Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

× Site Updates

map-pin Chillzee Important Updates!

12 Oct 2018 00:57 - 12 Oct 2018 00:58 #523 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007
 • Friends,
  We have replied to all e-mails and queries.

  If you have sent us an e-mail or contribution but have not received a reply yet, kindly please follow up now.

  Thanks.

  Regards,
  Chillzee Team :-)
  Last Edit: 12 Oct 2018 00:58 by Chillzee Team.

  Please Log in or Create an account to join the conversation.

  25 Oct 2018 17:46 #524 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007
 • ஹலோ பிரென்ட்ஸ்,

  வணக்கம்!

  Chillzee வாசகர்களின் மனம் கவர்ந்த ஜான்சி தன்னுடைய புதிய தொடர்கதை "என் ஜீவன் நீயே" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

  கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

  வணக்கம் அன்பு தோழமைகளே,

  சில்ஜீயில் மறுபடி ஒரு தொடர்கதையில் உங்களை சந்திக்க மிக ஆவலோடு இருக்கிறேன்.

  அமிழ்தினும் இனியவள் அவள் கதையின் ஜீவனை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

  ஆம், இக்கதையின் நாயகன் ஜீவன் மற்றும் நாயகி திவ்யா. உங்களது அளப்பரிய ஆதரவை இக்கதைக்கும் தந்து துணை நிற்க வேண்டுகிறேன்.

  கூடிய விரைவில் கதையுடன் சந்திக்கிறேன். இப்போது உங்களுக்காக கதையின் ஒரு துளியாக டீசர் ஒன்று....

  அன்புடன்,

  ஜான்சி

  அந்த க்ரே கலர் டஸ்டர் ப்ளஸ்ஸை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தினான் ஜீவன்.

  அன்று விடுமுறை நாள் ரூபனும் அனியும் அவர்கள் வீட்டில் இருப்பார்கள் என நிச்சயமாக அவனுக்கு தெரியும். அதனால் தான் ஏதோ துரத்துகின்ற உணர்வில் தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்திருந்தான்.

  முகத்தில் களையே இல்லை, கடந்த சில நாட்களில் தன் இயல்பை தொலைத்து குறும்பு தெறிக்கும் வார்த்தைகளை இழந்து மௌனமாகி இருந்தான்.

  கைகள் முறுக்கேறி இருந்தன, அவனது கோதுமை நிறத்திற்கும் , பருமனற்ற உடல் வாகிற்கும் அவன் உடுத்திருந்த அந்த ப்ராண்டட் சர்ட் கம்பீரமாய் பொருந்தி இருந்தது.முகத்தில் மீசை அவ்வளவாய் பொருந்தி அவனிடம் இருக்கும் துறுதுறுப்பு பையன் சற்றே மறைந்து ஆண்மை ததும்பும் தோற்றத்தில் இருந்தான்.முகத்திலும் சிந்தனைக் கோடுகள் மன முதிர்ச்சியை காட்டிக் கொண்டு இருந்தது.சிரிக்கும் போது தவழும் வசீகரம் அது மட்டும் சற்றுக் குறைந்து இருந்ததோ?!

  முன் சிகை காற்றில் பறக்க அவற்றை அலட்சியமாய் விலக்கிக் கொண்டு டக் டக்கென வீட்டின் முன் நின்று கதவை நோக்கி கை நீட்டவும் கதவு தானாக திறந்தது.

  வாடா...

  தம்பியை அழைத்தவாறு ரூபன் எதிரில் நின்றான்....கார் பார்க் செஞ்ச சத்தம் கேட்டதும் நினைச்சேன் நீயாதான் இருப்பேன்னு என்றவன் திருமணமாகிய சில வருடங்களில் வாழ்க்கை துணையோடு காதலோடு

  கூடிய இனிய வாழ்க்கையில், விரைவில் தந்தை ஆகப் போகும் நிறைவில், மிகவும் கம்பீரமாய் இருந்தான். முன்பை விட சற்று பருமனாக இருந்தான். தொடர்ந்த உடற்பயிற்சிகளில் தொப்பையில்லாமல் தன்னை செதுக்கியே வைத்திருந்தான்.

