Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

× Site Updates

map-pin Chillzee Important Updates!

24 Aug 2018 11:17 #505 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8339
 • Like received: 3007
 • ஹலோ பிரென்ட்ஸ்,

  வணக்கம்!

  "மழைமேகம் கலைந்த வானம்", "யாது வரினும்... எவ்வாறாயினும்...", "மோனத்திருக்கும் மூங்கில் வனம்" புகழ் சாகம்பரி தன்னுடைய நான்காவது தொடர்கதை "மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம்" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

  இந்த கதை, செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் பதிவாகும்.

  கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

  மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம்

  அட, இது பாரதியின் பாடல் வரிகள். மிடி என்ற வார்த்தையை ‘தன்னை காமுறுவார் மிடி தீர்க்கின்ற தங்கம்’ என்று முருகக்கடவுளை போற்றும் தங்க ஆனந்த களிப்பிலும் படித்திருக்கிறேன். அப்படியென்றால்… மிடி என்றால் குறை… மேவிய நெஞ்சம் என்றும் உள்ளதே… ஸோ… மனதில் பரவியிருக்கும் குறை… நாம் செய்த தவறை நாமே உணரும்போது வரும் குற்ற உணர்வைவிட மோசமான மனக்குறை வேறு எதுவும் இருக்கிறதா என்ன? அதுதான் கில்டி உணர்வையும் தரும்.

  அப்புறம் இந்த கதைக்கான போஸ்டர்…! ஆங்… அந்த பெண்ணை எனக்குத் தெரியும்… சதாக்ஷி… அழகான பெண். ஜெக்கிங் அணிந்து காட்டன் டாப்ஸ் போட்டு சிரித்த முகத்துடன் துள்ளு நடையில் நடக்கும்போது அவளை சுற்றி இருக்கும் உலகத்தை கூல் செய்வாளே!. இப்போது ஏன் இப்படி இருளில்…. காய்ந்து போன மரங்களுக்கிடையில் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறாள்… அந்த மரங்கள் பட்டுபோனவையா… அல்லது இலையுதிர்த்து நிற்கின்றனவா? அவளும் அதுபோன்றுதான் இருக்கிறாளோ?

  ம்… அந்த பையன் யார்னு எனக்குத் தெரியவில்லை! அவன் ஏன் வானத்தை பார்த்துக் கொண்டு நிற்கிறான்? எப்போது இளவேனில் காலம் வரும் என்று சூரியனை கேட்கிறானோ? ஒருவேளை இப்போது இலையுதிர்த்து நிற்கும் மரங்கள் அந்த வசந்த காலத்தில் புது தளிர் விட்டு பூத்து குலுங்குமோ? அல்லது பட்ட மரத்தினை துளிர்க்க செய்யும் மழைமேகத்தின் வரவை எதிர் நோக்குகிறானா?

  ஐம் வொண்டரிங்… அவன் சூரியனை கட்டி இழுத்து விரைவில் வசந்தத்தை கொண்டு வரப்போகிறானா அல்லது மழையை வரவழைத்து பட்டுபோன மரங்களை துளிர்க்க வைக்கும் மாயத்தை செய்யப் போகிறானா?

  டியர் ரீடர்ஸ்! இந்த தொடரின் மூலம் செப்டம்பர் 4ம் தேதி முதல் நாம் மீண்டும் சந்திக்கலாம்! என்னுடைய மற்ற தொடர்களுக்கு தந்த ஆதரவையும் கருத்து பகிர்தலையும் இந்த தொடருக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி!. இதற்கான களம் தரும் சில்சீ டீமிற்கும் மிக்க நன்றி!

  அன்புடன்

  சாகம்பரி

  ****************************************************

  அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

  உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சாகம்பரி 🙂  நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  @ www.chillzee.in/chillzee/announcements/1...ies-starting-soon-02

  Regards,
  Chillzee Team :-)

  Please Log in or Create an account to join the conversation.

