Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Share your stories here!

file ரிங்கா ரிங்கா ரோசஸ்

27 Mar 2019 21:53 - 27 Mar 2019 22:00 #1 by Subhasree

  • Gold Boarder
  • Gold Boarder

  • Posts: 300
  • Like received: 184
  • ரிங்கா ரிங்கா ரோசஸ் -1



    இரவு எட்டு மணி திலக் சப்பாத்தியை பிட்டு குருமாவில் குளிப்பாட்டி வாயில் போட்டான். “உப்பு கொஞ்சம் ஜாஸ்தி” என முறையிட்டவனுக்கு “அப்படியாவது கொஞ்சம் ரோஷம் வரட்டுமே” காட்டமாக அம்மாவிடமிருந்து பதில் வந்தது.

    திலக் பி.ஈ முடித்து இரண்டு வருடங்களாயிற்று. இன்னமும் வேலை தேடுவதையே தன் முழு நேர வேலையாக கொண்டவன். அப்பா சுவாமிநாதன் சுய பிஸ்னஸ். அம்மா மங்களம் வீடே உலகம்.. இவனின் ஒரே தங்கை அபர்ணா பி.ஈ கடைசி வருடம் படிக்கிறாள். நல்ல படிப்பாளி. அவளிடம் கர்வமும் திமிரும் கொட்டிக் கிடந்தது.
    இவர்களோடு திலக்கின் அப்பாவின் மூத்த சகோதரர் சிவராமன் இங்கு வசிக்கிறார்.

    அவன் அப்பாவும் தங்கையும் வந்து டேபிளில் அமர “ராகுவும் கேதுவும் இன்னிக்கு கூட்டணியா . . செத்தடா நீ” என மனதில் நினைத்தபடி சப்பாத்தியை சாப்பிட்டபடி தன் செல்போனில் கவனம் செலுத்தினான்.

    “திலக் உன் தங்கை உன்னவிட வயசுல சின்னவா . .” என அப்பா ஆரம்பித்தார்

    கோபத்தை அடக்கியவன் “வயசுல சின்னவளா இருக்கறதனாலதான் தங்கை . . இல்லனா அக்காப்பா” என்றான் போனிலிருந்து கண்ணை எடுக்காமல்.

    “இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல . . படிச்சி முடிச்சி ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் வேலைக்கு போகாம தண்டச்சோறு திங்கற . . உன் தங்க கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆயிட்டா . . இங்கிலீஷ்ல வெளுத்து வாங்குறா . . உனக்கு ரெண்டு வரி ஒழுங்கா இங்கிலீஷ் பேச தெரியுதா? ” என பேசிக் கொண்டிருந்தவரை இடைமறித்த திலக் “இதபடி அபர்ணா” என தமிழ் நாளிதழை தன் தங்கை முன் திலக் நீட்டினான்.

    “எனக்கு தமிழ் தெரியாது” பெருமையாக தோளை குலுக்கியபடி சொன்னாள்.

    சமையல் செய்துக் கொண்டிருந்த அங்கம்மாவை அழைத்தான் திலக் “இத படிங்கம்மா” அதே நாளிதழை தந்தான்.

    “என்ன தம்பி எழுத படிக்க தெரியாத என்கிட்ட போய் காட்டுறீங்க” என சொல்லி நகர்ந்தாள் சமையல் செய்பவள்.

    “ரெண்டு பேருக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?” என அப்பாவையும் தங்கையையும் பார்த்து ஏளன சிரிப்பை சிந்தினான்.
    “அப்பபபா” கத்தினாள் அபர்ணா.
    “டென்ஷன் ஆகாத தங்கச்சி . . ” என அழுத்தம்திருத்தமாக கடைசி வார்த்தையை உச்சரித்தான்.
    “டேய் வேண்டா” என கடுப்பானாள் அபர்ணா
    “நான் ஒரு கதை சொல்லட்டா” என ஆரம்பித்தான்
    “மனசுல என்ன விஜய்சேதுபதினு நினைப்பா?” திமிராக கேள்வியை கக்கினாள்.
    “கதய கேளு முதல்ல . . . இங்கிலாந்துல பதினெட்டாம் செஞ்சுரி வாக்குல” ஆரம்பித்தவனுக்கு ”யேய்ய்யவ்” என பெரிதாக ஏப்பம் நடுவில் குறுக்கிட இரு என செய்கை செய்தபடி தண்ணீரை குடித்தான்.

