Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

Reply: ரிங்கா ரிங்கா ரோசஸ் 2

NOTE: You are posting the message as a 'Guest', you can not edit the message or delete it
Please Log in or Register to skip this step.
X

Topic History of: ரிங்கா ரிங்கா ரோசஸ் 2

Max. showing the last 3 posts - (Last post first)

  • Durgalakshmi
  • Durgalakshmi's Avatar
13 Apr 2019 22:28
ரிங்கா ரிங்கா ரோசஸ் 2

Semma flow subhasree
Diamond mathi bag kulla poiduche.
Mathi ai diamond Enna seyya pogutho.
Very interesting ..
Eagerly waiting for next episode.

  • R.K.
  • 's Avatar
11 Apr 2019 12:28
ரிங்கா ரிங்கா ரோசஸ் 2

Superb twist madam. Excellent going.

  • Subhasree
  • Subhasree's Avatar
10 Apr 2019 20:40
ரிங்கா ரிங்கா ரோசஸ் 2

ரிங்கா ரிங்கா ரோசஸ் 2
திலக்கின் சடலம் வெள்ளை துணியால் மூடப்பட்டது. கணேஷ் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தான். இரண்டு நிமிடத்திற்கு முன் தன்னோடு பேசிக் கொண்டிருந்தவன் இப்போது உயிரற்று கிடக்கிறான். இதுதான் வாழ்க்கை. எவருக்கும் எந்த நொடியும் எதுவும் நடக்கலாம். இதை உணராமல் செருக்குடன் வாழ்வை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள் சிலர்.

இரவு நேரம் ஆதலால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லை. லாரி டிரைவர் ரோட்டின் பிளாட்பாரத்தில் குத்தயிட்டு அமர்ந்தபடி “ஐயோ எந்த நேரத்துல வண்டிய எடுத்தனோ தெரியிலயே . . ஐயா நான் சரியாதான் ஓட்டியாந்தேன்” என புலம்பிக் கொண்டு இருந்தான்.

ஒரே மாதிரியாக அடுக்கி வைத்த தெரு விளக்குகள் வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டிருந்தன. விட்டில் பூச்சிகள் எமனுக்காக காத்திருந்தவண்ணம் விளக்குகளை இன்பமாக சுற்றிவந்தன.

காக்கிச் சட்டை அவனை சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் என அடையாளம் காட்டியது. “உன் பேரு என்ன?” அதிகார தோரணையோடு வினவ.

டிரைவர் “மாரிமுத்து” என கலக்கமும் கவலையும் ஒன்றுபட பவ்யமாக எழுந்து நின்று பதிலளித்தான்

“இப்படியா வண்டிய ஓட்டுவ?” என கோபமாக கேட்டவனிடம்

“நான் சரியாதான் வந்தேனுங்க . . தம்பிதான் நோ என்டிரில வந்துடுச்சி”

“ஏன் சொல்ல மாட்டே . .பொணம் எந்திரிச்சி பேசவா போகுதுனு தெகிரியம்” என காளியப்பன் எகுற . .

“இல்ல . . இல்லங்க” அவசரமாக மறுத்தான்.

இரவு நேரத்திலும் சுற்றும் முற்றும் இருந்த சிலர் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

கூட்டத்தில் சிலர் “பாவம் சின்ன வயசு”
“யாரு பெத்த புள்ளயோ”
“குடிசிட்டு வண்டி ஓட்டிருப்பான்”
“லாரிகாரன் குடிச்சிருப்பான்” என தங்களுக்கு தோன்றியதை பேசிக் கொண்டனர். ஒவ்வொருவர் மனதிலும் பல எண்ணங்கள் அவை வார்த்தைகளாகவும் “ம்ச்” “ச்சே” என ஓசைகளாவும் வெளி வந்தன.

பிணத்தை காட்டி “இவன யாருக்காவது தெரியுமா? ” என காளியப்பன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே

“சார் அவன் என் பிரெண்ட்” என கணேஷ் முன்வந்தான். சரியாக பேச முடியாமல் வார்த்தைகள் தடம்புரண்டது. அதிர்ச்சியிலிருந்து இன்னமும் அவன் மீளவில்லை என்பதை அவன் வெளிரிய முகம் அப்பட்டமாக காட்டியது. கண்கள் சிவந்திருந்தது.