  27 Aug 2018 13:29 #506 by sasi

 • Senior Boarder
 • Senior Boarder

 • Posts: 68
 • Like received: 45
 • வாழ்த்துக்கள் சில்சி
  அடுத்த மாசம் புதுக்கதைகளை நிறைய வெளியிடப்போறீங்க அறிவிப்புகளை பார்த்தேன் கலக்கறீங்க எல்லாருக்கும் வாய்ப்புகளை கொடுத்து ஆதரவு அளிக்கறீங்க உங்களுக்கு பெரிய சல்யூட்
  The following user(s) Liked this message: Chillzee Team

  Please Log in or Create an account to join the conversation.

  27 Aug 2018 18:04 #507 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8339
 • Like received: 3007
 • :-)

  Thank you and welcome Sasirekha ji :-)

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: sasi

  Please Log in or Create an account to join the conversation.

  27 Aug 2018 18:05 #508 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8339
 • Like received: 3007
 • ஹலோ பிரென்ட்ஸ்,

  வணக்கம்!

  "என்னுள் நிறைந்தவனே", "நின்னை சரணடைந்தேன்", "என் காதலின் காதலி", "இன்பமே வாழ்வாகிட வந்தவனே", "அன்பின் அழகே" புகழ் ஸ்ரீ தன்னுடைய ஆறாவது தொடர்கதை "விழி வழி உயிர் கலந்தவளே" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

  இந்த கதை, செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் பதிவாகும்.

  கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

  வணக்கம் நட்புகளே,

  சில்சீயில் என்னுடைய ஆறாவது கதையான “விழி வழி உயிர் கலந்தவளே” மூலம் உங்கள் அனைவரையும் சந்திக்க ஓடி வந்துவிட்டேன்..

  நாயகன் திவ்யாந்த் நாயகி வெண்பா இவர்களுக்கான காதல் திருமண கரை சேர்ந்து சில பல புரிதலின்மையால் பிரிவை சந்தித்து மீண்டும் அவர்கள் இணைவதுதான் நம் கதைக் களம்.

  போன கதைக்கு விடுத்த அதே மிரட்டல் தான் சப்போர்ட் பண்ணுங்கனு எல்லாம் கேக்க மாட்டேன் பண்ணியே ஆகணும் சொல்லிட்டேன்..😊😊

  விரைவில் முதல் அத்தியாயத்தோடு வருகிறேன் மக்களே..

  ******************************************************

  அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

  உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் ஸ்ரீ 🙂

  நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  @ www.chillzee.in/chillzee/announcements/1...ies-starting-soon-03

  Regards,
  Chillzee Team :-)

  Please Log in or Create an account to join the conversation.

  30 Aug 2018 00:59 #509 by sasi

 • Senior Boarder
 • Senior Boarder

 • Posts: 68
 • Like received: 45
 • ஹாய் சில்சி ஒரு கேள்வி கோச்சிக்காதீங்க நம்ம சாரி இந்த சில்சியோட பர்த்டே எப்போ?

  Please Log in or Create an account to join the conversation.

  02 Sep 2018 09:23 #510 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8339
 • Like received: 3007
 • Chillzee வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான எழுத்தாளர்களில் ஒருவர் தேவி.

  2015ஆம் ஆண்டு காதல் உறவே தொடர்கதையின் மூலம் chillzee.inல் அறிமுகமாகி, மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தொடர்ந்து ரசித்து படிக்க கூடிய கதைகள் எழுதிக் கொண்டு இருப்பவர்.

  chillzee.in டீமை சேர்ந்த விசாலி கிருஷ்ண ஜெயந்தி திருநாளிற்காக தேவியுடன் நடத்திய சுவாரசியமான கலந்துரையாடல் இதோ உங்களுக்காக.

  *********************************************

  படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/chillzee/chillzee-featur...iter-devi-discussion

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: Devi, sasi

  Please Log in or Create an account to join the conversation.

  • Not Allowed: to create new topic.
  • Not Allowed: to reply.
  • Not Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Come join the FUN!

  Write @ Chillzee
  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)
  Go to top