  தோளில் கைப்போட்டு தம்பியை அணைத்தவாறு வந்தவன், உள்ளறையில் சோபாவிற்கு அருகில் வந்ததும் வாயில் கையை வைத்து அமைதி எனச் சொல்லிக் காட்டினான்.

  அங்கே கர்ப்பிணிகளுக்கேயான இலகுவான உடையில் தன் ஆறு மாத வயிற்றில் கை வைத்துக் கொண்டு ரிக்லைனரில் ஓரமாய் ஏதோ ஒரு வாகில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் அனிக்கா.

  அந்த குழந்தைத்தனமான, மாசு மருவற்ற முகம் மாறாமல் அப்படியே இப்போதும் கூட இருந்தது. குழந்தை தரித்ததில் இருந்து தொடர்ந்த கவனிப்பால் கொஞ்சம் எடை கூடி இருந்தாள்.

  ராத்திரி தூங்கலை ...அதான் இப்ப தூங்கிட்டு இருக்கா...

  ஓ..

  தன் தோழியும் அண்ணியுமானவளைப் பார்த்த போது தன்னாலே ஜீவன் முகத்தில் முறுவல் வந்தமர்ந்தது.

  எத்தனை எத்தனை சண்டைகள் போட்டிருப்போம்...அவனுக்கும் , அவளுக்குமான உறவு மிகவும் இறுக்கமானது. சொந்தம் எனும் ஒரு பிணைப்பு, அதன அடுத்து நட்பு எனும் இறுகிய பிணைப்பு, அண்ணி எனும் கூடுதல் பிணைப்பு.

  யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ஏன் அவனே அவளை அதட்டினாலும் அனிக்கா அவனுக்கு மிகவும் ஸ்பெஷல் உறவு. அவளிலும் ஸ்பெஷல் அவனுடைய அவள் அல்லவா? இதை திவ்யா எப்படி உணராமல் போனாள்?

  தலையை உலுக்கி சிந்தை தெளிவித்து அமர்ந்தான்.

  எடுத்துக்கோடா ...ரூபன் ஏதோ சில ஸ்னாக்ஸ்களை கொண்டு வந்து அவன் முன் வைத்தான்.

  பெர்முடாஸில் ரிலாக்ஸ் மூடில் இருந்தான்.

  மெதுவாகவே பேசிக் கொண்டனர். மேல் மாடியிலுள்ள குட்டித் தோட்டத்தை அவர்கள் பார்வையிட்டு வந்த போது அனிக்கா விழித்திருந்தாள்.

  ஏ...அனி...மெதுவா எழும்பு...விட்டால் துள்ளலோடு குதித்து நிற்பாள் எனும் பயத்தில் அவளருகே விரைந்தான் ரூபன்.

  வா ஜீவா...கணவனின் கைப் பிடித்து நேராக எழுந்து அமர்ந்தவள் தூக்க கலக்கத்தில் ,

  பொறு நான் உனக்கு ஜீஸ் கொண்டு வாரேன்...

  நீ இரு தாயே...உனக்கு வேணும்னா நான் கொண்டு வாரேன்.

  சென்றவன் ப்ரிட்ஜில் இருந்த ப்ரெஷ் ஜீஸ்களை மூவருக்கும் கொண்டு வந்து பரிமாறினான்.

  இப்பவே நல்லா வேலை செஞ்சு பழகுடா....

  நண்பனின் திருமணத்தை குறித்து கிண்டலடித்தாள் அனி.

  சோபையாய் புன்னகைத்தான் ஜீவன்.

  திவ்யாவை அழைச்சிட்டு வந்திருக்கலாம்ல....கேட்டவள் அதுவரை குடிக்காமல் வைத்திருந்த பழச்சாறை ஒரு வாய் உறிஞ்சவும்...

  அச்சோ...என்றாள்.

  என்னாச்சு..

  இந்தக் குட்டிதான் ஜீவா...எப்ப பாரு உள்ளேயே ஆட்டம் ...

  ஹா ஹா சிரித்தான் ஜீவன்...ரூபன் குழந்தையின் அசைவை கணிக்க தன் கையை அவள் வயிற்றில் வைத்தான் ரூபன்.

