாக கடலின் ஆழம் நான்கு கிமீ வரை இருக்கும். அங்கே கிட்டத்தட்ட நானூறு படங்கு அதிக அழுத்தம் இருக்கும்.

    ********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...enmozhiyaal-madhu-08

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Coming Soon...

    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)

    Come join the FUN!

    Write @ Chillzee
    Go to top