(Reading time: 2 - 3 minutes)

வினோத செய்திகள் - பத்து பைசாவிற்கு வாங்கிய சூப்பர்மேன் காமிக் இன்று எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது தெரியுமா???!!!

1939 இல் நியூஸ்ஸ்டாண்டுகளில் 0.10 டாலருக்கு விற்கப்பட்ட சூப்பர்மேன் #1 காமிக் புத்தகத்தின் அரிய நகல் ஏலத்தில் $2.6 மில்லியனுக்கு (19.3 கோடி ரூபாய்) வாங்கப் பட்டுள்ளது.

  

சூப்பர்மேன் உயரமான கட்டிடங்களின் மீது குதிப்பதைக் காட்டும் அட்டை படம் இருக்கும் இந்த காமிக்கை, பெயர் வெளியிடாத நபர் ஒருவர் இவ்வளவு பணம் கொடுத்து வாங்கி இருக்கிறார்.

  

இந்த காமிக்கை விற்ற மார்க் மைக்கேல்சன், 1979 ஆம் ஆண்டில் அதன் அசல் உரிமையாளரிடமிருந்து காமிக்ஸை வாங்கி, இத்தனை வருடங்கள் பத்திரமாக வைத்திருந்தார்.

  

எழுத்தாளர் ஜெர்ரி சீகல் மற்றும் ஓவியர் ஜோ ஷஸ்டர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட சூப்பர் மேன் கதாபாத்திரம் சூப்பர் ஹீரோக்களில் முன்னோடியானவர்.

  

ஏப்ரல் மாதத்தில், 1938 ஆம் ஆண்டில் சூப்பர்மேனை அறிமுகப்படுத்திய காமிக் ஆக்ஷன் காமிக்ஸ் #1 இன் நகல் $3.25 மில்லியனுக்கு (24.2 கோடி ரூபாய்) விற்கப்பட்டது.

  

அமெரிக்காவில் காமிக்ஸ் புத்தகத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், என அனைவருமே காமிக்ஸ் புத்தகத்தின் வழியே பிரபலமான சூப்பர் ஹீரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.