(Reading time: 2 - 3 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

குழந்தைகள் ஸ்பெஷல் ஜோக்ஸ்

ஒவ்வொரு குளிர்காலத்திலும் என்ன விழும், ஆனால் எப்போதும்  காயமடையாது?

பனி!

*******

 

அம்மா: இன்று ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க?

மகன்: எழுத சொல்லிக் கொடுத்தாங்க.

அம்மா: என்ன எழுதின?

மகன்: எனக்கு தெரியாது! வாசிக்க இன்னும் அவங்க சொல்லியே தரலையே!

*******

 

ஆசிரியர்: இன்று காலை நமக்கு அரை நாள் பள்ளி மட்டுமே இருக்கும்.

வகுப்பு: ஹூரே, ஜாலி!!!

ஆசிரியர்: இன்று மதியம் அடுத்த அரை நாள் இருக்கும்!

*******

 

மாணவன்: மூளை ஒரு அதிசயமான விஷயம்!

ஆசிரியர்: ஏன் அப்படிச் சொல்ற?

மாணவன்: காலையில் எழுந்த உடனே வேலை செய்யுது, வேலை செய்துட்டே இருக்குது, நீங்க கிளாஸ்ல கேள்வி கேட்கும் வரை நிறுத்தாம வேலை செய்துட்டே இருக்கு!

*******

 

ஆசிரியர்: தீவு என்றால் என்ன?

மாணவன்: ஒரு பக்கம் தவிர மற்ற எல்லாபக்கமும் நீரால் சூழப்பட்ட ஒரு நிலம்.

ஆசிரியர்: ஒரு பக்கம் தவிரவா???

மாணவன்: ஆமா, மேலே தண்ணீர் இருக்காது!

*******

 

ஆசிரியர்: உலகம் வட்டமாக இருப்பதற்கு மூன்று காரணங்களை எனக்கு சொல்லு!

மாணவன்: என் அப்பா அப்படி சொன்னார், என் அம்மா அப்படி சொல்றாங்க, நீங்களும் அதையே சொல்றீங்க! இது தான் சார் மூன்று காரணங்கள்.

*******

 

அம்மா: நீ ஏன் ஜியாகரப்பி டெஸ்ட்ல இவ்வளவு பெரிய ஜீரோ வாங்கி இருக்க?

மாணவன்: அது ஜீரோ இல்லம்மா. என் டீச்சருக்கு ஸ்டார் காலி ஆயிடுச்சாம். அதனால எனக்கு நிலா கொடுத்திருக்காங்க!

*******

 

ஆசிரியர்: உன் பெயர் என்ன?

வகுப்பு: ரவி

ஆசிரியர்: சார்ன்னு சேர்த்து சொல்லு.

மாணவன்: அப்போ, சார் ரவி!

*******

  

------------

Pin It

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# RE: குழந்தைகள் ஸ்பெஷல் ஜோக்ஸ்madhumathi9 2021-07-13 07:28
:grin: :D :clap: arumai :-)
Reply | Reply with quote | Quote
Go to top