Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

× Site Updates

map-pin Chillzee Important Updates!

15 Aug 2018 01:04 #499 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007
 • Chillzee வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான எழுத்தாளர்களில் ஒருவர் ஜெய்.

  2014ஆம் ஆண்டு எங்கே செல்லும் இந்த பாதை சிறுகதையின் மூலம் chillzeeயில் அறிமுகமாகி, கிட்டத்தட்ட நான்கு முழு ஆண்டுகளாக தொடர்ந்து சிரிக்க வைக்கும் & சிந்திக்க வைக்கும் பல கதைகள் எழுதிக் கொண்டு இருப்பவர்.

  chillzee டீமை சேர்ந்த விசாலி இந்திய சுதந்திர தினத்திற்காக ஜெய்யுடன் நடத்திய சுவாரசியமான கலந்துரையாடல் இதோ உங்களுக்காக.

  ******************************************************
  கலந்துரையாடலை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/chillzee/chillzee-featur...riter-jay-discussion

  Regards,
  Chillzee Team :-)

  Please Log in or Create an account to join the conversation.

  17 Aug 2018 19:14 #500 by Visali K

 • Administrator
 • Administrator

 • Posts: 239
 • Like received: 103
 • Friends,
  தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நம் அண்டை மாநிலமான கேரள மாநிலத்திற்கு முடிந்த அளவு உதவுங்கள் 🙏🙏🙏

  கேரளா முதல் அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப் பட்டிருக்கும் கேரளா முதல் அமைச்சரின் நிவாரண நிதி வங்கி விபரங்கள் இதோ:

  Chief Minister's Distress Relief Fund
  NO: 67319948232
  Bank: State Bank of India
  IFSC : SBIN0070028
  SWIFT CODE : SBININBBT08

  Attachments:
  The following user(s) Liked this message: Tamilthendral, Subhasree, AdharvJo

  Please Log in or Create an account to join the conversation.

  20 Aug 2018 17:19 #501 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007
 • ஹலோ பிரென்ட்ஸ்,

  வணக்கம்!

  சில்சீ வாசகர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட 'கௌரி கல்யாண வைபோகமே', 'விடியலுக்கில்லை தூரம்', 'ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்' மற்றும் 'சாத்திரம் பேசுகிறாய்... கண்ணம்மா' புகழ் ஜெய், தன்னுடைய ஐந்தாவது தொடர் "காயத்ரி மந்திரத்தை....." உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

  இந்த தொடரின் அத்தியாயங்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புதன் காலைகளில் உங்களைத் தேடி வர இருக்கிறது.

  புதிய கதை பற்றிய ஜெய்யின் அறிமுகம் இதோ:

  Hello Friends....

  எல்லாரும் எப்படி இருக்கீங்க.... என் அடுத்த கதையின் தலைப்பு “காயத்ரி மந்திரத்தை.....” ...

  medical field-ல் நம் நாடு அடைந்திருக்கின்ற முன்னேற்றம் அளப்பரியது... அதே சமயம் அதில் விரவியிருக்கும் ஊழலும் அளப்பரியதுதான்..... இதைத்தான் இக்கதையின் மூலம் உங்களுடன் பேசப்போகிறேன்...

  கூடவே கொஞ்சம் கூட பொருத்தமில்லாத இருவர் சூழ்நிலை காரணமாக இணையும்போது ஏற்படும் சிக்கல்களையும் பேசலாம்.....

  என் மற்ற கதைகளைப் போல இதற்கும் உங்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.... நன்றி....

  *********************************************************
  அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

  உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் ஜெய் 🙂

  நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  @ www.chillzee.in/chillzee/announcements/1...series-starting-soon

  Regards,
  Chillzee Team :-)

  Please Log in or Create an account to join the conversation.

  21 Aug 2018 17:14 #502 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007
 • ஹலோ பிரென்ட்ஸ்,

  வணக்கம்!

  "என் சிப்பிக்குள் நீ முத்து" தொடரின் மூலம் Chillzee வாசகர்களுக்கு நாவலாசிரியராக அறிமுகமான தமிழ் தென்றல் தன்னுடைய இரண்டாவது கதை "மிசரக சங்கினி" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

  புதிய கதை பற்றிய தமிழ் தென்றலின் அறிமுகம் இதோ:

  ஹாலிவுட்டில் அதிகமாகவும் பாலிவுட்டில் ஓரிரு சூப்பர் ஹீரோக்களையும் பார்த்திருக்கும் நமக்கு நிஜத்தில் ஒரு சூப்பர் ஹீரோ கிடைச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சிருக்கீங்களா? நான் யோசிச்சிருக்க! நினைக்கும் போதெல்லாம் ஒரு கிரேட் எக்ஸைட்மெண்ட். ஆனா நிஜத்துல ஒரு சூப்பர் ஹீரோவை ரெடி செய்ய நான் கடவுள் இல்லையே. அதான் ஒரு கதை எழுதலாம்னு முடிவெடுத்துட்ட.

