Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Maha's Enathuyire series discussion

02 Nov 2018 06:10 #1 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8218
  • Like received: 2987
  • Forum thread to discuss Maha's Enathuyire series

    Regards,
    Chillzee Team :-)
    02 Nov 2018 06:46 #2 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8218
  • Like received: 2987
  • புத்தம் புது #தொடர்கதை - எனதுயிரே - 01 - மஹா

    திருச்சி பேருந்து நிறுத்தத்தில் வந்து அந்த பேருந்து நிற்கும் போது சரியாக நேரம் காலை 5.20. பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுனரும் நடத்துனரும் இறங்கி இன்றைய கலெக்ஷனை ஒப்படைக்க சென்றனர். பேருந்தில் இருந்த பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி கொண்டு இருந்தனர். அதே நேரம் அந்த பேருந்தில் அமர்ந்து இருந்த அன்பு அவன் தோளில் சோர்வுடன் சாய்ந்து உறங்கி கொண்டு இருந்த தமிழை காதலுடன் பார்த்து கொண்டு இருந்தான். மெல்ல அவளை அழைத்தான்,

    தமிழ்... தமிழ்...

    சிறு அசைவுடன் மெல்ல எழுந்தவள் அவனை பார்த்தாள்,

    “தமிழ் நாம எறங்குற இடம் வந்துடுச்சு வா”, என அழைத்தான்.

    சரி என்று தலை அசைத்தவள் அவன் பின்னே எழுந்து நடந்து சென்றாள்.

    பேருந்தில் இருந்து இறங்கியவன் எங்கு செல்வது என்று தெரியாமல் அவளின் கையை பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

    அவனின் ஸ்பரிசம், அருகாமை அவளுக்கு பெரும் தைரியத்தையும் மன நிம்மதியையும் அளித்தது.

    **********************************

    இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...thai-enathuyire-maha

    Regards,
    Chillzee Team :-)
    16 Nov 2018 05:12 #3 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8218
  • Like received: 2987
  • கையில் இருக்கும் பணத்தை வைத்து ஒரு நல்ல வீடை வாடகைக்கு பாக்கலாம் என்றும் சீக்கிரமே அன்பு அங்கேயே ஒரு வேலை தேடவும் இருவரும் முடிவு எடுத்து கோவிலில் இருந்து வெளியே வந்து ஊருக்குள் நடக்க ஆரம்பித்தனர்.

    சிறிது தூரம் நடந்த பிறகு, ஒரு வீட்டின் முன் போட பட்டிருந்த 'வீடு வாடகைக்கு விடப்படும்' என்ற பலகையை பார்த்தவர்கள் அந்த வீட்டின் முன் நின்று கதவை தட்டினர்.

    வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த ஈஸ்வரி,

    "யாரு நீங்க? என்ன வேணும்?, என்றார் கணீர் குரலில்.

    "அது... வீடு வாடகைக்கு இருக்குனு போர்டு பாத்தோம், அதான்...", அன்பு.

    இருவரையும் ஒரு முறை பார்த்த ஈஸ்வரி, தமிழின் கழுத்தில் இருந்த புது தாலியையும் அழுது வடிந்த முகத்தையும் பார்த்தவர், " வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா?", என்றார்.

    "ம்...", அன்பு.

    *******************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...i-enathuyire-maha-02

    Regards,
    Chillzee Team :-)
    30 Nov 2018 07:21 #4 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8218
  • Like received: 2987
  • இருவரும் தங்களை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்த நேரம், அன்புவின் கைபேசி அலற இருவரும் நடப்புக்கு வந்தனர். தமிழை விட்டு விலகியவன் தன் கைபேசியை நோக்கி நகர்ந்தான். அவன் தூரம் சென்ற பின்பும் அவளின் இதயம் வேகமாக துடிப்பதை நிறுத்தவில்லை. சற்று முன் நடந்ததையே மனதில் திரும்ப ஓட்டி பார்த்து கொண்டிருந்தாள். வெட்கத்தில் அவள் முகம் சிவந்து கொண்டிருந்த நேரம்,

    தமிழ்...

    அவனின் அழைப்பில் நடப்புக்கு வந்தவள் அவனை நோக்கி நடந்தாள்.

    "என்ன மாமா..."

    "நா குளிச்சிட்டு வந்துடறேன் நீ ரெடியா இரு", என்று கூறி விட்டு குளியலறைக்கு சென்றான்.

    அவன் குளித்து முடித்து வருவதற்குள் தமிழ் வீட்டை சுத்தம் செய்தாள்.

    சற்று நேரத்தில் இருவரும் கிளம்பி கீழே சென்றனர்.

    **********************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...i-enathuyire-maha-03

    Regards,
    Chillzee Team :-)
    14 Dec 2018 10:30 #5 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8218
  • Like received: 2987
  • விடியற்காலை கண்விழித்து பார்த்த போது அன்புவின் மார்பில் முகம் புதைத்து உறங்கி கொண்டிருந்தாள். அவளின் அன்பு மாமாவின் மனைவியாக அவனோடு உறங்கி இருக்கிறாள் அதுவும் அவனின் அணைப்பில். எதோ காற்றில் பறப்பது போல் இருந்தது அவளுக்கு. மெல்ல அவனின் கன்னத்தில் தன் இதழ் பதித்தவள் அவனது அணைப்பில் இருந்து வெளி வர மனமில்லை என்றாலும் ஒருவாறு தன்னை சமாதானம் செய்து கொண்டு எழ எத்தனித்த போது தான் அதை கவனித்தாள். அன்பு அவளின் கழுத்தில் இருக்கும் தாலியை ஒரு கையால் பிடித்து கொண்டே உறங்கி கொண்டு இருந்தான். "அஞ்சு வயசு வர அன்பு என் கழுத்துல இருக்க செயினை பிடிச்சி கிட்டு தான் தூங்குவான்" என்று தன் அத்தை எப்போதோ கூறியது நியாபகம் வந்தது அவளுக்கு.

    சற்று நேரம் அப்படியே அவனது மார்பில் படுத்துக்கொண்டு அவனையே காதலுடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

    முன்பு ஒரு நாள், தன் அன்னை படத்திற்கு முன் தமிழின் கையை பிடித்து கொண்டு, "என் அம்மாவுக்கு அப்புறம் நா நேசிக்குற ஒரே பொண்ணு நீ தான். நீ மட்டும் தான். என் அம்மா இறந்ததுக்கு அப்புறம் என் வாழ்க்கையே மாறிடுச்சு, நீ மட்டும் அந்த நேரத்துல எனக்கு தொணையா இல்லாம இருந்து இருந்தா என் ஒடம்புல உயிர் இருந்து இருக்காது.

    ************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...i-enathuyire-maha-04

    Regards,
    Chillzee Team :-)
    28 Dec 2018 06:04 #6 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8218
  • Like received: 2987
  • #தொடர்கதை - எனதுயிரே - 05 - மஹா

    அவளின் கையில் மருதாணி வைத்து முடித்தவன் அவளுக்கு மதிய உணவை ஊட்டி விட்டு கொண்டிருந்தான். அவனை காதலுடன் பார்த்து கொண்டிருந்தவள் ,

    "ஏன் மாமா, இத்தன நாள் இந்த காதல எங்க ஒளிச்சு வச்சிருந்த?", என்றாள்.

    "ஏன் டி இப்டி கேக்குற?"

    "இல்ல... நீ எப்பவுமே உன் காதல வெளிய காட்டுனதே இல்லையே அதான் கேட்டேன்"

    **********************

    படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...i-enathuyire-maha-05

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top