அவனை ஏற இறங்க பார்த்து “உன் பேரு என்ன? எங்க இருக்க?”

“கணேஷ் . . அந்த மேன்ஷன்ல இருக்கேன்” என எதிர்திசையில் உள்ள மேன்ஷனை சுட்டிக் காட்டினான்.

“ரெண்டு பேரும் சரக்கடிச்சிங்களா?”

“இல்ல சார்” பதட்டமாய் பதில் வந்தது

“இவன் பேரு என்ன?” என பிணத்தை கண்களால் சுட்டிக்காட்டி கேட்டான்

“திலக்”

“அவங்க அப்பா பேரு என்ன? போன் நம்பர் சொல்லு?” என சரமாரியாக கேள்வி வந்தன

“அப்பா பேரு சுவாமிநாதன் . . அவர் போன் நம்பர் தெரியாதுங்க” கணேஷ் பதிலளித்தான்.

அதற்குள் மற்றொரு கான்ஸ்டபிள் திலக் பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து கொடுத்தான். அதை பெற்றுக் கொண்ட காளியப்பன். போனை சற்று நேரம் துளாவியப்பின்.

“ச்சே ஏண்டா இப்படி பண்றீங்க? . . பாரு போன லாக் பண்ணி வெச்சிருக்கான் . . இப்ப நம்பர எப்படி பாக்குறது.” அலுத்துக் கொண்டான்.

திலக்கின் சடலத்தை போலீசை சார்ந்தவன் விதவிதமாக தன் கேமிராவில் கிளிக்கினான். சடலத்தை சுற்றி கோடுகள் போடப்பட்டன. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏம்புலன்ஸ் தனக்கே உரிய சங்கேத பாஷையில் அலறிக் கொண்டு வந்தது. திலக்கின் சடலம் ஏற்றப்பட்டது. சடலத்தை ஏற்றியவர்கள் முகம் எந்த மாறுதலும் இன்றி இயல்பாய் இருந்தது. அவர்கள் இதைப் போல தினம்தினம் எத்தனையோ சடலங்களை பார்ப்பதால் அவர்களுக்கு இது அதிர்ச்சியாகவோ சோகமாகவோ தோன்றவில்லை.
ஏம்புலன்ஸ் சென்றதும் மிச்சம் இருந்தது திலக் சிந்தியிருந்த ரத்தம் மட்டுமே. சிறு குளம் போல் தேங்கி கிடந்தது.

“திலக் வீட்டு லேண்ட் லைன் நம்பர் இருக்கு சார்” என கணேஷ் தன் போனில் தேடிக் கொடுத்தான்.

“போன் நம்பர் சொல்லு” என போலீஸ் ஜாடை செய்தார்
கணேஷ் நம்பரை சொல்ல அவர் தன் போனில் டைல் செய்தார்.

“மிஸ்டர். சுவாமிநாதன் இருக்காரா?”

“இருக்கார்” என்றது பெண் குரல்

“அப்பா உங்களுக்கு போன்” என்ற பேச்சுக் குரல் போலீஸ் காதில் துள்ளியமாய் விழுந்தது.

“சுவாமிநாதன் ஸ்பீக்கிங்”

“சார் உங்க பையன் பேரு திலக்கா?”

“ஆமா . .நீங்க?”

“சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் . .உங்க பையனுக்கு ஏக்சிடெண்ட் ஆகிடுச்சி . . ஜி. எச். க்கு கொஞ்சம் வந்திடுங்க”

“என்ன சார் ஆச்சு? அவன் எப்படி இருக்கான்? எப்படி?” பதட்டமாய் கேள்விகள் அடுக்கப்பட்டன.

“பதட்டபடாதீங்க நேர்ல வாங்க சொல்றேன். உங்க செல்போன் நம்பர் சொல்லுங்க?”

