Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020                                                               ***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Sasirekha's "En vazhvu unnodui thaan" series discussion

05 Nov 2018 04:46 #1 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8326
 • Like received: 3007
 • Forum thread to discuss Sasirekha's "En vazhvu unnodu thaan" series.

  Regards,
  Chillzee Team :-)
  05 Nov 2018 05:27 #2 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8326
 • Like received: 3007
 • கொடைக்கானல்

  ”யாமினி எழுடி” என அவளது தோழி காவேரி எழுப்ப தூக்க கலக்கத்தில் எழுந்தவள்

  ”என்னடி” என கேட்க

  ”என்னவா எழும்மா கொடைக்கானல் வந்துடுச்சி”

  ”ஓ அப்படியா” என கண்கள் திறந்தவள் பஸ்ஸின் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் வந்தாள்.

  கொடைக்கானலின் மொத்த அழகும் அவள் கண்களில் நிறைந்து அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. அதை எல்லாம் பார்த்தவள் மெதுவாக பஸ்ஸிற்குள் பார்த்தாள்.

  அவளின் கம்பெனியில் வேலை செய்பவர்கள் இந்த மே மாத டூர் அரேன்ஜ் செய்திருந்தார்கள். காவேரியின் வற்புறுத்தலால் யாமினியும் அந்த டூருக்கு வந்தாள். சென்னையிலிருந்து நேற்று நைட் கிளம்பி நேராக கொடைக்கானலுக்கு வந்தாகிவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கும் இடம் வந்துவிடும், சொகுசு பஸ் காரணமாக இருக்கையும் வசதியாக இருந்தது. பஸ்ஸிற்குள் வீடியோவும் இருக்கவே அதில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது.

  *************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-20

  Regards,
  Chillzee Team :-)
  12 Nov 2018 08:28 #3 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8326
 • Like received: 3007
 • கொடைக்கானல்

  விடிந்தது

  படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென விழிப்பு வர கண்களை மெல்ல விழித்து சுற்றிலும் பார்த்து கொட்டாவி விட்டபடியே எழுந்து அமர்ந்தாள் யாமினி.

  சோம்பல் முறித்துவிட்டு தன் மீதிருந்த போர்வையை விலக்கியவள் கலைந்திருந்த தனது உடைகளை கண்டு திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்தாள் யாரும் இல்லாமல் போகவே அவசரமாக உடைகளை சரிசெய்தவளுக்கு தனது கழுத்தை ஏதோ ஒன்று உறுத்துவதாக தோன்ற என்ன ஏது என தடவி பார்க்க அங்கு தாலி இருக்கவே அவளது மூளையில் ஒரு மின்சார தாக்குதல் உருவானது. சட்டென நேற்று இரவு நடந்த விசயங்களை கண் இமைக்கும் நேரத்தில் நினைத்துப்பார்த்து திகைத்தாள்

  ”நேத்ரனுக்கு பயந்து இங்க வந்து ஆதிகூட ஒரு நாள் நைட் தங்கியிருக்கோம் எப்படி நமக்கு இவ்ளோ தைரியம் வந்துச்சி. நேத்ரன் கிட்ட மறுபடியும் மாட்டிக்க கூடாதுங்கற ஜாக்கிரதையா இல்லை ஆதி மேல இருந்த நம்பிக்கையா ஆனாலும், ஆதி நம்மகிட்ட எதுவும் தப்பா நடந்துக்கலையே

  *****************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-02

  Regards,
  Chillzee Team :-)
  19 Nov 2018 05:06 #4 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8326
 • Like received: 3007
 • யாமினியும் பஸ் மூலம் கொடைக்கானல் விட்டு இறங்கி மதுரை வந்தவள் அங்கிருந்து பிளைட் மூலம் சென்னைக்கு திரும்பி தன் வீட்டிற்குச் சென்றாள்.

  பயத்துடனும் குழப்பத்துடனும் வீட்டிற்குள் சென்றவள் ஹாலில் அவளுடைய தந்தை சோமசுந்தரம் இருக்கவே அவரிடம்

  ”அப்பா” என மெதுவாக அழைத்தாள்.

  அவளைப்பார்த்த அவரும் சிரித்துக்கொண்டே

  ”என்னம்மா டூர் நல்லபடியா முடிஞ்சிடுச்சா” என கேட்க அவளும் ஆம் என மெதுவாக தலையாட்டினாள்.

