Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

× Site Updates

check Chillzee KiMo - the connecting link...!

08 May 2020 01:43 #121 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007

 • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?

   

  கல்லறையில் ஒர் கருவறை - சுபஸ்ரீ முரளி : Kallaraiyil oru karuvarai - Subhashree Murali நாவல் இப்போது Chillzee KiMoவில்!

   

  ₹ 50/- செலுத்தி இந்தக் நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!

   

   

   

  நாவலைப் பற்றி:

   

  கருவறை முதல் கல்லறை வரை இன்று அறிவியல் தன் அசுர கைகளால் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி ஆள்கிறது.

   

  அழகான உணர்வுபூர்வமான காதல் இதில் அடங்குமா?

   

  காதலர்களிடையே அறிவியல் குறுக்கிட்டால் எப்படி இருக்கும்?

   

  இந்த கதையில் வரும் காதலர்களின் காதல் அறிவியல் வளர்ச்சியில் சிக்கி சீரழியுமா? இல்லை சிங்காரமாய் மீண்டெழுமா?

   

  அறிவியல் வரமா? சாபமா?

   

  இவர்களோடு பயணிக்க வாருங்கள் . .

   

  கல்லறையில் ஓர் கருவறை  

  www.kimo.chillzee.in/chillzee-kimo-books...ai-subhashree-murali

  Regards,
  Chillzee Team :-)
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  14 May 2020 01:26 #122 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007

 • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?

   

  "தாழம்பூவே வாசம் வீசு!!! - பத்மினி செல்வராஜ் : ThazhamPoove Vaasam Veesu - Padmini Selvaraj" நாவல் இப்போது Chillzee KiMoவில்!

   

  ₹ 50/- செலுத்தி இந்தக் நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!

   

  நாவலைப் பற்றி:

  நாயகன் பார்த்திபன்.  கிராமத்தை சேர்ந்தவன்..வாழ்வில் எந்த பிடிப்பும் பொறுப்பும்  இல்லாமல் கடனே என்று வாழ்ந்து வருபவன்..அவன் வாழ்வில் நுழைகிறாள் ஒரு தேவதை..

   

  அந்த தேவதை,  பாலைவனமாக இருக்கும் அவன் வாழ்வை வசந்தமாக்க போகிறாளா? இல்லை இன்னும் மோசமான நிலைக்கு இழுத்து செல்ல போகிறாளா என்று  பார்க்கலாம்...   

   

  இதுவும் ஒரு மனதுக்கு இனிமையான காதல் கதைதான்.. இந்த கதையையும் படித்து தவறாமல்  உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!!

    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...esu-padmini-selvaraj

  Regards,
  Chillzee Team :-)
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  16 May 2020 01:54 #123 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007

 • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?

   

  மாயக்கோட்டை - மின்னல் - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Maayakkottai - Minnal - Srija Venkatesh" நாவல் இப்போது Chillzee KiMoவில்!

   

  ₹ 50/- செலுத்தி இந்தக் நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!

   

  நாவலைப் பற்றி:

  மலைகளிலேயே மிகவும் பழமை வாய்ந்த மலையான பொதிகை மலைப்பகுதிகளே இந்த மாயக்கோட்டை - மின்னல் என்ற இந்த நாவலின் கதைக் களம்.  பொதிகை மலையின் உச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காணிகள் என்னும் பழங்குடியினரை இப்போதும் நீங்கள் காணலாம். அவர்களது வாழ்க்கை, உணவுப்பழக்கம், கல்வி இவைகளை நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறேன். இதைக் கதை என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. காரணம் காணிகள் என்னும் நேர்மையான மக்கள் தமிழக வரலாற்றில் இடம் பெற்றிருந்தும் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. இந்த நாவல் அவர்களது வாழ்க்கையைச் சொல்லும் காவியம். இயற்கையையே கடவுளாக வணங்கும் ஆதித்தமிழனின் நீட்சியாக இவர்கள் விளங்குகிறார்கள். தூய தமிழ்க் சொற்கள் பல இவர்களது பேச்சு வழக்கில் உள்ளது. காடும் அது தரும் கனிகளும் காய்களுமே அறிந்த இவர்களுக்கு தங்கம் தெரியாது என்பது தான் வியப்பு. 