    அவன் வேண்டுமென்றே இத்தனை பில்டப் கொடுக்கிறான் என அபர்ணாவிற்கு புரிந்துப் போயிற்று. எரிச்சலுடன் என்னதான் கதையளக்கப் போகிறான் என சாப்பிட்டபடி காத்திருந்தாள்.

    திலக் தொடர்ந்தான் ”இங்கிலாந்துல பதினெட்டாம் செஞ்சுரி வாக்குல பிளேக் நோய் நிறைய பேருக்கு வந்து செத்துப் போனாங்க. பிளேக் வந்தா உடம்புல வட்ட வட்டமா சிகப்பு நிறத்துல தடிப்புகள் மாதிரி வரும். அவங்களை பாதுகாத்துக்க பாய்செஸ்னு ஒரு மூலிகைய பயன்படுத்தினாங்க. அதான் நம்ம துளசி மாதிரி ஒரு மூலிகை அது. அந்த நோய் தீவிரமானா சளி பிடிக்கும் ஹச்சு ஹச்சுனு தும்முவாங்க கடைசியில செத்துடுவாங்க.”

    இப்ப எதுக்கு இந்த கதை என்பதைப் போல அபர்ணா கொலைவெறியோடு அவனை முறைக்க . .

    “இறந்தவங்களுக்காக நாட்டுபுற ஒப்பாரி பாட்டு ஒண்ணு எழுதினாங்க” என்றவன் சற்றே நிறுத்தி “அந்த ஒப்பாரி பாட்டு எது தெரியுமா?” என அவளைப் பார்த்துக் கேட்க . .

    அவள் எதுவும் சொல்லாமல் முறைத்தபடி இருந்தாள். “ஹே உனக்கு ரொம்ப நல்லா தெரியும். அப்பா அம்மாக்கு கூட தெரியும்” என அவர்களை பார்த்தான்.
    இருவரும் குழப்பமாக பார்த்தனர்.
    சரி நானே சொல்லிடறேன் . .
    “ரிங் ஆப் ரிங் ஆப் ரேஷஸ்
    பாக்கெட் புல் ஆப் போசீஸ்
    அ டிஷ்யூ அ டிஷ்யூ
    வி ஆல் பால் டவுன்”
    ராகத்தோடு பாடினான் அனைவருக்கும் தெரிந்த ராகத்தில்.

    “இதுதான் காலப் போக்குல வார்த்தைகள் மாறி
    “ரிங்கா ரிங்கா ரோசஸ்
    பாக்கெட் புல் ஆப் போசீஸ்
    அஷ்ஷா புஷ்ஷா
    ஆல் பால் டவுன்”

    “இங்கிலிஷ்ல இருக்கிற ஒரே காரணத்தினால என்ன ஏதுனு கூட தெரியாம நாம இதை குழந்தைக்கு சொல்லித் தறோம் . . பாவம் அதுங்களும் ரைம்ஸ்னு நெனச்சி ஒப்பாரிய நடுவீட்ல பாடி நமக்கு டெமோ காட்டுது”
    “சும்மா ரீல் விடாத திலக்” அபர்ணா சீறினாள்.
    “கூகுள்ல மிஸ்டிரி ஆப் ஹிஸ்டரி இல்லனா ரிங்கா ரிங்கா ரோசஸ்னு போட்டு பாரு . . தெளிவா இருக்கு”
    அவள் உடனே கூகுளில் முழ்கினாள். “இங்கிலீஷ் ஒரு மொழிதான். ஒரளவு எனக்கு தெரியும் அது போதும்”
    தமிழ் நாளிதழை எடுத்து காட்டி “இது நம்ம சந்தானம் அங்கிள் வைரத்த பத்தி ஆர்டிகள் எழுதி இருக்காரு”

    அடுத்த நொடி மற்றொரு அறையிலிருந்து பெரியப்பா “நமக்கு வைரம் வேண்டாம். நம்ம குடும்பத்துக்கு ராசி இல்ல” என குரல் அதட்டலாகவும் சோர்வாகவும் வந்தது.
    அப்பொழுதுதான் திலக் தான் செய்த தவறை உணர்ந்து நாக்கை கடித்தான். “இல்ல பெரியப்பா சும்மா சொன்னேன்” என்றான்.
    “இல்லப்பா விளையாட்டுக்கு கூட நம்ம குடும்பத்துல வைரத்தபத்தி பேசாதீங்க” என்றார் அச்சம் நிறைந்த குரலில்.