  வாவ்...சூப்பர் ஹீரோ! அப்படினு தோனும் போதே அதான் நிறைய படத்துல பார்த்துட்டமேனு ஒரு தாட் கூட வரலாம். சூப்பர் ஹீரோவை, ஹீரோவாகவும் அவருக்கு கிடைச்சிருக்கும் பவர் வச்சு என்ன சாகசங்கள் செய்றாருனு மட்டுமே பார்த்த நமக்கு, பவரால பிரச்சனை ஏதும் வருமான தோனியிருக்கா? மூனாவது மனுஷனாலோ இல்லை வில்லனாலோ வர பிரச்சனை இல்லைங்க. ஒரு சாதாரண மனுஷன் அசாத்தியமான சக்தியை அடையும் போது அவனுடைய இயல்புகள் என்னாகின்றன? உறவுகளின் நிலை என்ன? தன்னுடைய சுகங்களை இழக்கிறானா? தன்னுடைய சுகங்களை இழந்துதான் மற்றவருக்கு சேவை செய்ய முடியும்னு நிலையிருந்தா நம்மில் எத்தனை பேர் முன்வந்து இந்த சக்தியை பெறுவோம்? அசாத்திய சக்தியை அடையும் போது வரும் பின்விளைவுகளும் ஆபத்துகளும் என்னன்னுதா நாம பார்க்க போறோம்.

  ************************************************************

  அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

  உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் தமிழ் தென்றல் 🙂

  நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  @ www.chillzee.in/chillzee/announcements/1...series-starting-soon

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: Tamilthendral

  Please Log in or Create an account to join the conversation.

  22 Aug 2018 23:44 #503 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007
 • ஹலோ பிரென்ட்ஸ்,

  வணக்கம்!

  "மார்பில் ஊறும் உயிரே", "துடிக்கும் இதயம் உனதே உனது", "முடிவிலியின் முடிவினிலே" புகழ் மது, தன்னுடைய நான்காவது தொடர்கதை "செந்தமிழ் தேன்மொழியாள்" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

  புதிய கதை பற்றிய மதுவின் அறிமுகம் இதோ:

  சில்சீயில் எனது நான்காவது தொடர்கதை “செந்தமிழ் தேன்மொழியாள்” கதையைப் பற்றிய ஒரு சிறு முன்னுரை இதோ...

  “ஊர்வன, பறப்பன, நடப்பன என எண்ணற்ற பிராணிகளும், பட்சிகளும் மனிதர்களும் இந்த உலகத்தில் வசிக்கிறோம். ஆனால் இதே பூமியில் இன்னொரு மிகப் பெரிய உலகம் ஒன்று உண்டு. நாம் வாழும் உலகத்தைத் தாங்கி நிற்பதே அவ்வுலகம் தான் என்று அறிவோமா.

  அந்த உலகம் தான் சிருஷ்டியின் கருவறை.

  பூமியின் மூன்றில் இரண்டு பங்கு முழுவதும் வியாபித்திருக்கும் உலகம்.

  அது என்ன உலகம் என்று இப்போது யூகித்து இருப்பீர்கள் தானே!

  ஆம். பரந்து விரிந்த சமுத்திர உலகம் தான் அது.

  அந்த உலகத்தினுள் ஓர் பயணம் சென்று வருவோமா! செந்தமிழ் தேன்மொழியாளோடு”.

  ***********************************************************
  அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

  உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் மது 🙂

  நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  @ www.chillzee.in/chillzee/announcements/1...ies-starting-soon-02

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: sasi

  Please Log in or Create an account to join the conversation.

  24 Aug 2018 09:47 #504 by Gomathi Chidambaram

 • Fresh Boarder
 • Fresh Boarder
 • Happieeee

 • Posts: 4
 • Like received: 1
 • Superb ..... Chillzee

  Gomathi.C

  Please Log in or Create an account to join the conversation.

  • Not Allowed: to create new topic.
  • Not Allowed: to reply.
  • Not Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Come join the FUN!

  Write @ Chillzee
  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)
  Go to top