(Reading time: 2 - 3 minutes)

எளிதாக செய்யக் கூடிய கைவினை பொருட்கள் – பேப்பர் தவளை

து குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பெரியவர்களும் விளையாடலாம்.

குறிப்பாக ஆபிஸ் நேரத்தில் ரொம்ப போர் அடித்தால், இந்த தவளையை செய்து விளையாடுங்கள். மன அழுத்தத்தில் இருந்து வெளி வர உதவும் ஒரு நல்ல வழி இது.

Time required (approximately)

5 minutes

 

Materials needed

பேப்பர்

 

Steps:

 

Paper Frog

ஒரு சின்ன பேப்பரை சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.

 

Paper Frog

அந்த பேப்பரை குறுக்காக மடிக்கவும்.

 

Paper Frog

மடித்த பேப்பரை பாதியாக, ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு வருமாறு மடிக்கவும்.

 

Paper Frog

பின் மீண்டும் விரிக்கவும். மடித்த மேடான பக்கம் மேலே வருமாறு வைக்கவும்.

 

Paper FrogPaper Frog

இப்போது இரண்டு ஓரத்தையும் நடுவில் இருக்கும் கோடை தொடுமாறு மடிக்கவும் (படத்தை பார்க்கவும்)

 

Paper FrogPaper Frog

பேப்பரை திருப்பி விட்டு, இரண்டு முனைகளும் நடுவில் சந்திப்பது போல மடிக்கவும். பின் பக்கத்தில் நாம் மடித்து வைத்திருக்கும் சிறிய கார்னர் பகுதி வெளியே வருவது போல மடிக்கவும் (படத்தை பார்க்கவும்)

 

Paper Frog

இப்போது ராக்கெட் போல இருக்கும் பேப்பரில், மேலே கூர்மையான பக்கம் இருக்கும் இரண்டு பேப்பர்களில் முன்னால் இருக்கும் ஒரு பக்கத்தை மட்டும் அதன் ஓரம் வரை மடிக்கவும். இது தான் நம் தவளையின் வாய் பகுதி.

 

Paper Frog

இப்போது கீழே இருந்து மேலே அந்த வாய் பகுதிக்காக மடித்த இடம் வரை மெல்ல மடிக்கவும்.

 

Paper Frog

மீண்டும் ஒரு முறை மெல்ல கீழே வருமாறு மடிக்கவும். ஆனால் கீழே கடைசி வரை இல்லாமல் சிறிதாக இடம் விட்டு மடிக்கவும்.

 

Paper Frog

திருப்பினால் நம் பேப்பர் தவளை ரெடி! தவளையின் பின்னங்காலில் அழுத்தினால் துள்ளி குதிக்கும்.

செய்து பாருங்களேன் உங்களுக்கும் பிடிக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.