    அவன் அவஸ்த்யை பார்த்து அபர்ணா நல்லா வேணும் என்ற பாவணையில் சிரித்தாள். இனிமே தாக்கு பிடிக்க முடியாது என எழுந்தவன் போகும் முன் அபர்ணா தலையில் ஒரு குட்டு வைத்தான். அவள் கோபத்தோடு அடிக்க யத்தனிக்க அவனோ லாவகமாக தப்பித்தான். “அபர்ணா சாப்பிடு போதும் விளையாட்டு” அப்பாவின் வார்த்தைகள் அவளை தடுத்தது.

    ஐந்து நிமிடத்தில் தன் பைக்கோடு கிளம்பினான் திலக். “இந்த நேரத்துல எங்கடா?” என்ற அம்மாவின் வார்த்தைக்கு “பத்து நிமிஷத்துல வந்திடுவேன்” என கிளம்பினான்.

    அவன் நேராக தன் நண்பன் கணேஷ் தங்கியிருக்கும் மேன்ஷனை வந்தடைந்தான். கணேஷ் தங்கியிருந்த அறை அழுக்கான இரண்டு துறுபிடித்த இரும்பு கட்டில்கள், நடுவே கால் அடிப்பட்ட மேஜை, மற்றும் ஒரு தகர நாற்காலி. சுவரோரம் அலமாரி. இதுவே அச்சிறிய அறையின் சாமுத்ரிக்கா லட்சணங்கள்.

    கணேஷ் குடும்பத்தில் அம்மா மற்றும் அண்ணன் மட்டுமே திருச்சியில் வசிக்கிறார்கள். அண்ணன் வேலை திருமணம் என செட்டிலாகிவிட்டான். அம்மாவையும் தம்பியையும் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. கணேஷ்க்கு எல்லாமே அம்மாதான். அவருக்காக எதையும் செய்வான்.

    கணேஷ் கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தான். திலக்கை பார்த்ததும் “வாடா காலையில இன்டர்வியூ என்னாச்சு?” என்றான்

    உதட்டை பிதுக்கிய திலக் “கோயிந்தா கோயியியிந்த்தா” என்றான் விரக்தி புன்னகையோடு.

    “கவலப்படாத விடு மச்சி” ஆறுதலாக பேசினான் கணேஷ். அவனும் வேலையில்லா பட்டதாரிதான்.

    “வீட்ல உபதேசம் பண்ணி டார்ச்சர் பண்றாங்கடா” என்றவன் எரிச்சலோடு ஒரு சார்மினார் சிகரட்டை வாயில் வைக்க கணேஷ் அதை பற்ற வைத்தான். புகையை நன்றாக உள்ளிழுத்து முக்கின் வழியே வெளியேற்றினான். மனம் அமைதியானதைப் போல உணர்ந்தான்.

    சிகரெட் டப்பாவில் சிகரெட்டின் பிராண்ட் பெயரை கொட்டை எழுத்திலும் புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற முக்கியமான வாசகம் கண்ணுக்கே தெரியாத சிறிய எழுத்துகளில் இருந்தது. விதியின் எழுத்துகளும் கண்ணுக்கு தெரிவதில்லைதான்.

    இருவரும் வெளியே கிளம்பினார்கள். நந்தனம் சிக்னலை தாண்டி ஓரிடத்தில் பைக்கை நிறுத்தினான். இரவு வேளை என்பதால் லாரிகள் மட்டுமே அதிகமாக இருந்தன. “நமக்கு மட்டும் ஏண்டா அதிர்ஷ்டமே இல்ல” திலக் சோர்வாய் வினவ

    “அடடா என்னடா நீ இப்படி புலம்புற . . நமக்கு எதோ பெரிசா கிடைக்க போகுது நினைக்கிறேன். அதான் இந்த சின்ன வேலையெல்லாம் நமக்கு செட் ஆகல” ஆறுதல் கூறினான்.