   

   நாங்கள் குடும்பத்தோடு பொதிகை மலையின் மேல் கொலுவீற்றிருக்கும் சொரிமுத்தையனார் கோயிலுக்கு சென்றிருந்த போது அங்கிருந்த சங்கிலி கருப்பனும், பிரம்ம ராட்சசி அம்மனும் என்னை ஊக்குவித்து ஆசி வழங்கினார்கள். இந்தக் கதை என்னை ஒரு கருவியாகக் கொண்டு தன்னைத்தானே எழுதிக்கொண்டது என்றால் மிகையாகாது. இந்தக் கதையில் உலவும் மின்னல், மகிழி மற்றும் இதர பாத்திரங்கள் காற்றின் மூலம் என் மனதில் கதை சொன்னார்கள். காற்றில் இருந்த அந்த அதிர்வுகளை என்னால் உணர முடிந்தது.

   

  நிச்சயம் இது ஒரு புனைகதை தான். ஆனால் ஏன் இப்படியும் நடக்கக் கூடாதா? என உங்களை ஏங்க வைக்கும் நிச்சயம். நடந்திருக்க வாய்ய்ப்பு இல்லாமல் இல்லை என்று சிந்திக்கவும் வைக்கும். 

   

  நம் தமிழகத்தைப் பொறுத்தவரை காடுகள், நதிகள் என இயற்கை அன்னை தன் கருணையை நம்மீது  பொழிந்திருக்கிறாள் . ஆனால் நாம் அவற்றைக் காப்பாற்றுகிறோமா? என்றால் இல்லை என்ற பதில் தான் முகத்தில் அடிக்கிறது. காடுகள் இருந்தால் மட்டுமே நாடு நலமாக இருக்கும் என்பதை இன்றைய சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் நம்மிடம் சொல்கின்றனர். ஆனால் இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்து காடுகளைக் காப்பாற்ற என்றே சிலரை நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள். அவர்கள் தான் காவல் தெய்வங்களாக வனப்பேச்சியாக, சங்கிலி கருப்பனாக ஐயனாராக அருள் பாலிக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் நாமோ அவர்களது வழிபாடு என்ற போர்வையில் கடுமையான ஒலி மாசினை உருவாக்குவதோடு குப்பைகளையும் போட்டு வருகிறோம்.படித்த நாம் நம் குழந்தைகளுக்கு காடுகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் அதனைப் பாதுக்கப்பது பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அது தான் நாம் நம் நாட்டுக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து. 

   

  இந்த நாவலில் இன்றைய இளைஞர்கள் மூவர் சேர்ந்து காட்டினை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறேன். அவர்களோடு மாயக்கோட்டை என்பது என்ன? மின்னல் யார்? மகிழி யார்? மீகாமர்கள் என்றால் என்ன? என்று பலவிதமான கேள்விகளுக்கான பதிலாக அமையும் இந்த நாவல். மனித சக்தியோடு தெய்வ சக்தியும் இணையும் போது எப்படிப்பட்ட அற்புதங்கள் நடக்கும்? மனித சக்தி விரும்பி அழைத்தால்  தெய்வம் நிச்சயம் நம்மைக் காக்கும். இவைகள் தான் நமது வாழ்க்கையின் அடிப்படை நம்பிக்கைகள். ஆனால் தெய்வ சக்திக்கே சவாலாக விளங்கும் தீய சக்திகளும் உண்டு. அவைகளும் மனிதர்கள் என்ற போர்வையிலே தான் நடமாடும். நாட்டின் நலனுக்கும் நமது குடும்பங்களின் நலனுக்காகவும் இந்த தீய சக்திகளை வேரறுப்பது மிகவும் முக்கியம். 

