(Reading time: 4 - 7 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நீங்க யார் மாதிரி? - ரேவதிசிவா

Kids

ணக்கம் நண்பர்களே! இன்னைக்கு நாம ஆங்கிலத்தில் வர  மிஸ்டர் எக்ஸ்(X) மற்றும் ஒய்(Y) மாதிரி , திரு.  மற்றும் திரு. அவர்களின் வீட்டில் நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்கலாம்.

திரு அவர்களின் வீடு

வீட்டில் யாருமே இல்லையா?

சரி, நாம அம்மா வச்சிருக்கிற சிற்றுண்டி சாப்பிடலாம் (நம்ம செனக்ஸ்பா- இப்ப நமக்கே சாப்பிடனும் போல தோனுதுதான...சரி! இப்ப  திரு. அவர்களை கவனிப்போம்).

ஹயை ! நல்லா இருக்கு அம்மா செஞ்ச சுண்டல். பசியும் அடங்கிடுச்சு.

(தன்னுடைய பொருள்களை எடுத்துக்கிட்டு பால்கனிக்கு போறாரு,ஷ்சு!சத்தமில்லாம வாங்க , என்ன செய்றாருனு பார்ப்போம்)

எப்படி இருக்கீங்க தோழர்களே! உங்களுக்கும் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்.ம், சாப்பிடுவதற்கு ரெடியா?

(ஓஓ! நாங்க எப்பவோ அதுக்காகதான் காத்துக்கிட்டிருக்கோம்.

 ஷ்ஷ்ஷ்..என்னோட நண்பர்கள் என்பதை இப்படியா நிறுபிப்பீங்க! அவன் நம்மை யாரையும் கேட்கல, நல்லா கவனிங்கப்பா!)

தன் கையில் இருந்த தண்ணீர் குவளை( நம்ப டம்ளர்) கொண்டு  அங்கு இருந்த அனைத்து செடிகளுக்கும் ஒழுங்காக நீர்விட்டு ஆசையுடன் பேசிவிட்டு சென்றார் திரு..(செடிக்குத் தண்ணீர் ஊற்றியதால் இந்த மரியாதைப்பா! அதனால இப்படி கோபமாக பார்க்காதீங்க!)

இப்ப கீழே உள்ள பூங்காவில் போய் நண்பர்களோட விளையாடிட்டு, அப்புறம் அங்க வர தாத்தா பாட்டிக்கிட்ட பேசிட்டு வரனும் என்று சத்தமாக சொல்லிக்கொண்டே திரு. அவர்கள் சென்றார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வர, அங்கு அவரின் அன்னையும் தந்தையும் வந்துவிட்டிருந்தனர். அவர்களிடம் சொல்லிவிட்டு தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தார் நம்ம .

கவனமாக, ஆசிரியர் சொல்லி அனுப்பியிருந்த பாடங்களை தாய்தந்தையின் உதவியுடன் படித்துவிட்டு எழுந்தார்.( ஹப்பா!ஒரு வழியா படிச்சு முடிச்சிட்டாருப்பா! வாங்க இப்ப அவர நாம பின் தொடரலாம்)

தாய்தந்தையிடம் தான் அன்று செய்த செயல்களைக் கூறிவிட்டு , உணவு உண்ண சென்றார் திரு..(வாங்கப்பா! நமக்கு இங்க இனிமே வேலை இல்லை, நாம திரு.அவர்கள் வீட்டுக்கு செல்வோம்)

திருஅவர்களின் வீடு

டாக்டர். என்ன சொன்னங்கமா?

மாமா, இவன் கண்ண  நல்லா பரிசோதனை செஞ்சிட்டு, வீடியோ கேம்ஸ் அப்பறம் செல்போன்ல விளையாட மா பார்த்துக்க சொன்னார் டாக்டர்.கீரை , காய்கறி மற்றும் பழங்கள் நிறைய சாப்பிட சொன்னாங்க.( நம்ம ஆவிற்கு உடம்பு சரியில்லைப் போல)

எங்கமா அவன்?

எப்பா, இங்க வா.

என்ன தாத்தா, எதுக்கு இப்ப கூப்பிடற? நான் செல்போன்ல கேம்ஸ் விளையாடப் போறேன்.

இப்பதான டாக்டர் சொன்னாங்க, அதையெல்லாம் செய்யக்கூடாதுனு. நீ திருந்தவேமாட்டியா?

அட போம்மா, அவரு அப்படிதான் சொல்வாரு...நீ எனக்கு சாப்பிடுவதற்கு சிப்ஸ் குடு.

( இவன் ரொம்ப கெட்டப் பையனா இருக்கானே...

அமாம் நண்பர்களே! நீங்க சொல்வது சரிதான். அம்மா தாத்தா பேச்ச கேட்கமாப் போறானே. இவன் நல்லதுக்காகதானே டாக்டர் சொல்றாரு, எதையும் கேட்க மாற்றானே! வாங்க இங்க இருந்து நாம போலாம்.)

ரண்டு மாதங்கள் கழித்து...

இடம்: பள்ளி

: எதுக்கு நீ கண்ணாடி போட்டிருக்க?

: அம்மா சொன்னத கேட்காம போனிலும் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடியதாலையும் சத்தான காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடாம இருந்ததாலையும் கண்ணாடி போட வேண்டியதாப் போச்சு!

: நீ கவலைப்படாத, இனிமேல் அம்மா சொல்லறத ஒழுங்கா கேளு. அவங்க நம்ம நல்லதுக்காகதான சொல்வாங்க. இனிமேல் ஒழுங்கா இருந்தனா, சீக்கிரமாக எல்லாம் சரியாகிடும்.

: இனி, நான் நல்ல பையனா நடந்துக்குவேன். சரி, வா வீட்டுக்குப் போலாம்.

: ம்...போலாம் வா.

ஹேய்! அவங்க வீட்டுக்குப் போறாங்க, நீங்கள் எல்லாரும் எங்கப் போறீங்க?

....நீங்களும் திரு.அ போல ஆகப்போறீங்களா?

ஓகே!நானும் போய் ரோஸ்டு சாப்பிடப்போறேன்..ஹய்யோ! முறைக்காதீங்க நண்பர்களே...ஹிஹிஹி...நான் போய் கேழ்வரகு தோசைய சாப்பிடப் போறேனு சொல்ல வந்தேன்...

டாடா...தோசை எனக்காக காத்துகிட்டு இருக்கு...

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.