    “ம்ச் . . எனக்கு நம்பிக்கையே இல்லடா” என்ற திலக்கை கணேஷ் உரிமையோடு கோபமாக பார்த்தான்.

    ”அப்பாவ விட பெரிய பிஸ்னஸ் பண்ணனும் . . கார் பங்களா வாங்கணும். அழகான மனைவி அன்பான குழந்தைனு செட்டில் ஆகணும். . . இதெல்லாம் கனவாவே முடிஞ்சிடும் போல இருக்கு” தங்கையிடம் வக்கீலை போல் வாதாடியவன் தன் சுயத்தை நண்பனிடம் காட்டினான்.

    “எல்லாம் நல்லதாவே நடக்கும் கவலபடாதடா . . சரி சினிமா போலாமா?” அவன் மூடை மாத்த முயற்ச்சித்தான்.

    “வேண்டா”

    அவர்கள் அருகில் நீலநிறத்தில் பெரிய பிளாஸ்டிக் குப்பை தொட்டி இருந்தது. தெரு நாய் தனக்கு ஏதேனும் கிடைக்குமா என்கிற பேராசையுடன் குப்பை தொட்டியை துளாவிக் கொண்டிருந்தது. நாய் அந்த தொட்டியில் உள்ளவற்றை சரியாக பார்க்க அதன் மேல் தன் முன்னங்காலை வைத்து ஏற முயன்றது. அந்த குப்பை தொட்டி தடலாலென விழுந்து உருண்டது.

    உள்ளிருந்த குப்பைகள் வெளியே சிதறின. நாய் ஒரு நொடி பயத்தில் பின் வாங்கியது பின்பு ஓடிவிட்டது. இருவர் அருகிலும் குப்பை விழுந்தது. “ச்சே . . நிம்மதியா தம்மடிக்க கூட முடியல” என முனகியபடி திலக் நகன்றான். எதையே மிதித்துவிட “ஷிட்” என முகம் சுளித்தபடி கீழே பார்த்தான்.

    ஒரு அழகிய சுருக்கு பை. அதை இடது கையால் எடுத்தான். அந்த சுருக்கு பையில் எந்த அழுக்கும் படவில்லை.

    கணேஷ் வாங்கி திறந்து உள்ளே கைவிட்டான். கையில் தட்டுப்பட்டதை எடுக்க . . அது ஒரு வைர கல். இருவர் கண்ணும் கண்டதை நம்ப முடியாமல் கண்டன.

    அதை டக்கென்று மீண்டும் சுருக்கு பையில் போட்ட கணேஷ் “ரூமுக்கு கிளம்பு” என அவசரப்படுத்தினான். ஒன்றுமே யோசிக்க முடியாத திலக் அவன் சொல்படி கேட்டான்.

    அறைக்கு திரும்பியவுடன் கதவை நன்றாக சாத்தினான் கணேஷ். மீண்டும் அதை எடுத்து நன்றாக பார்த்தான். எலுமிச்சை அளவிற்கு இருந்தது அந்த வைர கல். அதை மேலே உயர்த்தி பிடித்தான். டியூப்லைட் வெளிச்சத்தின் ஊடுறுவலால் பல வண்ணங்கள் உள்ளே தெரிந்தன.

    “போலீஸ்கிட்ட கொடுத்திடலாம்” பயந்தான் கணேஷ். அதை பார்க்கவே அவனுக்கு என்னவோ போல் இருந்தது.

    “லூசாடா நீ” திலக் கோபித்தான்

    விசித்திரமாக நண்பணை பார்த்தான் கணேஷ்.

    “போலீஸ்கிட்ட என்ன சொல்லுவ?” திலக் வினவ

    “நடந்ததை தான்”

    “நம்புவாங்களா போலீஸ்?”

    விடை சொல்ல தெரியாமல் முழித்தான் கணேஷ்.

    “நீதான் ஆட்டைய போட்டனு பொய் கேஸ்ல உன்ன உள்ள வைப்பாங்க . . பிராக்டிகல திங் பண்ணு கணேஷ். நாம இப்ப இருக்கிற நிலைமையில அப்படியெல்லாம் செய்ய வேண்டாம்” திலக் முடிக்க

    “இப்ப என்ன பண்ணலாம் ? ” குழப்பமாக கேட்டான். திலக்கின் மனதின் ஒரு மூளையில் “நம்ப குடும்பத்துக்கு வைரம் ராசியில்ல” என்ற பெரியப்பாவின் குரல் ஒலித்தது.

