(Reading time: 1 - 2 minutes)

வினோத செய்திகள் - தலை முடி படைத்த கின்னஸ் சாதனை!

ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் பற்றி பலரும் கேள்விப் பட்டிருப்பீர்கள்.

   

அந்த நிறுவனம் தான் 2021 ஆம் ஆண்டின் கடைசி நாளில் தலை முடியை கொண்டு கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது.

   

2019 ஆம் ஆண்டில் உதிர்ந்த முடியை கொண்டு ஒரு பந்தை உருவாக்கி, அதற்கு “ஹோஸ்” என்றும் பெயரும் இட்டார்கள்.

   

அப்போது முதல் பலரும் இந்த ஹோஸிற்கு தங்கள் முடிகளை வழங்கி இருக்கிறார்கள்.

   

டிசம்பர் 31 அன்று ஹோஸின் மொத்த எடை 102 கிலோ!

   

இப்படி மகத்தான முடி பந்தால் உருவான ஹோஸிற்கு தொப்பி அணிவித்து, பொய் முகமும் கொடுத்து, அலங்காரம் செய்து பேஸ்புக் லைவ் நிகழ்ச்சியில் பங்குப்பெறவும் வைதிருந்தார்கள்!!!

   

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.