Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart RaSu's Neeyirunthaal naaniruppen series discussion

17 Sep 2018 06:23 #1 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • Forum thread to discuss RaSu's "Neeyirunthaal naaniruppen" series

    Regards,
    Chillzee Team :-)
    17 Sep 2018 19:19 #2 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • மனதை மயக்கும் மாலை நேரம்.

    அந்தத் தெருவில் ஒரு வீடு மட்டும் மிகவும் பரபரப்பாய் இருந்தது.

    வீட்டு வாசலில் அரை வட்டமாய் சாணம் தெளித்துப் பெருக்கிய பச்சையும், கருமையும் ஒன்றாய் கலந்திருந்த மண் தரையில் பளிச்சென்ற அரிசி மாவுக்கோலம் பார்ப்பவர் கண்ணைப் பறித்தது.

    வீட்டுக்குள்ளிருந்து மெல்லிசை ஒலித்துக்கொண்டிருந்தது.

    பூஜையறையின் சாம்பிராணி, ஊதுபத்தி வாசத்துடன் போட்டியிட்டது சமையல் அறையில் இருந்து வந்த கலவையான மணம்.

    கொஞ்சம் வீட்டிற்குள் எட்டிப்பார்த்தால் தரையில் வண்ணங்கள் நிறைந்த சமுக்காளம் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது.

    சில நாற்காலிகள் வரிசையாய் அமர்வதற்கு வசதியாய் போடப்பட்டிருந்தன.

    கதவு பக்கத்திலேயே ஒரு மேசை போடப்பட்டு அழகான விரிப்பொன்றால் போர்த்தப்பட்டிருந்தது.

    *************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-01

    Regards,
    Chillzee Team :-)
    24 Sep 2018 19:04 #3 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • சிவரஞ்சனிக்கு உறக்கமே வரவில்லை.

    புரண்டு புரண்டு படுத்தாள்.

    அவளது செயல் மனோரஞ்சனிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

    எப்போதும் படுத்ததுமே உறங்கிவிடுபவள் சிவரஞ்சனி.

    அவளது அந்த செயலால் அதிகம் பாதிக்கப்பட்டவளும் அவள்தான்.

    உறங்கும்போது இருவரும் ஒரே அறையில் தான் படுப்பார்கள்.

    அப்போது இரவு நேரத்தில் ஏதாவது பேச ஆரம்பித்து வளவளத்துக்கொண்டேதான் தூங்க ஆரம்பிப்பர்.

    சிறிது நேரத்திற்கெல்லாம் தனது தமக்கை உறங்க ஆரம்பித்துவிட்டாள் என்று தெரிந்ததுமே அவள் மீது பயங்கர கோபம் வரும்.

    பேசிக்கொண்டிருக்கும்போதே எப்படி உறக்கம் வரும்?

    இன்று வரை அவளுக்கு இது புரியாத புதிர்.

    *********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-02

    Regards,
    Chillzee Team :-)
    01 Oct 2018 19:00 #4 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • “சீதா. மாப்பிள்ளை வீட்டில் இருந்து காரில் வருவாங்க. அதிலேயே வந்துடுங்க. அவங்க அதைத்தான் விரும்பறாங்க. நான் அப்படியே கடைக்கு வந்துடுறேன்.”

    “சரிங்க.”

    சந்திரசேகர் கூறியதும் உடனே மகள்களைக் கிளப்புவதற்கு ஆயத்தமானாள் சீதாலெட்சுமி.

    “சிவா, மனோ! சீக்கிரம் கிளம்புங்க. மாப்பிள்ளை வீட்டில் இருந்து வர்ற காரிலேயே ஏறி வரச்சொல்லி அப்பா சொல்லிட்டாங்க.”

    “சரிம்மா.”

    மனோரஞ்சனிதான் பதில் சொன்னாள்.

    சிவரஞ்சனியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவள் என்ன செய்வாளோ? என்று ஒவ்வொரு நிமிடமும் மனம் பதக் பதக் என்று இருக்கிறது.

    “அக்கா. அம்மா சொன்னது காதில் விழலையா? சீக்கிரம் கிளம்பு.”

    “ம். ம்.”

    ****************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-03

    Regards,
    Chillzee Team :-)
    08 Oct 2018 18:46 #5 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • “சிவா எங்கே?”

    கேட்டவாறே உள்ளே நுழைந்தார் சந்திரசேகர்.

    என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர் தாயும், மகளும்.

    நடந்ததெல்லாம் கனவா? நனவா? என்றே இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை.

    பிரச்சினைக்குரியவர்கள் இருவரும் அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.

    இவர்கள் இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்த வேளையில் சரியாக சந்திரசேகர் வந்துவிட்டார்.

    கணவர் பதிலுக்காக காத்திருக்கிறார் என்று புரிய வர தடுமாற்றமாய் கணவரைப் பார்த்தாள் சீதாலெட்சுமி.

    “தலையை வலிக்குதுன்னு அவ அறையில் போய் படுத்துட்டா.”

    “சரி. சரி. பிள்ளைக்கு தலைவலிக்கு இதமா குடிக்கிறதுக்கு ஏதாவது போட்டு கொடு.”

    என்று சொன்னதுடன் அறைக்குள் நுழைந்துவிட்டார்.

    *************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-04

    Regards,
    Chillzee Team :-)
    15 Oct 2018 19:46 #6 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8265
  • Like received: 2988
  • மணமக்கள் மேடையில் நின்றிருக்க அவர்களை வாழ்த்த வேண்டியவர்கள் வரிசையாக வந்த வண்ணம் இருந்தனர்.

    தன் அருகில் நின்றிருந்த கருப்பையாவை நிமிர்ந்து பார்த்தாள்.

    உயரமாய் கம்பீரமாய் இருந்த அவனருகில் தான் நிற்பதை இன்னும் அவளால் நம்பவே முடியவேயில்லை.

    மூன்று தினங்களுக்கு முன்பு இருந்த தனது மனநிலையை எண்ணி அவளுக்கு சிரிப்பு வந்தது.

    மாப்பிள்ளைக்குத் துணையாக நின்ற கௌதமைப் பார்த்தாள்.

    தன் முட்டாள்தனத்தை நினைத்து தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

    பாவம் அந்த கௌதம். அவனைப் போய் மாப்பிள்ளை என்று நினைத்து அதுவும் அவனுக்குத் தன் மீது பிரியமில்லை என்று நினைத்து பைத்தியக்காரத்தனமாய் கல்யாணத்தை நிறுத்தவேறு சொன்னேன்.

    ஆனால் எப்படி அது நடந்தது?

    பெண் பார்க்க வந்த அன்று மாப்பிள்ளை நடுவில் அமர்ந்திருப்பதாகத்தானே தங்கை சொன்னாள்.

    ***************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-05

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top