Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Sanyogitha's "Varnam theettiya kathal sirpame" series

13 May 2019 08:30 #19 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8263
  • Like received: 2988
  • உலகில் ஏறக்குறைய அனைத்து காதலர்களின் உயிரை அவ்வப்போது பருகிக் கொண்டிருக்கும் உன்னத நோயான பசலை நோய் சிபியையும் விட்டு வைக்கவில்லை. பல ஆண்டுகளாக பார்த்துப் பழகிய நண்பர்களைப் பிரிந்தபோதோ அல்லது வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டுப் பிரிந்தபோதோ கூட இப்படியொரு வேதனயை அனுபவித்ததாகத் தெரியவில்லை சிபிக்கு. தன்னவனைக் காணாமல் கிட்டத்தட்ட நாற்பத்து எட்டு மணி நேரங்களே ஆகியிருந்தபோதும் பல ஜென்மங்களாக அவனுடைய திருமுகத்தைக் காணாதது போல உணர்ந்தாள் அவள்.

    ஆனால் தலைக்கு மேலே குவிந்திருந்த வேலைகள் இப்படிப்பட்ட உணர்வை கர்ணாவால் உணர இடங்கொடுக்காத அளவுக்கு அவனுடைய

    ********************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-19

    Regards,
    Chillzee Team :-)
    20 May 2019 01:22 #20 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8263
  • Like received: 2988
  • சில நேரங்களில் நேசிக்கும் மனிதர்களின் வார்த்தைக் குதறல்களைவிட அவர்களின் மெளனம் மிகவும் பாதிக்கக்கூடியதாக அமைந்து விடுகிறது. கர்ணாவின் அமைதி சிபியையும் அப்படித்தான் வருத்திக்கொண்டு இருந்தது.

    கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து சிபியின் அலைபேசி குரலெழுப்ப மரணவாயிலை எட்டிப்பார்த்த அவள் உயிர் மீண்டு அவளிடம் தஞ்சமடைந்தது.

    “கர்ணா…..” பல வருடங்கள் கழித்து நிகழும் சந்திப்புப்போல அவள் குரலில் அத்தனை ஏக்கம்.

    **********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-20

    Regards,
    Chillzee Team :-)
    26 May 2019 21:59 #21 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8263
  • Like received: 2988
  • சிபியின் மனவோட்டத்தைப் படிக்கும் அளவுக்கு கர்ணாவின் மனதும் தெளிவான நிலையில் இல்லை. எதோ ஒரு யோசனையினூடே முன் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச்செல்ல எத்தனித்தவன் எதேச்சையாக இவள் புறம்பார்க்க முற்றிலும் தன் கவனம் சிதறினான். அடுத்த நொடி அங்கு மாபெரும் இரைச்சல்..!

    அடுத்த சில நிமிடங்களில் அருகில் நெருங்க இயலாத அளவுக்கு நொடியில் மக்கள் கூட்டம் கூடிவிட்டது.

    அங்கே… முன்னே சென்று கொண்டிருந்த வாகனம் இடதுபுறத்தில் ஆளளவு இருந்த சரிவான பள்ளத்தில் பாதி இறங்கி நின்றது. கர்ணாவின்

    ********

    Don't miss it!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-21

    Regards,
    Chillzee Team :-)
    03 Jun 2019 08:01 #22 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8263
  • Like received: 2988
  • எத்தனையோ உணர்வுகள் உள்ளத்தில் ஆழப்பொதிந்து கிடந்தாலும் அதனை எவ்வித பாதிப்புமின்றி வெளிக்கொணர ஒரு சில உறவுகளால் மட்டுமே சாத்தியப்படுகிறது. உன்னதங்களும் உயரிய செயல்களும் அன்பினால் மட்டுமே அலங்கரிக்கப்படுகிறது. அன்பு பரிமாறப்படும்போதும் வெளிப்படுத்தப்படும்போதும் மட்டுமே அதன் அற்புதங்கள் ஆகாயம் தாண்டிய கோட்டைகளைக் கட்டும். மறைத்து வைத்த பொருள் மக்களுக்கு உதவுமோ..? மறைத்து வைத்த அன்பும் மண் மூடிய வைரமாகாதோ..? எத்தனையோ அற்புதங்களைப் படைத்த இறைவன், ஒரு சிலவற்றை படைக்க மறந்ததை தவறென்று அவனுக்கு உணர்த்துவதெப்படி..? துரத்திச்செல்லும் அருவி, சிறகுவிரித்துப்

    *****

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-22

    Regards,
    Chillzee Team :-)
    02 Aug 2019 01:47 #23 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8263
  • Like received: 2988
  • இருவரின் விழிகள் மட்டும் சங்கமித்து நின்றன சில நிமிடங்கள் வரை. ஓய்வின்றி உழைத்த விழிகள் தற்போது ஓய்வெடுத்துக்கொண்டன. சில நிமிடங்கள் அமைதியில் கரைய கர்ணா இமைகளைத் தாழ்த்திக்கொண்டான். இவள் பேச எத்தனிக்க, அவன் அதை மறுக்கும் விதமாக வேறு திசையில் முகத்தைத் திருப்பிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். கர்ணாவின் மனதில் என்ன ஓடியதென சிபியால் யூகிக்க இயலவில்லை. அவனிடம் பேச வார்த்தைகள் உள்ளுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்க, அவன் மொழி கூற மறுக்க மேலும் தொந்தரவு செய்ய மனமின்றி சாந்தியின் உதவியுடன் தன் அறையை வந்தடைந்தாள்.

    இதற்கிடையில் சிபியின் தாய்க்கும் தந்தைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. பதறியடித்துக்கொண்டு அவர்கள் வந்திருக்க, சிபிக்கு

    ***********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-23

    Regards,
    Chillzee Team :-)
    15 Aug 2019 07:54 #24 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8263
  • Like received: 2988
  • வரவேற்பறையில் நிசப்தம் குடிகொண்டிருக்க சற்றே நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் வரையறுக்க இயலாத வியப்பில் ஆழ்ந்தது. சூரியனைக் கண்ட தாமரையாக சோகத்தில் இருண்டிருந்த அவள் முகம் புன்னகைக்கதிர்களில் மலர்ந்து போனது. ஒரு வினாடிக்குள் அவள் முகத்தின் பிரகாசம் கண்டு எதிரே குறும்பு புன்னகையுடன் அவளின் விழிகளை எதிர்கொண்டவன் சாட்சாத் கர்ணாவே தான்.

    என்னவோ அவனுடைய அந்தப்புன்னகை இந்த நேரத்தில் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காமல் கோபத்தைக் கிளப்பி விட்டது. இருக்காதா பின்னே..? இதுவரை இதயம் எவ்வளவு துடியாய் துடித்தது என்பதை அவள் மட்டுமே அறிவாள். வெள்ளத்தில் சிக்கிய சிறு

    *********

    Don't miss it!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-24

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top