   

  தீய சக்திகள் மிகப்பெரிய சக்திகளாக எதையும் செய்ய முடிந்த துணிந்த சக்திகளாக தன்னை காட்டிக்கொள்ளும். ஆனால் உண்மை என்பதும் தெய்வ சக்தி என்பதும் எளிமையாக அமைதியாக இருக்கும். தீய சக்திகளின் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்துக்கொண்டு அவற்றின் நேரம் முடியும் போது மிக அழகாக அவற்றை அழித்துக் காட்டுவதே தெய்வீகம். அப்படிப்பட்ட தெய்வீகம் தான் இந்த நாவலிலும் இடம் பெற்றுள்ளது. இது நிச்சயம் ஆன்மீக நாவல் அல்ல. ஆனால் நம் வாழ்க்கையில் கடவுட் தன்மை எப்படிப் பின்னிப்பிணைந்து இருக்கிறதோ ஏதே போல இந்த நாவலிலும் கடவுட் தன்மை பின்னிப்பிணைந்துள்ளது. கதை மாந்தர்கள் யாரும் மிகுந்த சக்தி வாய்ந்தவர்கள் அல்ல. ஆனால் மன உறுதியும், ஊக்கமும் உள்ளவர்கள். இந்த நாவலைப் படித்து முடித்ததும் நாமும் ஒரு முறை பொதிகை மலையைச் சென்று பார்க்க வேண்டும், அங்குள்ள கணிகளோடு பேச வேண்டும் சொரிமுத்தையனாரின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டும் என்ற ஆவல் நிச்சயம் எல்லோரிடமும் தோன்றும். அப்படித்தோன்றினால் அதுவே இந்த நாவலின் வெற்றி. 

    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...nnal-srija-venkatesh

  Regards,
  Chillzee Team :-)
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  18 May 2020 02:39 #124 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007

 • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?

   

  "யார் அறிவார்! - ரவை : Yaar arivaar - RaVai" நாவல் இப்போது Chillzee KiMoவில்!

   

  ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்! 

   

  நாவலைப் பற்றி:

  இது ஒரு சமூக நாவல்! பல்வேறு தரப்பட்ட மக்களின் குணாதிசயங்களை

   

  படம் பிடித்துக் காட்டவும், கோபதாபங்கள் எப்படி மனிதனை சீர்குலைய வைக்கின்றன என்பதை சொல்லவும், அடுத்த வினாடி என்ன நடக்கப்போகிறதென தெரியாத நிலையற்ற வாழ்வை சுட்டிக் காட்டவும் இந்த நாவலை படைத்துள்ளேன்.

   

  நிகழ்காலத்தில் வாழவேண்டும், சாதி, மத பேதங்களை தவிர்க்கவேண்டும், செல்வம் சேர்ப்பதே வாழ்க்கையல்ல என்பதை உணரவேண்டும், நல்லது, கெட்டது மாறிமாறி வரும், கெட்டவனாக எந்த மனிதனும் பிறப்பதில்லை, போன்ற கருத்துக்களை ஆங்காங்கே தூவியிருக்கிறேன்.

   

  பல்சுவை தர முயற்சித்திருக்கிறேன்.

   

  வாசகர்களுக்கு மிகவும் நிறைவான உணர்வைத் தரும் என நம்புகிறேன்.

   

  என்னை இந்த, முதுமைப் பருவத்தில், சில்சீ-கிமோ வாசகர்கள் மதுமதி, ஜெபமலர், வினோதயன், அதர்வா ஜோ போன்றவர்கள் ஊக்குவித்து எழுதவைத்தவர்கள்! அவர்கள் அனைவருக்கும் என் நன்றி!

  www.kimo.chillzee.in/chillzee-kimo-books...8-yaar-arivaar-ravai

  Regards,
  Chillzee Team :-)
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  20 May 2020 01:57 #125 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007

 • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?

   

  காற்றின் கனல் - E.தமிழ் மதி : Katrin kanal - E.Tamil Mathi நாவல் இப்போது Chillzee KiMoவில்!

   

  ₹ 50/- செலுத்தி இந்த் நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!

