Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart RaSu's Neeyirunthaal naaniruppen series discussion

22 Oct 2018 21:55 #7 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • நன்றாக உறங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான் கருப்பையா.

    கொடுத்து வைத்தவள் என்று தோன்றியது.

    வாழ்க்கையைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் எப்படி இவளால் நிம்மதியாக உறங்க முடிகிறது?

    பெருமூச்சுடன் பார்த்தான்.

    அவளிடம் ஒரு குழந்தைத்தனம் இருந்தது. அவளது முகத்தைப் பார்க்கும்போது வளர்ந்த குழந்தையாகத்தான் தெரிந்தாள்.

    “ஏன் பேரையும் சிவத்தையான்னு வச்சுக்க வேண்டியதுதானே?”

    “அம்மா. தயவு செய்து இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க. எனக்கு கல்யாணமே வேண்டாம். நான் உங்க பொண்ணாவே இருந்துட்டுப்போறேன். நீங்க இந்தக் கல்யாணத்தை நிறுத்தலைன்னா நான் ஓடிப்போயிருவேன் இல்லை செத்துப் போயிருவேன்.

    அவள் அன்று தன் தாயிடம் பேசியது மனதிற்குள் ஒலித்தது.

    ‘அவளா சொன்னாள் இருக்காது அப்படி எதுவும் நடக்காது நடக்கவும் கூடாது நம்ப முடியவில்லை’

    ****************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-06

    Regards,
    Chillzee Team :-)
    29 Oct 2018 19:17 #8 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • சிவரஞ்சனி உறக்கத்திலிருந்து விழித்தாள்.

    அவளது அறையில் படுத்திருந்தாள்.

    கணவனைப் பிரிந்து அவள் வாடிப்போயிருப்பதை அறிந்த அவளது மாமியார் வடிவுதான் அவளைப் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தாள்.

    அவளே தனது சம்பந்திக்குப் போன் செய்து மருமகளை ஒரு இரண்டு நாட்கள் அழைத்துச் சென்று வைத்திருந்து அனுப்பி வைக்கச் சொன்னாள்.

    “அண்ணி. என்னதான் சிவா வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் உங்க மாப்பிள்ளையோட பிரிவை எண்ணி ரொம்ப வாடிப்போயிருக்கா. இந்த நேரத்தில் உங்க கூட இருந்தாள் என்றால் அவள் மனதுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். அவளை கொண்டு வந்து விடச் சொல்லவா?”

    “நாங்களே வந்து அழைச்சுக்கிறோம் அண்ணி.” என்று வடிவு சொல்லிவிட்டாள்.

    ***************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-07

    Regards,
    Chillzee Team :-)
    05 Nov 2018 18:46 #9 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • கருப்பையா தன் கோபத்தை அடக்கிக் கொண்டு நின்றிருந்தான்.

    கீழ் வீட்டுப் பெண்மணி அவளிடம் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதும் அதற்கு சிவரஞ்சனி சொன்னதும் காதில் கேட்டுத்தான் அவன் கோபத்தில் இருந்தான்.

    “நீங்க என் நல்லதை நினைத்துத்தான் சொல்லியிருக்கீங்க? ரொம்ப நன்றி.”

    என்ன தைரியம் இருந்தால் அப்படி சொல்லியிருப்பாள்?

    அப்படின்னா வீட்டில் யாரும் இல்லாதப்ப இவ இந்த வேலையைத்தான் செய்துக்கிட்டிருக்காளா?

    புறம் பேசுதல்.

    அவனுக்குப் பிடிக்காத ஒன்று.

    அவனது தாயாரைப் பார்த்து வளர்ந்ததனால் அது அவனது இயல்பாயிற்று.

    அவனுக்கு நினைவு தெரிந்தவரை அவனது தாயார் புறம் பேசமாட்டாள்.

    ************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-08

    Regards,
    Chillzee Team :-)
    12 Nov 2018 18:48 #10 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • சிவரஞ்சனிக்கு கண்களைத் திறக்கவே மிகவும் சிரமமாக இருந்தது.