சொன்னார் . . குறித்துக் கொள்ளப்பட்டது “சீக்கிரம் வந்திடுங்க”

அவரை ஆச்சரிமாய் பார்த்துக் கொண்டு இருந்தான் கணேஷ். இத்தனை நேரம் அதிகாரத்துடன் பாய்ந்துக் கொண்டிருந்தவர். போனில் நிதானமாக பேசினார்.

அவன் பார்வையை புரிந்துக் கொண்ட போலீஸ் “என்ன அப்படி பாக்குற . . நாங்களும் மனுஷங்கதான் . . இந்த மாதிரி விஷயத்த எடுத்தோம் கவுத்தோம்னு சொல்ல கூடாது தம்பி . . பெத்த மனசு என்ன பாடுபடும். உங்க பிரெண்டு ஹெல்மட் போட்டாரா பாரு? இல்லயே . . நாங்களும் எத்தன தடவை சொல்றது . . உங்க நன்மைக்காகதான்னு புரிஞ்சிக்கவே மாட்டீங்க . . உன் பேரு . .ஆங் கணேஷ் தானே? ஸ்டேஷனுக்கு வந்து உன் விவரங்கள கொடுத்துட்டு போ . . எங்க வேலை பாக்குற?“

“வேலை தேடிட்டு இருக்கேன்” என சங்கடமாய் பதிலளிதான்

“சரி” என தன் அடுத்த வேலையை கவனித்தார்.
கன்ட்ரோல் ரூமிற்கு போன் செய்து சாலையின் பெயரை சொல்லி சீ சீ கேமிராவில் பதிவான விபத்தை பற்றின புட்டேஜ் தனக்கு வேண்டுமென கூறிவிட்டு காளியப்பன் சென்றுவிட்டார். அதன் பின் விபத்து நடந்த இடத்தில் ரத்த கறையை அகற்றுவது போன்ற வேலைகள் தொடங்கின.

கணேஷ் போலீஸ் ஸ்டேஷன் சென்று தன் விவரங்களை கொடுத்தான். மீண்டும் மேன்ஷனுக்கு திரும்பினான் அங்கே சில நண்பர்கள் “விடு மச்சி . . என்ன பண்றது விதி . .நம்ம கையில என்ன இருக்கு?” என ஆறுதலாக பேசியவர்களிடம் என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் கணேஷ் தலையாட்டி தன் அறைக்கு சென்றான். அவன் முகத்தில் பதிந்திருந்த சோகத்தை பார்த்த நண்பர்கள் அவனுக்கு தனிமை அவசியமென விலகினார்கள்.

அறையினுள் அந்த வைர கல் ஜம்மென்று அமர்ந்து ஒளி வீசிக் கொண்டிருந்தது. திலக்கை நினைக்க நினைக்க பாவமாக இருந்தது. ஆயிரம் கனவுகளோடு இருந்த அப்பாவி ஜீவன். மனம் அவனையே சுற்றி சுற்றி வந்தது. தனியாக அமர்ந்திருக்க என்னவோ போல் இருந்தது. அந்த மேன்ஷனில் ஒரு அறையில் இருவர் தங்குவது வழக்கம்.

அவன் அறையில் இருந்த மற்றொருவன் சில நாட்களுக்கு முன்னர்தான் வேறு ஊருக்கு வேலை கிடைத்துச் சென்றான். மற்ற நண்பர்களும் இன்நேரத்திற்கு தூங்கி இருப்பார்கள். அவர்களுக்கு திலக்கை அவ்வளவாக தெரியாது. அவர்களை பொருத்தவரை இது ஒரு செய்தி அவ்வளவே.

கணேஷ் திலக் இருவரின் நட்பிற்கு வயது ஒரு வருடம்தான் இருக்கும். ஒரு நேர்காணலில் இருவரும் சந்தித்தனர். முதலில் ஒரு புன்னகை பின்பு அங்கே அதிக நேர காத்திருப்பு அவர்களுக்குள் “ஹாய்“ “என்ன படிப்பு?” “எந்த காலேஜ்?” என ஆரம்பித்தது. இருவருக்கும் அங்கு வேலை கிடைக்கவில்லை. அடுத்து அடுத்து இரண்டு நேர்காணலிலும் எதிர்பாரா சந்திப்பு ஏற்பட்டது. பிறகு மெல்ல நட்பு மலர அது இன்றோடு முடிந்தும்விட்டது.

