(Reading time: 2 - 4 minutes)

குட்டிக் கதைகள் – 71. இரு சகோதரர்கள்.

ரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள்.

  

மூத்தவன் இரக்கமற்றவனாக இருந்தான். இளையவனோ அன்பானவனாக இருந்தான்.

  

மூத்தவன் நல்ல உணவு, உடை என அனைத்தையும் இளையவனுக்கு கொடுக்காமல் தனக்கெனவே வைத்துக் கொண்டான்.

  

மூத்தவன் எப்போதும் விறகு எடுக்க காட்டுக்குள் போவது வழக்கம். அன்றும் அப்படி விறகுகளை சேகரித்துக் கொண்டிருந்தவன், ஒரு மந்திர மரத்தின் பக்கம் வந்தான்.

  

அது மந்திர வித்தை தெரிந்த மரம் என்பதை அறியாமல் அதிலும் கிளைகளை வெட்டத் தொடங்கினான்.

  

அந்த மந்திர மரம் அவனை தடுத்து நிறுத்தி, “ஐயா, தயவுசெய்து என் கிளைகளை விட்டு விடுங்கள். நீங்கள் என்னை காப்பாற்றினால், நான் உங்களுக்கு சுவையான ஆப்பிள்களைத் தருகிறேன்.” என்றது.

  

மூத்தவனும் ஏற்றுக் கொண்டான். மரமும் ஆப்பிள்களை கொடுத்தது.

  

ஆனால் மரம் குறைவான ஆப்பிள்களை கொடுத்ததாக குறைப்பட்டுக் கொண்டான் மூத்தவன்.

  

பேராசையால், தனக்கு அதிக ஆப்பிள்களை தரா விட்டால் முழு மரத்தையும் வெட்டி விடுவேன் என்று மரத்தை மிரட்டினான்.

  

ஆனால், அதிக ஆப்பிள்களைக் கொடுப்பதற்கு பதிலாக, அந்த மரம் அவன் மேலே நூற்றுக்கணக்கான சிறிய ஊசிகளைக் கொட்டியது.

  

ஊசிகள் குத்தி துளைத்ததால் வலியால் அழுதுக் கொண்டே அவன் தரையில் விழுந்தான்.

  

சூரியன் அஸ்தமனமாகும் நேரமானப் பிறகும் அண்ணன் வராமல் இருக்கவே இளையவன் அவனை தேடிச் சென்றான்.

  

உடல் முழுக்க நூற்றுக்கணக்கான ஊசிகளுடன் வலியில் துடித்துக் கொண்டிருந்த அண்ணனை பார்த்து திகைத்துப் போனான்.

  

கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்காமல் அண்ணன் பக்கம் சென்று ஒவ்வொரு ஊசியையும் வலி தெரியாமல் பிடுங்கத் தொடங்கினான்.

  

அண்ணன் தம்பியின் பாசத்தை புரிந்துக் கொண்டான். ஊசிகளை தம்பி அகற்றியதும் அவனை அன்போடு அணைத்துக் கொண்டான். இத்தனை நாட்கள் அவனை மோசமாக நடத்தியதற்காக மன்னிப்புக் கேட்டான்.

  

மந்திர மரம் மூத்தவனின் மன மாற்றத்தைக் கண்டது.

  

அதனால் மகிழ்ச்சி அடைந்து, அவர்கள் இருவருக்கும் தேவையான ஆப்பிள்களையும் கொட்டி பரிசளித்தது.

  

கருத்து:

  

அன்பு, இறக்கம், கருணை இருப்பது மிகவும் முக்கியம். இந்த குணநலன்கள் நமக்கு எப்போதுமே நல் வெகுமதியை வழங்கும்.

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.