    கண்கள் திறந்து பார்த்த போது முதலில் கலங்கலாகத் தெரிந்தது. கண்களைக் கசக்கிவிட்டுக்கொண்டு சுற்றிலும் பார்த்தாள்.

    அவர்கள் அறையில்தான் படுத்திருந்தாள்.

    பணத்தையும், செல்லையும் தொலைத்துவிட்டு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. எப்படி வீட்டிற்கு வந்தேன்.

    அவள் காத்துக்கொண்டிருக்கும்போதே மழைப் பெய்ய ஆரம்பித்துவிட்டது.

    காத்திருந்த ஒரு சிலரும் பேருந்து வந்துவிட சென்றுவிட்டதால் அவள் மட்டும் தனியே நின்றிருந்தாள். ஏற்கனவே இரவு நெருங்கிக்கொண்டிருந்த நேரம் மழையும் ஆரம்பித்துவிட்டதால் மிகவும் இருட்டாக இருந்தது.

    புது இடம். இருக்கும் இடத்தைக் கணவனிடமும் சொல்ல முடியாத நிலை.

    என்ன செய்வதென்று அவளால் யோசிக்கவே முடியவில்லை.

    அந்தப் பெண்மணிக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் தாமதமாக பேருந்து வந்திருந்தால் அவள் தன் கணவனின் எண்ணை தங்கையிடம் இருந்து வாங்கியிருப்பாள்.

    ****************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-09

    Regards,
    Chillzee Team :-)
    19 Nov 2018 18:46 #11 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • கருப்பையாவிற்கு அன்றைய தினம் நடந்தது நினைவுக்கு வந்தது.

    “மாமா. நான் மனோ பேசறேன்.”

    “சொல்லு மனோ.”

    “நீங்க எங்க இருக்கீங்க? அக்காவை எங்கயாவது கிளம்பி வரச்சொன்னீங்களா?”

    இதை ஏன் இவள் கேட்கிறாள்? அழைக்க வராமல் தன்னைத் தனியாக கிளம்பி வரச்சொன்னதால் ஒருவேளை அவளது அக்கா ஏதாவது குறையாக சொல்லியிருப்பாளோ?

    சொன்னாலும் சொல்லியிருப்பாள்.

    “ஆமா மனோ.”

    “அப்படின்னா நான் நினைச்சது சரிதான். மாமா அக்கா எங்கேயோ மாட்டிக்கிட்டான்னு நினைக்கிறேன். அவகிட்ட போன் இல்லையா? இல்லை சார்ஜ் இல்லாம அணைந்து போய்விட்டதான்னு தெரியலை? யாரோ ஒரு பொண்ணுக்கிட்ட போன் வாங்கி என்னோட நம்பருக்கு கால் பண்ணா.

    *********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-10

    Regards,
    Chillzee Team :-)
    26 Nov 2018 20:19 #12 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • கருப்பையா தன் அலுவலில் இருந்து வீட்டிற்குத் திரும்பினான்.

    வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு சிவரஞ்சனி கதவைத் திறந்தாள்.

    அவளைப் பார்த்தவன் அவளிடம் ஒரு கவரை நீட்டினான்.

    அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

    “மனோதான் அனுப்பியிருக்கா. உனக்கு ஏதோ எக்சாம் எழுதனுமாமே. அதற்கான விண்ணப்பமும், நீ படிப்பதற்கான புத்தகங்களையும் அனுப்பியிருக்கா.”

    அவள் சந்தோசமுடன் வாங்கிக்கொண்டாள்.

    அதன் பிறகு ஏதாவது சொல்வானா? என்ற எதிர்பார்ப்புடன் அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

    தனது வேலை முடிந்துவிட்டது என்று அவன் பாட்டிற்கு அறைக்குள் நுழைந்துகொண்டான்.

    அவள் முகம் சுருங்கியது.

    *************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...-naaniruppen-rasu-11

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top