தனிமையின் கொடுமை அகோரமாய் இருக்க போனை எடுத்து மதி என்ற பெயரில் சேவ் செய்த நம்பரை டையல் செய்தான் நான்கு ரிங் போன பிறகு எடுக்கப்பட்டது

“இன்னுமா தூங்கல?” விழுந்தது வார்த்தை

“வரவா?” கேட்டான்.

“வேலையில இருக்கேன்”

“எப்ப வரட்டும்?”

“அரைமணி கழிச்சி வா . . ஆனா சீக்கிரம் கிளம்பிடணும்” என போன் அணைக்கப்பட்டது.

“இவ திருந்தவே மாட்டா” என நினைத்தவன் குளிக்கச் சென்றான். மதியை பார்க்க கிளம்பும் போது வைர கல்லையும் எடுத்துச் சென்றான்.

கணேஷ் மற்றும் மதியழகி இருவருமே திருச்சியில் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். பனிரெண்டாம் வகுப்பு காலாண்டு தேர்வில் அவன் அமர்ந்திருந்த பெஞ்சின் மறுமுனையில் அவள் அமர்ந்திருந்தாள். அவள் பத்தாம் வகுப்பு.

கணேசின் பேனா தேர்வின் சமயம் மக்கர் செய்ய அது அதிர்ஷடமோ துரதிஷ்டமோ தெரியாது. அவன் பேனாவை அங்கே இங்கே கிறிக்கி அவஸ்தை பட்டுக் கொண்டிருந்ததை பார்த்தவள். “இந்தாங்க அண்ணா” என அவன் கேட்காமலேயே கொடுத்தாள். அப்பொழுதுதான் திரும்பி பார்த்தான். இரட்டை ஜடை பச்சை தாவணி கண்களில் பரிட்சை பதட்டம் இத்தனையும் ஒன்று கலந்த ஒவியமாய் அமர்ந்திருந்தாள்.

“தேங்க்ஸ்” என்ற ஒற்றை சொல்கூட வரவில்லை அவனிடமிருந்து. “பரிட்சைக்கு வரும் போது ரெண்டு பேனா எடுத்துட்டு வரணும்னு தெரியாது . . எருமை இதெல்லாம் எங்க உருப்புட போகுது” என்ற வாத்தியின் அர்ச்சனை வேணுகானமாய் இசைக்க. இன்பமாய் எப்படியோ தேர்வை முடித்தான்.

“அண்ணா” என்ற சொல் வெகு நேரம் கழித்தே உருத்தியது. “ஐய்யயோ” என்ற மனதின் கூச்சலை சமாளிக்க முடியாமல் அவளை திரும்பி பார்க்க. . அவள் தேர்விலேயே கவனமாய் இருந்தாள்.

பரிட்சை முடிந்து வெளியே காத்திருந்தான் அவளுக்காக. வெளியே வந்தவளை பார்த்ததும் புன் சிரிப்பை அவள் மேல் தூவி “உனக்கு எத்தனை சொத்து இருக்கு?” என்றான்

“ஆங்” என விழித்தவளிடம்

“அண்ணானு கூப்பிட்டே . .அப்போ சொத்துல சரி சமம் எனக்கு வந்தாகணும் இல்ல. இப்பவே பேசிவச்சிகிட்ட நல்லதுதானே” என்றான்

“ஆசைதான்” என தலையாட்டியவளின் லோலாக்கும் கூடவே ஊஞ்சல் ஆடியது. “சும்மாதான் அண்ணனு கூப்ட்டேன்” என அவள் முடிக்கும் முன்

“அப்பாடா இனிமே நான் உன் அண்ணா இல்லதானே”

ஆமென சொல்வதா இல்லையென சொல்வதா என திண்டாடியவளை ரசித்த வண்ணம் நின்றிருந்தான். “என் பேனா கொடுங்க” என பேச்சை மாற்றினாள்.