    “இப்போதுக்கு ஒண்ணும் பண்ண வேண்டாம் . . கொஞ்ச நாள் சும்மா இருக்கலாம்” திலக் திடமாக பதிலளித்தான்.

    “அப்புறம்?” அப்பாவியாய் கேட்டான் கணேஷ்

    “வித்திடலாம் . . ”

    “எவ்வளவு தேறும்?”

    “என்னடா இப்படி அப்பாவிய இருக்க . . இதோட மதிப்பு கோடி கணக்குல இருக்கும்” உற்சாகம் வழிந்தது அவனிடம்.

    நம்ப முடியாமல் அவனை பார்த்தான் கணேஷ்.

    “வித்துட்டு லைப்ல செட்டில் ஆக வேண்டியதுதான். என் கனவு நினைவாக போகுது . .” மனக் கண்ணில் மகிழ்ச்சி பொங்கியது. அவன் முகத்திலும் பிரதிபலித்தது. அந்த வைர கல்லை கையில் எடுத்து நன்றாக பார்த்தான். உடல் முழுவதும் ஒரு சந்தோஷம் பரவியது.

    திலக் திறந்திருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். இதமான காற்று வீசியது. கண் இமைக்காமல் அங்கேயே பார்த்தபடி இருந்தான். கையில் வைத்திருந்த வைர கல்லை பொத்தென்று கீழே வைத்து எழுந்தான்.

    மௌனமாக எழுந்து நின்றான். “வீட்டுக்கு போறியா . . இதை நீயே வெச்சிக்க எனக்கு பாக்கவே பயமா இருக்கு” என கணேஷ் சொன்னான்.

    நண்பனின் வார்த்தைகள் காதில் விழவில்லை. வேகமாக கதவை திறந்து வெளியே ஒடினான். மேன்ஷனைவிட்டு வெளியேறி அசுரத்தனமாக தன் பைக்கை ஓட்ட ஆரம்பித்தான்.. இரெண்டொரு நொடியில் ஒரு லாரி எதிர்திசையில் வந்து அவன் மேல் மோதியது. மனிதனாய் இருந்த திலக் ஒரு சில நொடிகளில் ரத்தம் மற்றும் சதைக் கூழாக தெருவில் கிடந்தான்.

    விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த ஒரு பிளாட்டில் ஒரு குழந்தை

    “ரிங்கா ரிங்கா ரோசஸ்
    பாக்கெட் புல் ஆப் போசீஸ்
    அஷ்ஷா புஷ்ஷா
    ஆல் பால் டவுன்” என பாடி சிரித்தது.


    ஜொலிக்கும் . . .
    Attachments:
    Last Edit: 27 Mar 2019 22:00 by Subhasree. Reason: Spelling mistake
    The following user(s) Liked this message: Chillzee Team
    28 Mar 2019 08:29 #2 by Mano hari
    • Mano hari
    • Mano hari's Avatar

  • Visitor
  • Visitor

  • Wow fantastic start mam.
    But thilak death so sad .. unexpected.
    What next?
    Eagerly waiting for forthcoming episode.
    30 Mar 2019 12:55 #3 by Subhasree

  • Gold Boarder
  • Gold Boarder

  • Posts: 300
  • Like received: 184
  • Thank you so much Mano Hari for your comment.
    01 Apr 2019 21:49 #4 by karna

  • Fresh Boarder
  • Fresh Boarder

  • Posts: 3
  • Like received: 1
  • அருமையான் ஆரம்பம்.அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்
    The following user(s) Liked this message: Subhasree
    03 Apr 2019 21:39 #5 by Durgalakshmi

  • Fresh Boarder
  • Fresh Boarder

  • Posts: 7
  • Like received: 6
  • Ringa ringa roses rhymes related history really unknown & very interesting.
    Story semma start sis.
    Plzzz update second epi soon.
    The following user(s) Liked this message: Subhasree
    04 Apr 2019 22:32 #6 by Janaki

  • Fresh Boarder
  • Fresh Boarder

  • Posts: 1
  • Like received: 1
  • Kathai abaaram .. arumai
    The following user(s) Liked this message: Subhasree
    • Not Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top