(Reading time: 2 - 4 minutes)

குட்டிக் கதைகள் – 72. ஒரு கிளாஸ் பால்

ரு ஊரில் ஒரு ஏழை மாணவன் இருந்தான். அவன் பள்ளிக்கு பீஸ் கட்டுவதற்காக வீடு வீடாக செய்தித்தாள்களை போடும் வேலையை செய்து வந்தான்.

  

ஒரு நாள் அப்படி செய்தித்தாள்களை போட்டுக் கொண்டிருந்த போது அவனுக்கு பசியால் மிகவும் அயர்வாக இருந்தது.

  

அதனால் அடுத்த வீட்டில் யாராவது கண்ணில் பட்டால் உணவு கேட்பது என்று முடிவு செய்தான்.

  

அடுத்த வீட்டில் பார்த்தவரிடம் பசிக்கு உணவு கேட்டான். அவரோ எதுவும் கொடுக்க மறுத்துவிட்டார். அடுத்த சில வீடுகளிலும் அதுவே தொடர்ந்தது.

  

ஒரு வீட்டில் ஒரு சிறுமி வரவும், அவளிடம் பசிக்காக சிறிது தண்ணீர் தரக் கேட்டான் சிறுவன். அவனின் நிலையை பார்த்து இறக்கப் பட்ட சிறுமி ஒரு டம்பளர் பாலை அவனுக்கு கொடுத்தாள்.

  

பாலுக்கு சிறுவன் பணம் கொடுக்க முயன்ற போது அந்த சிறுமி பணமே வேண்டாம் என்று ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாள்.

  

பல வருடங்கள் சென்றன.

  

அந்த சிறுமி வளர்ந்து இளம் பெண்ணாக மாறினாள். திடீரென்று அவளின் உடல் நலம் நலிவுற்றது. பல டாக்டர்களை பார்த்தும் ஒரு பலனும் இல்லை. அதனால் ஊரின் தலை சிறந்த டாக்டரை சந்தித்து தன நோய் பற்றி சொன்னாள்.

  

டாக்டர் அவளை தன் மருத்துவமனையில் அனுமதித்தார். பல மாதங்கள் அவளுக்கு தொடர் சிகிச்சை அளித்து அவளை குணமாக செய்தார்.

  

மகிழ்ச்சியாக இருந்தப் போதும் தன்னால் டாக்டரின் சிகிச்சைக்கான பணத்தை கட்ட முடியுமா என்று அவளுக்கு கவலையாக இருந்தது.

  

ஆனால், மருத்துவமனை அவளிடம் பில் கொடுத்தபோது, அதில் ‘பணம் செலுத்தப்பட்டது’ என்று இருந்தது.

  

அவளுக்கு குழப்பமாக இருந்தது. பில்லின் விபரங்களை படித்தாள். அதில் செலுத்திய தொகைக்கு நேராக ‘ஒரு கிளாஸ் பால்’ என்று எழுதப்பட்டிருந்தது!!!

  

கருத்து:

  

நாம் செய்யும் எந்த ஒரு நல்ல செயலும் நமக்கு நன்மை பயக்காமல் இருப்பதில்லை!

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.