“இன்னும் நாலு எக்சாம் பாக்கி இருக்கு” என்றான். அவனை முறைத்து கிளம்ப யத்தனித்தவள் “பேனா கொடுத்தா பிரெண்ஷிப் போயிடும்” என்றாள்.

“நாம பிரெண்ட்ஸ் இல்லயே”

“ஒ கரெக்ட் அண்ணா” என அவள் முடிக்க தன் தலையில் அடித்துக் கொண்டான்

அவள் தன் நண்பிகளுடன் சேர்ந்துக் கொள்ள “ஓய் ரெட்ட ஜட . . இனிமே அண்ணானு கூப்பிடாத”

“என்ன அண்ணா சொன்னீங்க . . சரியா காதுல விழல அண்ணா . . திரும்ப சொல்லுங்க அண்ணா” என சிரிப்பின் நடுவே அவனை வருத்தெடுத்தபடி சென்றுவிட்டாள். அவள் சிநேகிதிகளும் அவனை கிண்டல் செய்தபடி சென்றனர்.

பரிட்சை முடிந்தது. பேனா இடம் மாறவே இல்லை. எப்படி இவளை இத்தனை நாளாக பார்க்காமல் இருந்தோம் என அவனுக்கே ஆச்சரியமாய் இருந்தது. பிறகு சந்திக்கும் தருணங்களில் கணேஷ் அவள் படிப்பின் கவனம் சிதறக் கூடாது என்பதில் எச்சரிக்கையாய் இருந்தான். ஆனாலும் அவனுள் அவன் வயதிற்கே ஏற்ற ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருந்தன.

அவனும் இன்னும் கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் பிறகு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அதன் பிறகு தான் காதல் கத்திரிக்கா என தன் மனதிற்கு தானே வேலி போட்டுக் கொண்டான். ஆதலால் அவளுடன் அளவாக பழகினான். அவளும் அதை உணர்நிதிருந்தாள்.

மதியழகி ஏழை குடும்பம் தந்தை மற்றும் அக்காள் மட்டுமே. தந்தை டாஸ்மாக் கடையின் அனுதின வாடிக்கையாளர். எப்பொழுதாவது மகள்கள் மேல் பாசம் பொங்கும். மதியழகியும் தங்களுக்கு இருப்பது கல்விச் செல்வம் மட்டுமே என்பதை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்தினாள்.

தற்பொழுது மதியழகி பி.பீ.ஓ வில் வேலை செய்கிறாள். இரவில்தான் வேலை.

வெளியே செக்யூரிட்டி கொள்ளைகாரனை விசாரிப்பதைப் போல பல கேள்விகளை கேட்டபின் கணேஷை உள்ளே அனுப்பினான். அவன் ரிசப்ஷன் ஹாலில் காத்துக் கொண்டிருந்தான்.

அதே நேரம் சென்னை ஜி. ஹெச் மருத்துவமனையில்

“சார் உங்க பையன்தான் சரியா வண்டி ஓட்டாம ஏக்சிடெண்ட் பண்ணிடாரு” சீசீ கேமரால ரெகாட் ஆகியிருக்கு என காளியப்பன் திலக் அப்பாவிடம் சொன்னார்.

திலக்கின் குடும்பமே அதிர்ச்சியில் மனமுடைந்து போனது. திலக்கின் பெரியப்பாவிற்க்கு இது முடிவல்ல ஆரம்பம் என மனதில் பட்டது. அவரின் எண்ணங்கள் நெற்றியில் வரிவரியாய் கோடுகளாயின. அதில் ரூல்ட் நோட்டில் எழுதிய பிரம்மாவின் எழுத்துகள் மட்டும் ரகசியமாய் இருந்தன.

மதியழகி கணேசின் முகத்தை பார்த்தததும் “ காலை வரைக்கும் வெயிட் பண்ண முடியாதா? எதாவது பிரச்சனையா?” என்றாள்

“திலக் ஏக்சிடெண்ட்ல இறந்துட்டான்”

அதிர்ந்தவள் சமாளித்தபடி அவன் தோளைதட்டிக் கொடுத்து “ ஐ“ம் ஸாரி டா” என்றாள். கேன்டீனை நோக்கி நடந்தாள் அவன் பின் தொடர்ந்தான்.