   

  நாவலைப் பற்றி:

  இவ்வுலகில் படைக்கப்பட்ட அற்புதமான படைப்பு என்பது ஒரு உயிரினமோ அல்லது ஒரு தாவரமோ அல்லது ஒரு இயற்கை காட்சியோ அல்ல.இவ்வுலகில் படைக்கப்பட்ட அற்புதமான மற்றும் விசித்திரமான படைப்பு மனிதனின் வாழ்வுதான்.வாழ்வு இது தான் உங்கள் வாழ்வில் விசித்திரம் எது ..?இயல்பு எது..? தத்துவம் எது ..?அழகு எது ..? அவலம் எது..? உண்மை எது..? பொய் எது..? என பல்வேறு உணர்வுகளுக்கும் விடையளிக்கிறது.நாம் வாழும் வாழ்க்கை பிரபஞ்சம் போன்று கணிக்க முடியாத ஒன்றே.எல்லோர் வாழ்வும் தட்டையாக இருப்பதில்லை.ஏதோவொரு சுவாரஸ்யத்தை வாழ்க்கை நமக்கு இன்பத்தின் மூலமாகவோ துன்பத்தின் மூலமாகவோ தந்து படம் கற்பித்து புதிய பாதை உருவாக்க உதவுகிறது.

   

  சில நேரம் நீங்கள் இதுதான் நடக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடப்பது அரிதினும் அரிது.இது நடக்காது என நினைக்கிற பொழுது அது நடப்பது மட்டுமல்லாமல் நாட்டியம் ஆடவும் செய்யும்.அனைவரும் காதல் குறித்தும் வாழ்க்கை துணை குறித்தும் பலவாறு  கனவு காண்போம்  ஆனால் நாம் நினைத்து பார்த்திட முடியாத ஒருவர் நமக்கு அமைவார்.பொட்டல்  காடுகளை கொண்ட தமிழகத்தின் சிற்றூரில் நீங்கள் வசித்திருப்பீர்கள் .ஆனால்,ஒரு நாள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் நீங்கள் நடந்து கொண்டிருப்பீர்.அரண்மனை ராஜாவாகவும் ராணியாகவும் வலம் வந்த நீங்கள் திடீரென பாதாளத்தில் விழுந்து கிடப்பீர்.ஏன் 2020ல் அமைதியாக எல்லோரும் வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போது சட்டென ஒரு சிறிய கொரோனா என்ற வைரஸால் மாத கணக்காக நாடே  வீட்டில் முடங்கியது.

  www.kimo.chillzee.in/chillzee-kimo-books...-kanal-e-tamil-mathi  .......

  Regards,
  Chillzee Team :-)
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  22 May 2020 04:26 #126 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007

 • புது கதை படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?

   

  தீராத காதல்…! - நந்தினி நடராஜ் : Theeradha Kadhal - Nandhini Nataraj கதை இப்போது Chillzee KiMoவில்!

   

  ₹ 50/- செலுத்தி இந்த கதையையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!

   

  கதையைப் பற்றி:

   "காதல்".சிலருக்குவார்த்தை.

  பலருக்கு உணர்வு.அதை உணர முடியும்.யார் மீது எல்லாம் ஓர் உண்மையான அன்பு இருக்கிறதோ அவர்கள் மீது எல்லாம்.

  உண்மைக்கும் காதலும் ஒர் பிரிக்க முடியாத உறவு.உண்மை இல்லாத காதல் வாழ முடியாது. ஆனால் உண்மை காதலை யாராலும் பிரிக்க இயலாது.காதலர்கள் பிரிந்தாலும் அவர்கள் காதல் வாழுந்து கொண்டு இருக்கும்,பல கதைகளை பார்த்து இருப்போம்;கேட்டும் இருப்போம்; 

  இதுவும் அப்படிப்பட்ட கதையே..

  www.kimo.chillzee.in/chillzee-kimo-books...hal-nandhini-nataraj

  Regards,
  Chillzee Team :-)
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  • Not Allowed: to create new topic.
  • Not Allowed: to reply.
  • Not Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Come join the FUN!

  Write @ Chillzee
  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)
  Go to top