  உன் குட்டில்ல உன்னை மாதிரி தான் துறுதுறுன்னு இருக்கும்....சிரித்தான் ஜீவன்.

  ஏ அனி...பாப்பாவ நான் தொட்டுப் பார்க்கட்டுமா...தயங்கியே கேட்டான் ...

  பாரேன் அவன் கையை தன் வயிற்றில் வைத்தாள் அனி. அவன் விரல்களுக்குள் ஏதோ குறுகுறுப்பு.

  உன் சித்தா டா...சித்தப்பா குழந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தவள் குரலில், குழந்தையின் அசைவில்

  தன்னை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று விலகி...எல்லாம் சரியாகி விடும் எனும் மலை போல நம்பிக்கை வந்தமர்ந்தது ஜீவனுக்குள்.

  ***********************
  அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

  உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் ஜான்சி 🙂

  நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  @ www.chillzee.in/chillzee/announcements/1...9F%E0%AE%B0%E0%AF%8D

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: sasi

  Please Log in or Create an account to join the conversation.

  26 Oct 2018 17:56 #525 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007
 • ஹலோ பிரென்ட்ஸ்,

  வணக்கம்!

  நம் chillzee.inல் புதிய எழுத்தாளராக மஹா அறிமுகமாக இருக்கிறார்.

  "எனதுயிரே" எனும் அவரின் கதை 2 நவம்பர் முதல் இருவாரத்திற்கு ஒருமுறை வெள்ளிக்கிழமை காலைகளில் பதிவாகும்.


  கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

  வணக்கம்!!!.

  "எனதுயிரே" எனது முதல் படைப்பு. இக்கதையை படித்து உங்களின் கருத்துக்களை பகிருங்கள். உங்களின் கருத்துக்கள் என் கதை வளத்தை வளர்த்து கொள்ள உதவும்.

  கதை சுருக்கம்:

  நமது கதையின் நாயகன், நாயகி இருவரும் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பின் அவர்களின் வாழ்க்கை செல்லும் பாதையை காண்போம். ஆழ்ந்த காதலும், புரிதலும் கணவன் மனைவி இடையே இருந்து விட்டால், எந்த சக்தியாலும் அவர்களை பிரிக்க முடியாது என்பதை கருவாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

  **********************************

  chillzee.in டீம் & வாசகர்கள் சார்பில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் மஹா.

  உங்களின் முதல் கதையே சூப்பர் ஹிட் ஆக அன்பார்த்த வாழ்த்துக்கள் 🙂

  chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

  நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  @ www.chillzee.in/chillzee/announcements/1...series-starting-soon

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: sasi

  Please Log in or Create an account to join the conversation.

  29 Oct 2018 19:04 #526 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007
 • ஹலோ பிரென்ட்ஸ்,

  வணக்கம்!

  Chillzee வாசகர்களின் மனம் கவர்ந்த சசிரேகா தன்னுடைய புதிய தொடர்கதை "என் வாழ்வே உன்னோடுதான்" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

  இந்த கதை 5 நவம்பர் முதல் வாரம்தோறும் திங்கள் காலைகளில் பதிவாகும்.

  கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

  யாரோ செய்த திருட்டு குற்றம் கதாநாயகன் மீது பழிவிழுந்து தண்டனையாக தன் சொந்த வீட்டிற்கே வேலைக்காரனாக மாறுகிறான். அந்த சமயத்தில் எதிர்பாராத நேரத்தில் கதாநாயகியை திருமணம் செய்து கொள்கிறான். திருட்டு பழியிலிருந்து தன் கணவனை மீட்க பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு எப்படி கதாநாயகனை காப்பாற்றுகிறாள் கதாநாயகி என்பதும் கதாநாயகியின் குடும்பத்தில் உள்ள 7 பிரச்சனைகளை எப்படி கதாநாயகன் தீர்த்து வைக்கிறான் என்பதும் இறுதியில் பல போராட்டங்களுக்கு பிறகு என் வாழ்வே உன்னோடுதான் என இருவரும் இணைந்து ஒன்று சேர்வதே இக்கதையாகும். இக்கதைக்கு வாசகர்களான தாங்கள் அனைவரும் ஆதரவு அளிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

  **********************************************

  உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சசிரேகா 🙂

  chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

  நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  @ www.chillzee.in/chillzee/announcements/1...ies-starting-soon-05

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: sasi

  Please Log in or Create an account to join the conversation.