“இந்த வேலை சேப்டி இல்ல மதி” என்றவனை கூர்ந்து பார்த்தவள்.

“வேற எந்த வேலை சேப்டி?” அசட்டையாக கேள்வி வந்தது

“நான் இருக்கும் போது நீ எதுக்கு வேலைக்கு போய் கஷ்டப்படணும்” அவளை ஆதங்கத்துடன் பார்த்தான்

”மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெரியுமா ?” கேட்டாள்

“தெரியுமே . . ஏன் நாளைக்கு எனக்கும் உனக்கும் கல்யாணமா அங்க?” கண்ணடித்தான்.

“மனசுல ஹீரோனு நினைப்பா?”

இல்லையென தலையாட்டியவன்

“அவ்வளோ நல்லவனா நீ?” என கிண்டலான தொனியில் சொன்னாள்.

“சரி கோயில் பத்தி எதுக்கு கேட்ட” என்றான்

“பிச்சை எடுக்க” கேஷீவலாக பதில் வந்தது. “நான் இந்த வேலைய ரிசைன் பண்ணிட்டா . .சோறுக்கு என்ன பண்றது? அதான் கோயில்ல” முடிக்காமல் விட்டவளை

முகம் வாடி போனது அவனுக்கு. “விளையாட்டுக்கு சொன்னேன்டா . . ” என்றாள் மன்னிக்கும் பாவணையில்

கணேஷ் மனதில் மிதந்த திலக்கின் எண்ணங்கள் முழ்கின. இப்போது அவன் மனம் முழுவதையும் ஆக்கிரமித்தாள் மதி.

மதியின் போன் அலற அதை தன் ஹேண்ட் பேக்கில் இருந்து எடுத்து பார்த்தாள். கேன்டீனில் ஆங்காங்கே இரண்டு மூன்று பேர் இருந்தனர். இருவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர்.

கணேஷ் வைர கல் இருந்த சிறிய வெல்வட் பையை தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்தான். அந்த சுருக்கு பையின் வாயை பிளந்தான். மதி மீண்டும் போனை ஹேண்ட் பேக்கில் வைத்தவள் பேக்கை மூடவில்லை. மதி கணேஷை கவனிக்காமல் காபி மெஷினில் காபியை கறந்து வந்தாள். பின்பு சக்கரை சேஷைகளை பிரித்து போட்டபடி இருந்தாள்.

அந்த நொடி மதியின் மேலதிகாரி உள்ளே நுழைய . . மதி எழுந்து அவருடன் பேச ஆரம்பித்தாள். கணேசும் எழுந்து நின்றான்.

கையில் வைரத்தை பார்த்தால் என்ன நினைப்பாரோ என்று எண்ணிய கணேஷ் அவசரமாக தன் கையை பின்னால் கட்டிக் கொண்டான். அப்போது எதிர்பாராவிதமாக சுருக்கு பையின் வாய் கீழ் நோக்கியபடி இருந்தது.

மதி தன் மேலதிகாரிக்கு கணேஷை அறிமுகப் படுத்தினாள். கணேஷ் மேலதிகாரிக்கு கை குலுக்க முயன்ற போது தன் கையில் இருந்த சுருக்கு பையை பின் வைத்தபடியே கை மாற்றினான்.

வாய் பிளந்த சுருக்கு பையில் இருந்த வைர கல் மதியின் ஹேண்ட் பேக்கில் தொப்பென விழுந்து புதிய இடத்தில் குடிப் புகுந்தது. வைரத்திறக்கு அந்த புதிய இடம் மிகவும் பிடித்துப் போயிற்று. தன் லீலைகளை தொடர எண்ணமிட்டது.

அங்கே இருந்த ஒருவரின் செல்போன் அலறியது. அந்த காலர் டியூன்

“ரிங்கா ரிங்கா ரோசஸ்
பாக்கெட் புல் ஆப் போசீஸ்
அஷ்ஷா புஷ்ஷா
ஆல் பால் டவுன்”.

ஜொலிக்கும் . . .

Attachments:

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top