  ”சரி சரி போம்மா போய் ரெஸ்ட் எடு அம்மா வீட்ல இல்லை அவளோட அம்மா வீட்டுக்கு போயிருக்கா”

  ”அப்பா நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்” என அவள் தயங்கி தயங்கி சொல்ல

  ”ம் தெரியும்மா உன் ப்ரெண்ட் காவேரி சொன்னா உன்கூட வேலை செய்றவனே உன்னை தொல்லை செஞ்சான்னு அதான் நானும் உன் கம்பெனிக்கு ஃபோன் செஞ்சி இனிமே நீ வரமாட்டேன்னு சொல்லிட்டேன். வேணாம்மா நீ ஏன் இப்படி வேலைக்கு போய் கஷ்டப்படனும் நம்ம கம்பெனியிருக்கு அங்க போ வேலைக்கு”

  ****************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-03

  Regards,
  Chillzee Team :-)
  26 Nov 2018 06:15 #5 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8326
 • Like received: 3007
 • விடிந்தது

  சென்னையிலிருந்து தன்னுடைய ஆடி காரில் கடலூர் நோக்கி யாமினி பயணப்பட்டாள். அதிகாலையிலேயே எழுந்து சென்றதால் பகல் முழுவதும் வெயிலில் காரை ஓட்டியவள் ஒருவழியாக கடலூர் அடைந்து வழியெங்கும் ஆதியின் முகவரியை விசாரித்துக் கொண்டே அந்த வீட்டை அடைந்தாள்.

  ஆடி காருடன் அந்த வீட்டின் முன்கேட்டில் நிறுத்தியவள் காருக்குள்ளேயிருந்து அந்த வலிமையான இரும்பு கேட் திறந்திருப்பதைக் கண்டு சுற்றும் முற்றும் பார்த்தவள் யாரும் தன்னை வரவேற்கவில்லை அதோடு தன்னை தடுக்கவும் இல்லை என தெரிந்ததும் உள்புறமாக ஆடி காரை கொண்டு சென்று நிறுத்தியவள் மெதுவாக காரை விட்டு இறங்கி நின்று அந்த வீட்டை சுற்றிப் பார்த்தாள்.

  கேட்டிலிருந்து அந்த வீட்டின் போர்டிகோவிற்கு காரை ஓட்டிச் செல்லவே சுமார் 2 நிமிடங்கள் பிடித்தது. அந்த அளவிற்கு அந்த பாதையானது நீண்டிருந்தது. அந்த காரோடும் பாதையின் முன்புறம் மதிற்சுவர் சுமார் 10 அடி உயரத்திற்கு இருந்தது அதை ஒட்டினாற்போல பல மரங்களும் இருந்தது. ஒருபுறம் ஒரு மனை அளவிற்கு காலியான இடம் இருந்தது. அந்த காலியான இடத்தில் மணம் வீசும் பூச்செடிகள் தொட்டிகளில் வைத்திருந்தனர்.

  ******************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-04

  Regards,
  Chillzee Team :-)
  03 Dec 2018 06:03 #6 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8326
 • Like received: 3007
 • இரும்பு பீரோ இருக்கும் அறையின் பூட்டை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்த ஆதியின் பாட்டியும் யாமினியும் அங்கு அறைக்குள் எதிரே நின்று கொண்டிருந்த ஆதித்யவர்மனை கண்டு திகைத்தனர். சில நொடிகள் யாரும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு தன்னிலை பெற்றவர்களில் முதலில் யாமினிதான் ஆதியிடம் பேசினாள்

  ”ஆதி எப்படி இந்த ரூம்க்குள்ள வந்தீங்க” என வியப்பாக கேட்க அவன் திரும்பி ஜன்னலை கைகாட்டினான்.

  அவளும் பாட்டியும் சென்று ஜன்னலைப் பார்த்தனர். அவளது அறையில் இருப்பதைப் போன்றே அங்கும் மரப்பலகைகளான ஜன்னல் இருக்கவே யாமினி புரிந்துக் கொண்டாள். ஒன்றும் புரியாமல் குழம்பியபடியிருந்த பாட்டிக்கு யாமினி விளக்கம் அளித்தாள்

  ”பாட்டி என் ரூம்ல கூட இப்படிதான் இருந்திச்சி ஆமா இப்படியா ஜன்னல்கள் வைப்பீங்க இது வழியா ஈசியா திருடன் வந்து போயிருக்கலாம் பாட்டி பாவம் ஆதி மேல பழி விழுந்திடுச்சி” என்றாள் கோபமாக யாமினி

  ”இந்த மரப்பலகைகளை எப்படி சுளுவா எடுக்க முடியும் என் ரூம்ல எடுக்க முடியாமதானே இருந்திச்சி ஆணியால பலகைகளை அடிச்சில்ல வைச்சிருப்பாங்க இது என்ன புதுசா இருக்கு” என பாட்டி அதிர்ச்சியாகச் சொல்ல அதற்கு யாமினியோ

  **********************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-05

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Come join the FUN!

  Write @ Chillzee
  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)
  Go to top