  05 Nov 2018 18:39 #527 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007
 • ஹலோ பிரென்ட்ஸ்,

  வணக்கம்!

  நம் chillzee.inல் புதிய தொடர்கதை எழுத்தாளராக மகி அறிமுகமாக இருக்கிறார்.

  "வேலண்டைன்ஸ் டே..." எனும் அவரின் கதை 7 நவம்பர் முதல் இருவாரத்திற்கு ஒருமுறை புதன் காலைகளில் பதிவாகும்.

  கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

  வணக்கம் சில்சீ தோழமைகளே.......

  நான் தங்களை தொடர்கதை மூலமாக சந்திக்கவருவத்தில் மிகுந்த ஆனந்தமே..

  எனது கதையின் நாயகன் – அபிஜிக்த்... நாயகி – மணிகர்னிகா..

  இருவரும் கல்லூரியில் சந்தித்து அது நட்பாகி.. பின் காதலாக மாறுகிறது.. காதலை அவன் கூறுவான் என்று இவளும்.. இவள் ஏற்பாள என்று அவனும்.. இந்த காதல் போராட்டத்தில் விதியே வெற்றிபெருகிறது.. ஆம் விதிவசத்தாள் இருவரும் பிரிகின்றனர்.. எந்த விதி அவர்களை பிரித்ததோ அதே விதியின் மூலம் இருவரும் சந்திக்க நேர்கிறது.. மீண்டும் தன் காதலை அடைவதற்கான போராட்டத்தில் வெற்றிபெற்றனரா என்ரே இக்கதை...

  இந்த கதை இயல்பான கல்லூரி காதல் கதையே.. என்னுடைய கதையை படித்து தங்களின் எண்ணங்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

  எனக்கு இக்கதை எழுத வாய்ப்பு கொடுத்த சில்சீடீம்-க்கு.. என் இதயம் கணிந்த நன்றிகள்.

  ****************
  chillzee.in டீம் & வாசகர்கள் சார்பில் உங்களை தொடர்கதை பகுதிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் மகி.

  உங்களின் முதல் கதையே சூப்பர் ஹிட் ஆக அன்பார்த்த வாழ்த்துக்கள் 🙂

  chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

  நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  @ www.chillzee.in/chillzee/announcements/1...series-starting-soon

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: sasi

  Please Log in or Create an account to join the conversation.

  06 Nov 2018 19:12 #528 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8341
 • Like received: 3007
 • ஹலோ பிரென்ட்ஸ்,

  வணக்கம்!

  தன்னுடைய நகைச்சுவை + காதல் + சமூக தீம் கதைகளினால் Chillzee வாசகர்களின் மனம் கவர்ந்த சித்ரா தன்னுடைய புதிய தொடர்கதை "சுஷ்ருதா" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

  23 நவம்பர் தொடங்க இருக்கும் இந்த புதிய கதை, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வெள்ளிக்கிழமை காலைகளில் பதிவாகும்.

  கதையை பற்றி ஆசிரியையின் ஒன்-லைனர் இதோ:

  ஹீரோ ஒரு டாக்டர். ஹீரோயின் அவரை தேடி வரும் நோயாளி.

  இந்த ஒரு ஸ்பெஷல் நோயாளியை சமாளிக்கவே நம் டாக்டர் ஹீரோவிற்கு பொறுமை அதிகமாக தேவை படும் 😍😍😍

  மீதி கதையை கதை போக்கில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் பிரென்ட்ஸ் 🙂

  உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சித்ரா 🙂

  chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

  நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  @ www.chillzee.in/chillzee/announcements/1...series-starting-soon

  Regards,
  Chillzee Team :-)
  The following user(s) Liked this message: sasi

  Please Log in or Create an account to join the conversation.

  • Not Allowed: to create new topic.
  • Not Allowed: to reply.
  • Not Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Come join the FUN!

  Write @ Chillzee
  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)
  Go to top