(Reading time: 2 - 4 minutes)

குட்டிக் கதைகள் – 68. ரோஜாவின் பெருமை

ரு பெரிய பாலைவனத்தில், ஒரு ரோஜா இருந்தது. அதற்கு தன்னுடைய அழகைப் பார்த்து அதிக பெருமை இருந்தது.

  

ரோஜாவிற்கு ஒரே ஒரு வருத்தம் தான் இருந்தது. அது என்ன என்றால் அழகான அந்த ரோஜாவிற்கு பக்கத்திலேயே அசிங்கமான கற்றாழை செடி ஒன்று இருந்தது.

  

ஒவ்வொரு நாளும், அந்த அழகு ரோஜா கற்றாழையின் தோற்றத்தை வைத்து அதை கேலி செய்யும், அவமானப் படுத்தும். ஆனால் கற்றாழை எப்போதும் அமைதியாகவே இருந்தது.

  

அருகே இருந்த மற்ற அனைத்து செடிகளும் ரோஜாவிற்குப் புத்தி சொல்லிப் பார்த்தன. ஆனால் தன் அழகில் மூழ்கிப் போயிருந்த ரோஜா அதைப் பற்றி கவலைப் படவே இல்லை.

  

அந்த வருட கோடைக்காலம் மிகவும் கடுமையானதாக இருந்தது. பாலைவனம் வறண்டது, செடிகளுக்கு சுத்தமாக தண்ணீர் இல்லை. ரோஜா கொஞ்சம் கொஞ்சமாக வாடத் தொடங்கியது. அதன் அழகான இதழ்கள் காய்ந்து, நிறத்தை இழக்க தொடங்கியது.

  

வாடி வதங்கிய ரோஜா, கற்றாழையைப் பார்த்தது. அந்த கற்றாழையில் ஒரு குருவி தனது அலகால் தண்ணீர் குடிக்க முயற்சி செய்துக் கொண்டிருப்பதைக் கண்டது. வெட்கமடைந்தாலும் ரோஜா கற்றாழையிடம் எனக்கு தண்ணீர் கொடுக்க முடியுமா என்றுக் கேட்டது.

  

கனிவான கற்றாழையும் உடனடியாக ஒப்புக்கொண்டது. அந்த கடினமான கோடை முழுவதும் கற்றாழை ரோஜாவிற்கு உதவியது. இருவரும் அப்போது முதல் நெருங்கிய நண்பர்களாக மாறிப் போனார்கள். 

  

கருத்து:

  

பார்க்க எப்படி இருக்கிறார்கள் என்பதை மட்டும் வைத்து ஒருவரையும் மதிப்பிடாதீர்கள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.