(Reading time: 2 - 4 minutes)
Edison chose his employees by the way they ate soup!
Edison chose his employees by the way they ate soup!

வினோத செய்திகள் - சூப் உண்ணும் விதத்தை வைத்து வேலைக்கு ஆள் தேர்வு செய்த எடிசன்!

எடிசன் வரலாற்றில் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவர். அவர் ஒலிகளைப் பதிவுசெய்ய ஃபோனோகிராஃப், விடியோ கேமரா, மின் விளக்கு, மின்சார பேட்டரி மற்றும் பலவற்றை கண்டுபிடித்தார். அவர் 1,000 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றவர்.

  

தாமஸ் எடிசன் தனது கண்டுப்பிடிப்புகள் தொடர்பான வேலைகளை செய்ய ஒரு பெரிய வொர்க் ஷாப் வைத்திருந்தார். அதற்கு அவருக்கு ஏராளமான ஆய்வக உதவியாளர்கள் தேவைப்பட்டனர்.

  

எடிசனின் வேலை இன்டர்வியூக்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. வேலைக்கு அப்ளை செய்தவர்களை தன் வொர்க் ஷாப்பில் சந்திப்பதற்குப் பதிலாக, எப்போதும் ஒரு உணவகத்தில் சாப்பிட அழைத்துச் செல்வார். அங்கே எடிசன் தான் மெனுவில் இருந்து தேர்ந்தெடுப்பார். அதில் எப்போதும் சூப் இருந்தது.

  

வேலையைப் பற்றி பேசும்போது, ​​​​வேலைக்காக வந்திருப்பவர் சூப் சாப்பிடுவதை எடிசன் கவனமாகப் பார்ப்பார். இந்த சூப் தான் ஒருவரை வேலைக்கு அமர்த்தலாமா என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியமானது.

  

வந்திருப்பவர் சூப்பை ருசிப்பதற்கு முன் அதில் உப்பு அல்லது மிளகு தூவிவிட்டால், அவர் உடனே நிராகரிக்கப் படுவார். காரணம், தனது டீமில் சோதனை செய்யாமலே முடிவெடுப்பவர்களை சேர்க்க எடிசன் விரும்பவில்லை.

  

ஏனென்றால் இவர்கள் சூப்பை உண்பதற்கு முன்பே அது உப்பு, காரம் இல்லாமல் இருக்கும் என நினைத்துக்கொள்கிறார்கள். அதாவது சுவையை பார்க்காமல் அவர்களாகவே முடிவெடுக்கிறார்கள்! எனவே நிராகரிக்கப் படுவார்கள்.

   

வேலைக்காக வந்திருப்பவர் முதலில் சூப்பை ருசித்து பின்னர் உப்பு சேர்த்தால், நேரடி இன்டர்வியூவிற்கு அழைக்கப் படுவார்.

  

இது விசித்திரமாக இருந்தாலும் சரியான நடைமுறை என்று தான் சொல்ல வேண்டும். இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்டும் கேள்வி கேட்டு இனடர்வியூ எடுக்காமல் வேறு வழிமுறைகளை பயன்படுத்துவது தான். என்ன, எடிசன் அதை நூறு வருடங்களுக்கு முன்பே செய்திருக்கிறார்!

   

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.